நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2022

வண்ணம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கடந்த ஞாயிறன்று (21/8) எபி யில் சகோதரி கீதாரங்கன் அவர்கள் வழங்கியிருந்த பதிவைக் கண்டதும் எனக்குள் உற்சாகம்..  

அந்த உற்சாகத்தைக் கொண்டு வண்ண மயமான வாழ்வின் ஒரு பகுதியை எளியதொரு கவிதையாகக் காட்டுவதற்கு முயன்றிருக்கின்றேன்.. 

நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.. 
இந்தக் கவிதையின் வெற்றி அவர்களுக்கே!..


வண்ணம் வண்ண மயம்
***
பாலொரு வண்ணம்
அமுதொரு வண்ணம்
தாய்மடி வண்ணம்
தாங்கிய வண்ணம்

நாளொரு வண்ணம்
பொழுதொரு வண்ணம்
கல்வியின் வண்ணம்
கலையா வண்ணம்

சிந்தையின் வண்ணம்
சீர்தரும் வண்ணம்
நாட்களின் வண்ணம்
நழுவா வண்ணம்

நலந்தரு வண்ணம்
நங்கையின் வண்ணம்
பரவிடும் வண்ணம் 
பார்த்திடும் வண்ணம்


பாவையின் வண்ணம்
பல்சுவை வண்ணம்
பாரினில் வண்ணம்
படைத்தவன் வண்ணம்

கையொரு வண்ணம்
காந்தளின் வண்ணம்
காலொரு வண்ணம்
கமலத்தின் வண்ணம்

கண்ணொரு வண்ணம்
கலையொரு வண்ணம்
கவிதையில் வண்ணம்
கனவினில் வண்ணம்

கருங்குழல் வண்ணம்
கார்முகில் வண்ணம்
கனியிதழ் வண்ணம்
கதைதரும் வண்ணம்

நடையொரு வண்ணம்
இடையொரு வண்ணம்
அவளொரு வண்ணம்
இவனொரு வண்ணம்

அழகினில் வண்ணம்
அன்பினில் வண்ணம்
காதலின் வண்ணம்
கருதிடும் வண்ணம்

மஞ்சளின் வண்ணம்
மங்கல வண்ணம்
குங்கும வண்ணம்
கொடிமலர் வண்ணம்


கலந்திடும் வண்ணம்
காலத்தின் வண்ணம்
மலர்களின் வண்ணம்
மாலையின் வண்ணம்

மாலையின் வண்ணம்
மலர்ந்திடும் வண்ணம்
மனதினில் வண்ணம்
மகிழ்ந்திடும் வண்ணம்

வனங்களின் வண்ணம்
வாழ்ந்திடும் வண்ணம்
தமிழ்தரும் வண்ணம்
தழைத்திடும் வண்ணம்

நலந்தரும் வண்ணம்
வளந்தரும் வண்ணம்
வழியினில் வண்ணம்
வாழ்வினில் வண்ணம்..
ஃஃஃ

வாழ்வே வண்ணம்
வாழ்கவே வண்ணம்!..
***

22 கருத்துகள்:

  1. கலைநய வண்ணம் கவிதையின் வண்ணம் 
    கவிமிகு எண்ணம் கவிதையின் வண்ணம்!
    கவிதையின் வண்ணம் அனைவரும் ரசிப்பது திண்ணம்.

    எல்லோரும் ரசிக்கும் வண்ணம் கவிதை படைத்து விட்டீர்கள்.  ஊறுகாயாக மாருதி ஓவியங்கள்..  கேட்கவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  2. கலைநய வண்ணம் கவிதையின் வண்ணம்
    கவிமிகு எண்ணம் கவிதையின் வண்ணம்!
    கவிதையின் வண்ணம் அனைவரும் ரசிப்பது திண்ணம்.

    எல்லோரும் ரசிக்கும் வண்ணம் கவிதை படைத்து விட்டீர்கள். ஊறுகாயாக மாருதி ஓவியங்கள்.. கேட்கவும் வேண்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணக் கருத்துரை அருமை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. நீண்ட கவிதை இரசித்து படித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி

      நீக்கு
  4. அழகான ஓவியங்கள், அருமையான கவிதை.
    உங்கள் சொல் வண்ணம், அழகான எண்ணத்தில் மலர்ந்த்து கவிதை.
    வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. ஆஹா துரை அண்ணா உங்கள் எண்ணங்களில் வண்ணக் கவிதை!!! எத்தனை வண்ணங்கள்!
    கவிதை அட்டகாசம்.! மிகவும் ரசித்து வாசித்தேன். மிக்க நன்றி துரை அண்ணா நான் பகிர்ந்திருந்த படங்கள் இயற்கையின் வண்ணக் கலவை! உங்களின் கற்பனை வண்ணககலவை கொண்டு கவிதையைத் தீட்ட வைத்திருக்கின்றன!
    இது உங்களின் படைப்பு வெற்றி. இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் திறமை! எனவே எல்லாப் புகழும் இறைவனுக்கே!

    மீண்டும் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // உங்களின் கற்பனை வண்ணககலவை கொண்டு கவிதையைத் தீட்ட வைத்திருக்கின்றன..//

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  6. மாருதி அவர்களின் படங்கள் அழகு!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வண்ணக் கவி மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. வண்ணமயமான கருத்து இட்டிருந்தேன். போன இடம் தெரியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவே வண்ண மயம் தான்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  9. பழைய பதிவுகள் எல்லாவற்றிலும் கருத்து இட்டிருந்தேன். போகலை போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னவோ தெரியலை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  10. கவிதை மிக அருமை. ரசித்து வாசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரைக்கு நன்றி துளசிதரன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..