நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 16, 2025

நெய் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 3
 புதன்கிழமை


பசும் பாலில் இருந்து பாரம்பரிய முறையில் பெறப்பட்ட நெய்  உடலுக்கு ஆற்றல்..

இன்றைய பதிவில்
 பசு நெய் மட்டுமே பேசப்படுகின்றது.. 

எருமைப் பாலின் நெய்யை எப்போதும் (பழைய நாட்களில் கூட) ஒத்துக் கொண்டதேயில்லை..  

ஆயினும், கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது சாற்றப்படுகின்ற அஷ்ட பந்தன மருந்தில் எருமை வெண்ணெயும் ஒன்று..

கொழுப்பு - என்ற வகைக்குள்
வருகின்ற நெய், நமது உடலின்     திசுக்களில் கூடுதலாக சேமித்து வைக்கப்படுகின்றது..

ஒரு நாளைக்கு இருபது கிராம் கொழுப்பு   ஆரோக்கியம் என்ற நிலையில் அது - பசு நெய், புலால் உணவு, எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்தும்  கிடைக்கலாம்..

குறைந்த அளவில் நெய்
எனும் போது உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.. 

என்றாலும்,
அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லதல்ல..  உடலின் எடை கூடி  பிரச்னைகளும் அதிகரித்து விடும் 

A, B, D, K போன்ற வைட்டமின்கள் கரைவதற்கு, கொழுப்பு தேவை..

தாவரக் கொழுப்பு மிருகக் கொழுப்பு எண்ணெய் இவற்றை விட மேலானது பசு நெய்...

நெய்யில் செறிவூட்டம் பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.

நெய்யில், சற்று கூடுதலாக இருக்கின்ற வைட்டமின் A , தோலுக்கும், கண்ணுக்கும் நல்லது..
நன்றி விக்கி

தசைச் செல்களின் ஊடாக - நெய் எளிதில் பரவும் என்பதால் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

பருப்பு சோற்றுடன் பசு நெய்யைப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டுவது மரபு..
 
உடலுழைப்பே இல்லாதவர் உணவில் நெய்யை அதிகமாக சேர்த்துக் கொண்டால் அது பல பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.. 

இதனை பாரம்பரிய மருத்துவமும் ஒத்துக் கொள்வது இல்லை.

சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது தான் நெய்யின் ஆற்றல்  உடலுக்குக் கிடைக்கின்றது. 

இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.

சுத்தமான பசுநெய் உடலுக்கு  ஏற்றம் அளிப்பதே.

தற்காலத்தில்
அதீதமான கொழுப்பு உடலுக்கு ஆபத்து என்ற போதில் பசு நெய்யையும் தேங்காயையும்
சேர்த்து விட்டார்கள்...


வீட்டிலேயே தயிரைக் கடைந்து 
வெண்ணெய் எடுத்து அதை உருக்கி பாரம்பரிய முறைப்படி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய்..

இங்கே கீழவாசல் சந்தையில் தரமான வெண்ணெய் கிடைக்கின்றது.. அதைக் கொண்டு நாங்களே நெய் தயாரித்துக் கொள்கின்றோம்..

நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

5 கருத்துகள்:

  1. வீட்டிலேயே மாடு வளர்த்தால் வீட்டிலேயே கடைந்து வெண்ணெய் எடுக்கலாம்.    இப்போது வாங்கும் கவர் பால்களில் எங்கே வெண்ணெய் எடுக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கவர் பாலில் வெண்ணெய் எடுத்துள்ளேன்.இங்கு விற்பனையாகும் நந்தினி (ஆனால், ப்ளு கலர் பாக்கெட்டில் மட்டுந்தான் வெண்ணெய் எடுக்கமுடியும். ) பால் கவர் பாக்கெட் பாலை உறை குத்தி மேல் ஆடைமட்டும் எடுத்து ஒரிரு நாட்கள் சேமித்து வைத்து கொண்டு வெண்ணெய் எடுத்துள்ளேன். அந்த நெய்யும் வாசனையாக இருக்கும். சென்னை, மதுரையில் கவர் பாலே வாங்குவதில்லை. கறந்த பால்தான் வீட்டின் அருகிலேயே கிடைக்கும்.

      நீக்கு
  2. பசு நெய்தான் உபயோகிப்பது.  எருமை நெய் சுவைத்துக் கூட பார்த்ததில்லை.  ஊத்துக்குளி வெண்ணெய் என்று வாங்குவேன்.  அது கூட இப்போதெல்லாம் ஊத்துக்குளி என்று சொல்லி எதையெதையோ விற்கிறார்கள். 

    முன்பு என் அலுவலக சக ஒருவர் ஊத்துக்குளி வெண்ணெய் அங்கிருந்தே வாங்கி விற்றுக் கொண்டிருந்தார்.  அற்புதமான நெய் கிடைத்தது.  இப்போது அவர் வெண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டார்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பசு நெய்யில் பயன்பாடு குறித்த பகிர்வு அருமை. நாங்களும் முன்பு ஊத்துக்குளி வெண்ணெய் வாங்கித்தான் காய்ச்சி கொண்டிருந்தோம் . இப்போது நெய்தான் வாங்குகிறோம். எருமை பால் நெய் உபயோகப்படுத்தியதில்லை.

    நெய் கூட கொழுப்பு சக்தி என அவ்வளவாக பயன்படுத்த கூடாது என எச்சரிக்கிறார்கள். ஆனால், அதை தினமும் சாப்பாட்டிற்கு ஒரு ஸ்பூன் பயன்படுத்துவது தவறில்லை என நான் கூறுவேன். பசு நெய் உடல் சூட்டை குறைக்கும் என்பது என கருத்து. தங்களின் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் உணவில் நெய் வெகுவாகக் குறைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..