நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 21, 2026

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 வியாழக்கிழமை


இன்றொரு காணொளி

வடிவமைத்தோர்க்கு   நன்றி


ஓம் நம சிவாய
***

புதன், மே 20, 2026

செப்பேடுகள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 புதன்கிழமை

ஆனைமங்கலச்
செப்பேடுகள்


கிபி.1004 க்கு முன்.
இன்றைய தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான கெடா. அன்றைய கடாரம்.

ஸ்ரீவிஜயம் என்றும் அழைக்கப்பட்டது.

மார விஜயதுங்க வர்மன் என்பவர் கடாரத்தை ஆட்சி செய்தார். இவர் தமிழ்நாடு நாகப்பட்டினத்தில் புத்த பெருமானுக்கு ஒரு கோவில் கட்டுகிறார்.
இப்புத்தர் கோவிலுக்கு தனது தந்தையின் நினைவாக சூளாமணி வர்ம விகாரம் என்று பெயர் சூட்டுகிறார்.

கிபி.1005.
மாமன்னர் இராஜராஜன் இக்கோவிலுக்கு நில தானம் அளிக்கிறார். நாகப்பட்டினம்  மாவட்டத்தில் உள்ள ஆனைமங்கலம் என்னும் கிராமத்தை பள்ளிச்சந்தமாக சூளாமணி விகாரத்திற்கு அளிக்கிறார். 
97 வேலி நிலப்பரப்புடைய இக்கிராமத்தின் வருவாய் முழுவதும் சூளாமணி விகாரத்திற்கு தானமாக உறுதிசெய்து செப்பு பட்டயத்தின் மூலம் எழுத்தாவணமாக உறுதி செய்யப்படுகிறது.

இதுவே ஆனைமங்கலம் செப்பேடாகும்.

செப்பேடு வாசகம்.

"ஒளிபெற்ற பாதபீடத்தை உடையவனுமான இராஜகேசரிவர்மரான இராஜராஜன் தன்னுடைய இருபத்தொன்றாம் ஆட்சியாண்டில் புவிக்குத் திலகம் போன்றதுமான சத்திரியசிகாமணி வளநாடு என்னும் பெருநாட்டில் பட்டினக் கூற்றமான நாகப்பட்டினத்தில் அறிஞர் என்னும் தொகுதிக்கு கதிரவன் போன்றவனும் ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாரத்தின் அதிபதியுமான சைலேந்திர வம்சத்தில் பிறந்த சூளாமணி வர்மனின் மகனான மார விஜயோத்துங்க 
வர்மனால் தன் தந்தையின் பெயரால் நிர்மாணிக்கப்பட்டதும் தங்கமலையின் உயர்ந்த பெருமையை தனக்குக் கீழாக்கியதும் மிக அழகானதுமான சூளாமணி விகாரத்தில் வீற்றிருக்கும் புத்தருக்கு அதே பெருநாட்டில் ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைக் பள்ளிச் சந்தமாகக் கொடுத்தான்."

இந்த தானமானது அரசு ஆவணமாக பதிவு செய்யும்முன் இராஜராஜ சோழர் இறைவனடி சேர்ந்தார். இராஜராஜரின் மகனான இராஜேந்திரன் தனது தந்தையின் தானத்தை சாசனம் செய்கிறார்.

செப்பேடு வாசகம்.
"சக்ரவர்த்தியும் பெருவலிமையுடையவனுமான தன் தகப்பன் தெய்வத்தன்மை அடைந்தபிறகு அவனுடைய சிங்காதனத்தில் வீற்றிருக்கும் அவன் மகன் மதுராந்தகன் ( இராஜேந்திரன்)  நிலையான சாசனத்தை செய்தான். எதுவரையில் எல்லா உலகையும் ஆதிசேடன் தாங்குவானோ அதுவரையில் இந்த புத்த விகாரம் வைபத்தோடு இவ்வுலகில் திகழட்டும் நற்குணங்களின் உறைவிடமான கடதேசத்தின் அதிபதி தனக்குப் பிறகு வரும் மன்னர்களைத் தனது இந்த அறத்தைக் காக்கும்படி வேண்டுகிறான் "

அரசனின் திருமுகப்படி பிடிசூழ்தல் வேலைகள் நடைபெற்று எல்லைகள் குறிக்கப்பட்டு வருவாய் கணக்கிடப்பட்டு அனைத்து விபரங்களும் செப்புத் தகட்டில் எழுதப்பட்டு அரசு அதிகாரிகள் கையொப்பமிட்டு அரசு ஆவணமாக பதிவு செய்யப்படுகிறது .

இராஜராஜசோழரால் நில தானம் செய்யபட்ட  விவரத்தினைக் கூறுகின்ற ஒரேயொரு செப்பேடு இது மட்டுமேயாகும். புத்தர் கோவிலுக்குத் தானம் கொடுக்கப்பட்ட இச்செப்பேடு ஒன்று மட்டுமே  இராஜராஜ சோழரால் கொடுக்கப்பட்டதாகும்.

செப்பேட்டின் அமைப்பு
இந்த செப்பேட்டில் 21 பட்டைகள் உள்ளன. இவைகள் 14 அங்குல நீளமும் 5 அங்குல அகலமும் கால் அங்குல தடிமனும் உடையவை. இடது ஓரத்தில் ஒரு அங்குல துளையிட்டு 13அங்குல வெளி வட்டமுடைய உருளை வடிவ  செப்பு வளையத்தினால் அனைத்து ஏடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
ஆனைமங்கலம் என்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. 

தாமரைப்பூ போன்ற கூம்பு வடிவத்தின் மேற்பகுதியில் முகப்பு இலட்சினைஉள்ளது. இலட்சினையில் இராஜேந்திர சோழனின் சாசன சுலோகம் பொறிக்கப்பட்டுள்ளது.


இலச்சினையின் முகப்பில் புலி, இரு மீன்கள், இரு பக்கமும் விளக்குத் தாங்கிகள், இதன் மேல் தீபம், குடை, இருபுறமும் சாமரம், கிடைமட்டமாய் வில், இவைகள் பொறிக்கப்பட்டு 
உள்ளன.

111 வரிகள் கிரந்த எழுத்துக்கள் வடமொழியிலும் 332 வரிகள் தமிழ் எழுத்துக்களிலும் விவரங்கள் உள்ளன.

மற்ற எந்த செப்பேட்டுக்கு இல்லாத ஒரு சிறப்பு இச்செப்பேட்டுக்கு மட்டும் உண்டு.

தமிழ் எழுத்துக்கள் அரக்கு அச்சில் வார்க்கப்பட்டு பிறகு செப்பேட்டில் எழுதியுள்ளார்கள்.  

ஆகவேதான் இச்செப்பேட்டில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளன...

நன்றி
மா.மாரிராஜன் 
fb தரவு
படங்கள் இணைப்பு
தஞ்சையம்பதி

வெல்க பாரதம்
***

செவ்வாய், மே 19, 2026

ஆனைமங்கலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 செவ்வாய்க்கிழமை


ஆனைமங்கலச் செப்பேடுகள்

ஆனைமங்கலம் செப்பேடுகள்  எனப்படுபவை, மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகில் இருக்கும ஆனைமங்கலம் எனும் கிராமத்தின் நிலங்களை, பௌத்த விகாரத்திற்கு தானமாக வழங்கியதை விளக்கும் வரலாற்று சிறப்புமிக்க செப்புப் பட்டயங்கள் ஆகும். 

சோழர்களின் பெருமை, கடல் கடந்த வர்த்தகம் மற்றும் மத சகிப்புத்தன்மை இவற்றைப் பறைசாற்றும் இந்தச் செப்பேடுகள் குறித்த முக்கிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன..

 நன்றி விக்கி

வரலாறு மற்றும் முக்கியத்துவம்

கடாரத்தை (மலேசியா/இந்தோனேசியா) ஆண்ட ஸ்ரீவிஜயப் பேரரசன் ஸ்ரீமார விஜயதுங்கவர்மன் கட்டிய 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்த மடாலயத்திற்கு ஆனைமங்கலம் கிராமத்தின் வருவாய் கொடையாக வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட காலம்.
முதலாம் ராஜராஜ சோழனின் இருபத்து ஒன்றாம்  ஆட்சி ஆண்டு (கி.பி. 1010 -1012) 


30 கிலோ எடையுள்ள 21 செப்பேடுகளைக் கொண்ட இவை சோழர்களின் முத்திரையான புலிச் சின்னத்தைக் கொண்டுள்ளன.

தொடக்கப் பகுதிகள் சமஸ்கிருதத்திலும் (சோழர்களின் மரபுவழி), பெரும்பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. நிலத்தின் எல்லைகள், வரிவிலக்குகள் மற்றும் நிர்வாகக் குறிப்புகள் இந்தச் செப்பேடுகளில்  இடம் பெற்றுள்ளன..

இவை 'லீடன் செப்பேடுகள் ' என்றும் அழைக்கப்படுகின்றன. 

பிற்காலத்தில் முதலாம் குலோத்துங்க சோழனால் வெளியிடப்பட்ட ' செப்பேடுகளும்' இதற்குள் அடங்கும். 

செப்பேடுகள் இடமாற்றம்.

செப்பேட்டில் சொல்லப்பட்டுள்ள -  சூளாமணி விகாரம் 18ஆம் நூற்றாண்டு பிற்பகுதி  வரை நாகப்பட்டினத்தில் இருந்தது என்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் உறுதி செய்யலாம்.

1660 இல் டச்சுப்பயணி Woulter schouten என்பவர் நாகைக்கு விஜயம் செய்து இந்த புத்த விகாரத்தை  சீன பகோட என்று குறிப்பு எழுதியுள்ளார்.

1724 ல் டச்சுப் பாதிரி பிரான்சிஸ் வேலன்டைன் ( Francois valentyn)  என்பவர் இந்த விகாரம் பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.

1846 இல் சர். W. எலியட் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதியுள்ள பயணக்குறிப்பில் இவ்விகாரம் பற்றி குறிப்பிடுகிறார். இந்த பௌத்த விகாரம் நான்கு பக்க கோபுரங்களுடன் மூன்று நிலை கட்டிடமாக இருந்தது. செங்கற்களால் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது - என்று குறிப்பிடுகிறார் எலியட்.

புதுச்சேரியிலிருந்து நாகைக்கு வந்த பிரஞ்சு பாதிரிகளின் தூண்டுதலால்  அப்போதைய ஆங்கில அரசு 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று இந்த  சூடாமணி  விகாரத்தை இடித்துத் தள்ளியது.

இங்கு இருந்த புத்தர் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

டச்சு நாட்டின் கிழக்கிந்திய நிறுவனத்தின் அமைச்சராக இருந்த பிலோரென்ஷியஸ் காம்பெர் (Florentius Camper) என்பவர் நாகப்பட்டினம் புத்தர் விகாரையிலிருந்த ஆனைமங்கலம் செப்பேடுகளை தனது சொந்த ஊரான. ஒல்லாந்துக்கு (நெதர்லாந்து) கொண்டு சென்றார். அவரது குடும்பத்தினரிடமிருந்த செப்பேடுகள், அவரது உறவினரான
 H.A. ஹாமேக்கர் (H.A. Hamaker) மூலம் 1862-ஆம் ஆண்டு நெதலார்ந்து லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு வழங்கப்பட்டது.

அதன்பின் இச்செப்பேடுகள் லெய்டன் செப்பேடுகள் எனப்பட்டன.


இந்திய தூதரகத்தின் தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, நெதர்லாந்து அரசு இந்த அரிய  செப்பேடுகளை இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைத்துள்ளது. 

ஆனைமங்கல செப்பேடுகள்  தமிழர் வரலாற்றின் மாபெரும் பொக்கிஷமாகப் போற்றப்படுகின்றன...
நன்றி விக்கி
மற்றும்
பல தரவுகள்

பாரதம் வெல்க
***

திங்கள், மே 18, 2026

மீண்ட செல்வம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை 


தாயகம் திரும்புகிறது சோழர் கால செப்பேடு! 

ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனைமங்கலம் செப்பேடு பல ஆண்டுகளாக நெதர்லாந்தின் Leiden பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

தற்போது,  
நமது பிரதமர் மோடி அவர்களின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய சோழர் கால பொக்கிஷம் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் வரலாறு…
சோழர் பெருமை…
மீண்டும் பாரத  மண்ணில்!.. 


நன்றி fb

ஆனைமங்கல செப்பேடுகளின் விவரம் என்ன?..

நாளைய பதிவில்...

பாரதம் வெல்க
***

ஞாயிறு, மே 17, 2026

சப்த ஸ்தானம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை


இரு வாரங்களுக்கு முன்பு திரு ஐயாறு ஏழூர் பல்லக்கு விழா தொடர்பான பதிவில் ஏனைய தலங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.. 

மனதிற்கு குறையாக இருந்தது...

அதற்கென இப்பதிவு... படங்கள் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்டவை...


திரு ஐயாற்றில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றதும்

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி எழுந்தருளியுள்ள
கண்ணாடிப் பல்லக்கும்

நந்தீசன் சுயசாம்பிகை எழுந்தருளியுள்ள
வெட்டி வேர் பல்லக்கும் திருக்கோயிலில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நகர் வலம் வந்த பின் திருப்பழனம் செல்கின்றன...



அங்கே
ஆபத்சகாயேஸ்வரர்
பெரியநாயகி அம்பாள்  
எதிர்கொள்வர்.. வரவேற்பிற்குப் பிறகு மூன்று பல்லக்குகளும்  அங்கிருந்து காவிரி குடமுருட்டி  ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறைக்கு செல்கின்றன..

அங்கே
ஓதவனேசர் அன்னபூர்ணி எதிர் கொண்டு வரவேற்க நான்கு பல்லக்குகளும்  திரு வேதிகுடிக்குச் செல்லும்..

அங்கே
வேதபுரீஸ்வரர் மங்கையர்க்கரசி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஐந்து பல்லக்குகளும் அங்கிருந்து
 திருக்கண்டியூருக்கு வருகின்றன

இங்கே
வீரட்டானேஸ்வரர்
மங்களநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஆறு பல்லக்குகளும்  திருப்பூந்துருத்திக்கு வருகின்றன

இங்கு
புஷ்பவனேஸ்வரர்
சௌந்தரநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஏழு பல்லக்குகளும்  அங்கிருந்து
திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்திற்கு செல்கின்றன..

தில்லைஸ்தானத்தில்
நெய்யாடியப்பர் பாலாம்பிகை எதிர் கொண்டு வரவேற்க எட்டு பல்லக்குகளும்  குடமுருட்டி, காவிரி ஆறு களைக் கடந்து திரு ஐயாற்றுக்கு வருகின்றன..

திரு ஐயாற்றில் கோலாகல கொண்டாட்டம்...  பதுமை மாலையிட்ட பின் மகா ஆரத்திக்குப் பின் பல்லக்குகள் அந்தந்த கோயில்களுக்குத் திரும்புகின்றன...

திரு நெய்த்தானம் திரு ஐயாறு திருப்பழனம் மூன்று தலங்களும் காவிரியின்  வடகரை.. ஏனைய நான்கும் காவிரியின்  தென்கரைத் தலங்கள்...


ஒவ்வொரு ஊரிலும் வரவேற்பு நிகழ்வுக்கும் பல்லக்குகளை  ஏற்றி இறக்குவதற்கும் நேரம் ஆனாலும் ஈசன் அருளால்
இரண்டு நாட்களில்  ஏழு ஊர்களைச் சுற்றி விட்டு ( ஏறத்தாழ 21 கிமீ)
சப்த ஸ்தான விழா நிறைவிற்கு வருகின்றது..

ஓம் நம சிவாய
***

சனி, மே 16, 2026

திருவீதி உலா

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 சனிக்கிழமை

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழா திருவீதி உலா காட்சிகள்.

நன்றி
ஸ்ரீரங்கவிலாசம் fb
















ரங்கா ரங்கா
***

வெள்ளி, மே 15, 2026

திருப்புகழ்

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி முதல் நாள்
வெள்ளிக்கிழமை


திருப்புகழ்
பொது

தனத்தத் தானத் ... தனதான 


கருப்பற் றூறிப் ... பிறவாதே
கனக்கப் பாடுற் ... றுழலாதே
திருப்பொற் பாதத் ... தநுபூதி
சிறக்கப் பாலித் ... தருள்வாயே..

பரப்பற் றாருக் ... குரியோனே
பரத்தப் பாலுக் ... கணியோனே
திருக்கைச் சேவற் ... கொடியோனே
செகத்திற் சோதிப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

 நன்றி கௌமாரம்

மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசையில் நான் மீண்டும் கருவில் ஊறி - பிறக்காமலும்

மிகவும் கஷ்டங்களை அடைந்து  அலைந்து திரியாமலும்

உன் அழகிய திருவடிகளாகிய முக்திப் பேற்றில்

நான் சிறக்கும்படி எனக்கு அருள்வாயாக..

ஆசைப் பெருக்கு
இல்லாதவர்களுக்கு உரிமையானவனே

 மேலானதாய் யாவற்றையும்
கடந்து நிற்கின்ற பொருளுக்கு அருகில் உள்ளவனே
 
திருக்கரத்தில் சேவற்கொடியை
ஏந்தியவனே

இவ்வுலகில் ஜோதி வடிவமாக
விளங்குகின்ற பெருமாளே..
**
நன்றி
முருகன் அடியார்கள்


முருகா முருகா
முருகா முருகா
***

வியாழன், மே 14, 2026

சப்த ஸ்தானம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 வியாழக்கிழமை

கடந்த (3/5) பத்து நாட்களுக்கு முன் திரு ஐயாற்றில் ஏழூர் பல்லக்கு விழா..

 
எந்த கோயிலுக்கும் -
திருநெய்த்தானம் உட்பட செல்வதற்கு இயலவில்லை...

பல்லக்குகள் முன்னிரவுப் பொழுதில் திரு ஐயாற்றில் பிரவேசித்தபோது தரிசித்தோம்...

அப்போதைய 
 காட்சிகள்...

படங்களைப் பெரிதாக்கி - கண்டு மகிழவும்.

அதுக்கு ஏன்  இத்தனை நாள் தாமதம்?...

இணைய வேகம் சரியில்லை...
மனசுலயும் ஏதோ பாரம்.. அதாங்க!..







ஸ்வாமிக்கு முன்பாக மின் விளக்குகள்... எனவே முக எழில் கிடைக்கவில்லை..







உடல் நலம் மன நலம் 
அனைவருக்கும் கிடைக்கட்டும்

 ஓம் நம சிவாய
***

புதன், மே 13, 2026

பூவே...

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 புதன் கிழமை

இன்றைய பதிவு 
சும்மா பொழுது போக்கிற்காக...










 நன்றி Fb

இயற்கையே நலம்
***