நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2022

இதற்குத் தானே..

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இதற்குத் தானே ஆசைப்பட்டாய்!..

அன்பிற்குரிய கீதாக்கா அவர்கள் கடந்த 29/7/22 அன்று Fb ல் பகிர்வு செய்திருந்த ஒரு பதிவு..

(Murali Seetharaman அவர்களின்  பதிவு..
By Narasimhan Ramanujam ) 


Worth reading...

எது வாழ்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்கான PRIORITIES மாறிவிட்டன.  

என் குழந்தை எப்படி வேண்டுமானாலும் இருப்பான் / இருப்பாள்!.. நீ யாருடா வாத்தி அவனை/ அவளைத் திருத்துவதற்கு?..

உன் வேலை வாங்கிய சம்பளத்துக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது மட்டும்தான் - அவனையோ/ அவளையோ மாரல் போலீஸிங் செய்வது உன் வேலையே இல்லை!..

இந்த மனநிலையில் வளர்க்கப்படும் பையன் வாத்தியாரை நோக்கிக் கையை ஓங்கறான்!.. பெண் ஸ்கூல் யூனிஃபார்மிலேயே தண்ணி அடிக்கிறாள்!..

ஆசிரியன் என்பவன் குரு அல்ல!.. அது ஒரு தொழில்!.. ஆசிரியன் மாணவன் உறவு ஒரு சமூக ஒப்பந்தம் - அவ்வளவுதான்!.. அதைச் செய்ய அவன் சம்பளம் வாங்குகிறான் - மற்றபடி அவனைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டிய அவசியமெல்லாம் கிடையாது!.. 


ஆசிரியன் / ஆசிரியை என்பவர்கள் வணங்கத் தக்கவர்கள் அல்ல!.. மனிதராக மதித்தால் மட்டுமே போதும்!.. மாணவன் என்பவன் ஆசிரியனுடைய கீழ்ப்படிதலுக்கு ஆளாக வேண்டியவன் அல்ல!.. அவன் சக தோழன்!..

ஆசிரியர் மாணவனை / மாணவியை "ஒருமை" யில் அழைத்தல் தகாது!.. பட்ட வகுப்பு படிக்கும் மாணவனை / மாணவியை அந்தக் கல்லூரியில் Phd பட்டம் பெற்ற பேராசிரியர் கூட "நீங்க.. வாங்க.. இந்த அசைன்மெண்ட் முடிங்க"- என்றுதான் அழைக்க வேண்டும்!..

சுய மரியாதை' முக்கியம்!..

தப்பித் தவறி எவனாவது ஆசிரியன் - ஆம்!. வாத்தி - உன்னை அதட்டினால் வந்து சொல்..  நமது சமூகத்தின் ஜாதி சங்கத் தலைவர்களை விட்டோ, மாணவர் அமைப்புகளை விட்டோ அவனை உண்டு இல்லைனு ஆக்கிவிடுவோம்!..

என்ன பெரிய குருபக்தி!.. ஆல் நான்ஸென்ஸ் சென்டிமென்ட்!.. பணம் கொடுத்தால் கல்வி கிடைக்கிறது - நான் உனக்காக ஃபீஸ் கட்டுகிறேன் - நீ நூறு மார்க் வாங்கும் வகையில் அவன் 'கோச்சிங்' தருகிறான்!.. தட்ஸ் ஆல்!..

இப்படிக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்கள் வளர்ந்த பிறகு அதே "சமூக ஒப்பந்தத்தை" எதிர் கொள்கிறார்கள்!..

பெற்றோர் - மகன்/ மகள் உறவு என்பது 'சமூக ஒப்பந்தம்'!.. என்ன பெரிய பாசம் பக்தி - நான்சென்ஸ்!.. இந்தா காசைப் பிடி- எங்கேயாவது நல்ல முதியோர் இல்லத்தில் செட்டில் ஆகிடு!..  அல்லது உன்னிடமே காசு வசதி இருந்தால் நீயே போய் செட்டில் ஆகிவிடு!..

சும்மா நை.. நை.. னு வளர்த்த பாசம், வெங்காயம்.. னு நெஞ்சை நாவால் ஸ்பரிசிக்காதே!..

உனக்கு ஈமக் கடன் செய்வது - "சமூக ஒப்பந்தத்தின்"- இறுதிப் பகுதி!..

தகவல் வந்தால் வந்து செய்து விட்டுப் போகிறேன்!..

ஆசிரியரை மதிக்கக் கற்றுக் கொடுக்காமல் கல்வியை - ஆசிரியர் மாணவன் உறவை வெறும் "சமூக ஒப்பந்தம்"- என்றே சொல்லி நீங்கள் வளர்த்தீர்கள்!..

பதிலுக்கு அவன் பெற்றோர் - பிள்ளைகள் உறவையும் SOCIAL CONTRACT ஆக மாற்றி விட்டான்! தட்ஸ் ஆல்!..
***
இந்தப் பதிவிற்கு நான் எழுதிய கருத்து..


அன்றைக்கு குருவுக்குத் தட்சணை கொடுத்தோம்.. இன்றைக்கு ஆசிரியர் சம்பளம் வாங்குகின்றார்.. இங்கே தான் மெக்காலேயின் சகுனித் தனம் வெளிப்படுகின்றது!..

வாழ்க நற்றமிழ்
வளர்க நல்லறிவு..
***

31 கருத்துகள்:

 1. சம்பளம் வாங்குவது குறையில்லை. நாம் குழந்தைகளை வளர்ப்பது சரியில்லை. 4ம் வகுப்பு படித்தபோது வீட்டிற்கு வந்த ஹெட்மாஸ்டருக்கு குட் மார்னிங் சொல்லாததற்கு அடி பின்னிய உயர்நிலைப்பள்ளி ஹெட்மாஸ்டரான அப்பாவை நினைத்துப்பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை, உங்கள் கருத்து சிந்திக்க வைத்த கருத்து. புரிகிறது ஏனென்றால்

   இதேதான் எங்கள் வீட்டிலும். சின்ன வயதில். ஆசிரியர்கள் இருந்த வீடா..அதனால்....!!!!

   கீதா

   நீக்கு
  2. இன்றைக்கு பெற்றோரே பிள்ளையை ஒன்றும் சொல்ல முடிவதில்லை.. ஆசிரியர் அடித்தால் அவ்வளவு தான்..

   அன்பின் நெல்லை..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 2. தவறுக்காக தண்டனைகளை அனுபவித்தே தீரவேண்டும்.

  ஒற்றைக் குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்வதால் தொடங்கிய பாவத்தின் சம்பளம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை கில்லர்ஜி....ஒற்றைக் குழந்தை என்று சொல்லமுடியாது. இரு விஷயங்கள். இப்போதைய கல்விச் சூழலில் ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து செலவழிக்கவே முழி பிதுங்குகிறது. அத்தனைக்கு எல்லோரும் வசதி உள்ளவர்கள் இல்லை கில்லர்ஜி.

   இதில் நாம் பார்க்க வேண்டியது, வளர்ப்பு முறை அதுதான் முக்கியம். ஒற்றையானாலும் நல்ல வளர்ப்பு இருக்கும் குடும்பம் உண்டு. பெரிய குடும்பத்தில் சீரழியும் குழந்தைகளும் உண்டு. எனவே வளர்ப்பு என்பதுதான் முக்கியம் அது அத்தனை எளிதான கலையல்ல அதுவும் இப்போதைய சூழலில்.

   கீதா

   நீக்கு
  2. ஒற்றைக் குழந்தை எனும் தண்டனைக்கு யார் காரணம்?..

   இதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

   நீக்கு
 3. அனாவஸ்யமாக அடித்த ஆசிரியர்களால் ஆரம்பித்தது வினை.  அப்புறம் குறுக்கே நின்று மறிப்பதே வழக்கமானது.  ஆனால் ஒன்று, வருங்காலத்துக்கு நல்ல சமூகத்தை உருவாக்கவில்லை நாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிட்டோ.......ஸ்ரீராம்...

   கீதா

   நீக்கு
  2. நியாயமான கருத்து..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 4. ஆசிரியரை ரேக் செய்யும் மாணவச்செல்வங்களின் காணொளிகள் அக்கடுப்பை ஏற்றின.  பதைபதைக்க வைத்தன.  ஒரு காதலனுக்காக (காதலன் என்றுதான் சொல்கிறார்கள் - அந்த வயதிலேயே) அடித்துக் கொள்ளும் இரண்டு சிறுமிகளின் பஸ்ஸ்டான்ட் அடிதடி..  யுனிபார்மிலேயே போதைச்சரக்கு அடிக்கும் மாணவ மாணவியர்...  கவலையாய் இருக்கிறது.  ஆட்சியாளர்களுக்கு இஹலாம் பொருட்டில்லை.  டாஸ்மாக் வருமானமும், பாதிக்கபப்ட்ட மாணவ மாணவி எந்த சமூகம், எந்த மதம் என்றும் பார்த்தும் 'நீ(நி)தி' வழங்குவதுதான் ஆட்சி என்று நினைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 5. அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு காட்சி வரும்.  ஒரு பிடிவாத, குறும்புக்காரச் சிறுவன் வயதான கமல் மரத்திலிருந்து தலைகீழாய் தொங்கினால்தான் அழுகையை நிறுத்துவேன் என்று அடம்பிடிப்பான்.  நெடுநேரமாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் கமலை அங்கு வரும் ஸ்ரீவித்யா சிறுவனின் கன்னத்தில்ல் ஒரு அறை விட்டு காப்பாற்றுவார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் காட்சி புன்னகை மன்னன் என்று நினைக்கின்றேன்..

   நீக்கு
 6. இட்ட மூன்றில் ஒன்றைக் காணோம்!

  பதிலளிநீக்கு
 7. பள்ளிக்குச் செல்வதே, நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கும், அதன் மூலம் நல்ல வேலை கிடைத்து அதிகமாய் சம்பாதிப்பதற்கும் என்ற நிலையினை இன்று உருவாக்கிவிட்டார்கள். மேலும் பிள்ளை படிக்கும் பள்ளி என்பது இன்று பெற்றோர்களின் வசதியினைக் காட்டும் குறியீடாக மாறிவிட்டது.
  நாம் படித்தபோது நம்மை என்ன மதிப்பெண் பெற்றாய் என்று யாரும் கேட்கவில்லை. படித்தோம்., உலகை புரிந்து கொள்ள அன்றைய கல்வி உதவியது. இன்றைய கல்வி மதிப்பெண்களுக்கான வழியை மட்டுமே காட்டும்.இந்நிலைக்கு நாம்தான் காரணம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்து.  வேலை பெறுவது ஒன்று மட்டுமே குறிக்கோள் என்பதால்தான் மாணவர்கள் ஒரு சில விஷயங்கள் தவிர மற்றவர்களில் பூஜ்யங்களாய் இருக்கிறார்கள்.  அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு காணாமல் போயிருக்கிறது.

   நீக்கு
  2. கரந்தை சகோ, மிக நல்ல கருத்து. இதை அப்படியே வழி மொழிகிறேன்.

   ஸ்ரீராம், ஆமாம் உங்கள் கருத்தையும் அப்படியே வழி மொழிகிறேன்.

   கீதா

   நீக்கு
  3. முன்வைத்திருக்கும் கருத்து சிந்திக்கத் தக்கது..

   அன்றைய கல்வி
   உலகைப் புரிந்து கொள்ள உதவியது..

   மிகச் சரியாக சொல்கியிருக்கின்றீர்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி ஐயா..

   நீக்கு
 8. துரை அண்ணா, இங்கு நான் இருபக்கமும் நியாயமும் தவறும் இருப்பதாகவே நினைக்கிறேன். வளர்க்கப்படும் குழந்தைகளின் சூழலும் சரியில்லை. வளர்க்கப்படுவதும் சரியில்லை. கல்வியின் நிலையும் சரியில்லை.
  அப்படி உருவாக்கப்படுபவர்கள்தானே இப்போதைய ஆசிரியர்கள்!
  ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நான் படித்த பள்ளியில் எனக்குப் போதித்த ஆசிரியர்களை எண்ணிப் பார்க்கிறேன். இப்போதைய ஆசிரியர்கள் எப்படி என்பதும் நான் பார்த்து வருகிறேன். அப்போதைய ஆசிரியர்களில் ஓரிருவர் தவறிழைக்கலாம் ஆனால் இப்போதைய ஆசிரியர்களில் நல்லாசிரியர்கள் என்பது மிகவும் குறைவு. எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் இருக்கு. நம் வீட்டில் கல்வித் துறையில் பணிபுரிபவர்கள்தான் அதிகம்.

  உதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் குடிக்கும் ஆசிரியர்கள், இரு மனைவிகள் உள்ள ஆசிரியர்கள், என்று இருந்தால் மாணவர்களுக்கு எப்படி மதிப்பு வரும்?

  குழந்தைகள் தரப்பில் - இப்போதைய திரைப்படங்கள் காரணம். குழந்தைகள் திரைப்படங்கள் மூலம் ரொம்பவே ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் பேசும் பேச்சே ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. ஆச்சரியமாகவும் இருக்கிறது. பெற்றோர் அதைத் திருத்த வேண்டாமா? பார்த்து ரசித்துச் சிரிக்கிறார்கள் என்ன சொல்ல? திரைப்படங்களில் நல்ல ஆசிரியர்களைச் சித்தரிப்பது இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் என்னென்னவோ காட்டுகிறார்கள்.

  நம் பதிவர் நட்புகளில் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள் நல்லாசிரியர்கள். என் கருத்தை தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். நான் பார்த்து வருவதைத்தான் சொல்கிறேன்.

  நிறைய பேச முடியும் இதில். ஏனென்றால் இங்கோ இங்கும் சில குழந்தைகள் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டால் மனதிற்கு வருத்தமாக இருக்கு.

  ஒன்று மட்டும் புரிகிறது. நல்ல சமுதாயம் உருவாகவில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதைய ஆசிரியர்களில் நல்லாசிரியர்கள் என்பது மிகவும் குறைவு. எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதும் இருக்கு..

   சரியாகச் சொன்னீர்கள்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

   நீக்கு
 9. பதில்கள்
  1. உண்மை.. உண்மை..

   தங்கள் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு
 10. முன்பு ஆசிரியர், மாணவர் உறவு மிகவும் அழகானது.
  ஆசிரியருக்கு மதிப்பு மரியாதை கொடுத்தார்கள்,பெற்றோர்கள்.
  தங்கள் குழந்தைகளையும் கொடுக்க வைத்தார்கள்.

  தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களும் அக்கறை எடுத்துக் கொண்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளிடமும்.

  ஆசிரியர் தான் தன் குழந்தையை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நம்பிய காலம்.

  சமூக நீதி போதனை வகுப்பை எடுத்தவுடனேயே எல்லாம் போய் விட்டது.
  தையல், பாட்டு, ஓவியம் , உடற்பயிற்சி வகுப்புகள் எல்லாம் மற்ற வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களால் கைபற்றப்பட்டது.

  பிள்ளைகள் எல்லாம் மதிபெண்கள் வாங்க வேண்டும். பள்ளி முதன்மை பேரு வாங்க வேண்டும் இப்படி ஆசிரியர்களுக்கு கட்டளை தனியார் பள்ளிகளில்.

  பிள்ளைகள் நல்ல மதிபெண் வாங்க படி படி என்று பெற்றோர்கள் போதனை. பந்தய குதிரையாக வெற்றி என்பது முதல் மதிபெண் என்று மட்டுமே ஓடும் குழந்தைகள்.
  நல்ல பள்ளி என்றால் அதிக கட்டணம் , நிறைய வசதிகள் உள்ள பள்ளி என்று மாறிய நிலை.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பிள்ளைகள் எல்லாம் மதிபெண்கள் வாங்க வேண்டும். பள்ளி முதன்மை பெயர் வாங்க வேண்டும்.. இப்படி ஆசிரியர்களுக்கு கட்டளை..//

   இங்கிருந்து தான் பிரச்னை ஆரம்பம் ஆகின்றது..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

 11. @ கீதா

  // ஒற்றை ஆனாலும் நல்ல வளர்ப்பு இருக்கும் குடும்பம் உண்டு. பெரிய குடும்பத்தில் சீரழியும் குழந்தைகளும் உண்டு. //

  இன்று பெரிய குடும்பம் என்று ஏதும் இல்லை.. உறவு முறைகள் அற்ற குழந்தைகளே..

  கூட்டுக் குடும்பமுறை அழிக்கப்பட்டதே காரணம்..

  தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா கூட்டுக் குடும்ப முறை அழிக்கப்பட்டதே காரணம்//

   இங்கு கருத்து பெரிதாகிவிடும் துரை அண்ணா எனவே ஒரு பதிவாக எழுதுகிறேன்.

   கீதா

   நீக்கு

 12. @ கரந்தை ஜெயக்குமார்

  // மேலும் பிள்ளை படிக்கும் பள்ளி என்பது இன்று பெற்றோர்களின் வசதியினைக் காட்டும் குறியீடாக மாறிவிட்டது...//

  தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. அனைவரின் கருத்தும் உண்மையை சொல்கிறது. முன்பு அந்த காலத்தில் இருந்த ஆசிரிய மாணவ ஒற்றுமை இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அப்போது மாதா, பிதா என்ற வரிசையில் குருவையும் வைத்து மதித்தார்கள். அந்த மதிப்பு இப்போது குறைந்து விட்டதாகத்தான் எண்ணம் வருகிறது. அதற்கு காரணம் சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் பெற்றோர், ஆசிரிய உறவிலும் வீண் மனத்தாங்கல்கள் நிரம்ப ஏற்பட்டதினால் இருக்குமோ.? என்ற எண்ணம் வருவதை தடுக்க இயலவில்லை. அதுவும் இந்த கொரோனா காலகட்டம் முடிந்த தறுவாயில் பள்ளிகளுக்கு செல்லவே குழந்தைகள் வெறுக்கிறார்களோ என்ற பயமும் வருகிறது. தங்களின் நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதுவும் இந்த கொரோனா காலகட்டம் முடிந்த தறுவாயில் பள்ளிகளுக்கு செல்லவே குழந்தைகள் வெறுக்கிறார்களோ..//

   நிதர்சனமாகத் தெரிகின்றது..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
   அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 14. குழந்தைள் மற்றையவர்களை மதிக்க பழக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. இங்கே அமெரிக்கக் கலாசாரம் வந்து கெடுத்துவிட்டது. அங்கே தான் குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டிக்கக் கூடாது எனவும் கண்டிக்கும் ஆசிரியருக்குத் தண்டனை கொடுப்பதுமாகவும் இருந்து வந்தது இந்த உலகமயமாக்கலில் எல்லாமே இப்போது வெட்ட வெளிச்சமாகிவிடக்குழந்தைகள் நல்லொழுக்கத்தை விட அவங்களை ஏதும் சொல்லக் கூடாது. தவறு செய்தாலும் ஆசிரியரைக் கேவலமாகப் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருக்கணும் என்றும் ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..