நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2019

ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி



கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா!..
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறைந்ததம்மா!..


ஒருத்தி மகனாய் பிறந்தவனாம்!..
ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம்!
உருவில் அழகாய் மலர்ந்தவனாம்!..
உயிரில் உயிராய் கலந்தவனாம்!.. 


ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..
மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ!..


குருவாயூருக்கு வாருங்கள்..
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்!..
ஒருவாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதைப் பாருங்கள்!..


படிப்படியாய் மலையில் ஏறி
பக்தி செய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்பொடியாய் நொறுங்குதடி ராமாரி!..அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்துக்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!..


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே
எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே!..
தென்கோடித் தென்றல் தரும் ராகங்களே
எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களே!.


ஏழைக் குசேலனுக்குத் தோழமை தாள் தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்!..
வாழிய பாடுங்கள்.. வலம் வந்து தேடுங்கள்..
வந்து நிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!..


கேட்டதும் கொடுப்பவனே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
கீதையின் நாயகனே. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நீயுள்ள சந்நிதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..
நெஞ்சுக்கு நிம்மதியே.. கிருஷ்ணா.. கிருஷ்ணா!..


நம்பினார் கெடுவதில்லை - நான்கு மறை தீர்ப்பு..
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு..
பசிக்கு விருந்தாவான்.. நோய்க்கு மருந்தாவான்..
பரந்தாமன் சந்நிதிக்கு வாராய் நெஞ்சே!..

அனைவருக்கும்அன்பின் இனிய
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.. 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!..
ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

செவ்வாய், ஆகஸ்ட் 20, 2019

அழகு.. அழகு 7

மங்கலகரமான நிகழ்வு ஒன்று..

அதன் பொருட்டு
பத்து நாட்கள் விடுமுறையில் தஞ்சைக்கு புறப்படுகின்றேன்...

அனைவரது பதிவுகளையும் கண்டு கருத்துரை இடுவதற்கு சற்றே சிரமம்...
( இல்லாவிட்டாலும் ரொம்ப சுறுசுறுப்பு என்று ஊருக்கே தெரியும்!...)

மீண்டும் விரைவில் சந்திப்போம்...

அத்திவரதர் தரிசனம் நல்லபடியா ஆனதா!.. 
பூஸார் வந்துட்டாங்களாமா!. .
ஏன் தேர்தல் எதுவும் வருதா?.. 
எல்லாரும் காஞ்சிபுரம்
போய்ட்டு வந்துட்டாங்களா?.. 
காஞ்சிபுரம் கூட்டிட்டுப்
போகலைன்னு கோவமா?..
படங்கள் FB ல் வந்தவை..

எங்கும் அழகு.. எல்லாம் அழகு..
அழகே அழகு..

வாழ்க நலம் 
ஃஃஃ

திங்கள், ஆகஸ்ட் 19, 2019

சத்ய வரதன்

நன்றி
நெல்லைத் தமிழன்
ஸ்ரீ அத்திவரத ஸ்வாமி
மீண்டும் அனந்த சரஸ் எனும் திருக்குளத்தில்
ஜலசயனம் கொண்டார்..

எதிர்வரும் 2059 ல் ஜலசயனத்திலிருந்து நீங்கி
மீண்டும் வசந்த மண்டபத்தில் திருக்காட்சி நல்குவார்...

பெருமானைத் தரிசிக்க விதியற்றுப் போனோமே!..
என்று மனம் வருந்துகின்றது...



எனினும்
அவனருளால் அவன் தாள் வணங்குகின்றோம்..
இந்த அளவுக்கு எல்லாம் நலமே!..
ஆக - இதற்கு என்ன புண்ணியம் செய்தோமோ!..
என்ற திருப்தியும் மேலிடுகின்றது...

சரஸ் என்றால் பொய்கை என்பது பொருளாகும்..
நம்முடைய மனதைத் தூய்மையான பொய்கையாக
ஆக்கிக் கொள்வோம்...

அதில்
நிற்பதுவும் இருப்பதுவும் கிடப்பதுவும்
அவனது திருவுளம்!...


அத்திக்கு அருள் புரிந்த அரவணையாய் அருளாளா
எத்திக்கு நின்றாலும் நினைமறவா வகையருள்வாய்
முத்திக்கு வழியருளும் முன்னவனே முகில்வண்ணா..
வித்திற்கும் வித்தாகி வினைதீர்க்கும் கரிவரதா!...

பத்திக்கும் பண்பிற்கும் படியிறங்கி வருவோனே...
சித்திக்கும் நலங்களுக்குள் நலமாகித் திகழ்பவனே!..
எத்திக்கும் அறியாத ஏழையென் வழித்துணையே
தித்திக்கும் நலம்நல்காய் திருவாழும் திருமார்பா!...


நித்திலமாய் ரத்தினமாய் நிலமளந்த உத்தமனே...
சத்தியமாய் தத்துவமாய் முகங்காட்டும் வித்தகனே
அத்திகிரி தலம் ஓங்க அண்டியவர் துயர் நீங்க
நித்திலமாய் நீருக்குள் துயில் கொள்ளும் ரத்தினமே!..

எத்திக்கு உள்ளாரும் உனைத்தேடி வந்தார்கள்
தித்திக்கத் தித்திக்கத் திருவருளைக் கொண்டார்கள்
பித்தான மனத்துள்ளே பெருமானே எனக்காக
அத்திநகர் கருமுகிலே நின்றாயே எனைக்காக்க!...



எத்திக்கும் உனதாட்சி எங்கெங்கும் திருக்காட்சி..
இத்தரையில் இனிவேண்டும் நீங்காத புகழ்மாட்சி
புத்திக்கும் எட்டாத புண்ணியனே புகழ்ந்தேத்தி
முத்தமிழில் வைத்தேனே திருவிளக்கு உனைப்போற்றி!..


அத்திவரதன் திருவடிகள் போற்றி..

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ  

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019

முயற்சி எனும் திருவினை..

இன்றைய பதிவில்
WhatsApp வழியாக வந்த இரண்டு காணொளிகள்....

இப்போது தான் முதன்முறையாக இவற்றைப் பார்க்கிறேன்...

என் மகள் மருமகன், மகன் இவர்களுடன் ஒரு குழுவும்
மைத்துனர் - அவர்தம் குடும்பத்தினர் தம்முடன் ஒரு குழுவும்..

அவ்வளவுதான்!..

முதல் காணொளி நகைச்சுவை...

போ..போ!... போய்க்கிட்டே இரு!...
இனியொரு தரம் உன்னையப் பார்த்தேன்!.. அவ்வளவுதான்!...

நீ.. என்னய்யா?... உனக்குத் தனியா ஒரு தரம் சொல்லணுமா?...
இளவரசிகள் வர்ற நேரம்... போ.. போ.. பின்னாலே போ!...

ம்.. நீங்க வாங்கம்மா கண்ணுங்களா!...


இரண்டாவது காணொளி நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்குகிறது...

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்!.. 

அப்படி... ன்னு
பாட்டுப் பாடிக்கிட்டு வந்த குட்டியப்பன் ஒருவன்
தண்ணீர்த் தொட்டிக்குள் மல்லாக்க விழுந்து வைக்கிறான்...

தாயோ குட்டியைக் காப்பாற்ற வகையறியாமல் பதற்றமாகிறது...
அத்துடன் மற்ற யானைகளையும் பரபரப்புக்குள்ளாக்குகிறது..

புத்திசாலியான ஒன்று - தாயை
போ.. அந்தப் பக்கம் !.. - என்று விரட்டி விட -
மற்றவை குட்டியப்பனைக் காப்பாற்றுவதற்கு முனைகின்றன...

போங்கடா தடியன்களா!.. 
உங்களால் குட்டியைக் காப்பாற்ற முடியாது..
எப்படியும் எங்களுக்குத்தான்!..
- என்று,மற்றொரு பக்கம்ஆவலுடன் பந்திக்குக் காத்திருக்கின்றன - சோம்பேறிச் சிங்கங்கள்..

யானைகள் ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்
தங்கள் முயற்சியைக் கை விட நினைக்கும்போது தான்

திருப்பம் ஒன்று நிகழ்கின்றது...

அது என்னவென கண்டு மகிழுங்கள்..


முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்..(616)

வாழ்க நலம்
ஃஃஃ

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2019

வெள்ளி மலர் 5

இன்று ஆடி கடைவெள்ளி...

அனைவரது இல்லத்திலும் செல்வமும் செழிப்பும்
தழைத்தோங்கிட வேண்டிக் கொள்கிறேன்...

ஸ்ரீ அபிராமவல்லி - திருக்கடவூர் 
ஸ்ரீ உண்ணாமுலையாள் 
ஸ்ரீ மீனாம்பிகை - மதுரை 
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி 
ஸ்ரீ கற்பகாம்பிகை - திருக்கோடிக்கா
ஸ்ரீ கற்பகாம்பிகை - திருக்கோடிக்கா 
ஸ்ரீ கற்பகவல்லி - திருமயிலை 
சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராச தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நிதயம் உள்ளத்தில் துதிக்கௌம் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம் அழகுபுகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகுநல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வளிப்பாய்
சுகிர்தகுணசாலி பரிபாலி அநுகூலி திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் தாய் நீ அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில்வாழ்
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..
-: அபிராமிபட்டர் :-  

ஸ்ரீ ரங்கநாயகி -- திரு அரங்கம் 
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - உறையூர்
ஸ்ரீ பெருந்தேவித்தாயார் - திருக்காஞ்சி
ஸ்ரீ அலர்மேல்மங்கை 
ஸ்ரீ ஆண்டாள்
வடதிசைக் காவல் விசாலாட்சி - என்றும் 
தென் திசைக் காவல் மீனாட்சி
மேல் திசைக் காவல் காமாட்சி - எங்கள்
கீழ்த் திசை வாசலில் மனசாட்சி!..
-: கவியரசர் :- 

மனசாட்சி என்ற ஒன்று நம்மிடையே இருக்கும் வரையில்
தெய்வம் நம்மை விட்டு அகலாதிருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு!..


கீழ்த்திசை வாசல் என்பது நாளின் தொடக்கம்...

ஏனைய திசைகளில் தெய்வம் காவல் இருந்தாலும்
நாம் மனசாட்சிக்குக் காவல் இருத்தல் வேண்டும்...
மனசாட்சி நமக்குக் காவல் இருத்தல் வேண்டும்...


அஃதில்லையேல் - 
வாழும் நாள் எல்லாம் வாழும் நாட்களே அல்ல.. வீழும் நாட்கள்!...

என்ன அண்ணா... கதை விடுகிறீர்கள்!...
மனசாட்சியற்றவர்கள் எல்லாம் மகோன்னதமாக வாழ்கின்றார்களே?..
- என்று, ஆச்சர்யத்துடன் கேட்டால் -

அது வேறு விதமான கணக்கு..
அதைப் பற்றி வேறொரு பொழுதில் பேசுவோம்!...

இன்று நீங்கள் கேட்க இருக்கும் இனிய பாடல் 
இருளும் ஒளியும் என்ற திரைப்படத்திலிருந்து...

பாடல் - கவியரசர்
பாடியவர் - P. சுசிலா
இசை - திரை இசைத் திலகம் K.V. மகாதேவன்...



மங்கலம் வாழ்க..
மனையறம் வாழ்க..

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

வியாழன், ஆகஸ்ட் 15, 2019

வாழ்க பாரதம்

அன்பின் இனிய 
சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!..
= = =

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு!..





ஞானத்திலே பரமோனத்திலே - உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு!..

தீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சின் 
ஈரத்திலே உபகாரத்திலே
சாரத்திலேமிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு!..



சியாச்சன் பனிமலை 


நன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்
பன்மையிலே மறத் தன்மையிலே
பொன்மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினிலே உயர் நாடு!..

நாளந்தா
சாரநாத் 
கோனார்க் 
ராணி கிணறு - குஜராத் 
ஹளபேடு - கர்நாடகா 
யாகத்திலே தவவேகத்திலே - தனி
யோகத்திலே பல போகத்திலே
ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் - தம்
அருளினிலே உயர் நாடு!..

கல்லணை 
எல்லோரா 
மாமல்லபுரம் 
சித்தன்னவாசல் 


ஆற்றினிலே சுனை ஊற்றினிலே - தென்றல்
காற்றினிலே மலைப் பேற்றினிலே
ஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி
இனத்திலே உயர் நாடு!..




ஒடிசி 
அஸ்ஸாம் 
வண்மையிலே உளத் திண்மையிலே - மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே உயர் நாடு!..



பாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன் 
புதல்வர் இந்நினைவகற்றாதீர்!..
-: மகாகவி பாரதியார் :-


வாழ்க சுதந்திரம்
வந்தேமாதரம்!..  
***