நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜனவரி 20, 2026

பிப்ரவரி 26


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
செவ்வாய்க்கிழமை


2026..

இவ்வருடத்தின்  பிப்ரவரி மாதம் அடுத்த சில தினங்களில்...

பிப்ரவரி மாதம் 
ஞாயிறன்று தொடங்கி சனிக்கிழமையன்று நிறைவு  பெறுகின்றது..

என்ன ஆச்சர்யம் என்றால் இருபத்தெட்டு நாள்களில் ஒவ்வொரு கிழமையும் நான்கு  முறை அமைகின்றது..  

ஆக,
நான்கு ஞாயிற்றுக் கிழமை, நான்கு திங்கட்கிழமை - இப்படி...

நான்கு முழு வாரங்களைக் கொண்ட மாதமாக 2026 - பிப்ரவரி  அமைந்திருக்கின்றது...

பல நூறு வருடங்களுக்கு ஒரு முறை தான் இவ்வாறு அமையுமாம்...  (வாட்ஸாப் சொல்கின்றது)

இனி இப்படி அமைவதை எப்போது காண்போமோ!!...

வாழ்க நலம்
**

வியாழன், நவம்பர் 20, 2025

இயற்கை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை
வியாழக்கிழமை


நாம் நமது பழக்கங்களை திருத்திக் கொள்வதன் மூலமாக  நம்மை நாமே  சரி செய்து கொள்ளலாம்:

அதிகாலையில் எழுங்கள்!

மலம் கழித்து உடலை சுத்தமாக்கிக்  கொண்டு

சூரிய ஒளியை எட்டு மணிக்குள் பெற்றுக் கொள்ளுங்கள்!

தூய காற்றில் மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்!

ஓரளவுக்கு வியர்க்கும்படி வேலை அல்லது உடற்பயிற்சி சிறிது நேரம் செய்யுங்கள்..

தினம் இருமுறை சூழ்நிலையை கருத்தில் கொண்டு இயல்பான அல்லது வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்..

மனதில் நல்ல எண்ணங்களுடன்  இருங்கள்..
சூழ்நிலையைச் சார்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்கு மறக்காதீர்கள்..

முடிந்த வரை (சமைக்காத) இயற்கை உணவுகளை மட்டும் உண்ணுங்கள்..

முதலில் சாப்பிட்ட உணவு  செரித்த பிறகு மட்டுமே மீண்டும் சாப்பிடுங்கள்..

தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்!..

மாலை ஆறு மணிக்கு மேல் கைத் தலபேசியின் பயன்பாட்டையும் தொ. கா. நிகழ்ச்சிகளைப்
பார்ப்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள்..
தவிருங்கள்..

உறங்கச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் அமைதியாய் இருங்கள. 

தியானம் செய்யுங்கள்! 

சீக்கிரமாக உறங்குங்கள்..
குறைந்த பட்சமாக எட்டு மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறுங்கள்!

இந்தப் பழக்கங்களைத் தவறாமல் கடைபிடித்து வாருங்கள்! 
உங்கள் உடல் நலத்தை நீங்களே உணருவீர்கள்!..

இயற்கை உணவே உண்மையான மருந்து! 

இயற்கையே கனிவான மருத்துவர்! 

இயற்கைச் சூழலே நம்பிக்கையான ஆரோக்கியம்!

நன்றி..
இயற்கை நலம்

நமது நலம்
நமது கையில்..
**

சனி, நவம்பர் 15, 2025

காக்க.. காக்க


          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
சனிக்கிழமை

இன்றைய
சூழ்நிலை

Thanks Fb

இறைவன் தான்
காக்க வேண்டும்

சிவாய நம ஓம்
**

ஞாயிறு, நவம்பர் 09, 2025

சும்மா

          

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை

சும்மா இரு சொல் அற!..

- என்பது,
முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு  அளித்த உபதேசம்...

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான் 
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.. (12)

என்று கந்தர் அனுபூதியிலும் சொல்லப்படுகின்றது..

ஆக,
" சும்மா " என்கிற வார்த்தை முருகப் பெருமான் பேசிய வார்த்தை..

காலங்களைக் கடந்தும் இந்த வார்த்தையின் அழகு மிளிர்கின்றது...

Fb ல் வந்த பகுதி

சும்மா படித்துத் தான் பாருங்களேன்..

பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி
 பயன்படுத்துகின்ற வார்த்தை - சும்மா..

சும்மா என்றால் என்ன?..

பேச்சு வழக்கு சொல்லாக இது இருந்தாலும், தமிழ் மொழியின் உள்ளே வாங்கப் பட்டிருக்கின்ற வார்த்தை தான்  - சும்மா!..

சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் பதினைந்து அர்த்தங்கள் உள்ளன.

வேற்று மொழிகளில் இல்லாத சிறப்பு நாம் அடிக்கடி கூறுகின்ற சும்மா எனும் வார்த்தை ..

1. கொஞ்ச நேரம் சும்மா இரு
( அமைதியாக /Quite)

2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறி விட்டு/Leisurely)

3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது
 (அருமை/in fact)

4.இதெல்லாம் சும்மா கிடைச்சது ன்னு
 நினச்சியா?..
 (இலவசமாக/Free of cost)

5. சும்மா கதை அளக்காதே?..
 (பொய்/Lie)

6. சும்மா தான் கெடக்குது.  வேணும்னா நீ எடுத்துக்கோ.. 
(உபயோகமற்று/Without use)

7. சும்மா சும்மா தொல்லை கொடுக்கிறான். (அடிக்கடி/Very often)

8. இப்படித்தான்.. சும்மா பேசிக்கிட்டே இருப்பான்
 (எப்போதும்/Always)

9.ஒன்றுமில்லை சும்மா வந்தேன்..
(தற்செயலாக/Just)

10. இந்தப் பெட்டியில் எதுவும் இல்லை சும்மா தான் இருக்கின்றது..
(காலி/Empty)

11. சும்மா சொன்னதையே  சொல்லாதே..
(மறுபடியும்/Repeat)

12. பிள்ளைகளிருக்கிற வீட்டுக்கு சும்மா போகக் கூடாது.. (வெறுங் கையோடு/Bare)

13. வேலை இல்லாம சும்மா தான் இருக்கின்றோம்..
 (சோம்பேறித் தனமாக/ Lazily)

14.அவன்  இப்படித் தான் சும்மா ஏதாவது உளறுவான்..
(வெட்டியாக/idle)

15.எல்லாமே  சும்மா தான் சொன்னேன்..
(விளையாட்டிற்கு/ Just for fun)

நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல் நாம்  பயன் படுத்துகின்ற இடத்தின் படியும்,   தொடர்கின்ற சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்பது சும்மா இல்லை ஆச்சர்யம்

அமுதே தமிழே நீ வாழ்க!..

( Fb ல் கிடைத்ததை என்னளவில் சீர் செய்திருக்கின்றேன்)

ஓம் நம சிவாய
**

சனி, செப்டம்பர் 13, 2025

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


இன்றொரு 
அழகான காட்சி..

காணொளிக்கு நன்றி


அப்பாடா!..
பத்திரமாய் தரை (!)
இறங்கியாயிற்று..

ஓம் சிவாய நம
**

வியாழன், மே 01, 2025

கருப்பட்டி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 18
வியாழக்கிழமை


கருப்பட்டி.. 

பனை வழங்குகின்ற கொடைகளுள் சிகரம்..

பனையில் இருந்து பெறப்படும் பொருட்கள் பனை உத்திரம், 
ஓலை, ஓலைக் கூடைகள், ஓலைப் பாய், மட்டைகள், நார்
- பிற வகைகள்

சிறுவயதில் பனை ஓலைக் காற்றாடி, நுங்கு வண்டி இவற்றுடன் விளையாடித் திரியாதோர் எவரும் உளரோ!. 

பனை ஓலை விசிறிகளே அன்றைக்குப் பிரதானம்..

தென்னையைப் போல மக்களுக்குப் பற்பல நன்மைகளை பனையும் தருகின்றது..

மருத்துவ குணம் மிகுந்தது கருப்பட்டி..

குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பட்டி நல்ல மாற்று.. மேலும் கருப்பட்டி ரத்த சோகையைப் போக்குகின்றது...

ரத்தத்தை சுத்திகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடலுக்கு சுறுசுறுப்பை வலிமையைத் தருகின்றது. 

கருப்பட்டி சருமநலம் பேணுகின்றது.. சருமம் பளபளப்பு அதிகரிக்க கருப்பட்டி உதவுகிறது. 

உணவில் கருப்பட்டியை அடிக்கடி பயன்படுத்தி வரும்போது எலும்புகளும், நரம்புகளும் உறுதியாகின்றன..

வைட்டமின் B மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி, தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது..


சீரகத்தை வறுத்து கருப்பட்டி 
சுக்குப் பொடி  சேர்த்து இடித்து
சிறிதளவு வாயில் போட்டுக் கொள்ள நல்ல பசி எடுக்கும்.  கருப்பட்டியுடன் ஓமத்தை இடித்துத் தூளாக்கிப் பயன்படுத்தினால்
வாயுத் தொல்லை நீங்கும்..

பூப்படைந்த பெண்களுக்கு , உளுந்தங்களி செய்யும்போது கருப்பட்டியைச் சேர்த்து  செய்து கொடுப்பது பண்டைய வழக்கம்.. இதனால் இடுப்பு எலும்பு  வலிமையாகின்றது..

கர்ப்பப்பைக்கும் நலம்  கிடைக்கின்றது...

கருப்பட்டியுடன் சுக்கு, மிளகு சேர்ந்து இடித்து தேனில் குழைத்துக் கொடுக்க மகப்பேறடைந்த பெண்களுக்கு பால் நன்றாக சுரக்கும்..

வெள்ளைச் சீனிக்குப் பதிலாக இதனை எப்போதும் உபயோகிக்கலாம்..

பேராசை பிடித்தவர்களும் கல் நெஞ்சம் கொண்ட கலப்படக் காரர்களும்  தற்போது கருப்பட்டியிலும் கை வைத்துள்ளனர்... 

கவனமாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம்... 

நம்மை நாமே காத்துக் கொள்வது
நமது கடமையும் கூட!..


பொதுவாக தானம் கொடுப்பதற்கு பல 
பொருட்களும் உகந்தவை.. 

 நன்றி விக்கி

அவற்றுள்  ஒன்று பனை ஓலை விசிறி..

இங்கே கீழவாசல் பகுதியில் தெரு ஒன்றிற்குப் பெயர் விசிறிக்காரத் தெரு..

இந்த வருடம் குலதெய்வக் கோயிலாகிய உவரிக்குச் சென்ற போது வழியில் உடன்குடியில் கருப்பட்டி வாங்குவதற்கு இயலவில்லை...

நெல்லை சந்திப்பு - 
கூட்டுறவு விற்பனை நிலையத்தில் கருப்பட்டியும் பனங்கிழங்கு மாவும் வாங்கி வந்தோம்.. 

நன்றாகத் தான் இருக்கின்றன..

பனையைச் சார்ந்த பல பொருட்கள்  தற்சார்பு வாழ்க்கை வாழ விரும்புவோர்க்கு உகந்தவை...

இயற்கையை நாம் வாழ வைப்போம்..
இயற்கை நம்மை வாழ வைக்கும்..

ஓம் சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஏப்ரல் 29, 2025

நுங்கு

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை


பனம்பழம்..

நுங்கு பனம்பழத்தின் மற்றொரு பெயர்.
இயற்கையின் அருகொடைகளுள் ஒன்று.. 

தேவாரத்தில் பனம்பழம் என்றே பயின்று வருகின்றது..

நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது...

வெயிலால் ஏற்படும் வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற தோல் நோய்களுக்கு நுங்கு மிகச்சிறந்த நிவாரணம்... 

நுங்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. 

நுங்கின் துவர்ப்பான தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, எனவே தோலுடன் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது. 

பதநீரைப் போலவே எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...

ஒரு பழம் என்பது மூன்று பழங்களின் கூட்டமைவு.. ஒரு பூத்திரள் கனி வகையைச் சேர்ந்தது.. 

பனம்பழம் முற்றி இறுகியதும் அதனுள்ளிருந்து புதிய கன்று முளை வருகின்றது..

புதிய கன்று பனங்கிழங்கு எனப்படுகின்றது..


பதநீர்,  நுங்கினைப் போலவே    பனங்கிழங்கும் எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...

இந்த வருடம் திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் பனங்கிழங்கு மாவு விற்கக் கண்டோம்... 

நெல்லை சந்திப்பில் இருந்த பனைப் பொருள் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையத்தில் ஒன்று மட்டும் வாங்கினோம்.. நன்றாகவே இருக்கின்றது..

திருப்பனந்தாள் திருப்பனையூர்
மேலப்பெரும்பள்ளம்
 இன்னும் சில, சிவ ஆலயங்களின் தல விருட்சம் - பனை..

இங்கே சிறை காத்த ஐயனார் கோயிலில் பனையடி வீரனார்...

மதுரைக்குச் செல்லும் வழியில் பொற்பனையான் சாமி

தெற்கே பனையடி மாடசாமி., பனையடி கருப்பசாமி என்றெல்லாம் 
மக்களின்  காவல் தெய்வங்கள்...

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், ஏப்ரல் 28, 2025

பதநீர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை


அன்பின் ஸ்ரீராம் அவர்களது விருப்பத்திற்காக பதநீர் நுங்கு பற்றிய பதிவுகள்..

பதநீர் என்பது பனையின் பூம்பாளை நுனியை பதமாக சீவி விட்டால் அதிலிருந்து வடிகின்ற இனிப்புச் சுவையுடைய நீராகும்..

மாலைப் பொழுதில் பூம்பாளையை சீவித் தட்டி விட்டு மெலிதாக  சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தைக் கட்டி விட்டு
இரவு நேரத்தில்
 கலயத்தில் சேகரமாகின்ற நீரை விடியற்காலையில் வடித்தெடுத்து சூரிய உதயத்திற்கு முன்பாக அருந்த வேண்டும்...

இது தான் பதநீர்..

நெற்றி மட்டத்துக்கு மேல் சூரியன் எழுந்த பிறகு பதநீர் குடிப்பதற்கு சிவனே என்று இருக்கலாம்..

திருச்செந்தூரில் விடியற்காலை பதநீர் கிடைக்கும்..

கோடையில் மட்டுமே
கிடைக்கக்கூடிய அற்புதம் பதநீர்..

உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊட்டம் தருவது பதநீர்..

எலும்புத் தேய்மானம் மற்றும்  தொடர்புடைய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது பதநீர்..

உடலுக்கு குளிர்ச்சி அளித்து, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பைத் தடுக்கின்றது பதநீர்..

பதநீர் உடலுக்கு நன்மை அளித்து, பல நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது என்று நமது முன்னோர் சொல்லி வைத்ததையே -

பதநீரில் புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன என்று விக்கி சொல்கின்றது... 

பதநீருக்கு Palm Water என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது...

Palm என்றால் அவ்விடத்தில் உள்ளங்கை..
இவ்விடத்தில் பனை.. 

இதற்கு மேல் வெள்ளையன் தான் நமக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தான் - என்று இங்கே சொல்வார்கள்..


பனையின் துணைப் பொருட்கள் சிறப்புடையவை..
பனையின் பெருமையை அளவிட முடியாது..

பனை மரங்கள் சமீப காலங்களில் சாலை நலனை முன்னிட்டு தாமே முன் வந்து தியாகம் செய்து கொண்டன..

மேலும்
 தம்மை வளர்த்தவர்களது பணத் தேவைக்காக  மிகக் குறைந்த தொகைக்கு விலையாகி  செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகி விட்டன...

தென்  மாவட்டங்களில் பனையை வாழ்வாதாரமாகக் கொண்ட மரபினோர் மட்டுமே சில ஆயிரங்கள் என்ற அளவில் பனை மரங்களைப் பராமரிக்கின்றனர்..

இதர மாவட்டங்களில் பனை சற்றேறக்குறைய அழிந்து விட்டது..

இத்தனைக்கும் பனை தமிழ் நாட்டின் மரபு சார்ந்த மரம்...
 
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஏப்ரல் 27, 2025

பனை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 14
ஞாயிற்றுக்கிழமை

அன்பின் ஸ்ரீராம் அவர்கள் விருப்பத்திற்காக இந்தப் பதிவும் அடுத்து சில பதிவுகளும்..



தமிழுக்கும்  தமிழ் மண்ணிற்கும் தன்னையே தந்த மரம் எனில் அது கற்பகத் தரு எனப்படும் பனை மரம் ஆகும்..

பனை ஓலைகள் வழியாகத் தான்  காலங்களையும்
கடல்களையும் கடந்து நிலைத்திருக்கின்றது - தமிழ்..

வலம்புரத் திருப்பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளால் பல முறை புகழப்பட்டிருக்கின்ற மரம்..
 
பனைமரம் உண்ணுகின்ற வகைக்கு வழங்குவதோடு
மிகுந்த அளவில் உறைவிடப் பொருள்களையும் வழங்குகின்றது. 

உணவுப் பொருள்களில் 
பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, பனை வெல்லம், , பனங்கற்கண்டு,  எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. 

பனங்கிழங்கு இயற்கையின் அற்புதம்..

பனை மட்டைகள்
ஓலைகள்
பனந்தும்பு எனும் கயிறுவகைகள், சப்பைகள் என்றாகின்றன..

பனையின்  ஓலைகளில் இருந்து விசிறி  கூடை மற்றும் ஓலைப் பொருள்கள்,  ஆகியன பனையிலிருந்து பெறப்படும் கொடைகளாகும்.. 

வறண்ட நிலத்தில் வளர்ந்தாலும் பனையானது தனது சல்லி வேர்களுக்குக் கீழே நீரை ஈர்த்து தக்க வைத்துக் கொள்கின்ற இயல்பின் உடையது...

இதனாலேயே பனை மரத்தடியில் சிறு செடிகள் தழைத்து பனையின் இளங்கன்றும் முளைத்திருக்கும்..


ஆய்வுகளின் படி ஒரு பனை மரமானது ஓராண்டில்  சராசரியாக நூற்றைம்பது லிட்டர் பதநீர் தருகின்றதாகவும் அதிலிருந்து இருபத்தைந்து கிலோ பனை வெல்லம் பெற முடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது..

2016  கணக்கெடுப்பின் படி
தமிழ் நாட்டில் மட்டும் ஐந்து கோடி பனை மரங்கள். இவற்றுள் 50 சதவீத மரங்கள் 
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் 
மாவட்டங்களில்..

இடையாத்தி பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் பனை மரங்கள் மிகுந்துள்ளன..

தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை.. 

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பினைக் கொண்டதாக பனைத் தொழில் விளங்குகின்றது..

இயற்கையின் கொடைகளில் பனையும் முருங்கையுமே ரசாயனங்களில் இருந்து தப்பித்து இருக்கின்றன..

முருங்கை வருடத்திற்கு இருமுறை பலன் தருகின்றது.. பனையோ ஒருமுறை தான்..

தென் மாவட்டங்களில் பனங்காட்டுக்குள் இருக்கின்ற மாடசாமி கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டில் படையலிடப்படும் அன்னம் பொழுது விடிந்ததும் படைப்பு சோறாக வழங்கப்படும்...

எவ்விதப் பாகுபாடும் இன்றி பனை மட்டைகளிலும் பனை ஓலைப் பெட்டிகளிலும் மக்கள் வாங்கிச் செல்வர்...

நாங்களும் அவ்விதம் வாங்கி இருக்கின்றோம்..


தென் மாவட்டங்களில் சற்றேறக்குறைய ஐந்தரை லடசம் பேருக்கு வாழ்வளிக்கின்றது பனை..

இருப்பினும் பெரும்பாலான பனைத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் தான் வாழ்கின்றார்கள்.. 

காரணம் - 
கோடையில் மட்டுமே பலன் தருகின்றது பனை...

அவர்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு 
பனையடி சாஸ்தாவும் ஒற்றைப் பனை மாடசாமியும் தான் வழி காட்ட வேண்டும்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், ஏப்ரல் 22, 2025

கொழுப்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 9  
செவ்வாய்க்கிழமை


Typical edible fats are beef tallow, pork lard, goose or duck fat. 

Those beef tallows have different properties because of their different fatty acid composition.

Tallow is fat from cattle, and it is used in wax paper, crayons, margarine, paints, rubber, lubricants, candles, soaps, lipsticks, shaving creams and other cosmetics..

Many studies have shown that animal fat oils can increase total cholesterol levels in the blood, which will be detrimental to health..

உண்பதற்கு ஏற்ற கொழுப்புகளும் அதன் வகைகளும் பயன்பாடுகளும் விக்கியில் சொல்லப்பட்டிருக்கின்றது..

ஐரோப்பிய நாடுகளில் 1992/94  களில் Mad Cow என்ற நோய் பரவி லட்சக்கணக்கான மாடுகள் அழிக்கப்பட்டன.

ஏன் நோய் வந்தது?...

அதிக இறைச்சி கொழுப்பிற்காக கொழுப்பு கலக்கப்பட்ட தீவனங்கள் கொடுக்கப்பட்டதால்... - என்று அந்தக் காலத்தில் சொல்லப்பட்டது... 

அந்தக் காலத்திலேயே விஷப் பரிட்சை...

மேலை நாட்டின் தொழில் நுட்பமும் உணவுப் பழக்க வழக்கமும்  தனி.. அவற்றை ஆராய வேண்டியதில்லை..

ஆனால்,
Milk fat என்பதும் Animal fat என்பதும் வேறு வேறானவை..

திவ்ய தேசத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நெய்யிலும் Animal fat என்பது இன்றைய தொழில் நுட்பம்..

Edible Fats
Is Edible Oil have smells..

Refining and Deodorization:

Refined cooking oils are often processed to remove strong odors and improve their flavor. 

This process, called deodorization, uses steam distillation under high temperature and vacuum conditions to remove odor - producing substances. 

Can remove Natural Odors in Natural oils?..

Yes, certain natural oils, particularly essential oils, can effectively remove or neutralize natural odors, thanks to their antibacterial and antifungal properties. 

ஆகவே எண்ணெயில் இருக்கின்ற இயற்கையான  - மணத்தை நிறத்தை நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக நீக்க முடியும் என்கின்றது கூகுள்..

அப்படியெனில் எண்ணெயில்
புதிய  மணத்தை ஏற்றவும் முடியும்!..  என்று ஆகின்றது...

இந்த இடத்தில் தான் பற்பல வித்தைகள் காட்டப்படுகின்றன..

எனவே, நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்..

நமது நலம்
நமது கையில்..

நல்ல செய்திகளைச் சொல்வதும் 
முப்பத்திரண்டு அறங்களில் ஒன்று

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, ஏப்ரல் 20, 2025

கோடை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7 
ஞாயிற்றுக்கிழமை


புத்தாண்டின் முதல் ஞாயிறு..

சூரிய பகவானின் கோயிலைப் பற்றி சிறியதொரு சுருள் காணொளி..





கோடை ஆரம்பம் ஆகி விட்டது...

இக்காலத்தில் நா வறட்சி பொது..

இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சாறு ஆகிய இயற்கை பானங்கள அருந்தலாம்.. 


தர்பூசணி பழமும் முலாம் பழமும்  கவனத்தில் கொள்ளத் தக்கவை.. 

இவற்றினோடு பானகம் எனும் அருமருந்தையும் அவ்வப்போது   அருந்தலாம்.

புளியைத் தண்ணீரில்  கரைத்துக் கொண்டு
அல்லது எலுமிச்சம் பழத்தை நறுக்கி தண்ணீரில்  பிழிந்து கருப்பட்டியை அதனோடு நன்கு கலக்க வேண்டும். இக் கரைசலை வேறொரு பாத்திரத்தில்  வடிகட்ட வேண்டும். சுக்குப் பொடியும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். இதுவே பானகம்..

இந்தப் பானகம் மிகவும் உயர்வானது..

கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும்.

பழரசங்களை விட மிகவும் நல்லது  பானகம்.

இரும்புச்சத்து அமினோ அமிலங்கள் பனை வெல்லத்தில் இருந்து அபரிமிதமாகக் கிடைக்கின்றன..

இவற்றால்
 உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்..

தயாரிப்பதும் எளிது.

கோடையில் செய்வதற்கான அறச் செயல்கள் பல உள்ளன...

குளிர்ந்த நீர், நீர் மோர், பானகம் வழங்குதல்....

ஏழைகளில் சிலருக்காவது ஓலை விசிறி, செருப்பு , குடை 
வழங்குதல்...

மணலைக் குவித்து வைத்து அதன் மீது புதிய பானை ஒன்றில் தண்ணீர் வைத்து விட்டால் அது மிகப் பெரிய அறம்..

இயன்றவரை 
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வழங்கி செடி கொடி மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டால் பெரிய புண்ணியம்..
 
மோர் வழங்குவது எனில் வீட்டிலேயே தயாரித்து வழங்கவும்..

அப்படி இயலாது என்றால் - 
நல்ல தயாரிப்பாகப்  பார்த்து வாங்கி வழங்கவும்...

சில தயாரிப்புகள் எல்லாருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.. 

ஒரு இளநீர்  ஐம்பது அறுபது ரூபாய் என்றாகி விட்டது.. உப்புச் சுவை எனில் ஒன்றும் செய்ய இயலாது..
 

எது எப்படியோ, , தேவையான அளவு நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும்.. வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்..

செயற்கை நிறமிகள் இரசாயனங்கள் இவற்றுடன் காற்று அடைக்கப்பட்டவைகளிடம் எச்சரிக்கை தேவை..

செயற்கை பானங்களைத் தயாரித்தவர்களும் விற்பனை செய்தவர்களும்  ஆதாயம் அடைந்திருக்க - அவற்றை வாங்கிக் குடித்தவர்களுக்கு வியாதியும் வேதனையும் தான் மிச்சம்.

கோடை முடியும் வரை கவனமாக இருங்கள் ...

வாழ்க நலம்
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஏப்ரல் 17, 2025

நெய் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 4  
வியாழக்கிழமை


நெய்யில்லா 
உண்டி பாழ் என்பது ஔவையார் கூற்று. 

சித்தர்கள் வாக்கும் இதுவே.. 

பாலை நன்றாக காய்ச்சி -  ஆறியதும் அதில் சிறிதளவு தயிரைக் கலந்து மூடிவைத்தால்  எட்டு மணி நேரத்தில் தயிராக உரு மாறியிருக்கும்.

இந்த தயிரை மத்தால் கடைந்தால் மோர் என்றாகி மோரின் மேல் வெண்ணெய் தனியாக மிதக்கும்..

இதனை சேகரித்து வெண்கலப் பாத்திரத்திலோ மண் சட்டியிலோ இட்டு காய்ச்சி வெண்ணெய் உருகி வருகின்ற போது அதில் முருங்கைக்  கீரை இரண்டு இணுக்குகளைப்  போட்டால் வெண்ணெய் நறுமணத்துடன் - 
 நெய்யாகி விடும்.. 

இதுதான் சுத்தமான நெய்..

இதனை வடிகட்டி வைத்துக் கொண்டால்  பல மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்... இத்தகைய நெய்யில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.

பன்னெடுங்காலமாகவே சித்த ஆயுர்வேத மருத்துவங்களில் நெய்யின் பயன்பாடு  இருந்து வருகின்றது..

இப்படியின்றி செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நெய் தான் இன்று நாம் காணக் கூடியவை...

நாட்டுப் பசுக்கள் இல்லாத நிலையில் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு நெய்... ஹைய்யா... ஹைய்யா... நெய்!... - என்று ஆடிப் பாடிக் கொண்டு இருக்கின்றனர்..

குவைத்தில் நான் வேலை செய்த போது உணவு வகைகளின் பாதுகாப்பு தொடர்பாக வருடத்திற்கு இரு முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்... 

அங்கே சொல்லப்பட்ட உணவு  பாதுகாப்பு விஷயங்களுக்கும் இங்கே நடப்பவற்றிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை...

இருப்பினும் - 
பாலில் உள்ள புறக் கொழுப்புகள் என்ற பகுதி மிகுந்த கவனத்தைக் கொடுத்தது..

அது அப்படியே இங்கு நடந்தது என்றால்?...

தேவஸ்தானத்திற்கு கொடுக்கப்பட்ட நெய் கவனத்துக்கு வருகின்றதா!...

தேவஸ்தான நெய் விஷயம் எப்போதும் நமது நினைவில் இருக்க வேண்டும்...

முன்பொரு காலத்தில் தமிழர்கள் தமிழ் பேசி மகிழ்ந்திருந்த நாட்களில் அவ்வப்போது அவர்களது உரையாடலில் பொன் மொழிகள் பல கலந்து வரும்..  அவற்றுள் ஒன்றுதான் அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை... 


அதாவது பாலொடு கிடைக்கின்ற ஐந்தில் இரண்டு பொருட்கள் அவற்றின் சீர் குறைவதில்லை என்பதாம்...

கறந்த பால் அப்படியே இருந்தால் சில மணி நேரத்தில் கெட்டு விடும்..  காய்ச்சப்பட்ட பாலும் மறு நாள் கெட்டு விடும்..  உறையூற்றி வைத்தால் தயிராகி இரண்டு நாட்களுக்கு இருக்கும்.. தயிரைக் கடைந்து வெண்ணெய் மோர் என்று பிரித்து விட்டால் வெண்ணெய் ஒரு வாரத்துக்கும் மோர் சில நாட்களுக்கும் தாங்கும்.. வெண்ணெயை உருக்கி நெய்யாக ஆக்கி விட்டால் ஒரு வருடத்துக்கு மேல் வரும்..

ஆக நாமே  தயிரைக் கடைந்து எடுக்கின்ற மோரும் வெண்ணெயை உருக்கி எடுக்கின்ற நெய்யுமே ஈடு இணையற்றவை.. சிறப்புடையவை என்பது தெளிவு..

நலம் தேவை எனில் சிறிது சிரமப்படலாம்...

உரித்த வாழைப்பழம் மட்டுமே வேண்டும் எனில் உபத்திரவம் தான்..

நமது நலம் 
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், ஏப்ரல் 16, 2025

நெய் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 3
 புதன்கிழமை


பசும் பாலில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்பட்ட நெய்  உடலுக்கு ஆற்றல்..

இன்றைய பதிவில்
 பசு நெய் மட்டுமே பேசப்படுகின்றது.. 

எருமைப் பாலின் நெய்யை எப்போதும் (பழைய நாட்களில் கூட) ஒத்துக் கொண்டதேயில்லை..  

ஆயினும், கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது சாற்றப்படுகின்ற அஷ்ட பந்தன மருந்தில் எருமை வெண்ணெயும் ஒன்று..

கொழுப்பு - என்ற வகைக்குள்
வருகின்ற நெய், நமது உடலின்     திசுக்களில் கூடுதலாக சேமித்து வைக்கப்படுகின்றது..

ஒரு நாளைக்கு இருபது கிராம் கொழுப்பு   ஆரோக்கியம் என்ற நிலையில் அது - பசு நெய், புலால் உணவு, எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்தும்  கிடைக்கலாம்..

குறைந்த அளவில் நெய்
எனும் போது உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.. 

என்றாலும்,
அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லதல்ல..  உடலின் எடை கூடி  பிரச்னைகளும் அதிகரித்து விடும் 

A, B, D, K போன்ற வைட்டமின்கள் கரைவதற்கு, கொழுப்பு தேவை..

தாவரக் கொழுப்பு மிருகக் கொழுப்பு எண்ணெய் இவற்றை விட மேலானது பசு நெய்...

நெய்யில் செறிவூட்டம் பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

நெய்யில், சற்று கூடுதலாக இருக்கின்ற வைட்டமின் A , தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது..
நன்றி விக்கி

தசைச் செல்களின் ஊடாக - நெய் எளிதில் பரவும் என்பதால் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

பருப்பு சோற்றுடன் பசு நெய்யைப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டுவது மரபு..
 
உடலுழைப்பே இல்லாதவர் உணவில் நெய்யை அதிகமாக சேர்த்துக் கொண்டால் அது பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.. 

இதனை பாரம்பரிய மருத்துவமும் ஒத்துக் கொள்வது இல்லை.

சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது தான் நெய்யின் ஆற்றல்  உடலுக்குக் கிடைக்கின்றது. 

இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.

சுத்தமான பசுநெய் உடலுக்கு  ஏற்றம் அளிப்பதே.

தற்காலத்தில்
அதீதமான கொழுப்பு உடலுக்கு ஆபத்து என்ற போதில் பசு நெய்யையும் தேங்காயையும்
சேர்த்து விட்டார்கள்...


வீட்டிலேயே தயிரைக் கடைந்து 
வெண்ணெய் எடுத்து அதை உருக்கி பாரம்பரிய முறைப்படி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய்..

இங்கே கீழவாசல் சந்தையில் தரமான வெண்ணெய் கிடைக்கின்றது.. அதைக் கொண்டு நாங்களே நெய் தயாரித்துக் கொள்கின்றோம்..

நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**