நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 06, 2020

மார்கழி தரிசனம் 21

தமிழமுதம்

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு..(212)
***

இன்று ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 21


ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்



பச்சைமா மலைபோல் மேனிபவள வாய்க்கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே..(0873)
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-

ஸ்ரீ ப்ரசன்ன வெங்கடேசப் பெருமாள்
குணசீலம்
 
கொங்கல் அமர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம்பிரான்
சங்கு தங்கு தடங்கடல்துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர்த் தம்மிடம் பொங்குநீர்ச்
செங்கயல் திளைக்கும் சுனத் திருவேங்கடம் அடை நெஞ்சமே.. (1018)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திரு ஆனைக்கா

அம்மையும் அப்பனும் - திரு ஆனைக்கா 
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க் கேதம் ஏதுமில்லையே.. (3/53)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-


ஊனாகி உயிராகி அதனுள் நின்ற
உணர்வாகிப் பிறவனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
தேனாருங் கொன்றையனே நின்றியூராய்
திருஆனைக் காவிலுறை சிவனே ஞானம்
ஆனாய் உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங்கொண்டு அடியேன் என்செய்கேனே..(6/62)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
ஸ்ரீ மட்டுவார்குழலி உடனுறை ஸ்ரீ தாயுமானவர் 
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12
***

தேவி தரிசனம்


நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே!..(61) 
-: அபிராமிபட்டர் :-

இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள
அப்பர் பெருமான் அருளிய திருப்பாடலையும்
அபிராமபட்டர் அருளிய திருப்பாடலையும்
ஒத்து நோக்கி இன்புறுக...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
***

9 கருத்துகள்:

  1. படித்தேன், தரிசித்தேன், ரசித்தேன்.    நீங்கள் சொன்ன பிறகு மறுபடியும் இரண்டு பாடல்களையும் படித்து ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    தங்களுக்கு நல்வரவு...

    ஹரி நாராயண...

    பதிலளிநீக்கு
  3. மெய்ப்பரம்பொருளைக் காணும் வண்ணம் தமிழமுதம் வரைகிறீர்கள் அன்பு துரை.
    படிக்கப் படிக்க கண்கொடுத்த ஈசனை வந்திக்கிறேன்.

    அருமை முத்துக்களைப் பதிக்கும் உங்களூக்கு நன்றி அதுவும் சமயபுரத்தாள் இங்கே இன்னாட்களில் தேவை.
    எனக்குக் கிடைத்த அருள் அவள்
    தோற்றம். குழந்தைகளை ஆட்கொண்டுள்ள வள் வல்லமையுடன் காப்பாள்.
    இனிய தமிழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை.
    அருமையான தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான தரிசனம் ...

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான தரிசனம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  7. வைகுண்ட ஏகாதசியான இன்று மனம் முழுவதும் அரங்கன் நினைவுதான். அரங்கனை மட்டும் தரிசித்தால் போதுமா? என்று கூடவே ஆனைக்கா அண்ணலையும், அகிலாண்டேஸ்வரியையும், சமயபுரம் மாரியம்மனையும் தரிசிக்க தந்த உங்களுக்கு நன்றிகள் நூறு. 

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..