நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

அபிராமவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபிராமவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 31, 2025

மணியே

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
வெள்ளிக்கிழமை


மணியே மணியின் ஒளியே  ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெரு விருந்தே 
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.. 24
-: அபிராமி பட்டர் :-


உணர்ச்சி மயமான

காணொளிக்கு நன்றி


பாடலின் வரிகள் தெரியும்.. 
எனினும்
 நன்றி: ஸ்ரீராம்..

பாடல் கவியரசர்
இசை K.V. மகாதேவன்

சொல்லடி அபிராமி

சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ

பதில் சொல்லடி அபிராமி..

நில்லடி முன்னாலே முழு
நிலவினைக் காட்டு 
உன் கண்ணாலே 
சொல்லடி அபிராமி..

பல்லுயிரும் படை த்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ

நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 
நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ 

இந்த சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ..

சொல்லடி அபிராமி..

வாராயோ 
ஒரு பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ..

வானம் இடிபடவும்
பூமி பொடி படவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே 

கொடிகள் ஆட 
முடிகள் ஆட குடிபடை 
எழுந்தாட வரும் கலை அழகே

பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர
மத்தளமும் சத்தமிட
வாராயோ ஒரு
பதில் கூறாயோ 
நிலவென வாராயோ 
அருள் மழை தாராயோ

செங்கயல் வண்டு
கலின் கலின் என்று 
ஜெயம் ஜெயம் என்றாட 
இடை சங்கதம் என்று 
சிலம்பு புலம்பொடு 
தண்டை கலந்தாட 

இரு கொங்கை கொடும் பகை வென்றனம் 
என்று குழைந்து குழைந்தாட

மலர் பங்கயமே 
உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட 
விரைந்து வாராயோ 
எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி 
கண்களில் தெரிகின்றாள் 
கண்கள் சிவந்திடும் வண்ணம் 
எழுந்தொரு காட்சியும் தருகின்றாள்

வாழிய மகன் இவன் வாழிய 
என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் 

ஓம் சக்தி ஓம்
**

வெள்ளி, மே 16, 2025

சக்தி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 2
வெள்ளிக்கிழமை


எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கே நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
- பாவேந்தர் -

ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

புதன், நவம்பர் 01, 2023

கழுபிணி இலாத..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 15
  புதன் கிழமை

மிகச் சிறந்த
திருப்பதிகங்கம் .


கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணி இலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!..


திருப்பாற்கடலில்  உறங்காமல் உறங்குகின்ற மாயனாகிய ஸ்ரீ ஹரி பரந்தாமனின் தங்கையானவளே..

திருக்கடவூரில் கோயில் கொண்டு,  தொண்டருக்கெல்லாம் தொண்டராய்த் திகழும் அமுதீசரின் திருமேனியில் இடங்கொண்டு விளங்குகின்றவளே அபிராமவல்லி!..


உருக்குலைந்து விடாத கல்வியையும் 
குறைவிலாத வயதையும் 
கள்ளங்கபடமற்ற  நட்பினையும் குறையாத வளத்தினையும் நிறைவான இளமையையும் 
நோய் நொடியிலாத  உடலையும் 

தளராத  மனதினையும் 
அன்பு நிறைந்த மனைவியையும் 
கடமையில் இருந்து தவறாத நன்மக்கட் பேற்றையும் 
குறையாத புகழினையும் 
வாக்கு தவறாத குணத்தையும் 
தடையற்ற கொடையினையும்

தொலைதல் இல்லாத செல்வத்தையும் 
நீதி நெறி தவறாத நிலையையும் 
எவ்வித துன்பமும் இல்லாத வாழ்வினையும் 

இவற்றுக்கு மேல்  -

உனது பாதங்களில்  அன்பினையும் தந்து எமக்கு அருள் புரிவாயாக!..
*

நேரிடையான பொருள். ஆயினும்
பதினாறு பேறுகளையும் குறித்து 
வேறொரு பதிவில் விரிவாகப் பேசுவோம்..
**
ஓம் சக்தி ஓம் 

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, ஆகஸ்ட் 11, 2023

ஆடி வெள்ளி 4


  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 26
வெள்ளிக்கிழமை


இன்று
ஆடி மாதத்தின்
நிறை வெள்ளி


சகல செல்வங்களும் தரும் இமய கிரிராச தனயை
      மாதேவி நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
      துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோய் இன்மை கல்வி தன தானியம்
      அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
      துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்து அருளி நீ சுக ஆனந்த
     வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரி பாலி அநுகூலி
     திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாதோ மகிமை வளர் திருக்
     கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
     சிவசாமி மகிழ்வாமி  அபிராமி உமையே!.. (11)
-: அபிராமி பதிகம் :-

ஸ்ரீ பிரஹந்நாயகி தஞ்சை
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத் தங்கச்சியே.. 61


தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69


தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே..73

ஸ்ரீ வராஹி தஞ்சை
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. 77

ஸ்ரீ மூகாம்பிகை

உடையாளை ஒல்கு செம்பட்டு 
உடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு 
அடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் 
இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் 
படையாவண்ணம் பார்த்திருமே.. 84


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.. 101
-: அபிராமி அந்தாதி :-

அனைவருக்கும் 
அன்பின் வணக்கம்..
நன்றி.. நன்றி..

அபிராமவல்லி பொற்பதங்கள் 
போற்றி.. போற்றி..

ஓம் சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி 
ஓம்
***

சனி, ஜனவரி 21, 2023

நிலவு வந்த நேரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 7
  சனிக்கிழமை
தை மாதத்தின் அமாவாசை
**

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன்பு, இதே  -  தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (பொய்யும் புரட்டும்) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

அதே சமயம் - அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


" என்னவாம்!?.. "

" நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!.. "

" யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி.. ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..  "

" அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிண்டார்!.. "

" யார் கிட்டே!.. "

" மகராஜா கிட்டே!.. "

" என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு.. "

" தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்.. "

" .. ம்!.. "

" கோயிலுக்கு வந்தவர் .. கோயிலுக்குள்ள நம்ம சுப்ரமணிய குருக்கள் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்துட்டார்.. "

" அடடே!.. "


" நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. "

" ராஜாவே அவரைப் பார்த்து, 
குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி.. ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி இன்னிக்கு பௌர்ணமி.. ன்னு உளறிட்டார்!.. "

" அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. "

" அப்றம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமி.. ன்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

குருக்களும் - சர்தான்..போய்யா..  நிலா வரும்!.. அப்டி.. ன்னுட்டார்.. "

" கடுப்பான ராஜா.. இன்னிக்கு சாயங்காலம் நிலா வரல்லே... ன்னா.. உன்னைய நெருப்புல போட்டு வறுத்துடுவேன்.. னுட்டார்.. "

" அடடா!.. " 

" அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. "


" அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!. கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சோமா..  ரெண்டு ஸ்லோகத்த சொன்னோமா.. புளியோதரய.. வாங்கிண்ட்டு போனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. "

" சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!.. "

" யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு?.. இவனோட என்ன சேர்த்தி!..ன்னு  புலம்பிண்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவா?.. நீரே சொல்லும்!.. "

" அதுவும் சரிதான்!.. இருந்தாலும்.. "

" ஓய்!.. நீர் அவருக்காக இரக்கப்படுறீரா?.. 
கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து - நீ அழகா இருக்கே.. ன்னு சொல்லலை.. ந்னாலும் 

நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொல்லலாமா!?.. நம்ம ஊர் பொண்களுக்கு கோவம் வருமா.. வராதா?.. "

" வரும் தான்.. ஆனாலும் பாவம் யா.. நம்ம குருக்கள்!.. "

" நீர் வேறே...  ராஜாவுக்கு முன்னால உளறிட்டமே.. அப்படி.. ன்னு ஒரு வருத்தம் கூட குருக்கள்..கிட்ட இல்லை.. தெரியுமோ?.. ''

" அப்படியா!.. "


" என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படி.. ன்னு ஒரே வறட்டு வாதம்.. அபிராமி அம்பாளா இவர்க்கிட்ட வந்து சொல்லச் சொன்னா?.. இன்னிக்கு பௌர்ணமி.. ன்னு!.. "

" சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?.. "

" வாயை வெச்சுண்டு சும்மா இருக்கலை.. அவரோட முடிவை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் என்னைக் காப்பாத்துவா.. ன்னு இன்னமும் ஒளறிண்டு இருக்கார்.. " 

" கீழே நெருப்பை மூட்டி மேலே ஊஞ்சல் கட்டி தொங்க விட்ருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. நிலவே முகங் காட்டு.. ன்னு, பாட்டு பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. "

" நெருப்பு மேலே நின்னு பாட்டா!?.. "

" ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்... "

" இதெல்லாம் நமக்குப் புரியாது.. தெளிவா சொல்லுமையா.. "

" ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்.. இப்ப புரியுதா!.. "

" புரியுது.. புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?.. "

" யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போயிண்டிருக்கேன்!.. "

" அப்போ.. ஸ்வாமி தரிசனத்துக்கு இல்லையா?.. "

" அதெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!.. "

" அப்போ... நானும் வர்றேன்!.. என்ன தான் நடக்குது.. ன்னு பாக்கணும்!.. "

" ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!.. "

" ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்.. 
முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!.. "

" இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு!.. ஊரே கூடி நிக்குது பார்.. முதல்ல பாட்டைக் கவனி .. "

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

" கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர் தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள.. சொல்றார்!.. 
அட.. ஏன் மேல இடிக்கிறே!.. கண் தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலா இருக்குறப்ப!.. "

" நிலாவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. நீயும் பைத்யம் ஆயிட்டயா!.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!.. "

" என்னய்யா உளர்றே!.. நிலவு இல்லேன்னா இவ்ளோ  வெளிச்சம் எப்படி வரும்!?.. " 

" ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா!.. "

" என்னா இது?.. அதிசயமா இருக்கு.. நம்பவே முடியலயே.. இப்படியும் நடக்குமா!.. "

" நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள் தான்யா!.. பாட்டுப் பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!.. "

" இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் .. இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்ப முடியலயே!.. "


"கோயில் ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலை.. இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!.. "

" அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!.. "

" நாம தான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. அங்கே பார்.. மஹாராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுண்டு ... என்னது.. அபிராமி பட்டர்.. ன்னு பட்டயம்.. அஞ்சு ஊர் மான்யமா!. சர்தான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!.. "

" இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. கல்லு மனசெல்லாம கரையுதே!.. "

ஸ்ரீ அபிராமவல்லி
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை 
ஒளிர்மதிச் செஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை 
தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை 
இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

" பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு இந்த ஜென்மத்திலயே நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!.." 

" என்னய்யா.. கண்ணுல.. "

" ஆனந்த கண்ணீர்..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. 
உங்கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. "

" நாம எல்லாம் சுப்ரமண்ய குருக்கள அவதூறாப் பேசியும், 
அவர் நமக்கும் அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்.. ன்னா..  அவர் தான்யா மனுசன்.. "

" உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!.."

" நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனியும்.. "


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

" கேட்டீரா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. "

" வாரும்.. நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!.."

" எனக்குந்தான்!.. "
**
அபிராமவல்லியின் நாடகம் இனிதே நிறைவுறுகின்றது..
***
அன்பின் நண்பர்களுக்கு
2014 ல் வெளியான பதிவினை மீண்டும் வெளியிட்டுள்ளேன்..
நன்றி..
*
அபிராமபட்டர் வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-
***

செவ்வாய், ஜனவரி 16, 2018

நிலவே.. முகங்காட்டு..

இன்று தை மாதத்தின் அமாவாசை.

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன், இதே  -  தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் பரபரப்பு.

 அதே சமயம் அழுத்தமான மௌனம். என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


என்னவாம்!?..

நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..

யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..

அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..

யார் கிட்டே!..

மகராஜா கிட்டே!..

என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..

தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்...

.. ம்!..

கோயிலுக்கு வந்தவர் .. கோயிலுக்குள்ள நம்ம சுப்ரமணிய குருக்கள் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..

அடடே!..


நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. 

ராஜாவே அவரைப் பார்த்து, 
குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், 

அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி இன்னிக்கு பௌர்ணமின்னு உளறிட்டார்!..

அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!..

அப்பறம் என்ன.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க...

குருக்களும் - சர்தான்..போய்யா..  நிலா வரும்!... அப்படின்னுட்டார்...

ராஜா கடுப்பாயிட்டார்.. இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லே... ன்னா.. உன்னைய நெருப்புல போட்டு வறுத்துடுவேன்....னுட்டார்.. 

ஐயையோ!..

அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!..


அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. 

சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..

யார் பேசுவா!.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீரே சொல்லும்!..

அதுவும் சரிதான்!... இருந்தாலும்...

ஓய்!.. நீர் அவருக்காக இரக்கப்படுறீரா?.. 
கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து -

நீ வராஹி மாதிரி இருக்கே.. 
நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..

வரும் தான்... ஆனாலும் பாவம்... நம்ம குருக்கள்!..

நீர் வேறே...  ராஜாவுக்கு முன்னாலே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லை .. தெரியுமா?.. ''

அப்படியா!..


என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அபிராமி அம்பாளா இவர்க்கிட்ட வந்து சொல்லச் சொன்னா?.. இன்னிக்கு பௌர்ணமி...ன்னு!

சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..

வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கலை.. அதனால முடிவை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு இன்னமும் சொல்லிட்டு இருக்கார். 

கீழே நெருப்பை மூட்டி மேலே ஊஞ்சல் கட்டி தொங்க விட்டிருக்காங்க.. 
அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. 
நிலவே முகங் காட்டு..ன்னு பாட்டு பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. 

நெருப்பு மேலே பாட்டா!?.. 

ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்....

இதெல்லாம் நமக்குப் புரியாது.. தெளிவா சொல்லு..

ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. 

புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..

யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..

அப்போ.. சாமி கும்பிட இல்லையா?..

அதெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..

அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..

ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...

ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... 
முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..

இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. 

ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி..

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள! ... 

அட.. ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலா இருக்குறப்ப!...

நிலாவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..

என்னய்யா உளர்றே!.. நிலவு இல்லேன்னா இவ்வளவு வெளிச்சம் எப்படி வரும்!?.. 
ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. அது .. வானத்து.. மேலே!..

என்னா இது?.. அதிசயமா இருக்கு.. நம்பவே முடியலயே.. இப்படியும் நடக்குமா!.. 

நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..

இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியல!...


கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசைன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..

அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..

நாம தான் தப்பு கணக்கு போட்டுட்டோம்.. அங்கே பார்.. மஹாராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..

இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே...

ஸ்ரீ அபிராமவல்லி
உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..

என்னய்யா.. கண்ணுல ... 

ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!.. 
உங்கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!..

நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்....

உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'

நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

கேட்டீரா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்..

வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை சொல்லுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..

எனக்குந்தான்!..
***
அன்பின் நண்பர்களுக்கு
இது முந்தைய ஆண்டின் பதிவு..
அவசியமும் அவசரமும் கருதி
மீண்டும் வெளியிட்டுள்ளேன்..
நன்றி..
***

அபிராம பட்டர் வாழ்க!..

அபிராமவல்லி வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-