நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 31, 2020

வெள்ளித் திருவிளக்கு 1

ஒவ்வொரு சொற்களும் தேன் துளிகள்...

இன்னும் சொல்ல வேண்டுமானால்
அமுதத்தில் ஊறிய அருஞ்சுவைக் கனிகள்...

அன்னை அபிராமவல்லியில் அருள் நோக்கினால் 
அன்று அபிராமபட்டரின் திருவாக்கில் உதித்த மாணிக்கங்கள்...

அபிராமபட்டர் அருளிய அபிராமி திருப்பதிகத்தின் திருப்பாடல்கள்
அனைத்தும் தனித்துவமாக விளங்குபவை...

தை மாதத்தின் வெள்ளிக் கிழமை...
மங்கலகரமான நாள்...

நாளும் நமது பிரார்த்தனையாக
அபிராமி திருப்பதிகத்தின் முதற்பாடலாகிய
இந்தத் திருப்பாடல் இருக்கட்டும்... 


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் 
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபானி
அருள்வாமி .. அபிராமியே!...


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியில்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (041)

ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

19 கருத்துகள்:

 1. ஒவ்வொரு சொல்லும் தேன் துளிதான் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. அன்னை அபிராமியின் அருள் எங்கும் நிறையட்டும். நன்றி துரை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...

   நீக்கு
 4. மனதிற்கு நிறைவைத் தந்த அடிகள் மற்றும் பொருள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. அன்னையின் அருள் பாடல் பாடி மகிழ்ந்தேன்.
  ஓம் சக்தி ஓம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
   ஓம் சக்தி ஓம்...

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. நமக்கு வேண்டுவதை அழகாகச் சொல்லி இருக்கும் பாடல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அன்னை அபிராமியின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும். அழகான, அருமையான பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
   நன்றியக்கா..

   நீக்கு
 9. பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தமிழ்... தமிழ் அமிழ்து..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. சிறப்பான அமுது....

  தொடரட்டும் தை வெள்ளி சிறப்புப் பகிர்வு.

  பதிலளிநீக்கு