நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தை வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தை வெள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 30, 2026

தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
மூன்றாம் வெள்ளி

ஸ்ரீ வீரமாகாளி
அன்னையின் தரிசனம்






**

இன்று 
காந்திஜி நினைவு தினம்

ஓம் சக்தி ஓம்
***

வெள்ளி, பிப்ரவரி 07, 2025

தை வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை நான்காம்
வெள்ளிக்கிழமை


வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா
வேண்டினும் மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொல்லாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத் தமியேனுக்கு
அருள் புரிந்து சர்வ காலமும் எனைக் காத்தருள வேண்டினேன் சலக் கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே..

எனது இன்னல் இன்னபடி என்று வேறு ஒருவர்க்கு இசைத்திடவும்
அவர்கள் கேட்டு இவ் இன்னல் தீர்த்து உள்ளத்து இரங்கி
நன்மைகள் செயவும் எள் அளவும் முடியாது நின்
உனதம் மருவும் கடைக் கண் அருள் சிறிது செயின் உதவாத
நுண் மணல்களும் ஓங்கு மாற்று உயர் சொர்ண மலை யாகும்
அது அன்றி உயர் அகில புவனங்களைக் கனமுடன் அளித்து
முப்பத்திரண்டு அறங்களும் கவின் பெறச் செய்யும்
நின்னைக் கருது நல்லடியவர்க்கு எளி வந்து சடுதியில்
காத்து ரட்சித்து ஓர்ந்து
வனச நிகர் நின் பாதம் நம்பினேன் வந்தருள் செய்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே..


சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராச தனயை
மா தேவி நின்னைச் சத்யமாய் நித்யம் உள்ளத்தில்
துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம்
அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி
துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ், நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த
வாழ்வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அநு கூலி
திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக் கொணாதோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே..

அபிராமவல்லி போற்றி போற்றி..

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜனவரி 24, 2025

தை வெள்ளி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 11
இரண்டாம்
வெள்ளிக்கிழமை

ஸ்ரீ வராகியம்மன் தஞ்சை

சந்திர சடாதரி  முகுந்த சோதரி! துங்க சலச
லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி! அமலை
ஜெக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்பாஸ்தி ராம்புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..
- : அபிராமி திருப்பதிகம் :-

ஸ்ரீ வடபத்ரகாளியம்மன் தஞ்சை

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி அந்தாதி :-

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, ஜனவரி 17, 2025

தை வெள்ளி 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 4
முதல் வெள்ளிக்கிழமை


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி 
அருள்வாமி அபிராமியே.. 


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே 
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே..
-: அபிராமி பட்டர் :-

என்றென்றும் இதுவே
பிரார்த்தனை

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வெள்ளி, பிப்ரவரி 10, 2023

தை வெள்ளி 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 27
 நான்காவது
வெள்ளிக்கிழமை

அம்பிகையிடம்
பிரார்த்தனை


வஞ்சகக் கொடியோர்கள் நட்பு வேண்டாமலும் மருந்தினுக்கா
வேண்டினும் மறந்தும் ஓர் பொய்ம்மொழி சொலாமலும்
தீமையாம் வழியினில் செல்லாமலும்
விஞ்சு நெஞ்சு அதனில் பொறாமை தரியாமலும் வீண்
வம்பு புரியாமலும் மிக்க பெரியோர்கள் சொலும்
வார்த்தை தள்ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும்
தஞ்சம் என நினது உபய கஞ்சம் துதித்திடத் தமியேனுக்கு
அருள் புரிந்து சர்வ காலமும் எனைக் காத்தருள வேண்டினேன் சலக்கயல்கள் விழியை அனைய
வஞ்சியர் செவ்வாய் நிகரும் வாவி ஆம்பல் மலரும்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!..


பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.. 13


தண்ணளிக் கென்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ
பண் அளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே..15


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள்
வருணச் சங்கலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே.. 21


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.. 41


ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவிஅடங்கக்
காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.. 101
-: அபிராமி பட்டர் :-


ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, பிப்ரவரி 03, 2023

தை வெள்ளி 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 20
 மூன்றாவது
வெள்ளிக்கிழமை

அம்பிகையின் திருப்பெயர்கள் 
பலவும் பயின்று வரும் அற்புதத் திருப்பதிகம் இது..


சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசு
லோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை
ஜெக ஜால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய 
நாரணி அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்தி ராம்புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவுந் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.. 69


தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே.. 73


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி  சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. 77


உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.. 84

பார்க்கும் திசை தொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார் குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே.. 85
-: ஸ்ரீ அபிராமபட்டர் :-
-::-

ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜனவரி 27, 2023

தை வெள்ளி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - தை 13
  இரண்டாவது
வெள்ளிக்கிழமை

அன்னையிடம் ஒரு முறையீடு..


தெரிந்தோ அலாது தெரியாமலோ இவ்வடிமை
செய்திட்ட பிழை இருந்தால் சினம் கொண்டு அது ஓர்
கணக்காக வையாது நின் திருஉளம் இரங்கி மிகவும்
பரிந்து வந்து இனியேனும் பாழ் வினையில் ஆழ்ந்து
இன்னல் படாது நல்வரம் அளித்துப் பாதுகாத்து அருள் செய்ய
வேண்டும் அண்டாண்ட உயிர் பரிவுடன் அளித்த முதல்வி
புரந்தரன் போதன் மாதவன் ஆகியோர்கள் துதி புரியும்
பதாம்புய மலர்ப் புங்கவி புராந்தகி புரந்தரி 
புராதனி புராணி திரிபுவனேசுவரி
மருந்தினும் நயந்த சொல் பைங்கிளி வராகி எழில்
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..


பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சமு தாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே... 5


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத் தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 8


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்ப துன்னை
என்றும் வணங்குவ துன்மலர்த் தாள் எழு தாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே.. 10


கண்ணியது உன்புகழ், கற்பது உன் நாமம்
கசிந்து பத்தி பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்
பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. 12
-: அபிராம பட்டர் :-
-::-
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***


வெள்ளி, பிப்ரவரி 07, 2020

வெள்ளித் திருவிளக்கு 2

இன்று
தை வெள்ளிக்கிழமையாகிய நன்னாளில்
திருமுருகனின் திருப்பெயர் போற்றும்
திருப்புகழ்...


நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமீ நமோநம... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம... பரசூரர்


சேத தண்டவி நோதா நமோநம 
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம... கிரிராஜ

தீப மங்கல ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம... அருள்தாராய்..


ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங் குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையும்... மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை 
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக... வயலூரா


ஆத ரம்பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி... லையிலேகி

ஆதி அந்த உலாஆசு பாடிய 
சேரர் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள்... பெருமாளே!...


கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..
முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்..

இன்றைய பதிவில்
தஞ்சை பெரியகோயில்
திருக்குட முழுக்கினை அடுத்து சந்நிதியில் எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமானுக்கு
நிகழ்த்தப்படும்
திருமுழுக்கு தரிசனம்


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!..
ஃஃஃ

வெள்ளி, ஜனவரி 31, 2020

வெள்ளித் திருவிளக்கு 1

ஒவ்வொரு சொற்களும் தேன் துளிகள்...

இன்னும் சொல்ல வேண்டுமானால்
அமுதத்தில் ஊறிய அருஞ்சுவைக் கனிகள்...

அன்னை அபிராமவல்லியில் அருள் நோக்கினால் 
அன்று அபிராமபட்டரின் திருவாக்கில் உதித்த மாணிக்கங்கள்...

அபிராமபட்டர் அருளிய அபிராமி திருப்பதிகத்தின் திருப்பாடல்கள்
அனைத்தும் தனித்துவமாக விளங்குபவை...

தை மாதத்தின் வெள்ளிக் கிழமை...
மங்கலகரமான நாள்...

நாளும் நமது பிரார்த்தனையாக
அபிராமி திருப்பதிகத்தின் முதற்பாடலாகிய
இந்தத் திருப்பாடல் இருக்கட்டும்... 


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் 
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபானி
அருள்வாமி .. அபிராமியே!...


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியில்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (041)

ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வெள்ளி, பிப்ரவரி 08, 2019

தை வெள்ளி


மங்கலங்கள் அனைத்திலும் மகா மங்கலமானதொரு நாள் இருக்கின்றதெனில் -

அது தை மாதத்தின் நிறைவான வெள்ளிக் கிழமைதான்...

இந்தநாளில் அதிகாலையிலேயே எழுந்து வீட்டினுள் அறைகள் முக்கியமாக சமையலறை மற்றும் சயன அறை எல்லாம் தண்ணீர் விட்டுக் கழுவி சுத்தம் செய்து 

அப்படி இப்படியான துணிகள் பாய், படுக்கை விரிப்பு வகையறாக்களை எல்லாம் துவைத்துப் போட்டு 

தலைவாசலில் கோலமிட்டு நிலைப்படிகளில் பொட்டு வைத்து -

வழிபடும் இடத்தில் குத்து விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கலுடன் தீப தூப ஆராதனைகள் செய்தபோது கிடைத்த நிம்மதியும் சந்தோஷமும் அடுத்து வரும் நாட்களில் ஆரோக்ய வாழ்வினை உறுதி செய்தது...

இதெல்லாம் பாரம்பர்யப் பழக்கங்களாக இருந்த அந்தக் காலம் போல இனி எப்போது வரும் என்று தெரியவில்லை..

அதிலும் நிலை வாசல்படிக்கு வெள்ளிக் கிழமைகளில் தோரண அலங்காரங்களுடன் சிறப்பான பூஜைகள் செய்வதை வழக்கமாகவே கொண்டிருக்கும் குடும்பங்களும் உள்ளன..

வீட்டில் பசுவும் கன்றும் இருந்தால் அவற்றையும் குளிப்பாட்டி பொட்டு வைத்து இன்னும் கோலாகலமாக இருக்கும்...


இந்த தலைவாசல் நிலை உச்சி இருபுறமும் யானைகளுடன் கூடிய மஹாலக்ஷ்மியின் திருவுருவத்துடன் கூடியதாக இருக்கும்..

இப்படி நிலைவாசலின் மேல் பொருத்தப்படும் லக்ஷ்மியின் திருத் தோற்றத்துக்கு ஆதி லக்ஷ்மி என்ற பெயர் சொல்லப்பட்டாலும் இன்னொரு பெயரும் உண்டு... அது -

ஸ்ரீராஜ்ய லக்ஷ்மி..
தஞ்சை பெரிய கோயிலில் மஹாலக்ஷ்மியின் சித்திரம்
இத்திருத்தோற்றத்தை எல்லா சிவாலயங்களிலும் தரிசிக்கலாம்...

சிவாலயத்தின் நிலைப்படிகளின் உச்சியில் கூட இந்தத் தோற்றம் செதுக்கப்பட்டிருக்கும்..

புராணங்களிலும் தோத்திரங்களிலும் ராஜ்ய லக்ஷ்மியின் பேரும் புகழும் காணக் கிடைக்கின்றன..

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் நடத்திய யாகம் ராஜசூய யாகம்..

பாரதத்தின் மன்னர்களுள் குப்தர்கள் லக்ஷ்மியை அதுவும் ராஜலக்ஷ்மியைக் குல தெய்வமாகக் கொண்டாடியிருக்கின்றனர்..

வட பாரதத்தின் மா மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் 
 ஸ்ரீ ஹர்ஷ வர்த்தனர்..இவரது காலம் கி.பி. 600 - 647 ஆகும்..

இவருக்கு ஒரு தங்கை.. அவள் பெயர் ராஜ்யஸ்ரீ..

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
தஞ்சாவூர் கலைப்பாணி..
 
சரி.. இதெல்லாம் இங்கே எதற்கு!?..

17 ஆம் நூற்றாண்டில் ராஜ் என்னும் பெயர் இருந்ததோ ?..

- என்று நேற்றைய பதிவில் நெல்லைத் தமிழன் அவர்களை நோக்கி ஞானனந்த கவியமுதம் அதிரா அவர்கள் தொடுத்த வினாவுக்காக விடைகளே..

அந்தக் காலத்திலேயே
ராஜ்யம் , ராஜ்ய பரிபாலனம், ராஜகுமாரன், ராஜகுமாரி எனும் வார்த்தைகள்
புழங்கியிருக்கின்ற போது

பதினேழாம் நூற்றாண்டில் ஜயராஜ் எனும் பெயர் விசித்திரம் ஆகக் கூடுமா?...

ஸ்ரீ மஹாலக்ஷ்மி
தஞ்சை பெரிய கோயில்.. 
காணும் எல்லாவற்றையும் லக்ஷ்மி ரூபமாகக் காண்பது ஒரு மரபு..

இல்லறத்தில் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் மகாலக்ஷ்மி பிறந்திருக்கிறாள் என்பார்கள்..

வீட்டிற்கு வரும் மணமகளை - மருமகளை மகாலக்ஷ்மியாகப் பாவிப்பது தொன்று தொட்டு வரும் வழக்கம்...

இந்த நாளில் பதிவு ஒன்றினை சமர்ப்பிப்பதற்கு ஆயத்தமாகியபோது நேற்றிரவு இணையம் இயங்கவில்லை..

இன்று காலையில் தளத்திற்கு வந்து -
நேற்றைய பதிவைக் கவனித்தபின் உருவாகிய பதிவுதான் இது...

ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் - மன்னார்குடி.. 
எல்லாரும் எல்லா நலன்களையும் பெற்று வாழ்ந்திட 
இந்நாளில் பிரார்த்தனை செய்வோமாக..

யாதேவி ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

வாழ்க நலம்  
ஃஃஃ 

வெள்ளி, பிப்ரவரி 09, 2018

ஸ்ரீ தேவி தரிசனம்

இன்று வெள்ளிக் கிழமை..

அதுவும் ஹேவிளம்பி வருடத்தின் தை கடைசி வெள்ளி..

அம்மன் கோயில்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் நாள்..

இந்தப் பதிவினை
இன்று காலையில் வெளியாகுமாறு செய்திருக்கவேண்டும்...

மனதில் ஒரு கோளாறு..
அதனால் விளைந்த உளைச்சலில் காலதாமதமாகி விட்டது...

இன்று காலை வேலை முடிந்து திரும்பியதும் 
நித்ய வழிபாட்டுக்குப் பின் - இதோ தங்களுடன்!...

ஸ்ரீ வீரமாகாளியம்மனின் தரிசனம்!..

ஸ்ரீ வீரமாகாளியம்மன் - உற்சவத் திருமேனி
இவளுடைய திருக்கோயில் சுவாமிமலையை அடுத்துள்ள 
நாககுடி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது...

ஸ்ரீவீரமாகாளி அம்மனுக்காக -
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாக கோயில் எழுப்பட்டது...

புதிதாக ஆலயத்தினை எழுப்பிய வேளையில்
திருக்கோயில் கட்டுமானப் பணியில் 
என்னையும் இணைத்துக் கொண்டாள்...

அத்துடன் -
திருமூலத்தானத்தினுள் அவளுடன் திகழும் அம்சங்களுள் 
எனது பங்கினையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டாள்..

அதுமட்டுமல்லாது -
அவளுக்கென பஞ்சலோகத்தில்
உற்சவத் திருமேனியை வார்த்த போதும்
அதில் எனக்கொரு வாய்ப்பினைத் தந்தாள்...

அவளுக்கான யாகபூஜைகளின் போதும் 
திருவிழாக் காலங்களிலும் காவிரியில் இருந்து 
தீர்த்தம் எடுத்து வரும் உரிமையையும்
எனக்கு அளித்து மகிழ்ந்தாள்..

எல்லாவற்றிற்கும் மேலாக -
அவளுடைய வழிபாட்டு முறைகளை வகுத்தபோது
மூலஸ்தானத்தில் அம்பிகையின் திருமேனிக்கு
அபிஷேக அலங்காரங்களை நிகழ்த்தி 
ஆராதனையைச் செய்யும் பெரும் பேற்றினையும் நல்கினாள்...


இப்போது நடந்த கும்பாபிஷேகத்தின் போதும் 
மூலஸ்தான நிலையினை பஞ்சலோகத் தகடுகளால் 
அலங்கரிக்கும் திருப்பணியை எனக்களித்துக் களித்தாள்..

இதற்கெல்லாம் நான் அருகதையுடையவனா?... 

எனில் - இல்லையென்றே சொல்லலாம்..

இருந்தாலும் - மானிடப் பிறப்பில்
கோபமும் தாபமும் குற்றமும் குறைகளும் இருக்கும் தானே!.. 

என் பிள்ளை!.. - என்று,
என் அன்னை என்னையும் ஏற்றுக் கொண்டாள்...

இத்தனைக்கும் நான் என்ன தவம் செய்தேனென்று தெரியவில்லை..

என் பெற்றோரின் தவப்பயனும்
என் முன்னோர்களின் நல்லாசிகளும் அன்றி -
வேறொரு காரணம் இருக்க இயலாது..

இன்றைக்கு எங்கள் முழுக் குடும்பத்திற்கும்
அன்னை துணையாய் நிற்கின்றாள் எனில் அது மிகையில்லை..

சென்ற 2017 ஜூலையில் 
இரண்டாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது...

மண்டலாபிஷேக வைபவத்தின் போது 
காலையில் யாக பூஜையும் மண்டலாபிஷேகமும்
மாலையில் சந்தனக்காப்பு அலங்காரமும் நிகழ்ந்தன..

அம்பிகைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்வித்தவர்
சுவாமிமலை - திரு கணேச சிவாச்சார்யார்..

பதிவிலுள்ள படங்கள் எளியேனால் எடுக்கப்பட்டவை...

இதோ
திருக்கோயில் தரிசனம்..
***
ஸ்ரீ வலம்புரி விநாயகர்





ஸ்ரீ நாக பிரதிஷ்டை



சந்தனக்காப்பு அலங்காரம்
அம்பிகையின் வலப்புறம் ஸ்ரீமதுரை வீரன்.. இடப்புறம் ஸ்ரீகருப்பஸ்வாமி..
பதிவில் முதலாவதாக இருக்கும் படமும்
இதன் கீழுள்ள மூன்று படங்களும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த
சித்திரைத் திருவிழாவின் போது எடுக்கப்பட்டவை..




அவளுக்காக இன்னும் பல - செய்திட ஆசையுண்டு...
அதற்கான அருளையும் பொருளையும் அவளே அருளுவாள்..

ஸ்ரீ வீரமாகாளி 
போற்றி.. போற்றி...

ஓம் சக்தி ஓம்!.. 
***