நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 04, 2022

நல்வழி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை 18
ஞாயிற்றுக்கிழமை


காலை எழுந்தவுடன் படிப்பு..

- என்று குழந்தைகளுடன் ஓடி விளையாடிய மகாகவி, அவர்களுக்கு நிறைய அறிவுரைகளைக் கூறி வைத்தார்.. 

அதிலே ஒன்று தான் - 
நீதி உயர்ந்த மதி கல்வி

கல்விக்கும் நீதிக்கும் அடிப்படை நல்ல நூல்கள்.. புத்தகங்கள்..

ஓ.. படித்து விடலாமே.. எந்த புத்தகத்தைப் படிப்பது.?. 

நீதிக் கதைகள் எல்லாம் இருக்குமே.. அந்தப் புத்தகத்தை எடுத்துப் படி.. நீதியைப் படிப்பதே நீதி..
நீதி வழி நடப்பதே நீதி!..

இதெல்லாம் அந்தக் காலம்..

நன்றி : தினமலர்

இதனை தொடர்ந்து, அந்த பாடப்பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த பாடப் பகுதி முழுமையாக நீக்கப் படும் என கூறியுள்ளனர்..

மேலே உள்ள செய்தி 
தினமலர் இணைய தளத்தில் இருந்து..

முழு விவரங்கள் அறிவதற்கு - இங்கே..

இன்று,
அநீதியைப் படிப்பதும் 
அதன்படி நடப்பதுமே நீதி..

இனி நாடு விளங்கிடும்..
எப்படியாவது வாழ்ந்து 
விட்டுப் போகட்டும்!..
***

18 கருத்துகள்:

 1. இந்தக் கல்வியாண்டில்தான் இந்தப் பகுதியைச் சேர்த்தார்கள். பாடத்திட்டக் குழு லியோனி தலைமை. 25 மாணவர்கள் இறந்ததும் புத்தி வந்திருக்கிறது.

  அடுத்த வருடத்தில் ரம்மிக்குப் பதிலாக சாராயப் பகுதி வருமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்... வாசகர் வட்டத்துக்குள் இப்படித்தான் பேசிக் கொள்கின்றனர்..

   அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நீக்கு
  2. லியோனி எல்லாம் பாடத்திட்டக் குழுவா....அம்மே! எண்ட அம்மே!!!! ...தமிழ்நாட்டின் குழந்தைகளின் எதிர்காலம் யார் கையில்?

   தமிழ்நாடு என்றில்லை எல்லா மாநிலங்களின் குழந்தைகளின் எதிர்காலமும் நன்னடைத்தை பெரிய கேள்விக் குறியாகிறது...

   நான் இது பற்றி சமீபத்திய நிகழ்வுகளிலிருந்து பதிவு ஒன்று எழுத நினைத்துள்ளேன்...அதில் சொல்கிறேன்

   கீதா

   நீக்கு
  3. //அம்மே! எண்ட அம்மே!..

   கொடுங்கலூர் பகவதி அம்மே.. - என்று நாம் தான் நம் தலையில் அடித்துக் கொள்ள வேண்டும்..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி சகோ

   நீக்கு
 2. மக்கள் திருந்தாத வரையில் ஆட்சியாளர்களை குறை சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நியாயம் தான்...
   ஆனாலும் சீட்டாட்டத்தைப் பாடத்திட்டத்தில்
   சேர்க்கச் சொல்லியா மக்கள் வாக்களித்தார்கள்?...

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி ஜி..

   நீக்கு
 3. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல குறட்பா..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தனபாலன்..

   நீக்கு
 4. //Geetha Sambasivam "நல்வழி” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

  கடவுளே! எதிர்காலத்தை நினைக்கவே பயமா இருக்கே!// தினம் தினம் தேடிப்பிடிச்சுக் கொண்டு வர வேண்டியிருக்கே! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தினம் தினம் தேடிப் பிடிச்சுக் கொண்டு வர வேண்டியிருக்கே! :(//

   எதைச் சொல்கின்றீர்கள் அக்கா!..

   நீதியையா?...

   அது தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியக்கா..

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பாரதியின் பாடலை இங்கு பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு அவர் பயிற்றுவித்த நீதிகளை மறக்க முடியுமா?

  இப்போதைய குழந்தைகளுக்கு சீட்டாட்டத்தைப் பற்றி கல்வியா? "களவும் கற்று மற.." என்பதை தவறான போக்கில் விளக்கம் கூறி கற்றுத் தருவதை போன்ற பாடத்திட்டம் போலும். நல்லவேளை..! அதை நீக்கம் செய்து விட்ட அதிகாரிகளுக்கு நன்றி. உங்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. களவும் அகற்று மற என்பதில் "அ" னாவை அகற்றி விட்டார்கள்..

   அரசு பாடத்திட்டத்தில் ரம்மி விளையாட்டைப் பற்றிய பாடத்தை வெளி ஆட்கள் வந்து வைக்க முடியுமா?..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி

   நீக்கு
 6. துரை அண்ணா அதிர்ச்சியாக இருக்கு....இப்படி ஒரு பாடத்திட்டமா!!ஆஆஆ....நாம் எங்கிருக்கிறோம்...

  பதிவு ஒன்று ஏற்கனவே எழுத நினைத்துப் பிள்ளையார் சுழி போட்டிருந்தேன் இப்ப இன்னும் அதிர்ச்சியான தகவல் பார்க்க நேரிட்டது...சொல்கிறேன் அங்கு ஆனால் எழுத தான் நேரம் பார்க்கணும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடத் திட்டப் பணியாளர் குழுவில் அனைவரும் மனசாட்சியற்று இருந்திருக்கின்றர்..

   புகைப்பது, மது அருந்துவது, வேறொன்றில் ஈடுபடுவது எல்லாம் சேர்க்கப்படாதது அதிர்ஷ்டம்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி சகோ..

   நீக்கு
 7. பாடத்திட்டத்தில் இதையெல்லாம் சேர்த்த அந்த அறிவுமதியாளர்களின் சிறப்பை என்னவென்று சொல்ல...   எதை நினைத்து சேர்த்திருப்பார்கள்?  மற்றவர்களும் எப்படி சம்மதித்தார்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகாகவியின் வார்ர்த்தைகள் சாட்சியாக இருக்கின்றன.. அதைத் தான் நினைத்துக் கொள்ள வேண்டும்..

   காலக்
   கொடுமையப்பா
   கந்தசாமி..

   காலக்
   கொடுமை..

   நீக்கு
 8. காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??

  நான் எனது பேரனுக்காக எடுத்துக் கூற செய்ததில் கண்ட உண்மை இப் பொழுது வெளியிட்டு வரும் நீதிக்கதைகளில் பலவும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறத்தக்கதாக இல்லை. பழைய நீதிக்கதைகள்தான் சிறந்தவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // காலத்தின் கோலத்தில் குழந்தைகளின் எதிர்காலம்??..//

   சான்றோர்கள் தான் கூற வேண்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் ..
   நன்றி

   நீக்கு