நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 05, 2020

மார்கழி தரிசனம் 20

தமிழமுதம்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து..(126)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 20


முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!.. 
***

ஆழ்வார் அமுதம்நாமம் பலசொல்லி நாராயணா என்று
நாமங்கையால் தொழுதும் நன்னெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டுமிழ்ந்த வண்டறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நங்கண்..(2289)
-: பேயாழ்வார்:-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருக்கோடிகா
(திருக்கோடிக்காவல்)

ஸ்ரீ கோடீஸ்வரஸ்வாமி 
ஸ்ரீ திரிபுரசுந்தரி 
திருவேங்கடவன் தரிசனம் வேண்டி அவசர அவசரமாக
வழிபட்ட துர்வாச முனிவர்க்கு
அம்பிகையே வேங்கடவனாக தரிசனம் நல்கிய திருத்தலம்..

ஸ்ரீ கோவிந்தரூபிணி 
வருடந்தோறும் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையில்
திரிபுர சுந்தரி திருவேங்கடவனாகத் திருக்கோலம் கொள்கிறாள்..
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்... 9

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்... 10
***

தேவி தரிசனம்

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்தாள் 
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றாலிலை மேல்துயின்ற பெம்மானும் என்ஐயனுமே..(054)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

8 கருத்துகள்:

 1. திருக்கடிகா சிவதரிசனம் சிறப்பு.    சிலிர்க்க வைக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான தரிசனங்கள். முதல் படம் திரிவேணி சங்கமத்தில் "வேணி தானம்" செய்யும் கணவன்மாரையும் அவர்களிடம் பின்னிக்கொள்ளும் மனைவியரையும் நினைவூட்டும் கண்ணன், ராதை! எல்லாப் படங்களும் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமையான தரிசனங்கள். அதுவும் கோடிக்கா
  திரிபுர சுந்தரியின் அற்புத தரிசனம் அமிர்தம்.
  ஈஸ்வரனும் ஈஸ்வரியும் இணைந்து காணப்படும் படமும் வெகு அழகு.

  பாவைப்பாடல்கள் தமிழமுதமே,
  அக்கறையுடன் அளிக்கும் அன்பு துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அனைத்து படங்களும் அருமை.
  திருக்கோடிகா தரிசனம் மகிழ்ச்சிதரும் தரிசனம்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான தரிசனம். கோவிந்தனாகக் காட்சி தந்த தேவி - நன்று.

  பதிலளிநீக்கு