நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 29, 2020

தெய்வ தரிசனம்

    

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

திருத்தலம் - திரு இரும்பூளை
தற்போது ஆலங்குடி

இறைவன்
ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ ஏலவார்குழலி

தீர்த்தம்
அமிர்த புஷ்கரணி
ஞான கூபம்..

தல விருட்சம்
பூளைச் செடி..

ஒருசமயம் தேவர்களைக்
காத்தருளியதால்
ஸ்ரீ விநாயகருக்கு
கலங்காமல் காத்த விநாயகர்
எனத் திருப்பெயர்..

தலவிருட்சத்தின்
பெயரால் விளங்கும்
தலங்களுள்
இதுவும் ஒன்று..

எல்லா சிவாலயங்களிலும்
தெற்குக் கோட்டத்தில் 
ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி என
விளங்கும்
ஆலமர் செல்வனின் சந்நிதி
இங்கு பிரசித்தம்..

கும்பகோணத்திலிருந்து
மன்னார்குடி செல்லும் வழியில்
நீடாமங்கலத்துக்கு
சற்று முன்பாக
அமைந்துள்ளது இத்தலம்...

எல்லாம்வல்ல இறைவன்
குரு ஸ்தானத்தில் இருந்து
குறைகளைத் தீர்த்தருள்வதாக
நம்பிக்கை..

Fb ல்
கிடைத்த காணொளி


சீரார் கழலே தொழுவீர் இது செப்பீர்
வாரார் முலைமங் கையொடும் உடனாகி
ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ்சம் அமுதுண்ட கருத்தே.. (2/36)
-: திருஞானசம்பந்தர் :-
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

புதன், அக்டோபர் 28, 2020

சதய அபிஷேகம்

   

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
மாமன்னன்
ஸ்ரீராஜராஜ சோழப் பெருந்தகையின்
பிறந்த நாளாகிய
ஐப்பசி சதயத்தன்று
தஞ்சை பெரிய கோயிலில்
நடைபெற்ற பேரபிஷேகத்
திருக்காட்சிகள்..

தருமபுரம் ஆதீனத்தினர்
பேரபிஷேகத்தினை
சிறப்புற நடத்தியுள்ளனர்


என்றென்றும்
மாமன்னனின் திருப்பெயர்
நிலைத்திருக்கும்..
***
இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
 ஸ்ரீ ராஜராஜன் புகழ் ஓங்குக!..

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

செவ்வாய், அக்டோபர் 27, 2020

மாமன்னன் வாழ்க

   


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

நேற்று
மாமன்னன்
 ஸ்ரீராஜராஜ சோழப்
பெருந்தகையின்
பிறந்த நாள்..
ஐப்பசி சதயம் 1035..

இவ்வருடம்
விஜய தசமியும்
சதயமும் இணைந்து
வந்துள்ளன..

நேற்றைய தினம்
தஞ்சை பெரிய கோயிலில்
நிகழ்ந்த வைபவங்கள்
இன்றைய பதிவில்..

இவ்வருடத்தின்
மஹாபிஷேகத்தினை
தருமபுர ஆதீன
மடாதிபதிகள்
நடத்தியுள்ளனர்..


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல இறைவனின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***


மேலே உள்ளது
விஜயதசமி அன்று
குதிரை வாகனத்தில்
அம்பாள் எழுந்தருளிய
திருக்காட்சி..


ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

ஞாயிறு, அக்டோபர் 25, 2020

திவ்ய தரிசனம் 3

  


அனைவருக்கும்
அன்பின் இனிய
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்..
***
நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

தீமைகள்
அழிக்கப்பட்ட நாள் இன்று..


இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
எல்லாம் வல்ல அம்பிகையின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை தூய
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்..

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போல்கையும்
துடியிடையும் 
அல்லும் பகலும் அனவரதமும் நினைத்தால்
கல்லும் சொல்லாதோ கவி..
-: க விச்சக்ரவர்த்தி கம்பர் :-
***இன்றைய பதிவில்
இரண்டு இனிய பாடல்கள்..ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே சதா..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

சனி, அக்டோபர் 24, 2020

திவ்ய தரிசனம் 2

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நவராத்திரி விசேஷங்கள்
திருக்கோயில்கள் தோறும்
சிறப்புற நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
அன்னை ஆதிபராசக்தியின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
Fb ல் கிடைத்த படங்களுடன்
நண்பர் 
திரு. தஞ்சை ஞானசேகரன்
வழங்கிய படங்களை
இன்றைய பதிவில் வழங்கியிருக்கின்றேன்..

ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***

முதலிரண்டு படங்களும்
தஞ்சை ஸ்ரீ பிரஹந்நாயகி அம்மன்.

அடுத்து - தஞ்சை 
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயில்
ஸ்ரீ துர்கை..

தொடர்ந்து
தென்மதுரை மீனாள்
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாயகி
தருமபுரம் ஸ்ரீ அஷ்டாதசபுஜ துர்கை
அச்சங்குட்டம் ஸ்ரீ முத்தாரம்மன் 
வேம்புலி அம்மன்
திருமங்கலக்குடி
ஸ்ரீ மங்களாம்பிகை - என,
திருக்காட்சிகள்...
***

தஞ்சை பெரிய கோயிலில்
மாமன்னன் 
ஸ்ரீ ராஜராஜசோழனின்
ஐப்பசி சதயத் திருவிழா
ஸ்ரீ வராஹி அம்மன்
வழிபாட்டுடன்
தொடங்கியுள்ளது..


மேலும்
இன்றைய பதிவில்
இனிய பாடல் ஒன்று..


ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை நம:

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ

வெள்ளி, அக்டோபர் 23, 2020

திவ்ய தரிசனம் 1

 


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

நவராத்திரி விசேஷங்கள்
திருக்கோயில்கள் தோறும்
சிறப்புற நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன..

இவ்வேளையில்
புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
அன்னை ஆதிபராசக்தியின்
திருவடித் தாமரைகளைப்
போற்றுவோம்..
***
இவ்வருடம்
வழக்கம் போல
நவராத்திரிப் பதிவுகளை
வழங்குவதற்கு
இங்குள்ள சூழ்நிலையில்
இயலவில்லை..

Fb ல் கிடைத்த படங்களுடன்
நண்பர் 
திரு. தஞ்சை ஞானசேகரன்
வழங்கிய படங்களை
இன்றைய பதிவில் வழங்கியிருக்கின்றேன்..

ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***முதலிரண்டு படங்களும்
தஞ்சை ஸ்ரீ பிரஹந்நாயகி அம்மன்.

இடையில்
தஞ்சை 
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயில்
ஸ்ரீ துர்கை..

அச்சங்குட்டம்
ஸ்ரீ முத்தாரம்மன் மற்றும்
திருமங்கலக்குடி
ஸ்ரீ மங்களாம்பிகை...
***
இன்றைய பதிவில்
இனிய பாடல் ஒன்று..


காத்யாயனாய வித்மஹே
கன்யா குமாரி தீமஹி
தந்நோ துர்கே ப்ரசோதயாத்:

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்..
ஃஃஃ