நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 25, 2026

அபிஷேக விழா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
 ஞாயிற்றுக்கிழமை

இன்று நிறைநிலா

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்...



முன்னதாக சதயத்தன்று 
தஞ்சையில் நடைபெற்ற திரு முழுக்கு காட்சிகள்..









படங்கள்
 நன்றி
தருமபுர ஆதீனம்..





ஓம் நம சிவாய
***

வெள்ளி, அக்டோபர் 23, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 
 வெள்ளிக்கிழமை

இன்று
சுந்தரர் அருளிச்செய்த
தேவாரம்


தலம் திருமழபாடி

கண்ணாய் ஏழுலகுங்
  கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப்
  பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
  மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
  இனியாரை நினைக்கேனே.
7/24/5


எழுலகுக்கும் கண்ணாகி எல்லா  உயிர்கட்கும் அறிவாகி உலகில் விரும்பப்படுகின்ற பொருள்களாகி மேம்பட்ட இசையாகி இன்தமிழாகி எல்லாப் பொருள்களுக்கும் மேலாகி அதனினும் மேலான ஒளியாக   மண் நிறைந்து பூஞ்சோலைகள் விளங்குகின்ற திருமழபாடியுள் திகழும் மாணிக்கமே.. என் தலைவா..  இப்பொழுது நான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?...

 ஓம் நம சிவாய
***

புதன், அக்டோபர் 21, 2026

சதயம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 4
புதன் கிழமை

சதயப் பெருவிழா


மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழரின்
பிறந்த தினம்..

மாமன்னரின்
பொன்னார் திருவடிகளில் தலைவைத்து வணங்குகின்றோம்...

வாழ்க புகழ்
***

திங்கள், அக்டோபர் 19, 2026

வாழ்க நலம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி 2
திங்கட்கிழமை


 இன்று சரஸ்வதி பூஜை நன்னாள்..
நாளை விஜயதசமி...



இவ்வேளையில் எங்கெங்கும் அறிவு நிலை பெருகி அன்பும் அமைதியும் தவழ எல்லாம் வல்ல அன்னையிடம் வேண்டிக் கொள்வோம்...



தஞ்சை பெரிய கோயில் அம்பாள் அலங்காரம்

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை விஜயதசமி நல்வாழ்த்துகள்...

ஓம் சக்தி  ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

ஞாயிறு, அக்டோபர் 18, 2026

துலாமாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
ஞாயிற்றுக்கிழமை

இன்று துலா மாதப் பிறப்பு... (18/10)

காவிரியாள் தனது மக்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கிச் செல்லும் சீர்மிகு நகர்களுள்  மயிலாடுதுறையும் ஒன்று... இதன் பெயர்களுள் ஒன்று மாயூரம்.

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?..'' - எனும் சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தமானது. 

என்ன காரணம்?...


உமா மகேஸ்வரியாகிய
அம்பிகை மயிலாகத் தோன்றி  சிவபூஜை செய்து இறைவனின் மயூர தாண்டவத்தை இங்கு தான் காணப் பெற்றாள்...

இங்கு தான் காவிரியுடன் கலந்து  கங்கையும் புனிதம் கொண்டாள்..

அந்நாள் ஐப்பசியின் முதல் நாள்... 


அன்று தொட்டு கார்த்திகை  முதல் நாள் வரை இறைவனின் ஆணைப்படி கங்கா தேவி மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் உறைகின்றாள் என்பது ஐதீகம்... 

இந்நேரத்தில் சோழ தேசத்தின் நீர்நிலைகளில் எல்லாம் கங்காதேவி வியாபிக்கின்றாள் என்பர் ஆன்றோர்..

அந்த வகையில் நமது வீட்டிற்குள்ளும் கங்காதேவி வந்திருக்கின்றாள்...

இந்நாட்களில் மயிலாடுதுறை துலா கட்டத்தில் நீராடி - முன்வினை எல்லாம் நீங்கப் பெற்று அம்மையப்பனின் அருள் பெறுவோம்....

கங்கையாள் போற்றி
காவிரியாள் போற்றி..
***

வெள்ளி, அக்டோபர் 16, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர் அருளிச்செய்த தேவாரம்


தலம் மேற்றளி
காஞ்சிபுரம்

செல்வியைப் பாகங் கொண்டார் 
  சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு 
  மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையி லாத 
  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் 
  இலங்குமேற் றளிய னாரே.. 4/43/8


பார்வதி பங்கராய் , முருகனை மகனாகக் கொண்டவராய் மல்லிகை மாலைகளுடன் கொன்றை மலர்களையும் முடி  சூடி
 
சூரியன் விளக்கமுற அவனொளிக்கு உள்ளொளியாய் - கல்வியில் சிறந்த  காஞ்சி மாநகரிலே , மேற்றளியனாராக பெருமான்  விளங்குகின்றார்...

ஓம் நம சிவாய
***

வெள்ளி, அக்டோபர் 09, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை

திருஞானசம்பந்தர் அருளிச்செய்த தேவாரம்


தலம்
திருக்கோளிலி
 (திருக்குவளை)

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே.. 1/62/1

மட மனமே! 
உலகின்  நாள்கள் கழிவதற்கு முன்னரே நீலகண்டனாகிய சிவபெருமானுக்கு அடிமை பூண்டு அவனிடத்து அன்பு செய்வோம். 

பெருமானது திருநாமங்களை காதாரக் கேட்பாயாக. 

அவ்வாறு கேட்பின் நமது சுற்றத்தினரும் கிளைத்து இனிது வாழ்வர். 

துன்பங்கள் நம்மைத் தாக்காதவாறு 
கோள் வினைகளை நீக்கி அருள் புரிகின்ற பெருமான் திருக்கோளிலி என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்..

அவனை உணர்ந்து கொள்வாயாக...

ஓம் நம சிவாய
***

வியாழன், அக்டோபர் 08, 2026

இன்னருள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வியாழக்கிழமை


கடந்த  வியாழனன்று (2/10) காலையில்  ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனத்திற்காக தஞ்சையில் புறப்பட்டு அன்று மதியம் சென்னை வந்தடைந்தோம்..

தாம்பரத்தில் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவின் அதிஷ்டான தரிசனம்... அன்னப்ரசாதம்...

சென்னையில் உறவினர்கள் சேர்ந்து கொண்டனர்..

மாலை 6:30 மணிக்கு சென்னையில்
இருந்து மும்பை விரைவு ரயிலில் பயணித்து வெள்ளிக்கிழமை காலையில் சோலாப்பூரை அடைந்து அங்கிருந்து வேறொரு ரயில் மூலம் ஸ்ரீ பண்டரிபுரத்தைச் சேர்ந்தோம்..

சோலாப்பூரில் இருந்து பண்டரிபுரம்
76 கிமீ ..

கோயிலுக்கு அருகே
சந்திரபாகா நதிக் கரையில் ஸ்ரீ த்வாரகாநாத் மந்திர் மடத்தின் தங்குமிடத்தில் தங்கி சந்திரபாகா நதியில் நீராடி விட்டு ஸ்ரீ சிருங்கேரி  ஸ்ரீ பாரதி தீர்த்த அன்ன கூடத்தில் அன்ன ப்ரசாதம்...

அதன் பின் ஓய்வு..

மறுநாள் சனிக்கிழமை.. 
எங்களுக்கு அனுமதி நேரம் காலை ஏழு மணி...
நீண்ட வரிசையில் சென்று சந்நிதியை அடைந்து
அவனருளால் அவன் திருவடிகளில் தலை வைத்து வணங்கி நின்றோம்...


பண்டரிநாதனின் வலப்புறம் ஸ்ரீ ரகுமாயி சந்நிதி... பிரகாரத்தில் பல சந்நிதிகள்... அவற்றுள் ஸ்ரீ சிவபெருமானின் சந்நிதியும் ஒன்று...

திருக்கோயிலுக்குள் கைத்தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லை..

விட்டல் நாதன் தரிசனம் கண்டபின்
மதியத்தில்  அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. அன்னப்ரசாதம்... 


பண்டரிபுரத்திலிருந்து சுமார் 115 கிமீ தொலைவில் உள்ளது  அக்கல்கோட்...

மூன்று மணியளவில் அக்கல்கோட்டில் இருந்து 65 கிமீ தொலைவில் 
துளஜாபூர்..



சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய  ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்... 

சிறு பெண் பிள்ளைகளை தேவி போல அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து வருகின்றனர்...

பிறகு துளஜாபூரில் இருந்து புறப்பட்டு 45 கிமீ தொலைவில் உள்ள - சோலாப்பூர் 
ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்..  


சுற்றிலும் அகழி சூழ்ந்திருக்க  கோட்டைக்குள்  கோயில் உள்ளது...
அங்கும் அன்ன ப்ரசாதம் வழங்கப்பட்டது..

இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு மறுநாள் இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...

முழங்கால் வலியுடன் நடந்ததும் படிக்கட்டுகள் ஏறி இறங்கியதும் கனவு போல இருக்கின்றன.. 

அனைத்தும் இறையருள்...

படங்கள் நன்றி இணையம்..

விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க...
***

செவ்வாய், அக்டோபர் 06, 2026

அவனருள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 செவ்வாய்க்கிழமை


புரட்டாசி வியாழன்று அதிகாலை தஞ்சையில் புறப்பட்ட நாங்கள் மூன்றாம் கிழமை காலையில்  ஸ்ரீ விட்டல் நாதனின் தரிசனம் இனிதே கண்டோம்..

அவனருளால் அவன் தாள் வணங்கி நின்றோம்... 

மதியத்தில்  அக்கல்கோட் மகானின் அதிஷ்டான தரிசனம்.. 

மூன்று மணியளவில் சோலாப்பூரில் இருந்து 46 கிமீ தொலைவில் உள்ள சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கிய துளஜாபூர் ஸ்ரீ பவானி அன்னை தரிசனம்...

இரவு ஏழு மணியளவில் சோலாப்பூர் ஸ்ரீ சித்தேஸ்வரர் தரிசனம்.. 

அங்கேயே அன்ன ப்ரசாதம்...

இரவு ஒன்பதரை மணியளவில் சோலாப்பூரில் புறப்பட்டு ஞாயிறு இரவு நல்லபடியாக இல்லம் வந்து சேர்ந்தோம்...

ஓம் ஹரி ஓம்

விட்டல விட்டல பாண்டுரங்க...
விட்டல விட்டல பாண்டுரங்க..
***

வெள்ளி, அக்டோபர் 02, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
 வெள்ளிக்கிழமை 


இன்று
சுந்தரர் அருளிச்செய்த தேவாரம்...

நீள நினைந்தடியேன் உமை
  நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண் மடவாள் அவள்
  வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை 
யூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் 
அவை அட்டித் தரப்பணியே..
7/20/1


திருக்கோளிலி தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே, 

வாள் போலுங் கண்களை உடைய எனது இல்லாள் பரவை தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மனம் வருந்தாதபடி குண்டையூரில்  நெல் மூட்டைகள் சிலவற்றைப் பெற்றேன். 

ஆயினும்
அவைகளை அவள்பாற் சேர்ப்பிப்பதற்கு எனது வசம் ஆட்கள் எவரும் இலர்.. 

அடியேன், எப்போதும் உம்மையே நினைத்து வணங்குகின்ற பணியை உடையவன்..

நான் வேறு யாரை வேண்டுவேன்! 

இந்த நெல் மூட்டைகளை ஆரூரில் சேர்ப்பித்து உதவும்படி  எவர்க்கேனும் உத்தரவிட்டு அருள்வீராக..


இதன் பின்
குண்டையூர்க் கிழாரால் சுந்தரர்க்கு வழங்கப்பட்ட நெல் மூட்டைகள் நெல்மலையாய் உயர்ந்து நின்றன..

அன்றிரவு  எம்பெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூத கணங்கள்  சுந்தரரை அணுகி " எமக்கு இங்கு பணி யாது?.." என வினவ,

சுந்தரரும் " இந்நெல்மலையை ஆரூரில் இல்லம் தோறும்  நிறைத்திடுக.." - என்று மொழிந்து அருட் தன்மையில் பொலிந்து நின்றார்...

பூத கணங்களும் அவ்வாறே இல்லங்கள் தோறும் நெல்லை நிரப்பிச் சென்றன...

குண்டையூர் கிழாரிடம் சுந்தரர் நெல் பெற்ற இப்பதிக பாராயணத்தால் இல்லத்தில் வறுமை வாராது என்பது ஆன்றோர் வாக்கு...

இன்றும் இவ்வைபவம் மாசியில் திருவிழாவாக நிகழ்கின்றது..


சுந்தரர் திருவடிகள்  போற்றி

ஓம் நம சிவாய
***