நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடி வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடி வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஆகஸ்ட் 15, 2025

வெள்ளி 5

   

நாடும் வீ
டும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
ஐந்தாம் வெள்ளி


ஸ்ரீஸ்ரீ விஜயாலய
சோழரின் ஆட்சி மலரும் போதே
தஞ்சை மாநகரில் 
நிசும்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் திருக்கோயிலும் எழுந்தது.. 


சிறப்புறு  ஸ்ரீ வடபத்ர காளியம்மனின் தரிசனம் இன்று..

படங்கள் : 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்





பைரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வைரவி மண்டலினி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே.. 77
-: அபிராமி பட்டர் :-

இன்று
சுதந்திர தினம்

அனைவருக்கும்
அன்பின்
நல்வாழ்த்துகள்





ஜெய்ஹிந்த்

ஜெய் பாரத்

ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2025

வெள்ளி 4

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
நான்காம் வெள்ளி

ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை
நல்வாழ்த்துகள்

இன்று
ஸ்ரீ ரங்கநாயகி
திவ்ய தரிசனம்






யா தேவி சர்வ பூதேஷு  வித்யா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


யா தேவி சர்வ பூதேஷு  லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

யா தேவி சர்வ பூதேஷு  சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:


ஓம் மஹாலக்ஷ்ம்யை நம

சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

வெள்ளி 3

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
மூன்றாம் வெள்ளி


இன்று
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் 
பாடிய பாடல்

பாடல் : திரு உளுந்தூர்பேட்டை சண்முகம்
இசை : திரு TK புகழேந்தி

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி
அங்கையற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி (மங்கலம்)

திங்களைச் சூடிய சிவனுக்குத் துணைவி
செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை
திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை (மங்கலம்)

சங்கத் தமிழ் போல் தனித்தவள் சக்தி
தமிழின் சுவை போல் இனிப்பவள் சக்தி
குங்குமம் தருபவள் குலமகள் சக்தி
கும்பிட்டு நினைப்பதைக் கொடுப்பவள் சக்தி (மங்கலம்)


தாமரை போன்ற தலைநகர் நடுவே
தாமரைக் குளத்தைச் சார்ந்தவள் சக்தி
மாமதுரைக் கொரு மாபெரும் சக்தி
மாநிலம் எங்கணும் ஓம் சிவசக்தி (மங்கலம்)


பாடலைக் கேட்பதற்கு -
https://youtu.be/HzHvuUZSrec?si=poGRllZfUjP18Qw0

மீனாட்சித் தாயே போற்றி
சொக்கநாதப் பெருமானே போற்றி
**

வெள்ளி, ஜூலை 25, 2025

வெள்ளி 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
இரண்டாம் வெள்ளி

அச்சன்குட்டம்

அம்மா உந்தன் அருள் நோக்கி
அடியேன் வரைந்திடும் கடிதம்..
அம்மா நீயும் இரங்கி வந்தால்
அடியேன் மடலுக்கும்  புனிதம்..

அசுரர் நலத்தைத் தீர்த்திட்ட
கூர்முனைச் சூலம் நலந்தானா..
அக இருள் தன்னை அகல்விக்கும்
அக்கினிக் கொழுந்தும் நலந்தானா..
வஞ்சகர் வலிமை தீர்க்கின்ற
வாட் படை தானும் நலந்தானா..
கயவர் கூட்டக் கதை முடிக்கும்
பெருங் கதை அதுவும் நலந்தானா..
பேரிடியாய்ப் பேரோசையிடும்
உடுக்கை அதுவும் நலந்தானா..
கொஞ்சு தமிழ்ப் படை ஓங்கார
சங்கு சக்கரம் நலந்தானா..
அரவுடன்  பாசம் காபாலம் 
ஐங்கணை அனைத்தும் நலந்தானா..
பொன்மணி கேடயம் ஈட்டியுடன்
கூர்வேல் அதுவும் நலந்தானா..
அணங்குகள் உந்தன் பரிவாரம்
அவைகளும் ஆங்கே நலந்தானா..
கோமகள் உன்னுடன் விளையாடும்
கோளரி அதுவும் நலந்தானா!..

அனைத்தும் நலமாய் விளங்கட்டும்
அவனியை நன்றாய் காக்கட்டும்..
ஆயினும் அம்மா எனக்கென்று
ஆசைகள் சொன்னேன் உனக்கின்று..

அம்மா உந்தன் அருள் விழிகள்
ஆறுதலைத் தான் காட்டாதா
அங்கும் இங்கும் விளையாடி
அல்லல் தனையே ஓட்டாதா..
அம்மா உந்தன் புன்னகையும் 
அருள் எனும் நெறியைக் கூட்டாதா
அண்டி வருகின்ற எந்தன் மனம்
 இறும்பூதெய்திடத் தேற்றாதா

அம்மா உந்தன் கையிரண்டும்
வாரி என்னைச் சேர்க்காதா
வாட்டம் உறுகின்ற என் அகத்தில்
வருகிற கவலை தீர்க்காதா..
அம்மா உன் திருச்செவியில்
எந்தன் குறையும் கேட்காதா
எந்தன் மகனே என்றே உந்தன்
செவ்விதழ் தானும் மலராதா..

தஞ்சை சோழ மண்டலத்தில்
தங்கப் பொலிவாய் ஆனவளே..
சஞ்சலப் பிணியைத் தீர்த்தருளும்
சமயபுரத்து சங்கரியே..
பத்திரகாளி என்றெழுந்து
பகைதனை விரட்டும் அம்பிகையே..
அருளினைச் சுரக்கும் கோமதியே
ஆதி எனும் சிவ நாயகியே..

முத்துப் பேச்சி என்றே வந்து
முந்தை வினையறப் பேசிடம்மா..
இன்னல் தீர்த்து என் மனதில்
இசக்கி என்றே இருந்திடம்மா..
எங்கும் பிணியைத் தீர்க்கின்ற
பீடுடை தேவி பிடாரியம்மா..
பீடைதனையே பிய்த்தெறிந்து
பெருந்துணையாய் நீ வாருமம்மா...

அம்மா உந்தன் திருவடிகள்
அடைக்கலம் என்றே ஆகாதா...
திருவடி மலரின் அடிமலராய்
எந்தன் சொல்லும் ஆகாதா!..
ஃஃஃ

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய 
**

வெள்ளி, ஜூலை 18, 2025

வெள்ளி 1

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி
முதல் வெள்ளி

இன்று
ஸ்ரீஅகத்தியர்
நமக்காக இயற்றி அருளிய
கீர்த்தனம்

பாடியிருப்பவர்
ஸ்ரீமதி சிவஸ்ரீ ஸ்கந்தப்ரசாத்


ஸ்ரீ சக்ர ராஜ 
சிம்ஹாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி

நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி
(ஸ்ரீசக்ர)

(புன்னாக வராளி)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்

உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி

(நாதநாமக்ரியை)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்

நிழல் எனத் தொடர்ந்த முன் ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி

(சிந்து பைரவி)
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்

அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா…அகிலாண்டேஸ்வரி
(ஸ்ரீசக்ர)

மிக்க நன்றி..
இணையத்தில் கேட்பதற்கான இணைப்பு

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
**

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
ஆவணி 14
  வெள்ளிக்கிழமை


தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ... தனதான

எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் ... தனிலோயா

எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென் ... பவமாற

உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங் ... குளிமேவி

உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந் ... தொழுவேனோ

வினைத்திற மோடன் றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள்கொன் ... றவனீயே..

விளப்பென மேலென் றிடக்கய னாரும்
விருப்புற வேதம் ... புகல்வோனே

சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ... முருகோனே

தினைப்புன மேவுங் குறக்கொடி யோடுந் 
திருத்தணி மேவும் ... பெருமாளே!..
-: அருணகிரிநாதர் :-


எனக்கென்று பொருள்  சேர்ப்பதற்காக நாளும் உழைத்து இளைத்து  ஓய்வின்றி  
எடுக்கின்ற பற்பல பிறவிகளுடன்

வெட்கமில்லாத பிறப்புச் சுழல்
ஓய்ந்திடும்படி உன்னைத் திருப்புகழால் பாடிப் புகழ்கின்றவர்களது
 இருப்பிடத்திற்குச் சென்று 
அவர்களது அறிவுரையைக் கேட்டு அதனை விட்டு விலகாது அதன்படி நடந்து

ஒளி மிகுந்த உனது திருவடியைத் தொழுகின்ற பேற்றினை நானும் பெறுவேனோ?..

தனது வில்லின் மீது நம்பிக்கையுடன் தவநிலையைக் கலைக்க என்று அன்றொருநாள்  வந்து அம்பு எய்த மன்மதன்

வெந்து விழும்படிச்
செய்தவராகிய  சிவ பெருமான் -

 ' நீயே பிரணவப் பொருளை 
உரைப்பாயாக.. ' - என்று கேட்க,

பிரம்மதேவனும் மகிழும்படிக்கு 
வேதத்தின் பொருளை உரைத்தவனே..

கோபத்துடன் சூரனை வீழ்த்தி 
வேலால் அவனது சரீரத்தைப் பிளந்த முருகனே..

தினைப்புனக்
குலக்கொடி வள்ளி நாயகியுடன்
 திருத்தணிகையில்
வீற்றிருக்கும் பெருமாளே!..


முருகா முருகா
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2024

ஆடி வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி வெள்ளி
நான்காம் கிழமை

மயிலை
ஸ்ரீ கற்பகவல்லி கீர்த்தனம்



பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
புராதனி தராதலம் எலாம்
பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
புத்ரி மகமாயி என்றே
சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
செவிதனிற் கேறவிலையோ?
தேஹி என்றாலுனக்கு ஈயவழி இல்லையோ
தீனரக்ஷகி அல்லையோ..
ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
ஆதரிப்பவர் சொல்லுவாய்..
அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
அடியனை ரக்ஷி கண்டாய்..
மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
விரிபொழிற் திருமயிலை வாழ்
விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
விமலி கற்பகவல்லியே.. 1/10
**



Fb Reel வழியாக இப்பாடல் கிடைத்தது.. 

மேலும் தேடியபோது கற்பகவல்லி  பதிகம் என்று பனுவல் ஒன்று திருமயிலை கோயிலில் அம்மன் திருச்சுற்றில் பதிக்கப்பட்டுள்ளதாக விவரங்கள் கிடைத்தன.. இப்பதிகத்தினை இயற்றிய புண்ணியர் யாரென்று 
தெரியவில்லை..

ஓம் சக்தி ஓம் 
ஓம் சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 02, 2024

ஆடி வெள்ளி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி வெள்ளி
மூன்றாம் கிழமை

ஸ்ரீ முத்துமாரியம்மன்
புன்னைநல்லூர்
தஞ்சை


தஞ்சையை ஆட்சி செய்த வெங்கோஜி மன்னரின் மகளுக்கு அம்மை நோய் வாய்த்ததனால் கண் பார்வை பறி போயிற்று... 

அப்போது சிறிய குடிலாக இருந்த இக்கோயிலினுள் வந்து உறங்கிக் கிடக்க ஓர் இரவுப் போதில் இளவரசிக்கு கண் பார்வை மீண்டது... 

வெங்கோஜி மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில்..


புற்றுருவாய் விளங்கிய அம்மனுக்கு திருமேனி அமைத்தவர் ஸ்ரீஸ்ரீ மகான் ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரர்.. 

பாடகச்சேரி மகான்
பாடகச்சேரி மகான் ஸ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள் பல காலம் இங்கிருந்து அருட்பணிகள் செய்திருக்கின்றார்..

இன்றளவும் அம்பாள் நிகழ்த்துகின்ற அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம்..

நன்றி :
அம்மன் மூலஸ்தானத்தின் திருக்காட்சிகள்..

கோயில் வளாகத்தில் நான் எடுத்த சில காட்சிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன..

காணொளி தொகுப்பு :
தஞ்சையம்பதி















எனக்கென்ன மனக்கவலை 
என் தாய்க்கன்றோ 
தினம் தினம் என் கவலை..

ஓம் சக்தி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 26, 2024

ஆடி வெள்ளி 2

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி 10   
இரண்டாம் வெள்ளி


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும்அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
பனி தரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே!.. 4


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!.. 69
-: அபிராமி பட்டர் :-

தரிசனம்
ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..










 நன்றி
தஞ்சையின் பெருமை.


ஸ்ரீ வடபத்ரகாளி
ஸ்ரீ பூமாலை வைத்ய நாதர் திருக்கோயில்,
கீழவாசல் - தஞ்சாவூர்..

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***