நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2026

கொடை விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 13
ஞாயிற்றுக்கிழமை
 

நிகழும் ஆவணி மாதத்தின் இரண்டாம்  செவ்வாய்  ( 25/ ஆகஸ்ட் ) அன்று - 
திருச்செந்தூரில் இருந்து நாற்பது கிமீ தொலைவில் அமைந்துள்ள உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் எங்கள் குல தெய்வத்தின்  வருடாந்திரக் கொடை விழா நடைபெற உள்ளது...

இறையருள் துணை கொண்டு இன்று காலை நாங்கள் உவரிக்குச் செல்கின்றோம்...

இவ்வேளையில் பதிவுலகத்தில்  -
 அன்பின் ஜீவி அண்ணா, ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், கௌதம் ஜி, வெங்கட் நாகராஜ், சந்திரசேகர், ஏகாந்தன், வல்லியம்மா, கீதாக்கா, கீதாரங்கன், கோமதி அரசு. பானுமதி வெங்கடேஸ்வரன், கமலா ஹரிஹரன், மாதேவி -

ஆகிய அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்...

திருவிழா நேரம்... மின்சக்தி கொள்கலன் எதையும் உடன் எடுத்துச் செல்லவில்லை... 

ஒளிப்படங்கள் எடுப்பதற்கு  கைத்தலப்பேசி எந்த அளவுக்கு ஒத்துழைக்கின்றதோ பார்ப்போம்...

நலம் வாழ்க
***

சனி, ஆகஸ்ட் 22, 2026

தமிழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
சனிக்கிழமை


தமிழ் என்பது வளமார்ந்த பண்பாட்டின் அடையாளம்...

தமிழ்க் கலாச்சார மற்றும் ஞான நூல்களுக்கு மிஞ்சிய எதுவும் உலகில்  இல்லை.  

அன்பு, பண்பு, பக்தி, பாசம், காதல், ஒழுக்கம், நேர்மை, தியாகம், அறம் இன்ன பிற 
நற்குணங்கள் அனைத்தையும் உலகிற்குக்  கொடுத்தது தமிழ் மொழியே..

அமுதே தமிழே 
அழகிய மொழியே
எனதுயிரே!..
***

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


 அப்பர் ஸ்வாமிகள்
திருமறைக்காட்டில் அடைத்துக் கிடந்த
திருக்கோயிற் கதவங்கள் திறந்து கொள்ளப் பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்

பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் 
செய்ம்மினே.. 5/10/1

பண் போன்ற மொழி உடையவளாகிய உமாதேவியை ஒருபங்கிற் கொண்டு மண்ணுலகத்தவர் வலம் செய்து வணங்குகின்ற திருமறைக்காட்டில் உறையும் பெருமானே.. 

உமது திருக்கோயிலின் கதவுகள் வேதங்களால் அடைக்கப் பெற்றிருக்கின்றன..

அடியேன் எனது கண்களால் உமது திருக்கோலத்தினைக் கண்டு மகிழுமாறு,  இக்கதவுகளைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக....

ஓம் நம சிவாய
***

வியாழன், ஆகஸ்ட் 20, 2026

அழகு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வியாழக்கிழமை





திருவாசல் தோறும்
அருள் வேதம் ஓத
சிவனஞ்செழுத்தை மறவேன்
முருகேசன் என்று
அறியார் தமக்கு
முதலாகி நின்ற குமரா..
குருநாத சுவாமி
குறமாது நாதா
குமரேசர் என்ற பொருளே
மறவாமல் வெற்றி
மயில் மீதிலேறி
வரவேணும் என்றன் அருகே..
-: அவிநாசிப் பத்து :-

முருகா.. முருகா
***

புதன், ஆகஸ்ட் 19, 2026

அலங்காரம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 2
புதன் கிழமை

சில தினங்களுக்கு முன்பாக ஏதோ ஒரு ஊர்க்  கோயிலில் காளியம்மனின் திருமுகத்தை  வராஹியைப் போல 
மாற்றி அலங்கரித்து அதையும் ஒளிப்படம் எடுத்து ஊடகங்களில் பதிவு செய்து பேசு பொருளானது..

இந்நிலையில் இந்த விஷயம்  தொடர்பாக ஈழத்தில் இருந்து கிடைத்திருக்கும் அரிய தகவல்கள் - இன்றைய பதிவில்..

ஸ்ரீ வராஹியம்மன் - தஞ்சை

அகோரசிவம்
உமையரசு
அவர்களது பதிவு..

 நன்றி Fb

மூர்த்திகளை அலங்காரம் பண்ணல்.

ஆன்மாக்களது கன்மத்திற்குத் தக்கவாறு பஞ்ச கிருத்தியத்தைச் செய்தருளும் இறைவன் பல மூர்த்தங்களாகத் தோன்றி, அவர்களுக்குப் போக,  மோக்ஷங்களைக் கொடுத்தருளுகின்றனர்.

அம்மூர்த்தங்களுள் சில சயனிப்பனவும், சில நடப்பனவும், சில நிற்பனவும், சில இருப்பனவுமாக உள்ளன. 

அன்பர்கள் பூசை பண்ணும்போது அம்மூர்த்திகள் சுகாசனமாக இருந்து கொண்டே அப்பூசையை ஏற்கும். 

அம்மூர்த்திகளை ஆலயங்களில் ஆகம முறைப்படி பிரதிட்டை செய்து பூசித்து வருவது தொன்றுதொட்டுள்ள வழக்கமும் விதியுமாம். அம்மூர்த்திகளை முறை தவறாது அலங்கரித்து வழிபடுவது மிக மேலாகிய புண்ணியமாகும்.

நிற்பனவாகிய மூர்த்திகளை நின்ற ரூபமாகவும், இருப்பனவாகிய மூர்த்திகளை அந்த ரூபமாகவும், சயன மூர்த்தியை அந்த ஆகிருதியாகவும் அலங்கரித்து வணங்குதல் வேண்டும். மாறிச் செய்யிற் குற்றமாம். 

மூர்த்தியின் திருமேனியில்  கட்டுதல், மரக்கட்டை உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட கை கால்கள் வைத்து -  கபடமாக அலங்கரித்தல், லீலாபேதமானவோர் விக்கிரகத்தைப் பிறிதொரு லீலாமூர்த்தியாக அலங்கரித்தல், சிவதேகத்தில் விஷ்ணுரூபத்தைக் கற்பித்தல், சந்திரசேகரத் திருமேனியில் நிருத்த ரூபத்தையும், கல்யாண சுந்தாரிடத்தில் நிருத்த ரூபத்தையும் அலங்கரித்தல், உக்கிர மூர்த்தியைச் சாந்த ரூபமாகவும், சாந்த மூர்த்தியை  உக்கிர ரூபமாகவும் அலங்கரித்தல், திருவாசியில்லாதபடி அலங்கரித்தல் முதலிய விபரீத அலங்காரங்கள் செய்யப்படின் விபரீத பலனும் உண்டாம். ஆயுள் குன்றும்; பிரபுக்கள் அரசர் யஜமானர்கள் அங்கஹீனமாவார்கள். அத்தோஷம் நீங்கும் பொருட்டுப் பிராயச்சித்தம் செய்து கொள்க. 

அவ்வத்தேவர்களுக்குரிய வஸ்திரம், யோக்கியமானதும் வாசனைபொருந்தியதுமான புஷ்பமாலை உத்தமமான ஆபரணங்கள் ஆகிய இவைகளால் அலங்கரிக்கத்தக்கது என்று காமிகம் வீரதந்திரம் முதலிய ஆகமங்கள் கூறுகின்றன.

ஆலய அதிகாரிகள் ஆகம சாஸ்திர ஆராய்ச்சியுள்ள சிவாசாரியர்களுடன் கலந்து அக்கிரமமான செயல்களை அகற்றிச் சற்கருமங்களைக் கைக்கொண்டு ஒழுகுவது உத்தமமாகும்.

அச்சுவேலி குமாரசுவாமி குருக்கள் எழுதிய மகோற்சவ விளக்கம் எனும் நூலிலிருந்து.

--------*****----------*****---
இவை நிற்க 

இறை திருமேனிகளை அலங்காரம் செய்கின்றவர்கள் தீக்கையுடையவராயிருந்து ஆன்மார்த்த சிவபூசை உடையவராயிருத்தல் வேண்டும்.

இறைவனை மெய் தீண்டி பூசை செய்வதற்கு மட்டுமல்லாமல் இறைவனை அலங்கரிக்கின்ற அலங்காரனாச்சாரியர்களுக்கும் தகுதிப்பாடுகள் அவசியமாகும்.

பலர் அவ்வாறில்லாமல் சைவ ஒழுக்கமும் சமய அறிவுமின்றி வாய்நிறைய வெற்றிலையும் புகையிலையுமாய் இறை திருவுருவங்களை பயபத்தியில்லாமல் சாதாரண ஒப்பனைக் கலைஞராக (Makeup artist) மட்டும் செயற்படுவது மனவருந்தத்தக்கது.

திருச்சிற்றம்பலம்
***

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2026

நடை பயணம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி முதல் நாள்
செவ்வாய்க்கிழமை


நிகழும் தமிழ் மாதத்தின் (ஆடி 31 )
கடைசி ஞாயிறன்று (16/8/26) தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை  அறு படை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் நடைபயணமாக சென்று தரிசனம் செய்த நிகழ்வில் நானும் என் மனைவியும் கலந்து கொண்டு நல்ல முறையில் தரிசனம் செய்தோம் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் படங்களுடன் பதிவிட்டு சென்ற ஞாயிறன்று முன்னோட்டமும் சொல்லி இருக்கின்றேன்..

காலை ஏழரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயில் வாசலில்
தரிசனம்... கோயிலின் உள்ளே எல்லாம
 செல்லவில்லை... காலையிலேயே பெருந்திரளான வெளியூர் மக்கள்..

தொடர்ந்து - 
முதலாவதாக வாசல் மேல (அலங்கம்)..


மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயிலில் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. 

இக்கோயிலில் ஆறு படை வீடுகளின் திருமேனிகளும் விளங்குகின்றன...

கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்.. இரண்டு கோயில்களிலும் மகிழ்வான  தரிசனம்...

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி.. 
மேற்கு நோக்கிய கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி ... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஐந்து மணியளவில் இக்கோயிலை அடைந்தோம்... 

இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடிய திருக் கோலம்.. 

கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இந்த ஆறு கோயில்களில் மேல அலங்கம் கோயிலைத் தவிர்த்து ஏனைய கோயில்கள் அனைத்திலும் திருச்சுற்றில் சிவ சக்தி சந்நிதிகள் குறிப்பிடத்தக்கவை..

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

அங்கே  - 
நடைபயணமாக வந்திருக்கும் பக்தர்களுக்கு திருஷ்டி கழித்து தோஷ நிவர்த்தி செய்யப்படும் என்பது புதிய செய்தி..

நாங்கள் பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயிலுடன் நடைபயணத்தை நிறைவு செய்து கொண்டோம்..

கல்யாணத்  திருக்கோலம் கொண்டு சந்திர பிரபையில் எழுந்தருளிய முருகப்பெருமானுடன் -
நடைபயணமாக வருகின்ற பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் அரோகரா முழக்கமிட்டு வரவேற்று மகிழ்ந்தனர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்கினர்...

பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயத்தின் சார்பிலும் ராஜராஜ சமய சங்கத்தினர் 
சார்பிலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டது..

விழா ஒருங்கிணைப்பினர்  நவமணி மண்டபத்தில் மதிய உணவு
அளித்தனர்..

நான் தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டேன்..

ஐந்தாவது கோயிலில் 
நடை பயணமாக வந்தோர்க்கு  - 
கேசரி, வடை, பால் என, முருகனடியார்கள் வழங்கி மகிழ்ந்தனர்..

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருந்தது...


கைத்தலபேசியில் மின் சக்தி குறைவானதால் விரிவாக படங்கள் எடுக்க முடியவில்லை.. 

வழியில் மேலராஜ வீதியில் ஸ்ரீ சங்கர நாராயணர் கோயில்,  காமாக்ஷி அம்மன் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், கொடி மரத்து மூலை மாரியம்மன், கீழவாசலில் யோக நரசிம்மர் கோயில் வெள்ளைப்  பிள்ளையார் கோயில் என தரிசனம்..

கொங்கணேஸ்வரர் , ஐயன் குள விஸ்வநாதர் , விஜய ராமர் , மூலை ஆஞ்சநேயர், கொடி மரத்து மூலை மாரியம்மன் - கோயில்களில் திருப்பணி நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது..

இடையில் குறிச்சித் தெரு முருகன் கோயிலில் ஒருமணி நேர ஓய்வு மட்டுமே...

இந்த அளவில் - 
முழங்கால் வலியுடன் ஏறத்தாழ எட்டு கிமீ தொலைவைக் கடந்ததே அற்புதம்..



நலம் யாவும் முருகன் செயல்..

வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

திங்கள், ஆகஸ்ட் 17, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 32
திங்கள் கிழமை


ஆடி அமாவாசையன்று
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில்
அப்பர் தரிசனக் காட்சி திருவுலா
நடைபெற்றது..




 
நன்றி
சிவனடியார் திருக்கூட்டம்


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திரு ஐயாறு அகலாத செம்பொற்சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சிவாய நம
***

ஞாயிறு, ஆகஸ்ட் 16, 2026

முருகனருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 31
ஞாயிற்றுக்கிழமை


இன்று ஆடி 31... தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிறு. (16/8/26)

இன்றைய தினம்
 தஞ்சை மாநகரில் உள்ள முருகன் கோயில்களை   ஆறுபடை வீடுகளாகப் பாவித்து அந்த  கோயில்களுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்ய இருக்கின்றனர் ..

இதற்கு திதி நட்சத்திரம் என்று எதையும் கணக்கில் கொள்வதில்லை.. கடைசி ஞாயிறு தான் கணக்கு..

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்  பதிவிட்டுள்ளேன்...

காலை ஆறரை மணியளவில்
தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம்...

தொடர்ந்து - 
முதற்கோயில் மேல வாசல்..
மேல அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்.. வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..
இது சிறிய அளவிலான கட்டுமலைக் கோயில்.. கீழ்தளத்தில் பள்ளி கொண்ட பெருமாள்.. அருகில்  ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில்..

இரண்டாவதாக வடக்கு வாசல் வடக்கு அலங்கம் ஸ்ரீ முருகன் கோயில்..

மேற்கு நோக்கிய கோயில்.. பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய பூஜை..

மூன்றாவதாக கீழவாசல்
குறிச்சித்தெரு ஸ்ரீ  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்..

நான்காவதாக கீழவாசல்
ஆட்டுமந்தைத் தெரு பால தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில்.. 
மேற்கு நோக்கிய 
கோயில் ..

ஐந்தாவதாக கீழவாசல்
அரிசிக்காரத் தெரு  சுப்ரமணிய ஸ்வாமி கோயில்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. இங்கு ஸ்வாமிக்கு யானை வாகனம்...  இதுவும் மேற்கு நோக்கிய கோயில்..  

ஆறாவதாக பூச்சந்தை ஸ்ரீ முருகன்  திருக்கோயில்..
மாலை ஆறு மணியளவில் இக்கோயிலை அடைவர்... இந்தக் கோயிலிலும் வள்ளி தேவகுஞ்சரியுடன்  கூடி திருக்கோலம்.. கோயிலுக்கு எதிரில் காவிரி புது ஆறு...

இதன் பின்னும் 
உடல் நலம் உடையவர்கள்
தொடர்ந்து நடந்து மீண்டும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோயிலில் முருக தரிசனம் செய்து நடைபயணத்தை நிறைவு செய்வர்... 

பாதயாத்திரையாக வருகின்ற 
ஆயிரக்கணக்கான பக்தர்களை அந்தந்தப் பகுதி மக்கள் வரவேற்று மகிழ்வர்..

வழி நெடுகிலும் நீர் மோர் குளிர் பானங்கள் என வழங்குவர்.

மூன்று வேளையும் அன்னதான உபசரிப்பு என்பது சிறப்பு... 

ஆறு திருக்கோயில்களிலும் மூல மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் சந்தனக் காப்பு - என  வைபவமாக இருக்கும்...


வழித்துணை வருவான்
வடிவேல் முருகன்

முருகா முருகா
***

சனி, ஆகஸ்ட் 15, 2026

சுதந்திர தினம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 30
சனிக்கிழமை


இன்று சுதந்திர தினம்




இந்நாட்டையும் 
இந்நாட்டின் மக்களையும்
இறைவன்
காத்தருளட்டும்..

ஜெய்ஹிந்த்
வெல்க பாரதம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 14, 2026

துணை நீயே


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடிப்பூரம் 
ஐந்தாம்
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த பொன்னாள்..









ஓம் சக்தி ஓம்
***

புதன், ஆகஸ்ட் 12, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 27
புதன்கிழமை


இன்று ஆடி அமாவாசை


அப்பர் ஸ்வாமிகள் 
திரு ஐயாற்றில்  கயிலாயக் காட்சி கண்ட நாள்..


கயிலாயக் காட்சி கண்டபோது
ஸ்வாமிகள் பாடித் துதித்த திருப்பதிகத்தில் இருந்து சில பாடல்கள்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்.. 4/3/1

ஏடு மதிக்கண்ணி யானை ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 5

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினி என்னா வருவேன்
அங்கிள மங்கையர் ஆடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம் கண்டறி யாதன கண்டேன்.. 10

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி

ஓம் நம சிவாய
***

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2026

அந்நாளில்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி 
செவ்வாய்க்கிழமை


 1919 ல்  ஆங்கிலேய நிர்வாகத்தின் வரைபடம்..

அந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியா
 தமிழகம், கர்நாடகா , கேரளா, ஆந்திரா என விளங்கியது..

இதில் சேராமல் மைசூர் சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், ஹைதராபாத் சமஸ்தானம் ஆகியவை  தனியாக இருந்தன.

மெட்ராஸ் மாகாணம் எனப்பட்ட தமிழகத்தின் பகுதிகள் ஜில்லாக்களாக பிரிக்கப்பட்டிருந்தன.

மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த ஜில்லாக்கள் :-

வட ஆற்காடு
தென் ஆற்காடு 
தஞ்சாவூர் திருச்சி 
மதுரை ராமநாதபுரம் 
திருநெல்வேலி 
கோவை நீலகிரி 
செங்கல்பட்டு 
சென்ன என்பன..

இன்றைய பதிவில்
அந்நாளைய 
தென்னகத்தின் வரைபடம்.. 
 
நன்றி Fb


வாழ்க நலம்
***

ஞாயிறு, ஆகஸ்ட் 09, 2026

ராகுவும் கேதுவும்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 
ஞாயிற்றுக்கிழமை


 ராகுவும் கேதுவும்

தயாநிதி வீரராகவன்

நன்றி Fb

தஞ்சாவூருக்கு அருகில் ஒரு கிராமம். 

அங்கு இளம் விவசாயி ஒருவர்.. 

மாதவன் என்று பெயர் . 

நிலம் இருக்கு, தண்ணீர் இருக்கு, உழைக்கவும் தெம்பு இருக்கு. ஆனால் மூன்று வருஷமாக விளைச்சலே இல்லை.

ஜாதகத்தை எடுத்துக் கொண்டு
ஊர்  ஜோதிடரிடம் ஓடினான். 

ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் சொன்னார், 

" உனக்கு ராகு தோஷம். ராகு வயலை மறைக்கிறான். 50,000 ரூபாய்க்கு பரிகார பூஜை பண்ணனும்."

மாதவன் வீட்டில் இருந்த கொஞ்ச நகையையும் விற்று பூஜை பண்ணான். மறு வருஷமும் விளைச்சல் இல்லை.

கோபத்துடன் இன்னொரு பெரிய ஜோதிடரிடம் சென்றான். 

அவர் சொன்னார், "இது ராகு இல்லை, கேது.. உன் நிலத்தை கேது பிடிச்சிருக்கு.. இன்னொரு பரிகாரம் பண்ணனும்."

மாதவனுக்கு வெறுத்து போச்சு.

நேராக ஆத்தங்கரையில் உட்கார்ந்திருந்த கோயில் குருக்களிடம்  சென்றான். அவர் ஜாதகம் பார்க்க மாட்டார்.. மனுஷங்களை மட்டும் பார்ப்பார்.

மாதவன் கத்தினான்..

"சாமி, என் ஜாதகத்துல என்ன தோஷம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. ராகுவா, கேதுவா?."

குருக்கள் அவன் ஜாதகத்தை வாங்கினார். ஒரு நிமிஷம் பார்த்தார். அடுத்த நிமிஷம் அதை இரண்டாகக் கிழித்து வாய்க்காலில் வீசி விட்டார்.

மாதவனுக்கு உலகமே இருண்டு போச்சு. 

"என்ன சாமி இப்படி பண்ணிட்டீங்க!.."

குருக்கள் சிரித்தார்..

" தோஷம் ஜாதகத்துல இல்ல.. மாதவா... உன் பழக்கத்துல இருக்கு.. மூனு வருஷமா நீ என்ன செய்தாய் ? புதுசு புதுசா விதை  வாங்கி விதைச்சு யூடியூப் - ல பார்த்துப் பார்த்து புதுப்புது மருந்தா அடித்தாய்.. ஊர் முழுக்க ஜோதிடரை தேடி அலைந்தாய் .. ஆனா, உனக்கு அடுத்த நிலத்து ராமு என்ன பண்ணான் தெரியுமா?  தினமும் காலையில அஞ்சு மணிக்கு வயலுக்கு போறான். மண்ணைப் பார்த்து. வரப்பை சரி செஞ்சான்.. ஒரே பயிரை சாகுபடி பண்ணி பொறுமையா பார்த்துக்கிட்டான்."

"ராகு உன் நிலத்தை மறைக்கலடா.. பொறுமை இல்லாத்தனம் தான் உன் கண்ணை மறைச்சிருக்கு. கேது உன் வயலை பிடிக்கல, நீ யூடியூப் பேச்சை கேட்டுட்டு மாத்தி மாத்தி செஞ்சது தான் உன் வயலை பிடிச்சிருக்கு."

"ஜோதிடம் என்பது வானிலை அறிக்கை மாதிரி. மழை வரும்னு சொன்னா, நீ குடைய எடுத்துட்டு போகணும். மழையை நிறுத்த பூஜை பண்ணக்கூடாது."

மாதவனுக்குப் புரிந்தது.. பரிகாரம் தேடுவதை நிறுத்தினான்.

அடுத்த ஆறு மாதம் ஜோதிடம், யூடியூப் என்று எதையும் பார்க்கவில்லை. 

தினமும் வயலில் இருந்தான். மண்ணைப் புரிந்து கொண்டான்.

அந்த வருஷம்  கிராமத்திலேயே அதிக விளைச்சல் அவனுக்கு தான் கிடைத்தது.

ஜாதகத்தை கிழித்த குருக்களிடம்  ஓடிச் சென்று சொன்னான் -

"சாமி.. ராகு தோஷம் போயிடுச்சு!"

குருக்கள் சொன்னார்..

"ராகு எங்கேயும் போகலடா. அவன் அங்கே தான் இருக்கான். அவன் உனக்கு தோஷத்தை கொடுக்க வரல, புதுசா ஒரு பாடத்தைக் கத்துக்  கொடுக்க வந்தான். நீயும்  கத்துக்கிட்ட.. அவ்வளவு தான்."

***

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2026

கிருத்திகை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 22
வெள்ளிக்கிழமை

ஆடிக்கிருத்திகை


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ... தனதான


அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ... துதியாமல்

தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி
கௌமாரம்

முருகா முருகா
***

வியாழன், ஆகஸ்ட் 06, 2026

சங்கொலி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி 21
வியாழக்கிழமை


குருஷேத்ர களத்தில் பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு சங்குகள் ஒலித்தன.. 

அந்த ஆறு சங்குகளின் பெயர்கள்.. 

1. பாஞ்சஜன்யம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடையது
வெண்ணிறத்தில் மின்னல் ஒளியுடன் இடி போல  ஒலிக்கும்... இந்த சங்கின் சத்தம் கேட்டாலே அதர்மம் நடுங்கும்..

2. அனந்தவிஜயம் : தருமருடையது
வெளிர் நீல நிறத்தில் அமைதியாக ஒலிக்கும் இது, முடிவில்லாத வெற்றியைக் குறிக்கும்.

3. பௌண்ட்ரம் : 
பீமனுடையது
பார்க்கவே பயங்கரமாக நெருப்பைப் போல ஜொலிக்கின்ற பிரமாண்டமான சங்கு இது. பீமனின் பலத்தை போலவே இதன் சத்தமும் அதிர வைக்கும்.

4. தேவதத்தம் : அர்ஜுனனுடையது
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இது, வெற்றியின் அடையாளம். இதன் ஒலி எதிரிகளுக்கு பயத்தை கொடுக்கும்.

5. சுகோஷம் : நகுலனுடையது
இனிய இசை போல ஒலிக்கின்ற வெள்ளிச் சங்கு. இதன் சத்தம் நல்ல செய்தியைக் கொண்டு வரும்.

6. மணி புஷ்பகம் : சகாதேவனுடையது
நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தச் சங்கின் ஒலி, ஞானத்தையும் செல்வத்தையும் குறிக்கும். 

நன்றி
மகாபாரதம் Fb

ஓம் ஹரி ஓம்
***