நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஐப்பசி
வெள்ளிக்கிழமை
இன்று
சுந்தரர் அருளிச்செய்த
தேவாரம்
கண்ணாய் ஏழுலகுங்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்றமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.
7/24/5
எழுலகுக்கும் கண்ணாகி எல்லா உயிர்கட்கும் அறிவாகி உலகில் விரும்பப்படுகின்ற பொருள்களாகி மேம்பட்ட இசையாகி இன்தமிழாகி எல்லாப் பொருள்களுக்கும் மேலாகி அதனினும் மேலான ஒளியாக மண் நிறைந்து பூஞ்சோலைகள் விளங்குகின்ற திருமழபாடியுள் திகழும் மாணிக்கமே.. என் தலைவா.. இப்பொழுது நான் உன்னைத் தவிர வேறு யாரை நினைப்பேன் ?...
ஓம் நம சிவாய
***


அருள்வடிவே பரம்பொருள் வடிவே ஆனந்தமே அமுதே.. இறைவா... உமையன்றி யாரைப் பணிவோம் நாங்கள்...
பதிலளிநீக்குஅண்ணா நின்னையல்லால்
நீக்குஇனியாரை நினைக்கேனே.
ஐப்பசி வெள்ளி திருமழபாடி இறைவன் பாடல் பாடி தரிசனம் பெற்றோம்.
பதிலளிநீக்குஓம் சிவாய நமக.
மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா
பொன்னார் மேனியனே பதிகம் நினைவுக்கு வந்து உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. படங்கள் அருமை
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநெல்லை அவர்க்களுக்கு நன்றி
திருமழபாடி பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...
நீக்குநன்றியம்மா