நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 13, 2018

அழகெல்லாம் அம்மா!..

இன்னைக்கு அன்னையர் தினம்..
லட்டு சாப்பிடும்மா!..
ஆசிர்வாதம் பண்ணும்மா!...
நல்லா இருடா தங்கம்!..
அம்மா.. பசிக்குதும்மா!..
ஆனந்தம் ஆனந்தம் பாடும் - மனம்
ஆசையின் ஊஞ்சலில் ஆடும்..
யாரு திட்டுனாலும்..
கவலைப்படக் கூடாது!..
ரொம்பவும் குளிர்..
ஆளுக்கு ஒரு கப் காஃபி கிடைக்குமா!..
எனக்கு காஃபி எல்லாம் வேணாம்..
ஒரு கப் டீ மட்டும் போதும்!..
அம்மாவின் முதுகு.. ஆனந்தப் படகு!..
ஐஸ் க்ரிம் வாங்கித் தாம்மா!..
என் செல்லம்.. இந்தப் பக்கமா திரும்பு..ம்மா!..
மரத்தை எல்லாம் வெட்டிக்கிட்டே இருக்கான்!..
காக்கா போற வரைக்கும் வெளியே வராதீங்க!..
இன்னைக்கு சமையல் எல்லாம் நான் தான்!..
வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே
எல்லாம் நீ தானம்மா
செல்வம் நீதானம்மா..
உன் மார்பிலே என்னைத் தாலாட்டம்மா..
உன் மடியிலே என்னை சீராட்டம்மா!..
-: கவியரசர் :-தளராத அன்பினில் ததும்பி நிற்கும் 
உள்ளங்களின் வடிவம் தாய்மை...

தரணி வாழ்ந்திடத் தன்னையே தந்திடும் 
தாய்மையின் மறுபெயர் அம்மா!..

அந்த வார்த்தைக்குள்ளே தான் 
இந்த அகிலம்...
அகிலம் வாழ்வதெல்லாம் 
அம்மா என்னும் அன்பினுக்குள்!..

அம்மா என்பது அன்பு..
அம்மா என்பது அழகு..

என்றென்றும் வாழ்க!..
*** 

17 கருத்துகள்:

 1. அன்பின் ஜி
  அழகிய படங்களும், வர்ணனைகளும் மனதை குளிர வைக்கிறது.

  அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைத்துப்படங்களும் மனதை வெகுவாகக் கவர்ந்தன. தாய்மையைப் ப்ரதிபலித்தன. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அனைத்து படங்களும் அருமை. அதற்கான உங்கள் தலைப்பும் மிக நன்றாக இருக்கின்றன. ஒவ்வொரு விலங்கிடமும் தாய்மை உணர்வு எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது இல்லையா...மனதை கவரந்தன அனைத்து படங்களும்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. இன்னொன்று துரை சார்... டிஸ்கவரி, நெட் ஜியோல்லாம் பார்க்கும்போது, எப்படி ஒவ்வொரு உயிரினத்துக்கும் 'தாய்மை' உணர்வை ஆண்டவன் வைத்துள்ளான் என்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கேன். நீங்க போட்டிருக்கிற விலங்குகளும் எப்படி தாய்மை உணர்வைக் காண்பிக்கிறது.

  ராஜநாகம் தாய், முட்டைகளை அடைகாத்து (3 மாசம் பட்டினி), முட்டை பொரிந்து குஞ்சு வரும் நேரம், பசியில் தன் குஞ்சையே உண்டுவிடக்கூடாது என்று அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடும். திரும்ப அந்த இடத்துக்கு வராது. இதெல்லாம் இறையின் ஏற்பாடே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை பெங்க்வின் அதன் தாய்மை உணர்வும் சொல்லி முடியாது அதில் தந்தையின் பங்கு அளப்பற்கரியது...

   கீதா

   நீக்கு
 5. அருமையான படங்கள், அழகான் தாய்மை பாடல்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. 1. தினமும் நீதானேம்மா எனக்கு ஊட்டிவிடுவ இன்னிக்கு நான் உனக்கு ஊட்டி விடறேன்மா...

  2. அம்மா, பெண் பேத்தி/பேரன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. பல பாராக்கள் எழுதுவதை விட சில படங்கள் நன்கு விளங்க வைக்கும்

  பதிலளிநீக்கு
 8. காக்கா போற வரைக்கும் வெளிய வராதீங்க// அந்தப் படம் செம!! ஒளிஞ்சு விளையாட்டு போல ரசித்தோம் அண்ணா...

  கீதா

  பதிலளிநீக்கு
 9. காக்கா கூடக் கோழிக் குஞ்சைச் சாப்பிடுமா? படங்கள் அதனுடன் கொடுத்திருக்கும் கருத்துகள் எல்லாம் அருமை! நல்ல ரசனை! படங்கள் எங்கிருந்து கிடைக்கின்றனவோ! அதிலும் கழுதை+குட்டிக்கான பொருத்தமான கருத்து!

  பதிலளிநீக்கு
 10. ராஜஸ்தானில் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்க் கருவேல மரத்தை மரங்கொத்தி கொத்துவதைப் பார்த்திருக்கேன். தச்சர் உளியின் சப்தம் கெட்டது! அவ்வளவு அருமையாக் கொஞ்சம் கூட வேறுபாடு தெரியாமல் இருக்கும். பல சமயங்கள் ஏமாந்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 11. எத்தனைத் தாய்கள்! தாயின் அன்பை அனுபவிக்காத உயிரும் உண்டோ! படங்கள் அருமை. வரிகள் ரசனை.​

  பதிலளிநீக்கு
 12. மிக அருமையான படங்கள்.. அழகாக திரட்டி எடுத்துப் பொருத்தமான நாளில் போட்டிருக்கிறீங்க... இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்.. எனக்குச் சொன்னவர்களுக்கு நன்றி.

  ஆனாலும் என் கிரேட் குரு தன் குழந்தையைத்தலைக்கு மேலே தூக்கிப் பிடிப்பதைப் பார்த்தால்.. சொக்கா கேட்ட்டால் தேம்ஸ்ல வீசிடுவேன் எனச் சொல்வதைப்போல இருக்கே...:)

  பதிலளிநீக்கு
 13. படங்களும் அதற்கான தலைப்பும் மிக மிக அருமை. விலங்குகளுக்கும் உண்டு தாய்மை உணர்வு என்று சொல்லும் படங்கள். அனைத்து சகோதரிகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! தாயுமானவராய் இருக்கும் தந்தையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 14. ஹாஹா சூப்பர் எல்லாமே அழகு மனதுக்கு இனிமையான படங்கள் பார்க்க பரவசம் .

  பதிலளிநீக்கு
 15. தாய்மையின் வலிமை என்னும் தலைப்பில் ஒரு காணொளி பகிர்வு என் தளத்தில்

  பதிலளிநீக்கு