நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 26, 2020

வாழ்க பாரதம்

எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..


அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
***




Sukhoi Su-30-MKI

வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!.. 
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..
-: மகாகவி பாரதியார் : - 
Army Contingent- led by Captain Divya Ajith
Navy Contingent  Led by  Lt.Commander Sandhya
Air Force Contingent  led by Squadran Leader  Sneha  Shehavath

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!...

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா!..
-: மகாகவி பாரதியார் :- 


சத்ய மேவ ஜயதே!.. 
வாய்மையே வெல்லும்!.. 
(முண்டக உபநிஷத்) 

  

வெளியிலிருந்து வந்த விஷக்கிருமிகள் 
வெருண்டோடிப் போகட்டும்!..
உடன் பிறந்த கொடுநோய்கள் 
உருக்குலைந்து தொலையட்டும்!..



வெல்க பாரதம்
வாழ்க பாரதம்!..

ஜெய் ஹிந்த்!.. 
* * *

7 கருத்துகள்:

  1. அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள். அருமையான படங்கள். ராணுவத்தில் இருக்கும் பெண்களின் வீர, தீர சாகசங்களை நிறைய வீடியோக் காட்சிகளில் பார்த்திருக்கேன். அது தவிரவும் வாகா சென்றபோதும் கொடி இறக்கத்தின் போது பெண்களின் அணி வகுப்பை நிறையப் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..
      வருகையும் வாழ்த்துரையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா!...

      நீக்கு
  2. குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வாழ்த்துகளுடன்..
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  3. குடியரசு தின வாழ்த்துக்கள்.
    சிறப்பு பதிவு அருமை
    ஜெய் ஹிந்த் !
    வாழ்க பாரதம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையுடன் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. சிறப்பான படங்கள்.

    வாழ்க பாரதம்....

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு