நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 31, 2012

திருப்பாவை - 16


ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 16

thanjavur14
மணிக்கதவம் தாள் திறவாய்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்னே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர்  ம்பாவாய். 


எங்களுக்குத் தலைவனாய் நின்ு - எல்லித  நன்கையும் த்ு வும் பெருந்தகையாளன் நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவர்கே!...  

ங்கக் கொடிகள் கட்டப்பட்டுள்ள ோர வாயி்லைக் காப்பவர்களே!...

ிக் கின் ாள் நீக்கித் திறந்து விடுங்கள்!

நென்னலே வாய் நேர்ந்தான் மணிவண்ணன்
ஆயர் பாடியின் செல்வச்சிறுமியரான எங்களுக்குன்புப் பிசினை - நோன்புப் பறையைத் தருகிறேன் -  என் மாயோன் மணி வண்ணன் நேற்றே எமக்கு வாக்கு அளித்து விட்டான் !...

நாங்களும்  - மார்கழி நீராடி  புறத் தூய்மையுடனும்,   மாதவனைப் பாடி  அகத் தூய்மையுடனும் வந்திருக்கின்றோம்! 

நாங்கள் பெற்ற பெரும் பயனை அனைவரும் பெறும்படிக்கு  - மற்றவரும் விழித்து எழ, பள்ளி எழுச்சி பாடி வந்திருக்கின்றோம்!

அம்மானே! ... முதன் முதலில்  நோன்பு நோற்று எங்கள் நெஞ்சம் நிலைபெறும் வண்ணம் நெடுவாயில் தேடி வந்திருக்கின்றோம்! ... அதனை மறுத்து - 

எங்கள் மனம் நோகும்படியாக ஏதேனும்  சொல்லி விடாதீர்கள்!.

தயவு செய்து - தாள் நீக்கி, திருக்கதவினைத்  திறந்தருளுங்கள்!...
நன்றி - ரதி, தேவி

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அஞ்சலி

அஞ்சலி 

deepam
தலை நகர் - புது தில்லியில்  ஆறு கொடியவர்களால் வன்கொடுமைக்கு ஆளான 23 வயது மருத்துவ மாணவி உயிர் வாழப் போராடி - மாண்டாள்..

துவாரகாவில் ரகசிய இறுதிச்சடங்கு. உடல் தகனம் செய்யப்பட்டது. 


வன்கொடுமைக்கு  ஆளான  23 வயது  மருத்துவ மாணவி உயிர் வாழ வேண்டி 13 நாட்கள் போராடி - ஓய்ந்து - உயிர் ஒடுங்கினாள்....
அந்த இளம் பெண்ணின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் . என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? ...மிகவும்  வருத்தம் தரும் செய்தி இது....

இப்படி எரியும் நெருப்பில் இடுவதற்காகவா.... இத்தனை காலம் பேணி வளர்த்தார்கள்?.....சிதையின் நெருப்பு அணைந்து விடலாம்!.... பெற்றவர்கள் வயிற்றில்  எரிகிறதே நெருப்பு!....

கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே பெண்ணை பெற்ற தகப்பனும் தாயும் தீயில் நிற்பது போல  இருக்கிறார்கள்.. நெருப்பை வயிற்றில் கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிக் கொண்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு எந்தவித தண்டனை அளித்தாலும் அந்த தண்டனை மட்டுமே  தீர்வாகிவிடாது.

தனி மனித ஒழுக்கம் பேணிக் காக்கப்பட வேண்டியது அவசியம்...

''நேற்று - இன்று - நாளை'' என பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இளம் பெண்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு இளைஞனும் சக இளம் பெண்களை சகோதரிகளாக பாவித்துப் பழக வேண்டியது அவசியம்... பெண்ணைத் தாயாக சகோதரியாக மகளாக பாவித்துப் போற்றிக் கொண்டாடிய மண் இது.

ஈனர்கள் வெளியேற்றிய நாற்ற, சீர்கேடுகள் கலாச்சாரம் நாகரிகம் என்ற பெயர்களில் இங்கும் பரவியதால் - பரப்பப் பட்டதால் - பரிதவித்து நிற்கிறது - பண்பாடு மிக்க பாரதம்...
 
அனாவசியமாக இளம் பெண்கள் இரவில் தக்க பாதுகாப்பு இன்றி வெளியே வருவதில் உள்ள சிக்கல்களை அமைதியான முறையில் சிந்திக்க வேண்டியது அவசியம்...

நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத் தரவில்லை இன்றைய கல்வி நிலையங்கள்.. பணம் சம்பாதிப்பதே - இருதரப்பினருக்கும் லட்சியமாகி விட்டது. ஆசிரியர்களோ , கல்வி நிறுவனங்களோ - பிள்ளைகளின் சமுதாய ஒழுக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதில்லை...

வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களை மாசு படுத்துவதற்கே - இன்றைய  ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இயங்குகின்றன...இதிலிருந்தெல்லாம் மீண்டு பிள்ளைகள் நல்லபடியாக வளர்வது பெரும்பாடுதான்!....

பெற்றோர்களும் பிள்ளைகளை ஆணாகட்டும்... பெண்ணாகட்டும்... நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

''தீதும் நன்றும் பிறர் தர வாரா...''

இது மாதிரியான  கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கட்டும்.. தவிரவும்  சட்டங்களும்  நீதியும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது. இதுவே தருணமாக அமையட்டும்.

உடல் வந்த ஒரு மணி நேரத்திற்குள்  தகனம் செய்யப்பட்டது - என செய்தித் தாள்கள் கூறுகின்றன. நீதி கேட்டுப் போராடும் இளைஞர்களின் மனநிலையினை எண்ணி அரசு அச்சப்படுகிறது போலும்...

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல்
பைங்கூழ் களைகட்டதனொடு நேர்
                                                   - திருக்குறள்..

துஷ்டர்களை ஒடுக்கத் தெரியாத, இயலாத அரசு அமைப்புகள் நிலைத்து நின்றதாக சரித்திரம் இல்லை.

நீரில் அஸ்தி  கரைவதற்குள் கொடியவர்களுக்கு அதிக பட்ச தண்டனையை நிறைவேற்ற வேண்டும்...

கொடியவர்களின் அஸ்தி நீரில் கரையும் வரையில்,

அந்த இளம் பெண்ணின் அஸ்தி கரைவதற்கு வாய்ப்பில்லை.

திருப்பாவை - 15


ஆண்டாள் அருளிய ிருப்பாவ 
ிருப்பாசுரம் - 15

thanjavur14
வல்லானையைக் கொன்ற வல்லான்
எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்ு  அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்!
வல்லை!. உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக!
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்ு  எண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலர்ம்பாவாய்.  


எல்லே!...இளங்கிளியே
எலே... இளம் கிளியே! இன்னுமா தூங்குகின்றாய்?....(எலே - ெல்லத் தமிழ்)

சில்-லுன்னு அழைக்கீர்கள்!....வருகிறேன்!...ந்ிட்ேன்!.... 
ஏய்!...நீ பெரியஆளு தான்!... ற்கு முன் ொன்னெல்லாம் ீ அறியாட்டாயா?...
ஆ! நீங்கும்  ன்னை  மிிய ..... பெரிய....ஆளங்கான்! ....

ய்!.. நீ சக்கிரம் எழுந்ு  வர மாட்ாயா!....

உங்களுக்கென்ன...வேறு வேலை இல்!...  சரி... சி... எல்லாரும் வந்து விட்டார்களா?...

எல்லாரும் வந்ே!... வந்து நீயே எண்ணிக் ொள்!... (அப்பியாவு நீ வெளியே வுகிறாயா... பார்க்காம்!....)

இளங்கிளியே! எங்கள் ோழ.!....ம்சன் ன் மஏவி விட்டுவாபீடம் என்னும் மான அழித்ன் !... 

த்ிற்கும்ாற்றாரிடம் ு மாற்றோ  அந்த  மாற்றத்த் ொலத்ஒழிப்பன் !....

அந்த் ூயை  - மாயைப்ாடிப்  பிட  வாராய் ....எம் பாவாய்!....
நன்றி - ரதி, தேவி

சனி, டிசம்பர் 29, 2012

திருப்பாவை - 14


ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 14
thanjavur14
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல்பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!  


வாய் நெகிழ்ந்த செங்கழுநீர்
எம் பாவாய்!.....உங்கள் வீட்ின் பின்பம், புழைக்கடைத் தோட்டத்தில் உள்ள சிறு குளத்தில் - சூரியனின் வருகையினை எதிர் நோக்கி செந்தாமரை மலர்கள் மலரத் தொடங்கிவிட்டன.
ஆம்பல் வாய் கூம்பின
நேற்றைய இரவில் பூத்த ஆம்பல் மலர்களோ கூம்பி விட்டன....
செங்கல் பொடிக்கூறைத் தவத்தவர்
ங்ாவியினைத் தரித்தபடி  தூய தவத்தினை மேற்கொண்டுள்ள  தவசிகள் - இளங்காலைப் பொழுதில் நீராடி முடித்து - தங்கள் திருக்கோயிலில் நடைதிறந்து நித்ய வழிபாடுகளை  - தூய வெண்சங்கு முழக்கத்துடன்  மேற்கொள்வதற்கு விரைகின்றனர்..

''நான் வந்ு உங்கையெல்லாம் எழுப்புகிறேன்'' - என்று நேற்று எம்மிடம் கூறினாய! நீ ஒற்றைச் சொல் உடையவள் போல என்று, நாங்களும் உன் வார்த்தைகளை உண்மை என நம்பினோம்..

ஆனால்... நங்காய்!.... நடந்ததென்ன?.... 

உனக்கு வெட்கமாக இல்லையா?....இப்படிக் கிடந்து உறங்குவதற்கு!.தித்திக்கத் தித்திக்கப் பேசும் இதழ்களால் பொய் பேசினையே!...

நங்காய்! எழுந்திராய்!... நாணம் இல்லாதவளே! எழுந்திரு!.....ஞ்சன்னியம் எும் சங்ினையும்  ர்சம் எனும் சக்கத்ையும் ஏந்ி ''சம்'' என்றன்னைச் சார்ந்ர்  ம் ுயங்கக்  கன்,

ள்ளல் எனாரி வாரிக் கொடுப்பற்கும், ல்லுரர் ம் கொடுமையினின்று  ம் மக்கைக் காப்பற்கும் என - வலிமையான கங்களை உடையவன்  நம் பெருமான்

அன்புக்கு அன்பான ஐயை, அண்டினோர்க்கு அரை, ாமை மர் போன்ற ிருவிழிகை உடையத்  - பாடிப் பரவிட  எழுந்திராய்!...
நன்றி - ரதி, தேவி

வெள்ளி, டிசம்பர் 28, 2012

திருவெம்பாவை - 10

 மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

thanjavur14
உன் கையில் பிள்ளை உனக்கே  அடைக்கலம்
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்
றங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் - 19

எங்கள் பெருமானே! ''உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்'' என்று  காலகாலமாக வழங்கி வரும் பழமொழியை - எங்கள் அச்சத்தால் மீண்டும் கூறுகின்றோம். இந்த வேளையில் உன்னிடம் ஒரு வரத்தினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம். தந்தருள்வாயாக.

எம் கொங்கைகள் நின் அன்பர் தம் தோள்களைத் தழுவித் திளைத்திருக்கவும் எம் கைகள் உனக்கே பணி செய்து மகிழ்ந்திருக்கவும், அல்லும் பகலும் எம் கண்கள் உன்னை மட்டுமே பார்த்துக் களித்திருக்கவும் ஆகிய பெரும் பரிசினை இப்பூவுலகில் வாழும் வரைக்கும் - 

எங்கள் அரசே! எங்களுக்கு நீ வழங்கி அருள்வாய் எனில் - சுட்டெரிக்கும் சூரியன் எந்தத் திக்கில் உதித்தால் எங்களுக்கு என்ன?  -  என்று எம் பாவாய்!... நீராடுவோமாக!...

thanjavur14
தென்னாடுடைய சிவனே போற்றி
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர்  எம்பாவாய் - 20

எல்லாவற்றுக்கும் ஆதியாகி அருளும் நின் -  பாதமலர்கள் போற்றி!
எல்லாவற்றுக்கும் அந்தமாகி அருளும் நின்  - செந்தளிர் பாதங்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் தோன்றுதற்குக் காரணமான பொற்பாதங்கள் போற்றி!
எல்லா உயிர்களுக்கும் சுக போகங்களை அருளும் பூங்கழல்கள் போற்றி! 

எல்லா உயிர்களும் முடிவு எய்தி அடைக்கலமாகின்ற இணையடிகள் போற்றி!
திருமாலும், பிரமனும் காணமுடியாத திருவடித் தாமரைகள் போற்றி! 

நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற பொன்மலர் பாதங்கள் போற்றி!
போற்றி! போற்றி! என - நாம் இறைவனைப் போற்றி வணங்கி, எம் பாவாய்!...  மார்கழி நீராடுவோமாக!...
குருஅருளும் திருஅருளும் கூடி நிற்க இந்த அளவில் மாணிக்கவாசகப்பெருமான் அருளிய திருவெம்பாவை நிறைவடைகின்றது.
திருச்சிற்றம்பலம்

திருப்பாவை - 13

ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 13

thanjavur14
புள்ளின் வாய் கீண்ட கோகுலச் செல்வன்
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள்  எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும்சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர்  எம்பாவாய்!.


எம் பாவாய்!....இது நியாயமா...உனக்கு!....

ஒரு கொக்கைப் போல வந்து - கொடுமை செய்ய முயன்ற அரக்கனை  - வாயைப்  பிளந்து - அழித்து ஒழித்தவன்  கண்ணன்.

அரக்கனைக் கிள்ளிக் களைந்தவன்
மீண்டும் நெடிய பாம்பென வந்த அகாசுரனையும்  - பயிர்களின் ஊடாக களைகளைக்  கிள்ளுவதைப் போல கிள்ளி அகற்றி அழித்தவன். 

அவனுடைய இணையில்லா திருப்புகழினைப் பாடிக் கொண்டு பெண் பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்குச் சென்று விட்டனர்.. 

விடியலுக்கு முன் கீழ்வானில் வெள்ளி முளைத்துத் தோன்ற, வியாழனும் தன் வேலை முடிந்தது என்று கண்களிலிருந்து மறைகின்றது.  எழுந்து வந்து  அந்த அற்புதத்தினைக் காண்!...

உறங்கிக் கிடந்த பறவைகள் எல்லாம் பாடித் திரிய தொடங்கி விட்டன. எழுந்து வந்து பறவைகளின் இன்னிசையைக் கேள்!...

மலர்ந்தும் மலராத மலர் போன்ற மலர் விழியாளே!... குளிர்ந்த நீரில் கூடிக்  குடைந்து  - நீராடிக் குதூகலிக்காமல் - இன்னும் உறங்கிக் கிடக்கின்றாயே!....

நல்ல நாளாகிய இன்றேனும் பொய்த் தூக்கத்தைத் தவிர்த்து எழுந்து வா! உன் கள்ளத்தனம் போதும்.  

நீரொடு நீர் கலந்தாற்போல்  நாம் நீராடச் செல்வோம்... வா!...
நன்றி - ரதி, தேவி

வியாழன், டிசம்பர் 27, 2012

திருவாதிரை


சிவ ஆலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதியில், இன்று மார்கழி 12 (27.12.2012) ஆருத்ரா அபிஷேகமும், நாளை (28.12.2012) ஆருத்ரா தரிசன  தீபாராதனையும் நடைபெறும்.
thanjavur
அம்மையே!... அப்பா!... ஒப்பிலா மணியே!...
தமிழகத்தில் ஐந்து திருக்கோயில்கள் - பஞ்ச சபை என்று புகழப்படுகின்றன. அவை:- திருவாலங்காடு - ரத்தினசபை, சிதம்பரம் - பொற்சபை, மதுரை - வெள்ளியம்பலம், திருநெல்வேலி - தாமிரசபை, குற்றாலம்  - சித்திரசபை.

சிதம்பரத்திலும் மற்ற சிவாலயங்களிலும் மார்கழி திருவாதிரையன்று ஆருத்ரா   தரிசனம் மிகச் சிறப்பாக நிகழ்வுறும்.

சித் + அம்பரம் = சிதம்பரம். சித் - அறிவு. அம்பரம் - வெட்டவெளி. நடராஜர் சந்நிதியின் வலப்புறத்தில்  தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. பொதுவாகக் காண முடியாதபடி திரையினால்  மறைக்கப்பட்டிருக்கும். 

நடராஜருக்கு நிகழும் ஆராதனையின் போது திரை விலக்கப்பட்டு தங்க வில்வ மாலைக்கும் ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது? என்று கவனித்தால், ஆகாயம் போன்ற சித்திரம் தான் தெரியும். 

தில்லை திருச்சிற்றம்பலம்
இறைவன் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு முதலும் முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதையே இது குறிக்கிறது. எனவே பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலம் ஆகும்.

திருவாதிரை அன்று நடராஜருக்கு நிவேதனம் களி. 
திருவாதிரைக் களி என்றே பிரசித்தம். 

தில்லை நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது. ஏன்? 

தில்லையில் - சேந்தனார் என்னும் சிவ பக்தர்  தினமும்  எவருக்காவது உணவளித்த பிறகு தான், தான் உணவு உண்ணும் வழக்கமுடையவர். இதுதான் சேந்தனார் செய்யும் சிவபூஜை. 

இவருடைய தொழிலோ பட்டுப் போன மரங்களை - மட்டும் -  வெட்டி, விறகாக்கி விற்பது.. ஏழை எனினும் அடியார்களை வரவேற்று உபசரிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை.

சேந்தனாரின் விருந்தோம்பல் பண்பினை பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஈசன்,  திருவுள்ளம் கொண்டார். 

தில்லையில் திருவாதிரைத் திருவிழா நடந்து கொண்டிருந்த போது, திருவிழாவினைக் காண வேண்டி சோழ மன்னர் கண்டராதித்தரும் வந்திருக்கின்றார். 

இவரோ - அனுதினமும் இரவில் சிவ பூஜை செய்து முடித்ததும் சிவபெருமானின் தண்டை  ஒலியினைக் கேட்கும் வரத்தைப் பெற்றிருந்தார். 

அன்று திருவாதிரைக்கு முதல் நாள்.. கடுமையான மழை. 

கண்டராதித்த சோழர் சிவபூஜையை நிறைவு செய்ததும் வழக்கமாகக் கேட்டு இன்புறும் தண்டையின் ஒலி - கேட்காததைக் குறித்து மிகவும் வருத்தமடைந்தவராக உறங்கினார்..

விடிந்த பொழுதில்,  கோயிலைத் திறந்த  அந்தணர்கள் ஈசனின் பட்டாடையிலும் அம்பலத்திலும்  களியின் துணுக்குகளைக் கண்ணுற்றனர். அதிர்ந்து மன்னனிடம் ஒடோடிச் சென்று தகவல் அறிவித்தனர்.. 

மன்னர் மேலும் குழம்பினார். ஆனாலும் திருவாதிரை நிகழ்ச்சிகளைத் தொடர உத்தரவிட்டார். தில்லை திருவிழாக்கோலம் பூண்டது.

எல்லோருக்கும் விடிந்த பொழுது சேந்தனாருக்கும் விடிந்தது., அவர் மனைவியுடன் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார். 

அங்கே எம்பெருமான் எழுந்தருளியிருந்த பெருந்தேர் திருவீதியில் ஓடாது நிற்க - அரசனின் பெரும் படையும் முயற்சித்துத் தோற்றனர்.. ''என்ன பெருங்குற்றம்'' என்று எல்லோரும் திகைத்து நிற்க,

''சேந்தன் பல்லாண்டு பாட தேர் நகரும் '' - என  இறை வாக்கு வானில் ஒலித்தது.

''யார் இந்தப் புண்ணியர்'' - என்று ஊரெல்லாம் உற்று நோக்க,

சேந்தனார், பெருந்தேரின் திருவடத்தினைக் கைகளில் பற்றிக் கொண்டு,

''மன்னுக தில்லை வளர்க நம்  பத்தர்கள் ''

என்று பல்லாண்டு பாட, ஓடாது நின்ற பெருந்தேரின் சக்கரங்கள் மெதுவாக உருளத் தொடங்கின. மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. மகேசன் அறிவித்தான்.

''முதல் நாள் இரவில் சேந்தனின் குடிசையில் தாம் களி உண்டதையும் அதனாலேயே - சோழ மன்னரின்  பூஜையில் தண்டை ஒலி கேட்கவில்லை'' என்பதையும்,

சேந்தனாரும் அவர் மனைவியும் வானிலிருந்து பெய்த பூமழையில் குளிர்ந்தார்கள்.

மன்னவரும் மறையவரும் மற்றவரும் - களி உண்டு களிநடம் புரிந்த நடராஜப் பெருமானின் திருவிளையாடலை அறிந்தார்கள்.  

சேந்தனாரையும் அவரது மனைவியையும் பணிந்தார்கள். போற்றி மகிழ்ந்தார்கள்.

அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது.

திருச்சிற்றம்பலம்

திருவெம்பாவை - 09


மாணிக்கவாசகர் அருளிய 
திருவெம்பாவை

அங்கண் அரசு - அடியோங்கட்கு ஆரமுது
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 17

வாசமிகு மலர்கள் நிறைந்து நறுமணம் கமழும்  கருங்கூந்தற் கன்னி!...

சிவந்த கண்களையுடைய திருமாலிடத்தும், திசை தொறும் முகம் உடைய நான்முகனிடத்தும் மற்றுமுள்ள பிற தேவர்களிடத்தும்,  இந்த உலகில் வேறு எங்கும் உள்ள  மற்றவர்களிடத்தும் இல்லாததாகிய, பேரானந்தம் நம்மிடத்தில் நிறைந்து ததும்பும்படி நம்மைப் பெருமைப்படுத்தியும், 

இவ்வுலகில் நம் போன்ற அடியார் தம் வீடுகள் தோறும் தாமாகவே எழுந்தருளி, செங்கமலப் பொற்பாதங்களைத் தந்து ஆட்கொண்டு அருளியும், அருஞ்செயல் புரியும் ஐயனை -  கருணை பெருகும் திருவிழித் தாமரைகளால் நம்மை ஆளும் அரசனை, அடியவர்களாகிய நமக்கு அமுதமாக விளங்கும் விமலனை, வேந்தனை, பெருமானைப் புகழ்ந்து பாடி, 

நலமும் வளமும் எங்கும் பெருகித் திகழ, தாமரை மலர்கள் நிறைந்த இந்த பொய்கையின் குளிர்ந்த நீரில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....

கண்ணார் அமுதாய் நின்ற அண்ணாமலை
அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோர்  எம்பாவாய் - 18

தோழி! எம் பாவையே!... 

திரு அண்ணாமலையில் குடி கொண்டு விளங்கும் எம்பெருமானது திருவடித் தாமரைகளில் - தேவர்கள் தலை வைத்துப் பணிந்து வணங்கும் போது அவர் தம் மணிமகுடங்களில் பதிந்துள்ள இரத்தினங்கள் ஒளி இழந்துவிடுகின்றன.

அதைப்போல கீழ்த்திசையில் கதிரவன் ஒளிக்கிரணங்களுடன் காண்பவர் கண்கள் நிறையும் படிக்கு தோன்றியதும் - கார் இருள் அகன்றது. இரவில் குளிர்ந்து விளங்கிய தாரகைகள் ஒளி குன்றி - பார்வையினின்றும் மறைகின்றன. 

இந்த இளங்காலைப் பொழுதில் பெண்ணாகவும், ஆணாகவும் பெண்ணும் ஆணும் அற்றதோர் தோற்றமாகவும்,

ஒளி பொருந்தி விளங்குகின்ற  ஆகாயமாகவும் பூவுலகமாகவும் விளங்கி - இவையனைத்தினின்று வேறுபட்ட பொருளாகவும் இலங்கி,

கண் நிறைந்த அமுதமாக நின்ற இறைவனின் திருவடித் தாமரைகளைப் பாடி, 

பொங்கித் ததும்பும் பூம்புனலில் - கை வளைகள் குலுங்கக் குடைந்து - குதூகலமாக நீராடுவாயாக!....
ிருச்சிற்றம்பம்

திருப்பாவை - 12


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 12 
கனைத்த இளங் கற்றெருமை
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்லங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக்க னியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் ம்பாவாய்!


எம் பய்!...நற்செல்வின் ங்ாய்!...

உங்கள் வீட்டஇளம் எருமை  - தன் ன்றின் பியினினத்ு இரங்கியத்ிரத்ில் ன் ெரத்ியில் சுரந்ல் - வங்கக் குடம் இன்றி - அப்பிையில் ொழிும்,  ியினின்று பங்ிிந்ோடியாலால் ொட்டில் முழும் சேறாகி விட்டையும்  எழுந்ு வந்ு பார்!.... 

ார்கி மப் ிப் பொழிவங்கள் ை முழும் பிந்ு விட்டு. உன் வீட்டாசில் நின்று கொண்டிருப்பால் அல்லஇந்க் ி!

( ற்செல்வின் அன்பத் ங்கையே!...உன் பொருட்டும் மாயக் கண்ணின் பொருட்டும் இை எல்லாம் பத்ுக் கொள்கின்றோம்!)
மனத்துக்கினிய இராமன்
ென் இலங்கைக் கோமானாகிய இராவை - அவன்  ய்ால் - சினுற்று அழித்த இராம, மன்னு புகழ் கோசலை தன் ைந், மத்ுக்கியானைப்ாடும் நீ வாய் ிறாமல் கிடக்கின்றாய்!...

இனியும் துயில் நீங்கி எழாமல்..... இதென்ன பேருறக்கம்!....அண்டை அயலார் எல்லாம் விழித்துக் கொண்டார்கள்....  
 
நீ இப்படி உறங்கிக் கிடப்பதை அவர்கள் அறிந்தால் ஏளனம் செய்ய மாட்டார்களா?....

நற்செல்வனின் அன்புத் தங்கையே!...நங்கையே!...எம் பாவாய்!...எழுந்திராய்!...
நன்றி - ரதி, தேவி