நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 28, 2019

அழகு.. அழகு 6

 ஊரெல்லாம் ஒரே பரபரப்பா இருக்கு...

அப்படியான செய்திகள்...
இப்படியான செய்திகள்...

எல்லாவற்றையும்
கண்டும் கேட்டும் படித்தும் தலை முழுக்க கிறுகிறுப்பு...

 இதுகளுக்கு இடையில கொஞ்சம் போல கலகலப்பு...

திருமிகு.. தி. த.. அவர்களுக்கு.. இரண்டு வார்த்தைகள் வந்திருக்கின்றன...

எல்லாருக்கும்
சுரங்கத் துறை தான் வேணுமா?.
.
பொழுதும் போயிடுச்சு..
கூட்டணிக்கு யாரும் கூப்பிடலையே...
ஒனக்கு ஒரு சீட் கூட கொடுக்கலையா?...
எங்களையும் பார்த்து போடுங்கம்மா ஓட்டு!..
நம்மையும் மிஞ்சிட்டாங்களே!...
கலை நிகழ்ச்சிகளுக்கு நான் பொறுப்பு..
ஜூஸ்.. ந்னு கொடுத்தானுங்க..
இந்த மாதிரி ஆயிடிச்சே!..
என்னாது!.. தேர்தல் வருதா?..
இது புதுமையான கூட்டணி..ங்கோ!..
அப்பளக் குழவியால் அடி கொடுப்போர் சங்கம்..
தேர்தல் முடியற வரைக்கும்
வெளியே வரக்கூடாது... 
ஏங்க!.. வாக்குச் சாவடி எந்தப் பக்கமுங்கோ?.. 
இவ்வளவு தானா..
இன்னும் இருக்கா?..
அடுத்த வாரம் பார்க்கலாம்.. குருவே..
படங்கள் FB ல் கிடைத்தவை...

எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
என்றென்றும் அழகு..

வாழ்க நலம் 
ஃஃஃ 

புதன், பிப்ரவரி 27, 2019

ஜெய் ஹிந்த்

பாரதத்தின் மேற்கு எல்லைப் பகுதியை ஒட்டிள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப் படை வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!..


அந்த நிகழ்வைப் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.. 
அவற்றுள் சிலவற்றை இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...

படங்களை இணையத்தில் ஏற்றியவர்களுக்கு மனமார்ந்த நன்றி...வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் கொண்ட நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள்ளுய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா!...
-: மகாகவி பாரதியார்:-

ஜெய் ஹிந்த்
ஃஃஃ

செவ்வாய், பிப்ரவரி 26, 2019

செப்பறைச் செல்வன் 2

திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரம் எனப்படும் செப்பறை - தாமிரசபையின் தரிசனத்தின் அடுத்த பதிவு...

முதல் பதிவின் இணைப்பு செப்பறைச் செல்வன் 1

பதிவிலுள்ளவை கடந்த மார்கழித் திரு ஆதிரை வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்...

திருக்கோயிலில் பொறுப்பான பணியில் உள்ள எவரோ ஒருவர் இந்தப் படங்களை - செப்பறை அழகிய கூத்தர் கோவில் எனும் இணைப்பில் வழங்கியுள்ளார்...

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

முந்தைய பதிவில் -
திருக்கோயிலில் கலை நயமிக்க சிற்பங்களை சித்திரங்களை
மண்டபத் தூண்களைப் படமெடுக்க அனுமதிக்காத நடைமுறையைப் பற்றி நண்பர்கள் அனைவரும் மிக அருமையான கருத்துகளை முன் வைத்திருந்தார்கள்...

அனைத்தும் ஒவ்வொரு தரப்பில் ஏற்புடையவையே என்றாலும் -

நல்லறிவு உடைய எவரும் சந்நிதி முன்பாக செல்பி எடுத்துக் கொள்ள முயற்சிப்பது இல்லை... கருவறைக்கு முன்பாக எவ்வித இடைஞ்சலும் செய்வதில்லை...

அதே சமயம் - கொடிமரம் முன்பாக சுற்றுப் பிரகாரங்களில் நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களில் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஆதார் அட்டையை பதிவு செய்து கொண்டு குறிப்பிட்ட சிறு கட்டணத்துடன் அனுமதிக்கலாம்..

ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்கள் சொல்லியிருந்ததைப் போல
அங்கு இங்கு என்று அலைந்து திரிய முடியாதவர்களுக்கும் மூத்த குடி மக்களுக்கும் அத்தகைய படங்கள் பெருமகிழ்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கும்...

திருமலையில் தரிசனத்துக்கு முன்பாகவே 
அங்கு புகைப்பட கருவிகளும் மற்றவைகளும் அனுமதிக்கப்படுவதில்லை.. 

சாமானியர்களுக்குத் தான் அனுமதியில்லையே தவிர
திருக்கோயிலுக்கு வருகை தரும் முக்கிய புள்ளிகள்
கொடிமரத்துக்கு அருகிலேயே தமது கூட்டத்தாருடன் காட்சிப்படுத்தப்படுகின்றனர்...

மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோயிலில் நுழையும் முன்பாகவே
கரடு முரடான காவலர்கள் நமது உடைமைகளை உதறித் தள்ளி விடுகின்றனர் - பாதுகாப்பு சோதனை என்ற பெயரில்...

சென்ற ஆண்டு அங்கிருக்கும் கடைகளில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பின்
திருக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது - தீரிநூல் தீப்பெட்டி நல்லெண்ணெய் இவற்றைக்கூட அனுமதிக்கவில்லை - சேவார்த்திகள் திரு விளக்கு ஏற்றக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்!..

அங்கே கோயில் கடைகள் மாற்று சமயத்தினருக்கு உள்வாடகைக்குக் கொடுக்கப்படுவதும் அந்தக் கடைகளில் புலால் உணவுகள் புழங்குவதும்
மதுரை மக்களால் சொல்லப்பட்டிருந்தன - தீவிபத்து நடந்த சமயத்தில்!...

அதைப் பற்றி யாரும் மேலதிகமாக சிந்திக்கவில்லை அப்போது!..

ஆன்மிகத்தை வளர்ப்பதற்காக  ( !.. ) வர்த்தக ரீதியாக நடத்தப்படும் பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் சிலவற்றை வைத்திருந்தேன்...

அவற்றைத் தேடி எடுத்து பின்னொரு சமயம் தருகின்றேன்...
இது எவ்விதத்தில் நியாயம்?... என்று நாம் - பேசிக் கொள்வோம்...

இப்போது -

சிவ வைணவ தர்மங்களுக்கு எதிராக முளைத்திருக்கும் கூர் முட்கள்
இற்றுத் தொலைந்திடும்படிக்கு திருவருள் புரிக இறைவா!..

- என்று வேண்டிக் கொண்டு செப்பறை அழகிய கூத்தனைத் தரிசனம் செய்திடுவோம்!...    


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தாஉன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே..(4/23)
- : திருநாவுக்கரசர்:- கண்டவா திரிந்து நாளுங் கருத்தினால் நின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ்சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்திசை யோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே...(4/23)
-: திருநாவுக்கரசர் :-கூடும் அன்பினில் என்றும்
கும்பிடுதல் வேண்டும் 
பார்த்திருந்த அடியனேன் நான் பரவுவன் பாடியாடி
மூர்த்தியே என்பன் உன்னை மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம் பலத்துக்
கூத்தா உன் கூத்துக் காண்பான் கூடநான் வந்தவாறே..(4/23)
-: திருநாவுக்கரசர்:-

இன்றைய பதிவில் 
தில்லைத் திருச்சிற்றம்பலத்தில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தின்
திருப்பாடல்களுள் சில இடம் பெற்றுள்ளன..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

திங்கள், பிப்ரவரி 25, 2019

வாழ்க குவைத்

இன்றும் நாளையும் இந்நாட்டின் தேசிய விடுமுறை..

Telecommunication Tower
இன்று 25/2 - தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 ஈராக்கின் பிடியிலிருந்து 
தன்னாட்சியுரிமை ( Liberation Day ) 
பெற்ற நாளையும் கொண்டாடுகின்றது. இந்த நாட்களையொட்டிய சிறு பதிவு இது..

பதிவிலுள்ள மின்னலங்காரப் படங்கள் குவைத் நகரைச் சுற்றி எடுக்கப்பட்டவை... வழங்கியோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி....

Fb  ல் வெளியான படங்கள் தங்களுக்காக - இதோ!...பழைய அரச மாளிகை முகப்பு
இரண்டு உருண்டைகளுடன் ஒன்றும்
ஒரு உருண்டையுடன் மற்றொன்றும் 


Kuwait Towers என்று சொல்லப்படும் இவை கடற்கரையில் உள்ளன..
குவைத் நாட்டின் கடற்கரை Persian gulf எனப்படும்.. 

ஒற்றை உருண்டையுடன் விளங்குவது தண்ணீர் தொட்டி..

மற்றதில் மேலே உள்ள உருண்டைக்குச் செல்ல அனுமதி கிடையாது..
கீழே உள்ள பெரிய உருண்டைக்குள்
சுழலும் உணவகம் (Revolving Restaurant) உள்ளது.
குவைத் நகரை மேலிருந்து சுற்றிவர பார்க்கலாம்.. .குவைத் நாடாளுமன்றம்


கீழுள்ள படங்கள் வழக்கம்போல எனது கை வண்ணம்...
சாதாரண காய்கறிக் கடை...


நமக்குக் கிடைத்த வரப்ரசாதம்... 
மின்னொளியில் பளபளக்கும் இந்நகருக்கு வேறொரு முகமும் உண்டு..
அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்க்கலாம்...

வாழ்கின்ற நாட்டிற்கு
நல்வாழ்த்துகள்..

வாழ்க நலம்
ஃஃஃ