நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 30, 2013

திருநள்ளாறு


சந்நதியில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கியிருக்கும்  திருத்தலம் . 

அரசனின் ஆணைப்படி திருக்கோயிலின் பசுக்களைப் பராமரித்து பாதுகாத்து, திருக்கோயிலின் கைங்கர்யத்திற்காக   நாள் தவறாது முறையாக பசும்பால் அளந்து வந்தார்  -  இடையர் குலத் தோன்றலாகிய சிவனடியார் ஒருவர்.  ஆனால் திருக்கோயிலின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்த கணக்கன்,  அளக்கப்பட்ட பாலின் ஒருபகுதியைத் தன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பொய்க் கணக்கு எழுதி அதையும் பராமரித்து வந்தான்.  

ஒருநாள் எதிர்பாராத விதமாக முன்னறிவிப்பு ஏதும் இன்றி திருக்கோயிலுக்கு வருகை புரிந்த மன்னன் திருக்கோயிலின் நிர்வாக செயல்பாடுகளைப் பரிசோதிக்க, அளக்கப்பட்ட பாலின் அளவில் குறைவினைக் கண்டறிந்தான்.  விசாரணையின் போது  ஏதும் அறியாதவராகிய தொண்டர் மீதே பழி விழுந்தது. கோபம் கொண்ட  மன்னன்,  பால் அளந்து கொடுத்த இடையரைத் தண்டிக்க தன் கைப்பிரம்பினால் வீசியபோது,  

பெருமானின் சந்நதியிலிருந்து மின்னலென சிவாஸ்திரம் பாய்ந்து கணக்கனின் கணக்கினை முடித்தது. இறைவன் நீதிக்கும் அநீதிக்கும் இடை நின்று - இடையரைக் காத்து, கணக்கனைத் தண்டித்து நிகழ்த்திய திருவிளையாடலை எண்ணி - பெருமை கொண்டாலும், 

முறையாக செயல்படாத தன் சிறுமதியையும் நிர்வாக சீர்கேட்டினையும் அதனால் விளைந்த பெரும் பழியையும் -  உணர்ந்து தன்னையே மாய்த்துக் கொண்டான் மன்னன். 

இதனால் மதி மயங்கிய சிவனடியார் தன்னையும் மாய்த்துக் கொள்ள முயன்ற போது அடியார்க்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார். பின்னர் அவர்  பொருட்டு மன்னனையும் கணக்கனையும் உயிர்ப்பித்து அருளினார்.

அன்று நீதிக்காக வெளிப்பட்ட -  சிவாஸ்திரத்திற்கு வழிவிட்டுத்தான் நந்தியும், பலிபீடமும் சற்றே தென்புறமாக விலகியுள்ளன.

எம்பெருமான் - அருள்மிகும் தர்ப்பாரண்யேஸ்வர். தர்ப்பை வனத்தில் வெளிப்பட்ட  சிவலிங்கத் திருமேனி. அம்பிகை பிராணேஸ்வரி   எனப்படும் போகமார்த்தபூண்முலையாள்.

திருநள்ளாறு விடங்க ஸ்தலம். சோழ மாமன்னராகிய முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்தில் இந்திரனிடமிருந்து பெற்று வந்த விடங்கத் திருமேனிகள் ஏழினுள்  " நகவிடங்கர்''  விளங்கும் திருத்தலம். பெருமானின் திருநடனம் உன்மத்த நடனம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். 

விநாயகப்பெருமான் -  ஸ்வர்ண விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள் பாலிக்க -  திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்  ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

நளச்சக்ரவர்த்தி தன் மனைவி தமயந்தி தேவியுடனும்  தம் பிள்ளைகள் இருவருடனும் போற்றி வணங்கி சனி தோஷம் நீங்கப் பெற்ற திருத்தலம். நளன் பெயரால் இத்திருத்தலம் விளங்குவதே நளனின் பெருமையாகும்.

திருக்கோயிலின் தென்புறம் சிவனடியாராகிய இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையனார், அவர்தம் மனைவி, கணக்கன் ஆகியோர் திரு உருவங்கள் உள்ளன.

சனி தோஷமுடையோர் அதிகாலையில் நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள விநாயகர் மற்றும் பைரவரை வணங்கி அனுமதி பெறவேண்டும்.

திருக்கோயிலினுள் நுழையும்போது கோயிலுக்குள் உள்ள கங்காதீர்த்தத்தை தரிசித்து,  நள தமயந்தி சரிதத்தை மனப்பூர்வமாக சிந்தித்து அவர்களைப் போற்ற வேண்டும். ஏனெனில் நள மகாராஜன் தான் - இத்திருத்தலத்தில் முறையாக சிவதரிசனம் செய்தவருக்கு சனி தோஷம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு  - நமக்கெல்லாம் வரம் பெற்றுத் தந்தவர்.

பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று அருள்தரும் தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமியை மெய்யுருக வணங்கி வழிபடவேண்டும். பின்னர் தியாக விடங்கர் சன்னதியில் மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கவேண்டும்.

பின் வெளிப்பிரகார வலம் வந்து தெய்வத் திருமேனிகளைத் தரிசித்த பின் அம்பிகையாகிய பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.

பிறகு தான்,  சனைச்சரரை வணங்கி  - குறை தீர -  முறையிட வேண்டும்.

வில்வம் தல விருட்சம்.  தீர்த்தங்கள் - பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்,  நள தீர்த்தம் என்பன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் - என மூவரும் எழுந்தருளி,  திருப்பதிகங்களால் துதித்து வணங்கிய திருத்தலம்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணருடன் அனல்வாதம் செய்யும் முன்பாக,  திருப்பதிகங்கள்  எழுதப் பெற்ற  ஓலைச்சுவடிகளில் திரு உளம் பற்றி - கயிறு சாத்திப் பார்த்தபோது ''போகமார்த்த பூண்முலையாள்'' (1/49) எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் திருப்பதிகம் கிடைத்தது.  

அதையே திருக்குறிப்பெனக் கொண்டு, தீயில் இடப்பட்ட பனை ஓலைகள் -  கருகாமல் பச்சையாகப் பொலிந்தன. அதனால் இப்பதிகம் ''பச்சைப் பதிகம்'' எனும் சிறப்பினைப் பெற்றது. சைவ நெறியும் பகை வென்று நிலைத்தது. 

பெருமானின் கருணையைப் போற்றி, ஆலவாய் எனும் மதுரையம்பதியையும் திருநள்ளாற்றினையும் இணைத்து ''பாடக மெல்லடிப் பாவையோடும்'' (1/7) திருப்பதிகம் பாடியருளினார். பின்னும்,

''வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
 நளன்கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே!.''
(2/33/3) - என்று, 


ளன் இங்கு வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற வரலாற்றினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்..

'' நலங்கொள் நீற்றர் நள்ளாறரை நாள்தொறும்
  வலங்கொள்வார் வினையாயின மாயுமே!. ''
(5/68/10) என்றும்


'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''
(6/20/6) - என்றும்


- திருநாவுக்கரசர் தம் திருவாக்கினால் நமக்கு வழி காட்டுகின்றார்.

''நாதனை நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
-
(7/68/8) என்றும்

''நலங்கொள் சோதி நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
- (7/68/9) என்றும்


 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்ந்துரைக்கின்றார்.

நள தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் சனி  தோஷம் நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் தீரும். சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் ஞானம் விளையும் என்பது நம்பிக்கை. 

இங்கு இறைவனை வணங்கிய பிறகு சனைச்சரனை வணங்கினால் தான்  சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

திருநள்ளாறு - சிவாலயம் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். சிவபெருமானே மூல மூர்த்தி. ஆயினும் இன்றைய ஊடகங்களும் பல்வேறு வகையான நாளிதழ்களும் சனீஸ்வரன் திருக்கோயில் என்றும் சனி பகவான் திருத்தலம் என்றும் குறிப்பிட்டு வருகின்றன. இது தவறு.


சூரியன் - சாயாதேவி தம்பதியருக்குப் பிறந்தவரும் மந்த நடையினை உடையவருமான சனைச்சரன் கங்கைக் கரையில், காசி விஸ்வநாதரை ஏக சிந்தையராக வழிபாடு செய்து - கிரகநிலையினைப் பெற்றார். எந்நேரமும் சிவசிந்தனையில் திளைப்பவர்.  மிகச் சிறந்த சிவபக்தர்.

நம்முடைய பாவக் கணக்குகளைப் பராமரித்து, நமது சிந்தையைச் சிவ வழியில் செலுத்துபவர் சனைச்சரரே!.. ஈஸ்வரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நளமகராஜனை விட்டு விலகி - நளன்  இழந்த  எல்லாவற்றையும் அருளினார்.

அந்தத் திருத்தலமே திருநள்ளாறு. தம்மை உணர்ந்து தம் வினையை உணர்ந்து இங்கு வந்து வழிபடும்  பக்தர்க்கு நலம் விளையும் என்பதே திருக்குறிப்பு!...

உண்மையை உணர்ந்து கொள்வோர் - கொள்க!...

'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''

''திருச்சிற்றம்பலம்!''

வியாழன், மார்ச் 28, 2013

பம்பையில் ஆராட்டு

சபரிமலை பங்குனி உத்திரத் திருவிழா!

சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளைப் போலவே - பத்து நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 18-ம் தேதி அன்று காலை பத்து மணி அளவில் ஸ்ரீகோயில் முன் மண்டபத்தில் தந்திரிகளின் கொடிப்பட்ட பூஜை முடிந்ததும் மேளம் தாளம் முழங்க கொடிப்பட்டம் பவனியாக வந்தது.

நெற்றிப் பட்டத்துடன் அலங்காரமாக விளங்கிய யானை கொடிமரம் முன் வந்து நிற்க பக்தர்களின் சரண கோஷ முழக்கத்துடன் தந்திரி கண்டரரு ராஜீவரரு தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றினார். 


கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது.

அன்று முதல் ஒன்பதாம் நாள் திருவிழா வரை தினமும் உச்சபூஜைக்கு முன்னோடியாக உற்சவபலி,  இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் ஸ்ரீபூதபலி ஆகியன நடைபெற்றன. ஐந்தாம் திருவிழா முதல் தினமும் இரவு ஒன்பது மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது ஸ்வாமி  எழுந்தருளினார்.

ஸ்வாமியின் பிறந்த நாளான உத்திரத்தையொட்டி ஸ்ரீகோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஒன்பதாம் நாளான 26-ஆம் தேதி பள்ளிவேட்டைக்காக ஸ்வாமி சரங்குத்திக்கு எழுந்தருள - நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெற்றது. அதன் பின்னர் ஸ்ரீகோயிலுக்கு எழுந்தருளிய ஸ்வாமி ஸ்ரீகோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் பள்ளி கொண்டார். 

நேற்று 27-ஆம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து கோயிலுக்குள் ஸ்வாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் கணபதி ஹோமம் வழக்கமான நெய்யபிஷேகம் மற்றும் ஆராட்டு பலி பூஜைகள் நடைபெற்றன. 

காலை ஏழு மணியளவில் நடை அடைக்கப்பட்டது. பம்பையில் ஆராட்டுக்காக யானை மீது ஸ்வாமி மேள தாள வாத்திய முழக்கத்துடன் பக்தர்கள் புடை சூழ, பம்பை  ஆற்றுக்கு எழுந்தருளினார்.


மதியம் 12.30 மணி அளவில் பம்பை நதிக்கரையை வந்தடைந்ததும் பம்பை திருவேணி சங்கமத்தில் ஆராட்டு நடைபெற்றது. ஸ்வாமிக்கு மஞ்சள் காப்பு நடைபெற்றது. தந்திரியும், பூஜாரிகளும் ஸ்வாமி விக்ரகத்துடன் பம்பையில் மூழ்கி எழுந்தனர்.  

மாலை மூன்று மணி வரை பம்பை கணபதி கோயிலில் எழுந்தருளிய ஸ்வாமியை பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பம்பையில் தரிசனம் நிறைவுற்ற பின்,  பறை வழிபாடு சமர்ப்பணம் நடைபெற்றது.

அதன்பின் - சன்னிதானத்துக்கு ஸ்வாமி எழுந்தருளினார். பத்து மணி அளவில் சன்னிதானம் வந்தடைந்ததும் சிறப்பு பூஜை தீபாராதனைகளுடன் திருக்கொடி இறக்கப்பட்டதும் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெற்றது.

திருவிழாவையொட்டி - நெய்அபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலச  அபிஷேகம்,  உதயாஸ்தமன பூஜை, படிபூஜை -  என  பூஜைகள் நடந்துள்ளன.

சித்திரை விஷூ திருவிழாவினை முன்னிட்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி மீண்டும் திருநடை திறக்கப்படும்.

பூதநாத சதானந்த சர்வ பூத தயாபர
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம: 

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...

செவ்வாய், மார்ச் 26, 2013

திங்களூர்

தமக்கை திலகவதியாரின் வேண்டுதலால் - 

புறச்சமயத்திலிருந்து மீண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்படையுடன் ஊர் ஊராகச் சென்று திருப்பணி செய்து, 

அங்கே வீற்றிருக்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டு வாயார வாழ்த்தி மனமார வணங்கி திருப்பதிகங்களைப் பாடித் துதித்தார்..

அவ்வேளையில் - காவிரியின் வடகரையில் திங்களூர் எனும் திருத்தலத்தில் ஒரு அதிசயத்தினைக் கண்டு வியந்தார். 


வழி நெடுக - தண்ணீர்ப்பந்தல், வழிச்செல்வோர் தங்கும் இடங்கள், அன்னதான அறச்சாலைகள் - எல்லாமே ''திருநாவுக்கரசர்'' திருப்பெயரில்., 

வியப்பாக இருந்தது - பெருமானுக்கு.

விசாரித்தார். அப்பூதி அடிகள் எனும் அந்தணர் அவற்றை அமைத்து பேணி வருவதாகச் சொன்னார்கள். 

அது மட்டுமின்றி தன் பிள்ளைகளுக்கும் - திருநாவுக்கரசு என்று பெயர் சூட்டியிருப்பதையும் சொன்னார்கள். 

அவருடைய இல்லம் தேடிச் சென்றார் சுவாமிகள்.

அதுவரையிலும் திருநாவுக்கரசரை அப்பூதி அடிகள் நேரில் பார்த்ததில்லை.

எனவே, வந்திருப்பவர் சிவனடியார் என்ற அளவில் அவரை வரவேற்றார் - அப்பூதி அடிகள்.

அவரிடம் திருநாவுக்கரசர் கேட்டார் - 

'' ஐயா!... தாங்கள் தங்கள் பெயரில் அறப்பணிகளைச் செய்யாமல் யாரோ ஒருவர் பெயரில் செய்கின்றீர்களே!... அது ஏன்?...''

அப்பூதி அடிகள் உடனே பெருங்கோபம் கொண்டார்.. 

அப்போது,

''.. சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்ட எளியேன் யான்..'' என்று பணிவுடன் கூறியதும்

அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்த அப்பூதி அடிகள் சுவாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கி மகிழ்ந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டி, தம் இல்லத்திலேயே தங்கிவிடுமாறு தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆனால், திருநாவுக்கரசர் தாம் இன்னும் பல திருத்தலங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதைக் கூறியதும் -

'' இன்று ஒரு நாளாவது எம் இல்லத்தில் உணவு அருந்த வேண்டும் '' எனக் கேட்டுக் கொண்டார்.

அப்பூதி அடிகளின் அன்பினைக் கண்ட சுவாமிகள் - அவர் தம் இல்லத்தில் உண்பதற்கு ஒத்துக் கொண்டார்.

அப்பூதி அடிகள் உள்ளம் மகிழ்ந்து தன் மனையாளுடன் விருந்தோம்பலுக்கு ஆயத்தமானார்.

தன் மகனை வாழை இலை அரிந்து வரும்படி தோட்டத்திற்கு அனுப்பினார். ஆனால் - விதி வசத்தால் தோட்டத்தில், நாகம் தீண்டியது.

அந்தச் சிறுவன்  - வாழை இலையை தாயிடம் கொடுத்து விட்டு உயிரிழந்தான்.

இச் செய்தியை அறிந்தால் - திருநாவுக்கரசர் தம் இல்லத்தில் விருந்து உண்ண மாட்டாரே - என அஞ்சிய அப்பூதி அடிகள் தன்
மகன் உடலை மறைத்து விட்டு, 

தன் மனையாளுடன் சேர்ந்து  சுவாமிகளுக்கு அமுது படைத்தார். 

இறைவனின் திருக்குறிப்பினால் சிறுவன் நாகம் தீண்டி இறந்ததை அறிந்த திருநாவுக்கரசர், அப்பூதி அடிகளின் மகன் உடலை திருக்கோயிலுக்கு எடுத்து வந்து இறைவன் திருமுன் கிடத்தி, " ஒன்றுகொலாம் அவர் சிந்தை " எனத் தொடங்கி பதிகம் பாடினார்.  

இறையருளால் இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தார். பிள்ளை மீண்டெழுந்தது கண்ட அப்பூதி அடிகள் - பெருமானைப் பலவாறு துதித்து வணங்கி - சுவாமிகளுக்கு அமுது படைத்து பெரும் பேறு எய்தினார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த பழைமையான திருத்தலம் திங்களூர். 


இறைவன் - கயிலாய நாதர். 
அம்பிகை - பெரியநாயகி. 
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.
தல விருட்சம் - வில்வம்

விநாயகரின் திருப்பெயர் -  விஷம் தீர்த்த விநாயகர். 

சந்திரன் இங்கு ஈசனை பூஜித்து பேறு பெற்றபடியால் இத்தலத்திற்கு வந்து  ஈசனையும், அன்னையும் துதித்து சந்திரனை வழிபடுவோர்க்கு - கிரஹ தோஷங்கள் விலகுகின்றன.

தஞ்சையிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவையாற்றிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது திங்களூர்.

திருவையாறு - கும்பகோணம் சாலையில் உள்புறமாக  1 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோயில்.

தஞ்சையிலிருந்து - கணபதி அக்ரஹாரம் செல்லும் நகரப்பேருந்துகள் திங்களூர் வழியாக செல்கின்றன.

காவாய் கனகத் திரளே போற்றி!..
கயிலை மலையானே போற்றி! போற்றி!...

'' திருச்சிற்றம்பலம்!...''

திங்கள், மார்ச் 25, 2013

ஸ்ரீ நாடியம்மன்

பட்டுக்கோட்டை என்றவுடன் முதலில்  நம் நினைவில் தோன்றுபவள் அங்கே குடியிருக்கும் அன்னை அருள்மிகு நாடியம்மன் தான்!...


பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் சர்வ சாதாரணமாக மக்களின் பெயர்கள் ஆணாக இருந்தாலும் சரி.. பெண்ணாக இருந்தாலும் சரி...

இந்த அன்னையின் திருப்பெயரை ஒட்டியே சூட்டப்பட்டிருப்பது ஒன்றே இவளுடைய பெருமையைக் கூறும்.

மழவராயர்கள் எனும் ராஜவம்சத்தினர் பட்டுக்கோட்டையைத் தலைநகராகக் கொண்டு, .

ஒரு சமயம் தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் இவ்வழியே இராமேஸ்வரம் செல்லும் போது - விஷக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்..

எந்த வைத்தியம் செய்தும் குணமாகாத நிலையில் தஞ்சை மாரியம்மனை வேண்டிக்கொள்ள - அடுத்த சில மணித்துளிகள் நோய் நீங்கப்பெற்றது..

அந்த நன்றியின் விளைவால் -

அங்கேயே - அன்னை நிலை கொள்ளும்படி அவளுக்கு ஒரு ஆலயத்தினை அமைத்தார் மன்னர்.

நாடியம்மன் எனத் திருப்பெயர் சூட்டப்பட்டது அவளுக்கு!..

அன்று நாடி வந்து நலிந்தோர்க்கு அருள் புரிந்த அன்னை  - இன்றும் தன்னை நாடி வருபவர்க்கும் தேடி வருபவர்க்கும்  - தேடாமல் திரிவார்க்கும் கூட, ஓடி வந்து அருள் புரிபவளாக விளங்குகின்றாள்!...

பங்குனி உத்திரத்தில் காப்புக் கட்டுதலுடன் நாடியம்மனுக்கு பங்குனிப் பெருந் திருவிழா தொடங்குகிறது. சில சமயங்களில் இந்தத் திருவிழா சித்திரை மாதத்திலும் தொடரும். 

திருவிழா காலங்களில் அம்மன் தனது ஆலயத்தை விட்டுக் குடிபெயர்ந்து பெரியகடைத் தெருவின் நடுவிலுள்ள மண்டகப்படி மண்டபத்தில் குடியேறி திருவிழாவின் அனைத்து நாட்களிலும் பகலில் பல்வேறு திருக்கோலங்களில் விளங்குகின்றாள்.

இரவில் அம்மன் - காமதேனு, யானை, அன்னம், பூதம், ரிஷபம், குதிரை என - வாகனங்களிலும் பல்லக்கிலும் அலங்காரமாக நகர்வலம் வருகிறாள்.  

வெண்ணைத்தாழியின் போது அம்மன் ஸ்ரீகிருஷ்ணனைப் போல,

பல்லக்கில் வெண்ணெய்க் குடத்தை அணைத்த கோலத்தில் வீதிவலம் வரும்போது,

பக்தர்கள் பட்டுத்துணிகளை வாங்கி காணிக்கை வழங்குகின்றார்கள். 

திருவிழாவினை ஒட்டி நகரமே பெருமகிழ்வுடன் திகழும். தினமும் மாலை வேளைகளில் மண்டகப்படி மண்டபத்தின் அருகில் இன்னிசை விருந்தும் நடைபெறும்.

மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும் அம்மனின் ஐம்பொன் உற்சவத் திருமேனி திருவிழா காலங்களில் மட்டும் பெரிய கடைத் தெருவில் உள்ள மண்டகப்படிக்குக் கொண்டு வரப்படும். 

இந்த விழாவையொட்டி, நாடியம்மனுக்கு கோட்டை பெருமாள் கோயில் சீர்வரிசை வரும்..

பங்குனிப் பெருந்திருவிழாவில் நாடியம்மனுக்கு அணிவிக்கப் பெறும் வரகரிசி மாலை தான் பிரதானம்.

வரகரிசி மாலை சூடும் வைபவத்தை நள்ளிரவிலும் விழித்திருந்து, சுற்றுப்புற மக்கள் பெருந்திரளாகக்  கண்டு மகிழ்ந்து நாடியம்மனைத் தரிசித்துச் செல்வர்.

நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவள் நாடியம்மன். சுற்று வட்டாரத்தில் நாடியம்மனை வணங்காமல் பக்தர்கள் எதையும் தொடங்குவது இல்லை.  

இவ்வூர்  மக்களும் சுற்று வட்டார மக்களும் நாடியம்மன் திருவிழா எப்போது வரும் என்று காத்திருப்பார்கள் என்றால் அந்த அளவுக்கு நாடியம்மன் மக்களைக் கண் போல காத்திருக்கின்றாள் என்பது விளங்கும். 

நல்லருள் வழங்கி, நலம் பல கொடுக்கும் நாடியம்மனை நாமும் வணங்கி வளம் பெறுவோம்!...

நாடியம்மன் திருவடித் தாமரைகள் 
போற்றி!... போற்றி!...

ஸ்ரீ ரங்கநாதன்

பங்குனி உத்திர சேர்த்தி!...

அன்று அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரை கடந்து - இது தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!.. - அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...

பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..   அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!.. வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது. நம்ம வீட்டுக்கே மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!...

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  கரையில் அம்மா மண்டபம் வழியாக  காவிரிநதியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார். வருகிறார்... இதோ வந்து விட்டார்!... வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

'' வாங்க... மாப்பிள்ள!... வாங்க!..'' - என்று சிறப்பான வரவேற்பு...ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!...

ஸ்ரீ ரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது.

ஆயிற்று.... ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!...

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். அன்னம் போல தாயார் வருகிறாள்.. கண்கள் கசிகின்றன காதலால்,

''...நலம்.. நலமறிய ஆவல்..'' என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் . அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ... பிள்ளைகள் முன்பாகவா!....

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆதங்கம்...

''...என்ன!... ஒரு நூல் இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!...''

''.. குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் என்ன வழியாகவா இருக்கிறது - குண்டுங்குழியுமாக!... அன்றைக்குக் கூட வழி நடையாய்   ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!... '' - என்ற ஸ்வாமியை, கமலவல்லி மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள்.

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்.

ஸ்ரீ கமலவல்லி நாச்சியாருடன் ஸ்ரீ ரங்கராஜன்
'' இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட.. '' -  அன்னை இப்படி ஆனந்திக்க,

'' உன் பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?...'' - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய் இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்து..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

''...என் பங்கு நீ... உன் பங்கு நான்.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி... போய் வரவா!..''

''.. ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!....'' - தாயார் மூலஸ்தானத்திற்குத் திரும்ப - ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!...

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!. கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி.. அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!.. என்ன செய்வது?...  திரும்பவும் உறையூருக்கா!... வேறு வினையே வேண்டாம்!...''  அரங்கனின் பதற்றத்தைக் கண்டு -

ஒருவர் சொன்னார், ''..நான் கூட பார்த்தேனே!...'' , கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், அரங்க மாநகரில் யார் காதில் விழவேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து உள்ளே நுழைந்து - ரங்கநாயகியைத் தேடி வந்தால் - அந்த நேரம் பார்த்து, அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - '' படார் '' என்று... பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட பார்க்கவில்லை!... அத்தனை கோபம்!... அரங்கநாயகிக்கு...

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!... கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!... கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன .. கஷ்டமடா சாமீ!... அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!... அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!... அது தான் இத்தனைக்கும் காரணம்!...

''...இப்படிப் பொறுப்பில்லாமல் போற இடத்தில தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!...'' - ஒரே கூச்சல்.. ஆரவாரம்!...

''...ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!....''

''...பொண்ணு வீட்டுக்காரங்களாம்... பேச வந்திருக்காங்க!....''

''...ஏன்... அவங்க பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?...''

''... சரி.. சரி.. விடுப்பா.. நம்ம பக்கம் தப்பு இருக்கு!...''

அரங்கன் திகைத்தான். ''..என்ன சொல்கின்றான் இவன். உப்பே வேண்டாம் என ஏற்றுக் கொண்டேனே!.. என்னிடமா.. தப்பு!...''

அதற்குள் உள்ளேயிருந்து ஏதேதோ வந்து அரங்கனின் மேலே விழுது!... விழுதா?... ஆமாம்!... அன்பின் விழுதாக அரங்கனின் மேல் வந்து விழுந்தன பூக்களும் வெண்ணெய் உருண்டைகளும் ....அதெல்லாம் கூட பரவாயில்லை..

கதவைச் சாத்தியது கூட சரிதான்!... 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!....

அரங்கன் பரிதவித்துப் போனான்!... அந்த நேரம் பார்த்து அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்க  -  உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் - நம்மாழ்வார்...

அவருக்கு மனசு தாங்கவில்லை. அண்ட பகிரண்டமும் அரற்றியவாறு, காணக் கிடக்கும் அவன்  - திருமேனி முழுதும் வேர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்கின்றானே!.. அரங்கனுக்கா இந்த நிலை!..

விறுவிறு - என்று பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

''..ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல நீ செய்யலாமா!... கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!.. இப்போது மட்டையால் அடிப்பவளும் நீ!.. நீ இன்றி அவளில்லை!... அவளின்றி நீ இல்லை!... அனைத்தும் அறிந்த நீ அரங்கனை  அவமானப்படுத்துகிறாயே...  நியாயமா?.. அம்மா?..." -

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

''...உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட, உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!.. அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. பார்.. உன் நினைவில் பால்பழங்கூட உண்ணாமல், ஓடி வந்தவனின் முகத்தைப் பார்... உண்ட மயக்கம் தொண்டருக்கு.. ஆனால் தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் மயங்கியிருப்பதைப் பார்!..''

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு... '' இதை அப்பவே சொல்றதுக்கென்ன!. இன்னும் சாப்பிடலைன்னு!... கணையாழி போனாப்  போறது!... நீங்க வாங்க!....''

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கன் புன்னகைத்தான்...  அரங்கநாயகி புன்னகைத்தாள்... ஆழ்வாரும் புன்னகைத்தார்... அவர்களுடன் அண்ட பகிரண்டமும் புன்னகைத்தது!...

அரங்கநாயகி  சொன்னாள், ''இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ? சரியான பைத்தியம்!..'' அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!...

அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மாதவிப்பந்தல் எனும் மல்லிகைப்பந்தலின் கீழ், ''சேர்த்தி மண்டபத்தில்'' ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர். அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

ஸ்ரீ ரங்கநாயகியுடன் ஸ்ரீ ரங்கராஜன்
இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை!...

*  *  *

அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே... இல்லையா!....

அது எப்போது காணாமல் போனது ?... இப்போது கிடைப்பதற்கு!... அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தான் மட்டையடி!.... கணையாழி இப்போதும் அரங்கனின் விரலில் பத்திரமாக உள்ளது!...

*  *  *

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார். இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பின்பு 18 முறை திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள். மறுநாள் பங்குனித் தேரோட்டம். அதனுடன் மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

உத்திரத்தன்று சக்திக்கேற்ப- சர்க்கரைப் பொங்கலும், வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுதும் நிவேதனம் செய்வது மரபு.

அங்குமிங்குமாகத் திரட்டிய தகவல்களுடன் - மாதவிப்பந்தலுக்கும் நன்றி!..

அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..

சனி, மார்ச் 23, 2013

ஸ்ரீ ரங்கராஜன்

சத்யலோகம்.

நான்முகன் சரஸ்வதியுடன் ஏகாந்தமாக வீற்றிருந்தார். தேவரும் அசுரரும் அவரவர் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தனர். அதனால் - அவர்களால் இப்போது வரை எந்த தொந்தரவும் இல்லை. எனவே பிரம்ம தேவனின் மனம் அமைதியாக இருந்தது. அருகில் அன்னை கலைவாணியின் வீணையில் இருந்து மீட்டாமலேயே - நாதவெள்ளம்.

''..நாம் இத்தனை உயிர்களைப் படைத்தளித்துக் கொண்டிருக்கின்றோமே!.. இத்துடன் நம் வேலை முடிந்து விடுகின்றதா!... ஆன்மாக்களின் புண்ணிய பாவக்கணக்கின்படி தலையெழுத்தை எழுதி விட்டால் சரியாகி விடுமா?... எல்லா உயிர்களும் கடைத்தேற நாம் என்ன செய்திருக்கின்றோம்?... ஆதி தகப்பனாகிய நமது பங்கு இதில் என்ன?.. உயிர்கள் உய்வடைய வழிகாட்ட வேண்டாமா?...'' - இப்படி  யோசித்தார். ஏகப்பட்ட கேள்விக்குறிகள் எதிர் நின்றன. மிகவும் குழம்பினார். திசைக்கு ஒன்றாக நான்கு முகங்கள் இருந்தும்,

ஞான ஸ்வரூபிணியாக அன்னை கலைவாணி - தன் அருகிலேயே இருப்பது அவருக்கு விளங்க வில்லை. அனைத்தையும் உணர்ந்தவளான அன்னை மெல்லியதாக புன்னகைத்தாள்.


கமலபீடத்திலிருந்த  பிரம்மன் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வைகுந்த வாசலை வந்தடைந்தார். ஜய விஜயர்கள் வணங்கி வரவேற்றனர். அவர்களை வாழ்த்திய நான்முகன் பார்வையாலேயே, ''.. நிலவரம் எப்படி?...'' என்றார்.

''...தங்களுக்காகத்தான் பெருமான் காத்துக் கொண்டிருக்கின்றார்..'' என்றனர்.

''...ஓம் நமோ நாராயணாய!...ஓம் நமோ நாராயணாய!...''

வைகுந்தவாசலைத் தொட்டு வணங்கி உள்ளே நுழைந்த பிரம்மன் ஐயனையும் பிராட்டியையும் போற்றினார். பணிந்து வணங்கினார். '' பளிச் '' என்று ஒரு மின்னல் நான்முகனின் நெஞ்சுக்குள். அவருடைய  நான்கு முகங்களும் மலர்ந்தன. ''  உத்தரவு...''  என்றார். உடனே அங்கிருந்து புறப்பட்டார்.

மஹாலக்ஷ்மிக்கு வியப்பு.  ''...என்ன ஸ்வாமி!...'' என்றாள். ''..உடனே நீயும் புறப்படு.. நம்மை ஆராதித்து பிரம்மன் உத்ஸவம் நிகழ்த்த இருக்கிறான்.. இனி கொஞ்ச நாட்களுக்கு ஓய்வு இருக்காது... ம்ம் ... சீக்கிரம்!...'' என்றார் பெருமாள்..

கருடன் தன்னுடலை உலுக்கி சிறகுகளை உதறியபடி - புறப்படத் தயாரானான்.

''..எங்கே!.'' - என்றாள் பிராட்டி. ''பூலோக வைகுந்தத்திற்கு.'' என்றார் பெருமாள்.

*  *  *

இப்படி - பூலோக வைகுந்தமாகிய ஸ்ரீரங்கத்தில் -

தான் படைத்த உயிர்கள் யாவும் உயிர்கள் உய்வடையவும் கடைத்தேறவும் வழிகாட்டி - பங்குனியில்  பிரம்மா தொடங்கி  நடத்திய விழா அதன் பின் வாழையடி வாழையாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது!..

பிரம்மன் முன்னின்று நிகழ்த்தியதாலேயே, '' பிரம்மோத்ஸவம் '' எனப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் - இதைத்தான், "ஆதி பிரம்மோத்ஸவம்'' என்கின்றனர்.

இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திர தினத்தில் ஸ்ரீரங்கராஜன் , ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். இவர்கள் இருவரும் சேர்த்தியாய் சேவை சாதிக்க ஒருவர் பாடுபட்டார். அவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் வந்து சேர்த்து வைப்பதற்குள் திருவளர் செல்வனாகிய ஸ்ரீரங்க ராஜன் பெரும்பாடுபட்டான். அது ஏன்?...

அது '' ப்ரணய கலகம் '' எனும் ஊடல்... அது எதுக்கு இங்கே வந்தது!?...

பூவுலகில் வைகுந்தமாக திருஅரங்கம் நிலை பெற்ற பிறகு, இங்கு நிகழ்ந்த அற்புதங்களும் ஆனந்தங்களும் ஏராளம்!...ஏராளம்!...


உறையூரை ஆண்டு கொண்டிருந்த நங்க சோழன் என்ற மன்னருக்கு மகப்பேறு இல்லை. ரங்கநாதனின் பக்தனான,  அவர் தமக்கு புத்திர பாக்கியத்தினை பிரசாதிக்கும்படி வணங்கி வந்தார்.  பக்தனின் தீவிர அன்புக்கு இரங்கிய பெருமானும் பிராட்டியும் அவன் குறை தீர என்று திருஉளங்கொண்டனர்.

அதன்படி, வேட்டைக்கு வந்த  நந்தசோழன் வனத்தினுள் குழந்தை அழும் குரல் கேட்டுத் திகைத்தான். ஆவல் மேலிட பரிதவிப்புடன் மன்னன் தேடிச் சென்ற போது, ஒரு தடாகத்தில் பொற்றாமரை மலரில், ஆயில்ய நட்சத்திரங்கூடிய சுபயோக சுபவேளையில் கோடி சூர்யப்ரகாசத்துடன் குழந்தை எனத் தோன்றினாள் திருமகள்.

பேராவலுடன் அந்தக் குழந்தையை வாரி அணைத்த மன்னன், நாமே இந்தக் குழந்தையை வளர்க்க வேண்டும் என உந்தப்பட்டாலும்  பெயரளவுக்கு யாரும் குழந்தைக்கு  உரிமை கொண்டாடி வருகின்றார்களா என சிறிது நேரம் காத்திருந்தான். மழலையாய் மலர்ந்த மஹாலக்ஷ்மி மன்னனின் கரங்களில் உழன்று கொண்டிருந்தாள். குழந்தையைத் தேடி, ஒருவரும் வரவில்லை. ஆதலால் உறையூர் அரண்மனை திருவிழாக்கோலம் பூண்டது. திருமகளின் வரவினால் -

கொடுங்குற்றவாளிகள் குணங்கெட்டு நல்லவராகினர். சிறைச்சாலைகள்  - அறச்சாலைகளாயின. வறியவர் என்ற சொல்லே வழக்கொழிந்து போனது. அதனால் வாரிக் கொடுக்கவும் வாங்கிக் கொள்ளவும் ஆளின்றி - பொக்கிஷப் பேழைகள் திறந்தே கிடந்தன.

நீருண்ட மேகங்கள் வேறெங்கும் செல்ல மனமின்றி,  மாதம் மும்மாரி பெய்த பின்னும் - '...இன்னுமொரு முறை  சூழ்ந்து பெய்யவா!...'' என்று கேட்டபடி உறையூரை சுற்றியே அலைந்து கொண்டிருந்தன.

" கமலவல்லி '' எனத் திருப்பெயரிட்டு கொஞ்சினான். உச்சி முகர்ந்தான். தன் கரங்களிலேயே குழந்தையை வளர்த்தான் மன்னன்.

காலங்கள் வேகமாகச் சுழன்றன. இளங்கன்னியாக தோழியருடன் காவிரிக் கரையோர வனத்தில் தென்றலோடு தென்றலாக உலவிக் கொண்டிருந்தாள் கமலவல்லி. காவிரி சூழ் பொழில் கமலவல்லியின் பாதம் பட்டு புனிதமானது.

கமலவல்லியின் வளைக்கரம் பற்றவும், சோழமன்னனை ஆட்கொள்ளவும் வேளை நெருங்கியது. கருடனை அழைத்தார் ஸ்வாமி. கருடன் ஓடி வந்த வேகத்தில் குதிரையாகி நின்றான்.

'' பெருமானே!. என்ன இது?.'' திகைத்தான்.

''...இன்னும் சில நாட்களுக்கு இப்படியே இரு!.'' என மொழிந்த பெருமாள், குதிரை வாகனத்தில் இளங்காளை என ஆரோகணித்தார். குதிரையை காவிரிக் கரையை நோக்கிச் செலுத்தினார்.

குதிரையாக உரு மாறிவிட்டதால், கருடன் புதிதாக நடை பழகினான். அதற்கு காவிரிக்கரை - குளிர்ந்த காற்றுடன் வசதியாகவே இருந்தது. கள்ளர் பிரானைச் சுமந்து கொண்டு குதிரை இப்படியும் அப்படியுமாக நடை பயின்றது.

''.. யாரது!.. இளவரசியார் உலவும் நந்தவனத்தின் குறுக்கே!..'' ஆயுதங்களுடன் ஓடி வந்த காவலர்களிடம் கமலவல்லி சொல்லத்தான் நினைத்தாள் - ''..அவர் என உள்ளங்கவர் கள்வன்..'' - என்று. ஆனால் முடியவில்லை.


பெருமானை நோக்கி ஆயுதங்களுடன் ஓடி வந்த காவலர்களோ திகைத்தனர். ''..நம்ம ஊர்லயும் இவ்வளவு அழகான பசங்க  இருக்கானுங்களா!..'' - மருகினர்.

அண்ணல் நோக்கினார்.  மூடிக்கிடந்த விழியிரண்டும் - ''..பார்.. பார்..'' என்றதால் அன்னையும் நோக்கினாள்.

கதிரவன் இதைப் பார்த்து சிரித்துக்கொண்டே நகர்ந்தான். இப்படியே சில நாட்கள்... மன்னரின் காதுகளில் இந்த செய்தி விழுந்தது. எனினும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.  பெண்ணாகப் பிறந்த பெருந்தகையாள் பிரானைக் கண்ட நாள் முதலாக பேசுதற்கு மொழியின்றி நலிந்தாள்...நடை மெலிந்தாள்..

இதற்கு மேல் இந்த நாடகம் தகாது என்று - நந்தசோழனின் கனவில் தோன்றிய பெருமாள், எல்லாவற்றையும் உணர்த்தி - கமலவல்லியின் கரம் இருப்பதாக கூறினார். உள்ளந்தெளிந்த சோழமன்னன், கமலவல்லியை ஸ்ரீரங்கத்திற்கு மேளதாளங்களுடன் அழைத்துச்சென்றார். அங்கே ஸ்ரீரங்கராஜனுடன், கமலவல்லி ஜோதி வடிவாக ஐக்கியமானாள்.

சோழமன்னர் பெருமகிழ்ச்சியுடன் , தன் உள்ளம் நிறைந்தபடி கமலவல்லி நாச்சியாருக்கும்  ஸ்ரீரங்கநாதனுக்கும் உறையூரில் கோயில் எழுப்பி எல்லா வைபவங்களையும் ஸ்ரீரங்கத்தார் போலவே கொண்டாடி பரமபதம் சேர்ந்தார்.

அதன் பிறகு, பங்குனி உத்திர வைபவத்தில் - உறையூர் கமலவல்லி நாச்சியாருடன் ஆயில்ய நட்சத்திரத்தன்று  சேர்த்தி கொண்டருள விரும்பி - படி தாண்டா பத்தினியாகிய ஸ்ரீரங்கநாயகி அனுமதியுடன்,

ஸ்ரீரங்கராஜன் சென்றபோதுதான் அது  நடந்தது... அல்லது நடத்தப்பட்டது.

அது நன்றாகவே நடத்தப்பட்டது.

- இனி நடக்க இருப்பதும் நன்றாகவே நடக்கும். 

ஆண்டளக்கும் ஐயனின் திருவடிகள் போற்றி!..

வியாழன், மார்ச் 21, 2013

நந்தி திருக்கல்யாணம்

ஸ்ரீ நந்திகேஸ்வரர்  - சுயசாம்பிகை தேவி திருக்கல்யாணம்!...

ாம் சிவாலங்கக்குச் செல்லும் பில் விநாயப்பெருமானை வங்ுகின்றோம். அடத்ு வங்கி அனுமி கேட்பு அிகாரந்ி எனும் ஸ்ரீநந்திம்பெருமானிடம். இவுடைய அனுமிுடன் ான் நாம் சிவிசம் செய்கின்றோம் என்பு மு. அத்ை பெருமை இவுக்கு!...அால் ான் சிவெருமானே முன் நின்று இவிருமத்ை நத்ி வத்ார்!...


ஒருமுறை திருக்கயிலை மாமலையில் எம்பெருமானுக்கும் அம்பிகைக்கும் பணி புரிந்து கொண்டிருந்த நந்தியம்பெருமானுக்கு தாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன - என்று ஒரு ஆவல் தோன்றியது. நந்தியின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொண்ட ஈசனும் அம்பிகையும்  ''.. அவ்வாறே ஆகுக!..'' என்று அருள் புரிந்தனர். 

அப்போது நந்தி -  ''ஸ்வாமி!... தங்களுடைய அடிமையாய்த் தொண்டு செய்யும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் எப்படித் தோன்றியது!... ஏன் தோன்றியது?... எனக்கு யாரைத் தெரியும்?... தங்களைப் பிரிந்து எப்படிச்  செல்வேன்!... எங்கு செல்வேன்!.. என்னைப் பொறுத்தருளுங்கள்!...'' என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார். 

அதைக் கண்டு நெகிழ்ந்த பரம்பொருள் - '' அஞ்சற்க!...  தர்மத்தை புத்திரனாகப் பெற வேண்டி கங்கையினும் மேலான காவிரிக் கரையில் எம்மை நோக்கித் தவம் செய்யும்   சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் உன்னை ஆட்கொள்வோம்...'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதன்படி, திருவையாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர்  ெய்த  தவம் நிறைவேறும் வேளையும் வந்தது.

''..சிலாத முனிவரே!... நீர் இதுகாறும் தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!..'' என அவருக்கு அசரீரியாக அறிவிக்கப்பட்டவுடன், பெரு மகிழ்ச்சியடைந்த சிலாதர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாகபூமியை உழுதிட  பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது. 

ஆவலுடன் முனிவர் பெட்டகத்தை திறந்திட அதனுள் கோடி சூர்யப்ரகாசம் என - நந்தீசன் திருமகனாகத் தோன்றினார். அப்பபூமியெங்கும் சுகந்த மணம் வீிய. பன்னீர் மழையாகப் பெய்தது. நந்தீசனின் நட்சத்திரம் பங்குனி மாத திருவாதிரை.  அன்றே நந்தீசனுக்கு சிவாகமச் செல்வனாக அபிஷேகம் செய்து வைத்தார் இறைவன்.

இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட - சிலாதர் கலங்கினார். காரணம் -  இறைவன் ஆணைப்படி நந்தீசனின்ஆயுள் பதினாறு வருடங்கள் தான் என்பதால். கலங்கி வருந்திய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்த நந்தீசன், தவத்தைச் செய்து சிவத்தை அடைய விரும்பினார். 

தந்தையின் அனுமதி பெற்று கடும் விரதங்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டார். திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்று எண்ணாயிரங்கோடி முறை பஞ்சாட்சர மகாமந்திரத்தை உச்சரித்து சிவசக்தி தரிசனம் பெற்றதுடன் ஜபேசன் என,  திருப்பெயரும் சூட்டப்பட்டார்.

அப்போது - மந்திரம் செய்தபகழுத்தளவு நீரில் நின்ிருந்தால் - மீன்களால் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடாக இருந்த அவருடைய உடக் கண்டு உமையம்மை உள்ளம் உருகிாள். அன்னையின் மனம் கசிந்தது.  அதனால் -

ம்பிகையின் திருத்தன பாரங்களிலிருந்து வெள்ளமென பால் பொங்கிப் பிரவகித்து - நந்தீசனின் உடலை நனைக்க நந்தியம்பெருமான் முன்னை விட பேரழகுப் பிரகாசமான - திருமேனியினைப் பெற்றனர். சகல தேவர்களும் பூமாரி பொழிய சிவபெருமான் - நந்ீசை - சிவகணங்களின் தலைவன் என்று பட்டாபிஷேகம் செய்து வைத்தார். 

பொற்பிரம்பினையும் மான், மழுவையும் சந்திர கலையினையும் அருளினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும் வழங்கி '' அதிகார நந்தி '' எனும் பெரும் பதவியினை அருளி நந்தீசர் மீது பொன் மாரி பொழிந்தார். 

இந்த வேளையில் சிலாத முனிவர் சிவபெருமானைப் பணிந்து - ''...ஐயனே!.. என் மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன்.. அருள் புரிக.. ஸ்வாமி!...'' என்று தன் ஆவலை வெளியிட்டார். உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது. பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!...

'' எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்.. '' என்று சிவபெருமானுக்கும் மகிழ்ச்சி. 

''...காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் என் அன்பன் வியாக்ரபாதரின் மகளை மணம் பேசுக!... நாம் ஐயாற்றிலிருந்து வந்து மணவிழாவினை நிகழ்த்துவோம்!...'' என்று திருவாய் மலர்ந்தருளினார். அம்பிகைக்கு ஆனந்தம். வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நடை பெறுகிறது  என்று!.. அப்புறம் என்ன!.. ஊரெங்கும் கொண்டாட்டம் தான்!..

நந்தீசன் - கிரீடமும் பொற்பிரம்பும் தாங்கியவராக வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து உடன் வர - சிலாத முனிவருடன் மற்ற முனிவர்களும் திரண்டு, திருமழபாடிக்குச் சென்றனர். விஷயத்தை முன்பே உணர்ந்திருந்த வியாக்ர பாதர்  அன்புடன் அனைவரையும் வரவேற்று உபசரித்தார். 

வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு அழத் மாலை அணிவித்து வரவேற்றான். இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக,  பசி தாளாது அழுதபோதுதான் ,  ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்தார். 

தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டி -  '' கொடுத்து வைத்தவள் நீ!..'' - என்றனர். தாய் வழி வந்த நாணத்தால் முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசை.

நீட்டி முழக்க அவசியமின்றி, பார்வதி பரமேஸ்வரர் தம் சுவீகார புத்திரரும் சிலாதமுனிவரின் அன்பு மகனும் ஈசனிடம் சகல வரங்களையும் பெற்றவரும்  திருக்கயிலாயத்தில் அதிகார நந்தி எனும் பெரும்பதவி வகிப்பவருமான, ஜபேசன் எனும் திருநந்திதேவருக்கு - 

வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாதரின் அன்பு மகளும் உபமன்யுவின் பிரிய சகோதரியுமான  சுயசாதேவி எனும் சுயம்பிரகாசினி தேவியை மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி ச ேவா மூர்த்ிின்ல்லாசிகுடன் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரங்கூடிய ோகுபினத்ில் திருமாங்கல்யதாரணம் செய்வது என இருதரப்பாரும் ஏகமனதாக நிச்சயித்து தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

ிவங்கள் ூழ்ந்ு வதிருஐயாற்ிலிருந்து பொற்பல்லக்கில்  மங்கல முழக்கங்களுடன் திருமழபாடிக்கு எழுந்தருளிய அறம்வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் - விநாயும் வேலம் அருகிருக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க அக்னி சாட்சியாக பஞ்சபூத சாட்சியாக ஸ்ரீநந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகை தேவிக்கும் திருமண வைபவத்தினை  நடத்தி வைத்து அருளினர். 

இந்த ஆனந்த வைபவம் - மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்யதாரணம் நிகழ்ந்தேறிய அளவில், மணமக்களை எல்லோரும் பணிந்து வணங்கி இன்புற்றனர். 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவியுடன் - வளர்த்த தாய்தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய  அறம்வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள் செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார். 
 
ஐயாற்றிலிருந்ு எம்பெருமானுடன் கூடி வந் எல்லாரும் மக்கத்ஊர்குக்கு வந்ுளுமாறு வேண்டி விரும்பி அழத்ர். ாமே மக்கை அழத்ு வுவாக அறம்வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் - அவர்குக்கு வாக்கித்ர்.ன்பி சித்ிரையில் வெட்டிேர் பல்லக்கில் மக்குடன் ஏழஊர்கையும் சுற்றி வந்ு எல்லோருக்கும் நல்லுள் புரிந்ர். எல்லோரும் இன்புற்றிருக்கேண்டி, திருக்கிலை மாமலில்-

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவியுடன் சிவசாயுஜ்யம் பெற்றனர். 

ெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர்
ொற்றம் புயான்கும் பொருந்ுறப்
ெற்றெம்ான் அரல் பிரம்ைப்
ற்றும் நந்ி பிவொடாப்பு.   

சிவராஜதானியாகிய திருக்கயிலை மாமலையில் ரிுகத்ுடன் ிகாரந்ி எனத் ிரத்ோற்றங்கொண்டு விருக்கத்ினில் முவும் இடிருக்கத்ினில் மானும் ஏந்ிாகற்ற ிருக்கங்கில் ிருக்குறிப்பும் பொற்பிரம்பு தாங்கியபடி திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்.

*  *  *

இந் அளில் - என் ந்ையினும் ந்ையய்,ங்கள் ுலெய்வய்ிளங்கும் - 

''ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை ேவி '' ிுமைபவம் ிந்ிக்கப்ட்டு. 

நந்ீசர் ிருமைபத்ினித்ர்க்கும் ிந்ித்ர்க்கும் மை மங்கம் சிறக்கும் என்பிருக்குறிப்பு!...


திருமணத்தடை உள்ளவர்கள் நந்தியம்பெருமான் ிரக்கல்யாணத்தைத் தரிசித்தால், தடைகள் உடைபட்டு,  நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது அசைக்க முடியத நம்பிக்கை. இதனால்தான், " நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்'' என்ற சொல்வழக்கு ஏற்பட்டு.  

ிருமத் ை மட்டுமல்ல... இல்லத்ில் ட்டு நிற்கும் எல்லா சுப ாரியங்குக்காகவும், ியாபாரிரத்ிக்ாகவும், ீரோய் ர்வற்கும், ன் ுமை குறற்கும், கல்வியில் முன்னேற்றம் காணும், நல்லேலை கிடைக்கும் -   ந்ியம்பெருமானின் ிருக்கல்யாணேளையில் வேண்டிக் கொள்ாம். 

இத்திருமண உற்சவம் கோலாகலமாக, திருமழபாடியில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.  திருமண உற்சவத்தில் திருமழபாடியைச் சுற்றியுள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூரை வலம் வரும் விழாவும் நடைபெறும்.

ிருமாடி - அப்பர், சம்பந்ர், சுந்ர் ூவாலும் ிருப்ிகங்கைப் பெற்ற ிரத்ம். ஞ்ை - அரியூர் நெடஞ்சாலையில், ிருமானூரை அடத்ு உள்ள ஊர்.

ஞ்சை பழையேருந்ு நிலையத்ிலிருந்ிருமாடிக்கிறப்பானேருந்ு விகள் உள். ிரும் ிருச்சி மற்றும் அரியூரில் இருந்ும் ேருந்ுகள் இயக்கப்புகின்ற

ாவாய் கத் ிரே போற்றி!... 
ிலை மையானே போற்ி!..ற்றி!..

ிருச்சிற்றம்பம்!...