இன்று புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை...
புண்ணியங்கள் சேர்கின்ற நாள்...
அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...
அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..
புண்ணியங்கள் சேர்கின்ற நாள்...
சேர்த்துக் கொள்வதற்குமான நாள்!...
அதற்கான வழிகள் ஆயிரம் .. ஆயிரம்!...
அவரவர்க்கு இயன்ற வழிகளில் தேடிக் கொள்வோமாக!..
இந்நாளில்
ஸ்ரீபேயாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்கள்..
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.. (2282)
மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்துழாய் மார்பன் சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. (2284)
நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே வாமருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டுறையும் தண்துழாய்
கண்ணனையே காண்க நங்கண்.. (2289)
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி
அஞ்சா திருக்க அருள்.. (2299)
![]() |
ஸ்ரீ பார்த்தசாரதி - திரு அல்லிக்கேணி., |
வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்
நெருங்குதீ நீருருவும் ஆனான் பொருந்தும்
சுடராழி ஒன்றுடையான் சூழ்கழலே நாளும்
தொடராழி நெஞ்சே தொழுது.. (2305)
இவையவன் கோயில் இரணியன தாகம்
அவைசெய் தரியுருவம் ஆனான் செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான் நறவேற்றான்
பாகத்தான் பாற்கடல் உளான்.. (2312)
![]() |
ஸ்ரீ திருமலையப்பன் - திருமலை., |
அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கருங்கடல் நீருள்ளான் துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப் பூணாரம்
திகழும் திருமார்வன் தான்.. (2318)
இறையாய் நிலனாகி எந்திசையும் தானாய்
மறையாய் மறைப்பொருளாய் வானாய் பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்
உள்ளத்தின் உள்ளே உளன்.. (2320)
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயும் ஆவான் பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே
பூரித்தென் நெஞ்சே புரி.. (2325)
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய் எய்ததும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலங்கைக் கொண்டான் முயன்று.. (2333)
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ