நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 31, 2022

நெஞ்சுக்கு நிம்மதி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று புதன்கிழமை மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு குலதெய்வத்தின் சந்நிதியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றேன்..
பதிவுகள் விரைவில் தொடரும்..

நலமே வாழ்க
என்றென்றும்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, மார்ச் 27, 2022

திருக்கடவூர் தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி பதின்மூன்றாம் நாள்.. அமிர்த யோகமும் உத்திராட நட்சத்திரமும் கூடியுள்ள சுப முகூர்த்த நாள்.. இன்று காலை பத்து மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட ஸ்ரீ அபிராமவல்லி உடனாகிய ஸ்ரீ அமிர்த கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற உள்ளது...

மஹா வைபவத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க வில்லை எனினும் இணையத்தின் வழியாகப் பெற்ற யாக சாலை நிகழ்வின் ஒரு சில காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்கள்:- தருமபுரம் ஆதீனத்தார்.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
போராருங் கரியின் உரி
போர்த்துப் பொன் மேனியின் மேல்
வாராரும் முலையாள் ஒரு
பாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்
கார் துணை நீயலதே.. 7.028.4
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, மார்ச் 26, 2022

திருமணக் கோலம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சென்ற வியாழக்கிழமை பங்குனி பத்தாம் நாள்
(24/3)..

தஞ்சாவூர்  ஸ்ரீ ஆனந்த வல்லி அம்பிகை உடனாகிய
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வர ஸ்வாமிக்கு மண்டலாபிஷேக நிறைவு நாள்..

மாலையில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண விழா.. திருக்கோயில் வளாகம் களை கட்டியிருந்தது..

ஸ்ரீ மஹாகணபதி ஆவாகனம் சங்கல்ப பூஜைகளுடன் வைபவம் தொடங்கியது..

வி
ழாவில் சகல நிகழ்வுகளும் சிறப்புற நடந்தன..


அஷ்ட லக்ஷ்மி பூஜையுடன் திருமாங்கல்ய தாரணம் தொடர்ந்து மகா தீபாராதனை
நடைபெற்றது..
இயன்றவரை காட்சிகளைப் பதிவு செய்துள்ளேன்..


தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணி தான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6.23.1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***