நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 11, 2018

அழகு.. அழகு 2

காவேரிக்கு இந்த கதி ஆயிடுச்சே.. கடவுளே!..
தல எழுத்தை அழிக்கக்கூட தண்ணி இல்லே!.. 
இதையும் தண்ணீ..ன்னு சொன்னாங்களே!..
ஏதோ.. குழாயாவது இருக்கே!...
எனக்கும் கொஞ்சம் கொடுடா!..
எல்லாரும் கழிப்பறையைத் தான்
பயன்படுத்தணும்....!?
என்னது?..
புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பனுமா?..
இனிமே ஒழுங்கா படிக்கிறேன்... ப்பா!..
மறுபடியும் ராவணன் வந்துட்டானா?..
யார்...றா.. நீ?.. ஊருக்குப் புதுசா!..
நண்பேன்...டா!..  (பசியெடுக்கிற வரைக்கும்)

படங்கள் வழக்கம் போல 
FB ல் கிடைத்தவை..

ஆயிரத்து நூற்று ஒன்றாவது
பதிவு இது..

இவையெல்லாம்
தங்களது ஆதரவினால் 
விளைந்தவை..

எங்கும் இனிமை 
என்றும் இனிமை

வாழ்க நலம்..
ஃஃஃ

33 கருத்துகள்:

 1. படங்கள் அருமை. வாசகங்கள் வெகு பொருத்தம். ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு..
   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அன்பின் ஜி
  அழகிய படங்களும், பொருத்தமான வசனங்களும் இரசிக்க வைத்தன...

  1001-வது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   மன்னிக்கவும்..
   நான் தான் குழப்பி விட்டேன்..
   இது ஆயிரத்து நூற்று ஒன்றாவது பதிவு..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்சி.. நன்றி...

   நீக்கு
  2. 1101-வது பதிவுக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 3. முதல் படத்தில் என்ன பன்றார் ஆஞ்சி? தண்ணீர் குடிக்கிறாரோ?

  கண்ணீரும் வறண்டு விட்டது. காவேரியும் வறண்டு விட்டது! குழாய்ல காத்துதான் வருது!


  பக்கத்துல பார்த்தாலே போதை ஏறுதே...


  நம்பி கூடு கட்டலாமா? நிச்சயமா தண்ணி வராது இதில்...


  நீ பாதி நான் பாதி கண்ணே...


  எனக்கு கூட கழிப்பறையிலதான் போகணும்னு தெரியுது.. சில மனிதர்களுக்குத் தெரியலையே..

  இங்கேயே என்கூட இரு... குழந்தையை எல்லாம் கடத்தறாங்களாமே..


  சத்தியமா நீ வச்சிருந்த எலும்புத்துண்டை நான் எடுக்கலைம்மா...

  ரெண்டு றெக்கைக்கும் நடுவில் தங்கமே கடத்தலாம் போலவே...

  அண்ணே.. ஏ ஸி வாங்கப் போறேன்.. நீங்களும் வர்றீங்களா?


  நம்ப வச்சு கழுத்தறுத்தான் ருசி...


  கடைசி படம் : நோ கமெண்ட்ஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீ ராம்..
   விதியை நெனைச்சு நொந்து போன ஆஞ்சி
   சிவலிங்கத்துல தலையை முட்டிக்கிற மாதிரி தெரியிது...

   அட்டகாசமான வர்ணனைகளுடன் கருத்துரை அழகு..
   மகிழ்ச்சி நன்றி..

   நீக்கு
 4. 1001 அராபிய இரவுகள்! 1001 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..

   மன்னிக்கவும்.. நாந்தான் குழப்பி விட்டேன்...

   இது ஆயிரத்து நூற்று ஒன்றாவது பதிவு..

   எனவே விட்டுப் போன நூறையும் கணக்கில் சேர்த்து
   இன்னொரு வாழ்த்துரை சொல்லி விடுங்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. ஆயிரத்து

   நூற்று

   ஒன்றாம்

   பதிவுக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 5. 1001க்கு வாழ்த்துகள்..

  தண்ணீர்.. தண்ணீர்,...

  பதிலளிநீக்கு
 6. 1101க்கு 1101 தரம் வாழ்த்துகள். அருமையான வர்ணனைகளுடன் கூடிய படங்கள்! எல்லாமே ரசிக்கும்படி இருக்கு!

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள். 1101 பதிவுகளுக்கு.
  படங்கள் எல்லாம் அழகு.
  படங்கள் வாசகங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. ஹா ஹா ஹா அனைத்தும் அருமை.. தூள் கிளம்புது துரை அண்ணன் பக்கம்.. வருகிறேன் விபரத்திற்கு மீண்டும்..

  பதிலளிநீக்கு
 9. இன்னும் பத்துப் பதிவுகள்தான், 1111ஐ எட்டுவதற்கு. வாழ்த்துகள்.

  முதல் படம் கண்ணைக் கவர்ந்தது. ஆஞ்சி, லிங்கத்துக்கு வணக்கம் தெரிவிக்கிறாரோ? யாரே அறிவர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   அதென்ன 1111... அதில் ஏதும் ரகசியம் உளதோ!...

   மீண்டும் மகிழ்ச்சி..நன்றி..

   நீக்கு
  2. அந்த 1111வது பதிவில் திருமுறைகளோடு கூடிய இடுகையை எதிர்பார்க்கிறேன். 100 என்பதைவிட 101 என்றுதான் சொல்வார்கள், வளரவேண்டும் என்பதற்காக. நல்ல தளம், நல்ல இறை சம்பந்தமான இடுகைகள், மென் மேலும் வளரட்டும்.

   நீக்கு
  3. 100 என்பதை விட 101 எனத் தான் சொல்லுவார்கள்// உண்மை! ஆனால் தஞ்சை ஜில்லாவில் யாருக்கானும் மொய் வைச்சுக் கொடுத்தால் கூட 10,29,50,100, 1000 எனக் கொடுப்பார்கள், கொடுக்கின்றனர். நாங்க ஒரு ரூ கூட வைக்க மாட்டோம். ஒன்றேகால் ரூபாய் வைப்போம். பின்னமாக இருந்தால் தொடரும், வளரும் என்பதே தான் காரணம். இப்போல்லாம் நான் சொல்லிச் சொல்லி நம்ம ரங்க்ஸூம் பின்னத்தில் கொடுக்க ஆரம்பிச்சிருக்கார்! ;)))))))))

   நீக்கு
  4. 20 என வந்திருக்க வேண்டியது "29" எனத் தப்பாய் வந்திருக்கு. :)))))) கலப்பை படுத்தும் பாடு! 2க்குப் பதிலா @ இதே வந்திட்டு இருந்தது! ஒரு மாதிரியா 2 வந்தது! :)))))))

   நீக்கு
  5. கீதா சாம்பசிவம் மேடம்.... அதுக்காக நான் டிபன் சாப்பிட வந்தால் 1 1/2 அடை போட்டுவிடாதீர்கள். ஹா ஹா ஹா

   நீக்கு
  6. நெ.த. அடை பண்ணினால் 21/2 தரேன். நாங்க சண்டை போட்டுண்டு அதான் சாப்பிடறோம். நீ சாப்பிடு, நான் சாப்பிடுனு ரெண்டு பேரும் அமர்க்களம் பண்ணுவோம். அந்த 21/2 கூடச் சில சமயம் சாப்பிட முடியாது! :)))))

   நீக்கு
  7. சரி..கீசா மேடம். 21/2 = 10.5. 10 1/2 அடை சாப்பிடும் விதமாக, நல்ல பசியோடு வருகிறேன். 10 X 1/2 என்று புரிந்துகொண்டு 5 அடை மட்டும் போட்டுவிடாதீர்கள். ஹா ஹா ஹா

   நீக்கு
 10. ஆயிரத்து நூற்று ஒன்றாவது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா

  பதிலளிநீக்கு
 11. துரை அண்ணா முதலில் வாழ்த்துகள்!! இங்கு இருக்கும் செல்லங்கள் எல்லாம் உங்களுக்கு வாழ்த்துகள் சொல்லுகின்றன ஆயிரத்து நூத்து ஒன்றாவது பதிவிற்கு..மேலும் மேலும் ஆயிரமாயிரம் பதிவுகள் பதித்திடவும் வாழ்த்துகள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ஹை நம்ம ஆஞ்சு ப்ரே பண்றார்…சென்னைக்குத் தண்ணி கொடு தண்ணி கொடு என்று விழுந்து விழுந்து வணங்கி!!! ஹப்பா!!! அழகோ அழகு !!!! அப்படியே போய் தூக்கணும் போல இருக்கு
  ஹப்பா என்னா சூடு என்னா சூடு….தேம்ஸ் கரைலருந்து இங்க வந்து நம்ம மக்களை பார்க்கலாம்னு வந்தா ஹும் வெயில் தாங்கலைப்பா கொளுத்துது…அங்க எப்ப பாரு சிலு சிலுனு குளிர்லயும் பனியிலயும் இருந்துட்டு சரி கொஞ்சம் தண்ணிய மேல தெளிச்சுக்கலாம்னா பைப்புல தண்ணி கூட இல்ல இது என்னா ஊரோ…எப்படித்தான் மக்கள் இங்க இருக்காங்களோ….பேசாம தேம்ஸ் கே போயிடலாம்…அங்கருந்து இங்க தண்ணி அனுப்ப முடியுமானு பார்க்கணும்……காவிரி தண்ணி கொடுக்கலையாமே!!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. என்னத்தை இவன் கைக்குள்ள ரகசியமா வைச்சுருக்கான்……

  கழிப்பறையத்தான் பயன்படுத்தணும்னு சொன்னாங்களேனு போனா இன்னாப்பா இது இப்படியா வைச்சுருப்பாங்க….நாறுது..…மனுஷங்க…சுத்த மோசம்…

  என் புள்ளைய எல் கேஜி யு கே ஜி எல்லாம் அனுப்ப மாட்டேன்….6 வயசுல தான் சேர்க்கணும்….நான் நேரா எம் புள்ளைக்கு ப்ராக்டிக்கல் பாடங்கள் தான் என் புள்ளைக்கு னோ டென்ஷன்…

  கீதா

  பதிலளிநீக்கு

 14. பைப்புல தண்ணில வரணும் இது என்னா காத்து வருது...ஹூம் (இது விட்டுப் போச்சு அப்ப)

  இதுக்குத்தான் ஃப்ரென்ட்ஸ பார்க்க போறேன்னு சென்னைக்குப் போகாதனு சொன்னா கேட்டுருக்கணும்…….பெரிஸா தேம்ஸ்லருந்து ஃப்ளைட் புடிச்சு இங்க வந்து பைப்ல தண்ணி கூட கிடைக்காம எதையோ ஆகா தண்ணினு நினைச்சு குடிச்சுட்டு விழுந்து கெடக்கேன் தமிழ்நாட்டுல தண்ணி நா இதுதான்னு?!! தெரியாம போச்சே வைரவா காப்பாத்துப்பா……ஹா ஹா ஹா ஆ… மருவாதையா அடுத்த ஃப்ளைட்ட புடிச்சு தேம்ஸ் கரைக்குப் போயிரணும்… (இதுவும் விட்டுப் போச்சு...கட் பேஸ்ட் பன்னும் போது...)

  கீதா

  பதிலளிநீக்கு
 15. அப்பா இங்க என் கைய பாரு! நான் எதுவுமே எடுத்துட்டு வரலைப்பா…நீதானே சொல்லிருக்க மனுஷங்க வீசுற எலும்புத் துண்டுக்கு அலையக் கூடாது………எமகாதகங்க திருடங்க உனக்கு எலும்புத் துண்டு போட்டு வீட்டுக்குள்ள போய் திருடிப்போடுவாங்கநு சொல்லிருக்கலப்பா………நான் எடுக்கலைப்பா...மோந்து பாரு…

  அட! ராவணன் வீணையை மீட்டத் தொடங்கிட்டார்………..ஏதோ போட்டியாமே…போய்ப் பார்ப்போம்…
  இது எங்க ஏரியா? உள்ள வரதுக்கு செக்கிங்க் உண்டு. உன் ஆதார் காட்டு? ஐடென்டிட்டி…..கள்ளத்தனமா உள்ள நுழையலாம்னு நினைச்சியா……

  இம்புட்டு நாள் எங்கேங்க போனீங்க என்னையும் நம்ம புள்ளையையும் விட்டுட்டு எங்கேயோ போயிட்டீங்க நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? சொல்லாம கொள்ளாம போன நீங்க வரவேண்டாம் போங்க அந்த வழியிலேயே போங்க….(அம்மா அம்மா பாவம்ம்மா அப்பா…போனா போகுது விட்டுருமா நிதானமா கேப்போம்மா ஏன் போனார்னு…)

  நீ இம்புட்டு ஸாஃப்டா இருப்பியா என்ன சுகமா இருக்கு! (உன்னைய உரசிப் பார்த்தே நீ எம்புட்டு தேருவன்னு கண்டுபுடிச்சுருவோம்ல!!)
  ஹேய் இவன நம்பக் கூடாது..ஸாஃப்ட்னு சொல்லிட்டு உரசிட்டு ஆட்டைய போட்டுருவான் என் கழுத்துல….உஷாரா ஓடறதுக்குத் தயாரா இருக்கணும்…

  என் புருஷணைக் காணலைனு தேடினேன் ஹையோ என்னங்க என் சாப்பாடு இல்லாம இப்படி ஆயிட்டீங்களே…….ரொம்ப தாங்க்ஸ் தம்பி…
  ஹும் உங்க புருஷனை தேடிக் கண்டு புடிச்சு கொடுத்ததுக்கு தாங்க்ஸ் மட்டும் தானா இந்தா உங்க பொண்ணு இருக்கே அத எனக்குத் தருவீங்கனு பார்த்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 16. ஹையோ எல்லா படங்களும் செம அழ்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. ஆவ்வ்வ் முதல் படத்தில் என் கிரேட் குரு என்ன பண்றார்?:).. எல்லாம் விதி:) எனத் தலையை மோதுறாரோ லிங்கத்தின் மேலே:).

  அதுசரி ரப் வோட்டர்தானே குடிச்சார் பூஸார்:) ஏதோ வெளிநாட்டுச் சாமான் குடிச்சதைப்போல பில்டப்பூ வேற கர்ர்ர்:)...ராவணந்தான் வந்தாரோ? அனுமார் வரேல்லையோ?:)..

  அனைத்தும் அழகு.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லுது.. கடசிப்படம் என்பக்கத்தில் போட்டிருக்கிறேன் முன்பு.

  பதிலளிநீக்கு
 18. 1101 ஆவது போஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்.. 101 சிதறு தேங்காய் உடைத்து.. 101 கும்பம் வச்சு அபிசேகம் செய்து எங்களுக்கெல்லாம் பிரசாதம் தந்திருக்கோணும் நீங்க.. விட்டிட்டீங்க:)...

  இன்னும் பல ஆயிரம் போஸ்ட்டுக்கள் போட வாழ்த்துகிறேன்..

  பதிலளிநீக்கு