நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 03, 2020

மார்கழி தரிசனம் 18

தமிழமுதம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.. (398)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 18


உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.. 
***

ஆழ்வார் அமுதம்

ஸ்ரீ வல்வில் ராமன் - திருபுள்ளபூதங்குடி
சுவாமிமலை அருகில் 
மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன் சினத்துச்
செருநர் உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்
வருநரகம் தீர்க்கும் மருந்து.. (2284)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருவிடைமருதூர்

ஸ்ரீ விநாயகப்பெருமான் சிவபூஜை நிகழ்த்திய
பெருஞ்சிறப்புடைய திருக்கோயில்..

தைப்பூசத்துக்குரிய திருத்தலம்..

பட்டினத்தடிகளும் பத்ருஹரியாரும் சிலகாலம்
வதிந்தது இங்குதான்..

ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் 
பொழிலவன் புயலவன் புயல் இயக்கும்
தொழிலவன் துயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்து கந்த
எழிலவன் வளநகர் இடை மருதே.. (1/110)
-: ஞானசம்பந்தப்பெருமான் :-

ஸ்ரீ பிரகத் குஜாம்பிகை  
கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவை நல்லாரினும் 
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே.. (5/14)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ மூகாம்பிகை - திருவிடைமருதூர் 
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும் அயலெலாம்
இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே..(5/15)
-: திருநாவுக்கரசர் :-
***
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை


மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்... 5

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்... 6
***

தேவி தரிசனம்

ஸ்ரீ சௌந்தர்யவல்லி - திருக்கானூர் 
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே..(052)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

 1. திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் தரிசனம் கிடைத்தது.  அம்மையையும் வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்களுக்கு நல்வரவு...
   அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. நல்லதொரு தரிசனத்துக்கு நன்றி. அனைத்துமே அடிக்கடி போன கோயில்கள். மார்கழிப் பதிவுகள் சிறப்பான படங்களுடன் கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாக உள்ளன.

  பதிலளிநீக்கு
 3. பதிவின் முதல் குறளிலிருந்து அத்தனை
  படங்களும் ,உள்ளூறை தெய்வங்களும்,
  ஆழ்வார் பாசுரங்கள், திருவெம்பாவை எல்லாமே படிக்கவும் பார்க்கவும்
  இந்த வெள்ளிக்கிழமை பரிசாக அமைந்தது.
  அந்தாதி அபிராமி என்றும் காப்பாள்.
  திருவிடை மருதூர் மஹாலிங்க ஸ்வாமி இன்னும் காணக் கொடுத்து வைக்கவில்லை. நன்றி அன்பு துரை,.

  பதிலளிநீக்கு
 4. அருமையான தரிசனம் கோவில்கள் கண் முன்னே வருகிறது அடிக்கடி போன கோவில்கள்.
  படங்கள் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. திருவிடைமருதூர் தரிசனம் - உங்களால் எங்களுக்கும். நன்றி ஐயா.

  தொடரட்டும் மார்கழிப் பதிவுகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..