நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 30, 2024

திருவீழிமிழலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 
செவ்வாய்க்கிழமை



திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு உரியதான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை உடனாய ஶ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
சிறப்புடன் நடந்தது..

ஆறாம் திருநாளாகிய 
வியாழன்று (சித்திரை 5 ) மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்ற நிலையில்,
ஞாயிறன்று திருத்தேரோட்டம்..

சித்திரை 8 ஞாயிறன்று (21/4) ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் திருமுன்னர் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது..

ஒளிப்படங்களை வழங்கியோர் - துறைசை ஆதீனம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..


















கயிலாய மலையுள்ளார் காரோணத்தார்
    கந்தமா தனத்துளார் காளத்தியார்
மயிலாடுதுறையுளார் மாகா ளத்தார்
    வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபாலமும்
    அமரும் திருக்கரத்தார் ஆனேறு ஏறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
    வீழி மிழலையே மேவினாரே.. 6/51/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஏப்ரல் 29, 2024

சப்த ஸ்தானம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
திங்கட்கிழமை

திருநெய்த்தானம்










மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டு சப்த ஸ்தான வைபவத்தின் போது எடுக்கப்பட்டவை..

இன்றைய பதிவில் -
கீழுள்ள  காணொளிகளில் பல்லக்குகளின் மாண்பினைக் காணலாம்.. 

தில்லை ஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம் கோயிலில் நடைபெற்ற தீப ஆராதனைகள்..

திருவையாறு நண்பர்களால் வழங்கப்பட்டவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..





ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 28, 2024

சப்த ஸ்தானம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
ஞாயிற்றுக்கிழமை


சித்திரை 13 வெள்ளிக்கிழமை
அன்று (26/4) திரு ஐயாறு சப்த ஸ்தானப் பெருவிழாவின் இரண்டாம் நாள்.. திரு நெய்த்தானத்தில் தரிசனம்..

மேலை வானில் இறங்குகின்ற வரையில் தகித்துக் கொண்டிருந்தது வெயில்.. நிழல் மரங்கள் அகற்றப்பட்டுவிட்ட
சூழ்நிலையை அனுசரித்து முன்னிரவுப் போதில் பல்லக்குகள் அனைத்தும் சிவாலய தீப ஆராதனைக்குப் பின் திரு ஐயாறு நோக்கிப் புறப்பட்டன.. 

வழி நெடுக எட்டுப் பல்லக்குகளுக்கும் அர்ச்சனை ஆராதனை செய்து மகிழ்ந்தனர் மக்கள்..

பல்லக்குகளின் தரிசனம் இன்றைய பதிவில்..

படங்கள் : தஞ்சையம்பதி

காணொளி:
ஸ்ரீ கோரக்கர் வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்..

















காணொளி வழங்கியவர் தமக்கு 
நெஞ்சார்ந்த நன்றி..

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி உரிமூடிய ஒருவன்
செய்யாடிய குவளை மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமான் இடம் நெய்த்தானம் எனீரே.. 1/15/1
-: திருஞானசம்பந்தர் :-
*

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஏப்ரல் 27, 2024

சப்த ஸ்தானம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
சனிக்கிழமை

இணையத்தில்

சோழ தேசத்தின் தனிப்பெரும் வைபவமான ஏழூர் திருவிழாவின் முதல் நாள் (சித்திரை விசாகம் 25/4)..

ஸ்வாமியும் அம்பாளும் நந்தீசன் சுயம்பிரகாஷிணி தேவியுடன் திரு ஐயாற்றில் இருந்து புறப்பட்டு திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி தலங்களில் தரிசனப் பேறு தந்தருளினர்.. 

கால சூழ்நிலையினால் ஒவ்வொரு தலத்திலும் சற்றே கூடுதல் நேரம் இருக்க வேண்டியதாகின்றது.. 

அந்த வகையில் நள்ளிரவுக்குப் பிறகு தான் ஐந்து பல்லக்குகளும் திருக் கண்டியூர் வீரட்டானத்தை வந்தடைய இருக்கின்றன - என்று சொல்லப்பட்டது.. 

ஆயினும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் கோயில் திருச்சுற்றில் காத்திருந்தனர்.. 

காலையில் இருந்தே அன்பர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெற்றிருக்கின்றது.

மூலஸ்தானத்தில் ஈசன் வெள்ளிக் கவசத்துடன் அருள்பாலிக்க அன்னை மங்களாம்பிகை சந்தனக்காப்பு அலங்காரத்துடன் திகழ்ந்தாள்..

கண்டியூர் வீரட்டான தரிசனம் கண்டு இரவு பத்து மணியளவில் இல்லம் திரும்பினோம்..

ஒளிப்படங்கள் - தஞ்சையம்பதி..












மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம் பிரான் அங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே.. 4/93/9
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***