நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2022

கணபதி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நாளை
புதன்கிழமை
ஆவணி வளர்பிறை
நான்காம் நாள்

ஸ்ரீ விநாயக சதுர்த்தி


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு ..


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா..
-: ஒளவையார் :-

மேற்கொண்ட இரு பாடல் களையும் செய்தருளியவர் தமிழ் மூதாட்டியான ஔவையார்..

நா வண்மை படைத்த நற்றமிழ்ப் புலமை ஔவையாருடையது..

பதிவின் இரண்டாவது பாடலை அரைகுறையாய்க் காதில் வாங்கி விட்டு -

அந்தக் காலத்தில்
ஔவையாரே பிள்ளையாருக்கு லஞ்சம் கொடுத்திருக்கின்றார் - என்று பலர் கதறுகின்றனர்..

வீரத் தமிழச்சி ஔவையார்..
எவரிடத்தும் இரந்து நின்றவரில்லை..

சங்கத் தமிழ் எனும் விலை மதிப்பற்ற அமுதத்தைப் பெறுவதற்காகத் தான் விலை மதிப்புறும் நான்கு பொருட்களைக் கொடுத்திருக்கின்றார்..

எதையும் விலையின்றிப் பெறுவது பெருந்தவறு என்பது அவருக்குத் தெரியும்..

சரி.. 

ஔவையார் கொடுத்த பொருட்கள் நான்கு.. பிள்ளையாரிடம் கேட்டது மூன்று..

நான்கினைத் தந்த ஔவையாருக்கு ஐந்தினைத் தந்திருக்கின்றார் பிள்ளையார்..

அவை என்னென்ன?..

கருத்துரையில் சொல்லுங்க!..

ஔவையார் திரைப்படத்தில் அப்போது வெகுவாகப் புகழ்ந்து பேசப்பட்ட காட்சி!..


ஓம் கம் கணபதயே நம

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வீரத் தமிழச்சி - இந்த வார்த்தை ஏன் எழுதியிருக்கிறீர்கள் என்பதே பலருக்குப் புரியாது. மன்னர்களின் போரைத் தடுக்கும் நெஞ்சுரமும், மதிப்பற்ற நெல்லிக்கனியைப் பிறருக்குக் கொடுக்கும் வண்மையும் பெற்றவரல்லவா?

    பதிலளிநீக்கு
  3. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். முன்னதாக...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா30 ஆகஸ்ட், 2022 11:17


    எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன்.
    இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ், அகவலில் கூறிய யோக முத்தி நிலை, இறுதியில் கைலாஸ தரிசனம் / தன்னோடு சேர்த்து அருளியது…

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா30 ஆகஸ்ட், 2022 12:03


    முதுமை கோலம் அருளியது, அதியமான் கொடுத்த நெல்லிக் கனி இந்த லிஸ்டில் சேராது சரியா? :-)

    வைஷ்ணவி

    பதிலளிநீக்கு
  6. காணொளி கண்டேன் அதில் இருக்கிறது உங்களின் கேள்விக்கான விடை? அப்பாடலில் வருகிறதோ! வார்த்தைகளால் சொல்லத் தெரியவில்லை. அவர் முக்தி நிலை கொடுத்து கைலாச தரிசனம் (இப்போதுதான் அக்கதை வாசித்தேன்) கொடுக்கிறாரே பிள்ளையார் ஐந்தையும் ஒன்றாக அப்புறம் வேறு என்ன வேண்டும்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. காணொளி பார்த்தேன். பாடல்கள் கேஸ்ட் வைத்து இருக்கிறோம்.ஒளவையார் பட பாடல் "வாக்கு இருந்தால் மட்டும் போதாது நல்ல மனம் இருக்க வேண்டும் "என்ற பாடல் ஒலிக்க விடுவார்கள். மற்றும் வானொலியிலிருந்து என் கணவர் பதிவு செய்த பிள்ளையார் பாடல்கள் ஒலிக்க விடுவார்கள். இப்போது அவர்கள் இல்லை, டேப்ரிக்காடரும் மக்கர் செய்கிறது. கேஸ்ட் போட்டால் சிக்கி கொள்கிறது. இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு யூடியூப்பில் ஒலிக்க விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு கருத்து நிறைந்த பதிவுக்கு நன்றி. யார் என்ன சொன்னால் என்ன? விநாயகருக்கு இதனால் எல்லாம் புகழோ, பெருமையோ குறையப் போவதில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..