நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 08, 2026

கருடசேவை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..

உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..

 காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு


ஓம் நமோ நாராயணாய
***

வெள்ளி, ஜூன் 05, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

வைகாசி
 வெள்ளிக்கிழமை

உறவினர் இல்லத்தில் அசாதாரணமான சூழ்நிலை.. 
ஒரு வாரத்திற்கு மேல் தங்கும்படியாகி விட்டது...

இனி இயன்ற வரை பதிவுகள்..

நலம் விசாரித்த் அனைவருக்கும்
 நன்றி...
**
இனிய எளிய தேவரப் பாடல்களை
அவ்வப்போது சிந்திப்போம்..


ஞான சம்பந்தர்
தேவாரம்

தலம் 
திருஆலவாய்
(மதுரை)

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைமட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120/1

 சோழ மன்னனின் புதல்வியாகிய மங்கையர்க்கரசி
 வரிகளையுடைய வளையல்களை அணிந்தவர். பெண்மைக்குரிய   பண்புகள் நிறைந்த பெருமையுடையவர்.  
தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கு ஒப்பானவர். பாண்டியனின் பட்டத்தரசி. 
நாள்தோறும்
திருத்தொண்டு செய்து  சிவபெருமானை வழிபடும் தன்மையுடையவர்.  

ஓங்கி எரியும் தணலைப் போன்று சிவந்த வண்ணமுடைய சிவபெருமான் உயிர்கட்கெல்லாம் தலைவர். நான்கு வேதங்களையும், அவற்றின் பொருள்களையும் அருளிச் செய்தவர். 

அத்தகைய பெருமான்  தேவி அங்கயற் கண்ணி உடன் வீற்றிருந்தருளும் திருஆலவாய் என்னும் திருத்தலம் இதுவே...

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

வியாழன், ஜூன் 04, 2026

வாழ்க...


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி
 வியாழக்கிழமை

நேற்று வெளியாகி இருக்க
வேண்டிய பதிவு..

தொடக்கக் கல்வி பயின்ற காலத்தில் பள்ளியில் நான் கண்ட - ஐயன் திருவள்ளுவரது திரு உருவத்தை இன்று மேம்படுத்தப்ட்ட சித்திரமாகப் பார்க்கின்றதில் மகிழ்ச்சி..


திருவள்ளுவரைப் பின்பற்றுவோர்க்கு
எல்லா நாளும் நல்ல நாட்களே...


அறம் பொருள் இன்பம் வீடு எனும்
ஹிந்து தர்மங்களை உள்ளடக்கிய 
திருக்குறளையும்
திருவள்ளுவரையும் நாம் கொண்டாடி வருகின்றோம்..

திருமயிலை அறுபத்து மூவர் உற்சவமே சாட்சி..

திருப்புகழ் பாடல்களில் ஒன்றைக் கற்றிருந்தால் கூட முருகனருள் பெறலாம் என்பார் அருணகிரிநாதர்..

அவ்வண்ணம்
திருக்குறளுக்கும் பொருந்தும்...

வாழ்க வள்ளுவம்
***

செவ்வாய், ஜூன் 02, 2026

சிவமயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
வைகாசி 
செவ்வாய்க்கிழமை

இன்று
ஞானசம்பந்தர் குருபூஜை


தலம் - திருவலிவலம்

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே. 1/123/5


ஞானசம்பந்தர்
பூர்ணாம்பிகை
 திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய
***