நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 26, 2022

மலர் 11

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மார்கழி 11
  திங்கட்கிழமை

தமிழமுதம்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் 
என்பும் உரியர் பிறர்க்கு.. 72
*
திவ்யதேச தரிசனம்
திருஆதனூர்
 
ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் 
ஸ்ரீரங்கநாயகி

பாடலி மரம்
சூர்ய புஷ்கரணி

கிழக்கு நோக்கி 
புஜங்க சயனம்
பிரணவ விமானம்

மங்களாசாசனம்
திருமங்கை ஆழ்வார்
ஒரு பாசுரம்
(நன்றி: காமகோடி.org)
**
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாவை
பாசுரம் 11


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.. 484
*
திவ்யதேசத் திருப்பாசுரம்


முன்னவனை மூழிக்களத்து விளக்கினை
அன்னவனை ஆதனூர் ஆண்டுஅளக்கும் ஐயனை
நென்னலை இன்றினை நாளையை நீர்மலைமேல்
மன்னும் மறைநான்கும் ஆனானை..
-: திருமங்கையாழ்வார் :-
(நன்றி : நாலாயிர திவ்யப்ரபந்தம்)
**

சிவதரிசனம்

திருத்தலம்
திரு ஐயாறு

காசிக்கு நிகரான தலங்களில் ஒன்று.


ஸ்ரீ ஐயாறப்பர்
ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி

தலவிருட்சம் வில்வம்
காவிரி, சூரிய புஷ்கரணி

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
*

தேவாரம்


ஓசை ஒலியெலாம்  ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
*
திருவாசகம்
 திரு கோத்தும்பி


பூவேறு கோனும்
புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும்
நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும்
வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.. 8/10/1
-: மாணிக்கவாசகர் :-
(நன்றி: பன்னிரு திருமுறை)
*

நேற்று காலையில்
தஞ்சை யாளி நகர்
ஸ்ரீ வீர நரசிங்கப் பெருமாளுக்கும் தேவியருக்கும் புதியதாகத் தங்கக் கவசம் சாற்றப்பட்டு
ஏக தின லட்சார்ச்சனையும்
மாலையில் திருக்கல்யாண வைபவமும் நிகழ்ந்தது.









ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. பதிவு அருமை.
    ஸ்ரீ நரசிங்க பெருமாள் ஏக தின லட்சார்ச்சனை , திருக்கல்யாண வைபவ காட்சிகள் அருமை.
    தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு
  2. அழகான படங்கள் தரிசித்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. ஓம் நம சிவாய..
      சிவாய நம ஓம்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்...

      நீக்கு
  4. சிறப்பான படங்கள். திருக்கல்யாண வைபவச் சிறப்புப் படங்களுடன் பதிவு அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. சிவதரிசனம், நரசிங்க பெருமாள் தரிசனம் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  6. Geetha Sambasivam "மலர் 11” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:

    சிறப்பான படங்கள். திருக்கல்யாண வைபவச் சிறப்புப் படங்களுடன் பதிவு அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      தரிசனமும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..