நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 07, 2019

விருந்தினர் பக்கம் 04

அன்பின் நெ.த. அவர்களின் 
பயணக் குறிப்புகள்..
ஃஃஃ

நாயக்க வம்சத்தில் 1563-1573ல் மதுரையை ஆட்சி செய்தவர்
குமார கிருஷ்ணப்ப நாயக்கர் (நாயக்க என்று குறிப்பிடப்படுகிறார்கள்)...

அவர்களுடைய காலத்தில் நெல்லையில் கோயில்களில் நிறைய சிற்பங்கள் வடிக்கப்பெற்றன. இதனை கிருஷ்ணப்ப நாயக்க ஆதரித்ததாகத் தெரிகிறது (பொருளுதவி, கோயில் கட்டுதல் போன்று)...


அந்தக் காலத்தைய நுணுக்கமான சிற்பங்கள் நெல்லையப்பர், கிருஷ்ணாபுரம், திருக்குறுங்குடி கோயில்களில் இருக்கின்றன. 

எனக்கு இருந்த இயல்பான ஓவிய ஆர்வம் காரணமாக, கல்லூரி படிக்கும் காலத்தில், பாளையங்கோட்டை தெற்கு பஜார் லாலா கடையில் இனிப்புகள் கட்டிக் கொடுப்பதற்காக வைத்திருந்த பழைய புத்தக அடுக்கில், ஓவியர் சில்பி அவர்களின் புத்தகம் ஒன்றைப் பார்த்து வாங்கினேன் (1980களில்)...

அதனைப் பார்த்து ஒரு ஓவியம் வரைந்து, அது எங்கள் கல்லூரி மேகசினில் வெளியிடப்பட்டது (1983 அல்லது 1984ல் தூய சவேரியார் கல்லூரி மேகசின்).

ஆனாலும் நான் நெல்லையில் இருந்த வரையில் கிருஷ்ணாபுரம் கோயிலுக்குச் சென்றதில்லை. (உள்ளூர் சிவன் கோயிலுக்கே சென்றதில்லை ஹா ஹா).  கிருஷ்ணாபுரம் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு சென்ற ஆண்டில் கிடைத்தது.  அது வெங்கடேசப் பெருமாள் கோயில். அதில்தான் ஏகப்பட்ட சிற்பப் பொக்கிஷங்கள் குவிந்து கிடக்கின்றன...

பார்வையாளர்கள் தங்கள் கைவரிசையைக் காண்பித்து சிற்பங்களை உடைத்துவிடுவதால் இப்போது காவல் போட்டிருக்கிறார்கள். எனக்கு அங்கு இருந்த ஆர்வலர் ஒருவர் சிற்பங்களை விளக்கிக்கூறினார் (நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க...


அப்புறம் கடைசியில் அவர், எனக்கு அப்புறம் இந்தச் சிறப்புகளைச் சொல்ல இங்கு யாருமே இல்லை என்று வருத்தமும் பட்டார்). புகைப்படம் எடுக்க அனுமதி கொடுக்கலை. பிறகு என் ஆர்வத்தைப் பார்த்து சிலவற்றைப் படம் பிடித்துக்கொள்ள அனுமதி கொடுத்தார் (அனுமதி கொடுக்காமலும் சில படங்களை எடுத்தேன்)

நான் ஓவியர் சில்பியின் ஓவியத்தைப் பார்த்து வரைந்த படம், அங்கு சிற்பமாகப் பார்த்தபோது எனக்குள் எழுந்த உணர்ச்சியைச் சொல்ல இயலாது.  என்னிடம் அந்த மேகசின் இல்லை...

ஆனால் ஓவியர் சில்பியின் புத்தகத்தை (நான் வாங்கும்போதே சிதைந்திருந்தது) 39 வருடங்களாக நான் சென்ற தேசங்களுக்கும் என்னுடன் எடுத்துச் சென்று பாதுகாத்திருக்கிறேன்...


அதில் இருக்கும் சில ஓவியங்களையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

சில சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு...

ரதிதேவி
வீரபத்ரன்
அப்ஸரஸ் நடனம்
ராஜகுமாரியைக் கடத்தும் குறவன்
ராஜகுமாரனைக் கடத்தும் குறத்தி
கம்பி வலைக்குள் சிற்பங்கள்  
யானை காளையின் தலை ஒன்றே.. பார்க்கும் கோணங்களில் வித்தியாசம்
ஆமாம்… நீங்க ஏதோ படம் வரைந்தீங்கன்னு சொல்றீங்களே… கதைதானே!... - என்று சந்தேகப்படுபவர்களுக்கு….

எனது ஐந்து நிமிட ஸ்கெட்ச்...


நெல்லையின் கை வண்ணம்
நேரம் கிடைக்கும்போது பூர்த்தி செய்கிறேன்...

இது ஓரிரு மணி நேர வேலை...

(நாங்க டமிள்ள டி என்று சொல்லிக்கிட்டே இருக்கமாட்டோம்…  தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவில், மாவட்டத்தில் பள்ளிகளுக்கிடையே நடந்த ஓவியப் போட்டியில் இரண்டாவது பரிசை ம.பொ.சிவஞானம் அவர்களிடமிருந்து பெற்றவனாக்கும்.. க்கும் ..க்கும்.)

அடுத்த சந்திப்பு - வழக்கம் போல அடுத்த பதிவில்!...

ஒன்னும் புரியலையே!?..
ரதிய வரைஞ்சதுக்கு
எதும் காரணம் இருக்குமோ!.. 

ஏதாவது இருந்துட்டுப் போகட்டும்..
நாம - நல்லதா நாலு வரி எழுதி வைப்போம்!..

நிமிடங்கள் ஐந்தில் அழகோவியம் 
அது ஆரணங்காம் ரதி எழிலோவியம்..
பேசாத பெண் இவள் பொன்னோவியம்..
பேசி விட்டால் தமிழ்ச் சொல்லோவியம்!..

அன்னத்தின் மீதேறி அழகு முல்லை
அவள் வந்திருக்கின்ற இடம் தமிழ் நெல்லை
ஓவியப் பாவை அழகிற்கு எல்லை..
ஒருக்காலும் இவளுக்கு நிகர்வேறு இல்லை..

அன்பின் நெல்லைத் தமிழன் அவர்களின் கைவண்ணமும்
அதற்காக எளியேனின் கவி வண்ணமும்
தங்களைக் கவர்ந்திருக்கும் என நம்புகிறேன்..

வாழ்க நலம்.. 
 ஃஃஃ 

67 கருத்துகள்:

 1. குட்மார்னிங். அழகிய புகைப்பதனால். கலைப்பொக்கிஷங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம்.... மிக நேர்த்தியான கலைப்படைப்புகள். நம்ம மக்கள் வில்லின் ஒரு பாகத்தை உடைப்பது, சிற்பத்தின் விரலை நொடிப்பது என்று வேலையைக் காட்டியிருக்காங்க.

   இப்போ சிலைத் திருடர்கள் (பல வருடங்களாக) ஜாஸ்தி ஆகிட்டாங்க. கோவில் பாதுகாப்புக்கு நிறைய ஆட்கள் இல்லை. அதனால் கேமராவைத் தூக்கினாலே சந்தேகப்படறாங்க.

   நீக்கு
  2. ரொம்பவே தப்பு வருது டைப்பிங்கில்..

   பார்க்காமலேயே அவசரமாக போட்டு விட்டுப் போய்விடுகிறேன்.

   புகைப்பதனால் அல்ல... புகைப்படங்கள்.

   நீக்கு
  3. ஆமாம் ஸ்ரீராம்... எனக்கும் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும்போது தவறு நேரிடுவதில்லை. மொபைல் அல்லது ஐபேடில் தவறு நேரிட்டுவிடுகிறது.

   ஆனால் சுலபமா புரிஞ்சிக்க முடிகிறது.

   நீக்கு
  4. இது நான் கணினியில் தட்டச்சு செய்ததுதான்.

   நீக்கு
 2. தனக்குப்பிறகு அந்த இடங்களின் சிறப்பைச் சொல்வதற்கு ஆளில்லை என்கிற அவரின் வருத்தம் மனதைத் தொட்டது,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் நிறைய நுணுக்கங்களைக் காண்பித்தார். சிலைகளில் விலா எலும்புகள் தெரியும்படி உள்ளது, விரல் நகத்தின் எழில் என்று பலவற்றைக் காண்பித்தார். இந்த மாதிரி கோவில்களுக்கு வருபவர்கள் குறைவு. அதிலும் நுணுக்கங்களை அறிவதற்காக வருபவர்கள் மிகக் குறைவு. இந்த மாதிரி சேவை செய்பவர்களுக்கு வருமானத்துக்கு என்ன ஆதாரம்?

   நவ திருப்பதி கோவில்ல ஒரு கோவில்ல, அங்கிருந்தவர், இந்த மண்டபம் பாண்டியரால் கட்டப்பட்டது, அங்க மேல பாருங்க அவங்க சின்னமான 'மீன்' பொறித்துவைத்துள்ளார்கள் ('றி'-நல்லாப் பாத்துக்குங்க) என்றெல்லாம் காண்பித்தார்.

   நீக்கு
  2. தஞ்சை அரண்மனையில், உலோகச் சிற்பக்கூடத்தில் நான் சில சிற்பங்களைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே இருந்த ஒருவர் என்னிடம் வந்து, என்ன பார்க்கின்றீர்கள் என்றார். நான், அங்கே இருக்கும் 'திருமங்கை ஆழ்வார்' சிலை இப்படி எங்குமே பார்த்ததில்லையே, இது வேறு ஒருவருடைய சிலை மாதிரினா இருக்கிறது என்றேன். அவருக்கு (அவர் அங்கு வேலை பார்ப்பவர்) ரொம்ப சந்தோஷமாகி நிறைய பேசிக்கொண்டிருந்தார். அவர்தான், ஸ்ரீதேவி, பூதேவி சமேத விஷ்ணு சிலையில், எது ஸ்ரீதேவி எது பூதேவி என்று வித்தியாசம் காண்பது என்பது பற்றியெல்லாம் சொன்னார்.

   நம்ம ஆர்வம், ஒத்த ஆர்வத்தை உடையவர்களை நம்பால் ஈர்க்கும்.

   நீக்கு
  3. எனது சிறுவயதில் தஞ்சைக்கு கோவில்களில் சுற்றியிருக்கிறேன், விளையாடி இருக்கிறேன்.

   விவரம் வந்ததும் நுணுக்கமாக ரசிக்க சமீபத்தில் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை.

   நீக்கு
  4. கொஞ்சம் வேலைகளோட, இருக்கும் நிறைய பிரச்சனைகளோட அந்த அந்த இடங்களுக்குப் போனால் ரசிப்பது கடினம். நான், 'ராஜராஜன்' பெயர் போட்ட கல்வெட்டைத் தேடிக் கண்டுபிடித்தேன். அப்புறம், ராஜராஜன் அரசனாக நுழைவதற்குரிய வாசலையும் (அந்த விஷயம் தெரிந்ததால்) பார்த்தேன். கண்டிப்பாக போய்ப் பாருங்க. நிறைய ரசிக்கமுடியும்.

   நீக்கு
 3. நீங்கள் வரைந்த ஓவியத்தைக் காட்டியிருக்கக்கூடாதா என்று நெல்லையைக் கேட்பதற்கு முன் புதிதாகவே வரைந்து காட்டி விட்டார். அபார திறமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்... இந்தத் திறமைகள் எல்லாம் எல்லோரிடமும் உண்டு.

   எனக்கு சிறிய வயதிலிருந்தே வெட்கப்படாமல் திறமைகளை வெளிக்காட்டுவது பிடிக்கும். பாடத் தெரியுதோ இல்லையோ, கூட்டத்தில் பாடச் சொன்னால் பாடிவிடுவேன். ராகம் தவறு, சந்தம் சரியில்லை என்ற கமெண்டைப் பற்றியெல்லாம் நான் கவலையே படமாட்டேன்.

   எங்க அப்பா, என் திறமைகளை வளர்க்கும் உதவியைச் செய்யவில்லை. படிப்புதான் முக்கியம் என்று சொல்லியே வளர்த்தார். (நான் மட்டும் என்னவாம்... என் பசங்களையும் அப்படித்தான் வளர்த்தேன். அந்தக் கதையையும் இங்கு எழுதறேன்)

   நீக்கு
  2. என் பெண்ணுக்கு அங்க ஒரு டீச்சர், கர்நாடிக் மியூசிக் கத்துக்கொடுத்தார். அவர் வீட்டிற்குப் போய் கத்துப்பா (6-7வது படிக்கும்போது). எனக்கு அவளுடைய மதிப்பெண் ஒரு முறை குறைந்ததன் காரணமான்னு தெரியலை, மியூசிக் டியூஷன் போகவேண்டாம்னு சொல்லிட்டேன். ஓரிரு வருடங்களில் என் அம்மா பஹ்ரைனுக்கு வந்தபோது, இவள் பாடுவதைக் கேட்டு, என்னைக் கடிந்துகொண்டார். (எனக்கும் அவள் பாடும்போது மனதை உருக்கிவிட்டது. அவளுக்கு அவ்வளவு அருமையான குரல்-அப்போது). அப்புறம் மியூசிக் டியூஷனில் நான் தலையிடுவதில்லை. எங்க அப்பாவின் 'படிப்புதான்' என்ற குணம் என்னுள்ளும் இருப்பதால். என் பெண் அவளே, க்விஸ் ப்ரோக்ராமில் கலந்துகொண்டு பரிசுகள்லாம் சின்ன வயசுல வாங்கியிருக்கா.

   இப்போவும் என் பெண், பாடுவது, கைவினைப் பொருட்கள் செஞ்சானா, என்னோட ஜீன், அதுனால்தான் என்று சொல்லிடுவேன்.. ஹா ஹா.

   நீக்கு
 4. முத்தாய்ப்பாய் துரை ஸார் எழுதி இருப்பவற்றை ரசித்தேன். பொருத்தமான படமும் கூட!

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. வாங்க கரந்தை சார்... நேற்றுக்கூட உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். விரைவில் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

   நீக்கு
 6. கிருஷ்ணாபுரத்தில் எங்களை எடுக்கவே விடவில்லை. கூடவே வந்து கொண்டிருந்தார். எல்லாத்துக்கும் முகராசி வேணும் போல! முன்னர் நவ கைலாயம், நவ திருப்பதி போனப்போ, (சுமார் 12 வருடங்கள் முன்னர்) காமிராவெல்லாம் எடுத்துச் செல்லவில்லை. அப்போ இருந்தது ஃபில்ம் மாற்றும் காமிரா வேறே! பின்னர் டிஜிடல் காமிரா வந்ததும் படங்கள் அதிகம் எடுத்தது எனில் வெளிநாட்டில் தான். யு.எஸ்ஸில். நம்ம நாட்டில் அதிகம் எடுக்க முடிவது இல்லை. ஒரு சில படங்கள் தெரியாமல் அலைபேசி மூலம் எடுப்பேன். அதுவும் பயம்மாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்...

   வெளிநாட்டில் புகைப்படம் எடுக்க பெரும்பாலும் எந்த வித ரெஸ்டிரிக்‌ஷனும் கிடையாது (அங்கேயும் சிலவற்றை கொஞ்சம் தயக்கத்துடனே எடுத்திருக்கிறேன். ஒரு சில சமயங்களில் திட்டும் வாங்கியிருக்கிறேன். உதாரணமா, பாரிஸ் ஒரு இரயில் நிலையத்தின் வெளியே, சட்டவிரோதமான இடத்தில் வியாபாரம் செய்துகொண்டிருந்தவரை புகைப்படம் எடுத்தபோது கன்னா பின்னா என திட்ட ஆரம்பித்துவிட்டார். அங்கு டியூப் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பதையும் தயக்கத்துடனேயே புகைப்படமாகவும் காணொளியாகவும் எடுத்திருக்கிறேன் - நம்ம நாட்டில் மட்டும் பிச்சைக்காரர்கள் இல்லை என்ற திருப்திக்காக.). ஆனா ஒண்ணு சொல்லணும்... அங்க புகைப்படம் எடுக்கறவங்க, பிறருடைய அந்தரங்கத்தை மதிக்கிறாங்க (நான் அப்படி மதிக்கவில்லை என்பதும் உண்மை).

   நம்ம ஊர்ல, தேவையில்லாமல் தடுக்கறாங்க என்பது என் எண்ணம்.

   நீக்கு
 7. நானும் இதனைப்போலவே எனது பொக்கிஷங்களை கூடவே வைத்து இருக்கிறேன் அபுதாபியில் வாழ்ந்த போதும்கூட...

  அதில் ஒன்று இலைச்சறுகு (அதைத்தந்தது முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு கன்னி)

  வேதனையான விடயம் இன்று எனது வாழ்க்கை போலவே அவளது நிலையும்...

  சமீபத்தில் அந்த இலைச்சறுகை அவளிடம் காண்பித்தேன் கதறி அழுது விட்டாள்.

  அவளது அழுகைக்கு காரணமான சறுகை முப்பது வருடங்களுக்குப் பிறகு குப்பையில் வீசிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கில்லர்ஜி..... உங்கள் பின்னூட்டம், எனக்கு என்ன என்னவோ நினைவலைகளை (இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது) என்னுள் எழுப்புகிறது.

   எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்
   இதுதான் வாழ்க்கை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

   நீக்கு
  2. நமக்கு வாய்த்த வாழ்க்கைதான் நமக்கு ஏற்றது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை எப்படி நாம் அறிவோம்? ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.....

   உங்க பின்னூட்டத்தைப் பார்த்த உடன், எனக்கு திருச்சி வை.கோபாலகிருஷ்ணன் சாரின் பதிவு ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. அவர் கதை போன்று எழுதியிருந்தாலும், அதில் ஓரளவு அவரது வாழ்க்கைச் சம்பவங்களைக் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன் (ஒரு பெண் அவரை விரும்பியவள், இன்னொருத்தியை இவர் விரும்பினார்).

   நீக்கு
  3. கில்லர்ஜியின் பின்னூட்டம் பல செய்திகளைத் தருகிறது. விரைவில் கில்லர்ஜியோ அல்லது நீங்களோ செவ்வாய்க்கிழமை. கே.வா.போ.க. இதைக்குறித்து எழுதி அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
  4. என்னோட பிறந்த நாளோ, கல்யாண நாளோ மனதுக்குள் தான் கொண்டாடுவேன். இன்னும் சொல்லப் போனால் நம்ம ரங்க்ஸுக்கு என்னோட பிறந்த நாளே முன்னால் எல்லாம் தெரியாது. குழந்தைகள் பெரியவங்களா விபரம் தெரிந்தவங்களா ஆனப்புறமாத் தான் கேட்டுக் கேட்டு வாழ்த்துக் கார்டு வாங்கித் தருவார்கள். பிறந்தநாளைக்கு வெளியே போய்ப் போஸ்ட் பண்ணிட்டு ஒண்ணுமே சொல்லாமல் பள்ளிக்குப் போயிடுவாங்க. தபாலில் வரும் கார்டுகளைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கும்.அந்தக் கார்டுகளை எல்லாம் சேர்த்து வைத்துள்ளேன். அதன் பின்னர் பேத்திகள் கொடுத்தது, சின்னப் பேத்தி அப்பு எழுதியவை என பத்திரமாக இருக்கு. ஆனால் அவர் தான் பைத்தியம், சின்னக்குழந்தையாட்டமா இது என்ன? என்பார். இன்னும் குஞ்சுலுவிடம் இருந்து தான் வரலை! அதுக்கு இன்னும் வயசாகலையே! :))) தீபாவளி மலர் ஓவியங்கள், பத்திரிகைகளில் வரும் சித்திரங்கள்னு நிறையக் கலெக்‌ஷன் இருந்தது. :(

   நீக்கு
  5. கீசா மேடம்... இதெல்லாம் அப்படியே எழுதினா கட்டுரையாயிடும். மசாலா சேர்த்தால், அந்நியமாயிடும்.

   எனக்கு எப்போவுமே தோணும்... அடடா இவ்வளவு இம்மெச்சூர்டா நாம இருந்திருக்கோமே.... எதிலும் வழுக்காம ஆண்டவன் கரை சேர்த்துட்டாரே.. ஓரளவு நல்ல வாழ்க்கை கொடுத்தாரேன்னு.....

   நீக்கு
  6. எனக்கு இந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கார்டு இதிலெல்லாம் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கை இல்லை (ஒருவேளை மனசுல, எங்க, பசங்க, பிறந்தநாள் கொண்டாடு என்று சொல்லி செலவு இழுத்துவிட்டுடப்போகுதோன்னு எச்சரிக்கை உணர்வாக்கூட இருக்கலாம். ஹா ஹா).

   ஆனா பெண், அவள் அம்மாவுக்கு எப்போதும் பிறந்த நாள் வாழ்த்துகள் எழுதி (மெனக்கெட்டு தயாரித்துத்) தருவாள். பையனும் அதனைக் காப்பி அடிப்பான்.

   எனக்கு என் நண்பன் பிறந்தநாள்தான் மனசுல இருக்கும். அந்த மாதத்தில் வரும் மனைவியின் பிறந்தநாள், 23ஆ 25ஆ என்று எப்போதும் குழப்பமாக இருக்கும். 29ம் தேதி வரும், நண்பனின் பிறந்தநாளைக்கு எந்த உலகத்தில் இருந்தாலும் போனில் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லுவேன்.

   ரங்க்ஸ்லாம், எல்லா நாட்களும் தங்களோட மனைவியை நினைத்திருப்பதால் (நெஞ்சில் நிலைத்திருப்பதால்), ஒரு நாள் என்று ஸ்பெஷலாகக் கொண்டாடுவதில் விருப்பம் வைப்பதில்லை.... (என்று நீங்க ஆறுதல் பட்டுக்கணும்... ஹா ஹா)

   நீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  8. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனைப்போலத்தான் இங்கும் எங்கள் வட்டத்தில் ஒரு நண்பர் இருக்கிறார்ர்.. மனைவியின் பேர்த்டே அன்று காலைதான் அவசரமாக கார் எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடிப்போய்க் கார்ட்டும் பொக்கேயும் வாங்கிக் குடுப்பாராம்ம் ஹா ஹா ஹா மனைவிக்கும் அது இப்போ பழகி விட்டது.. இவர் அப்படித்தான் என:)).. அதுதானே ஏற்றுக் கொண்டு வாழ்வதென.. புரிதல்.. ஆனா அவருக்கு எல்லாமே மறதிதான்..

   ஆனா அதுக்காக இப்பூடி நண்பனை நினைவில் வைத்து மனைவியை மறப்பது டப்பூஊஊஊஊ:).. சாட்டூஊஊஊஊஊ கர்ர்ர்ர்ர்ர்:)).

   நீக்கு
 8. துரை செல்வராஜு சார்... உங்கள் கவிதையை ரசித்தேன். (தனியா இருக்கறவங்களுக்கு, பெண்ணின் ஓவியத்தைப் பார்த்தாலே கவிதை மழை பொழியுமோ? தெரியலை... கவிதை எழுதுறவங்கள்டதான் கேட்கணும்)

  'முல்லை', 'நெல்லை', 'எல்லை'னுலாம் போட்டிருக்கீங்க. நல்லவேளை 'தொல்லை'னு போடலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..
   தனிமை என்னைப் பொறுத்தவரை தவம்.. சித்தானந்த தவம்...அந்த நேரத்தில் மனமானது இந்தவேளையில் ஆறு அருவி கோயில் குளம் என அழகில் திரிந்து கிடக்கும்..

   இப்போதெல்லாம் சிலை சிற்பங்கள் பூக்கள் இலைகள் பறவைகள் இவற்றைக் கண்டால் ஏதாவது நாலுவரி எழுதத் தோன்றுகிறது...

   நீக்கு
  2. அப்படியென்றால் துரை செல்வராஜு சார்... உங்களுக்கு தியானம் கைவரக் கூடும். எனக்கு 3 வருடங்களுக்கு மேல் முயற்சித்தும் மனது ஒருமுகப்படவில்லை ஆனால் சக்கரத்தில் உயிரோட்டம் மிக மெதுவாகத் தெரிய ஆரம்பித்தது (இரண்டு மூன்று இடங்களில்). அப்புறம் தொடரவில்லை (என் மனைவி நான் அதில் இறங்குவதை விரும்பாததால்) தியானம் செய்கிறீர்களா?

   நீக்கு
 9. நெல்லைத் தமிழன் கைவண்ணம், துரை அவர்களின் கவி வண்ணம் இரண்டும் அருமை.
  கிருஷ்ணாபுர சிற்பங்களும், சில்பியின் ஓவியமும் அழகு.
  பகிர்வு நன்றி.

  நாங்கள் திருவெண்காட்டில் இருக்கும் போது சில்பி அவர்கள் திருவெண்காடு கோவிலை, சிற்பங்களை வரைந்து கொண்டு இருந்தார். அவரிடம் பேசினோம். அப்போது எல்லாம் காமிர கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம்...

   ஒரு ஓவியம் வரைய குறைந்தபட்சம் 3-4 மணி நேரங்களுக்கு மேல் ஆகும். எப்படித்தான் அவ்வளவு பொறுமையா சில்பி அவர்கள் வரைந்தாரோ. கோவில் மூல மூர்த்திகளை வரைவதற்கு பரமாச்சார்யார், அவருக்கு சிறப்பு அனுமதிக் கடிதம் கொடுத்திருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

   சில்பி ஓவியம் வரையும்போது பார்த்தீர்களா? அபூர்வ வாய்ப்பு, படம் எடுக்காமல் விட்டுவிட்டீர்களே (அப்போது அதற்கு வாய்ப்பு எதுவும் இல்லை என்றும் தெரியும்)

   நீக்கு
  2. துர்க்கை கோவில் பக்கம் ஒரு மண்டபம் இருக்கும் ஐந்தாம் திருவிழா நடக்கும் இடம். அந்த மண்டப மேடையில் உட்கார்ந்து குழந்தைகள் படிக்க முன்பு மர டெஸ்க் வைத்து இருப்போம் அல்லவா? அதில் வைத்துக் கொண்டுதான் வரைந்தார். உங்கள் ஓவியங்களை தீபாவளி மலரில் பார்த்து இருக்கிறோம், நீங்கள் வரைந்த சிதம்பர் கோவில் படம் எங்கள் வீட்டில் இருக்கிறது என்றெல்லாம் பேசினோம். எல்லா வற்றிற்கும் புன்னகை.

   நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டார் பின் தன் பணியை தொடங்கி விட்டார்.

   வீட்டுக்கு போய் நோட்டு எடுத்து வந்து அவர் கையெழுத்தை வாங்கி இருக்கலாம். தோன்றவில்லை.

   காமிரா எல்லாம் அப்போது அதிகபடி செலவு என்று நினைக்கும் காலம்.
   என் அப்பா வைத்து எப்போது பார்த்தாலும் எடுத்து கொண்டு இருப்பார்கள்.
   பிரிண்ட் போட காசு அதிகம் உள்ள காலம். கலர் படம் எடுத்தால் சென்னை, பம்பாய் என்று போய் வரும். 70ல் எங்கள் வீட்டில் அக்காவிற்கு திருமணம் நடந்தது திருமணத்திற்கு கருப்பு, வெள்ளை. மறுவீட்டுக்கு கலர் படம்.
   அந்த படங்கள் பம்பாய் போய் கழுவி பிரிண்ட் போட்டு வர ஒரு மாதத்திற்கு மேல் ஆச்சு.

   நீக்கு
  3. //அவர் கையெழுத்தை வாங்கி// - கோமதி அரசு மேடம்... இது எனக்கு மூன்று சம்பவங்களை நினைவுபடுத்துகிறது.

   சென்னை-மும்பை முதல் வகுப்பில் ஒரு தடவை பயணித்தபோது, அடுத்த சீட்டில் (இடையில் இடைவெளி) டி.எம்.எஸ் அவர்களும் அவருடைய பையனும் பயணித்தார்கள். நான் அவரிடம் பேசும் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டேன். புகைப்படம் கூட எடுக்கலை.

   இரண்டாவது, சென்னை ஃப்ளைட்டுக்கு (அப்போல்லாம்) பஸ்ல (செக்யூரிட்டிக்கு அப்புறம் பஸ்ஸில் ஏறி, ஃப்ளைட் பக்கத்துல நிறுத்துவாங்க, நாங்க ஏறிக்கணும்) போகும்போது என் அருகில் கவாஸ்கர் அமர்ந்துவந்தார். மொத்தம் மூன்று பேர்கள்தாம் (ஏன்னா நாங்க லேட்டா கிளம்பினோம்). அப்போவும் கையில் இருந்த 100 ரூபாய் நோட்டில் அவர் கையெழுத்து வாங்கலாம்னு தோன்றாமல் போய்விட்டது.

   அப்புறம் சில வருடங்களுக்கு முன்பு, சென்னை லவுஞ்சில், கமலஹாசன் எனக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அவரிடம் பேசி போட்டோ எடுக்கக் கூச்சப்பட்டேன் (டிஸ்டர்ப் பண்ணக்கூடாது என்று). அங்கேயே இருந்த எஸ்.பி. பாலசும்ப்ரமணியம், அவர் மனைவி, ஷைலஜா அவர்களோடு கூட போட்டோ எடுத்துக்கொள்ளவில்லை.

   நீக்கு
 10. ஓ உங்கள் ஓவியம் ஸ்கூல் மகசினில் வந்ததோ.. மிக மகிழ்ச்சியாக இருந்திருக்குமே அப்போது, ஏன் அதை பத்திரப்படுத்தி வைக்கவில்லை.

  உண்மைதான் சில பழமையான கோயில்களில் நிறைய சிற்ப வேலைப்பாடுகள் உண்டு.

  இலங்கையிலும் ஆமியின் கட்டுப்பாட்டில் இருந்த பல கோயில்கள் முன்பு நம்மால் பார்க்க முடியவில்லை, இப்போ போகலாமாம்ம்.. அவை மிக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கின்றனவாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரி மேகசினில் (நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது) வந்தது. நான் வரைந்த படத்தை வகுப்பிற்கு எடுத்துவந்திருந்தேன். என்னுடன் படித்த ஸ்ரீனிவாசன், அதைப் பார்த்து, அருமையா இருக்கு, மேகசினுக்குக் கொடுக்கலாம் என்று சொல்லி, அவனே அதனை எடுத்துச் சென்று கல்லூரி மேகசினுக்குக் கொடுத்துவிட்டு வந்தான். அவன் செய்திருக்காவிட்டால், நானே போய் மேகசினுக்குக் கொடுத்திருக்கமாட்டேன்.

   நீக்கு
  2. மேகசின் வைத்திருந்து தொலைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

   அதைவிட நான் இழந்ததாக நினைப்பது, என் தந்தை, 'தலைமை ஆசிரியர்' என்ற கெபாசிட்டியில், 6ம் வகுப்பில் ஸ்கூல் விளையாட்டில் நான் முதல் பரிசு பெற்றதற்கு ஒரு சர்டிபிகேட்டில் கையெழுத்திட்டுத் தந்திருந்தார். அதைத் தொலைத்துவிட்டேன் (அதுவும் 15 வருடங்களுக்குப் பிறகு). இப்போவும் அதை நினைத்து வருத்தமா இருக்கும்.

   அதனால் என் பெண்ணின் புகைப்படம் வந்த அவளது ஸ்கூல் மேகசின் (3ம் வகுப்பு), நியூஸ்பேப்பர் (10ம் வகுப்பு) இரண்டையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் படம், நியூஸ் பேப்பரில் 3 தடவை வந்திருந்தது. அதில் இரண்டை என்னுடன் இன்னும் வைத்திருக்கிறேன்.

   நீக்கு
 11. உண்மைதான், கோயில் வரலாறைச் சொல்ல ஆட்களும் இருக்க மாட்டார்கள், இப்படி போஸ்ட் படிச்சு தெரிந்து கொள்ள வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்குத் தமிழும் தெரியாமல் இருக்குமே...

  தமிழ் நாட்டில்கூட இப்பவே எத்தனை குழந்தைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை.

   என் உறவினனுக்கு (என்னைவிட 20+ வயது சிறியவன்) தமிழில் வாட்சப் அனுப்பும்போது, ஏன் தமிழ்ல அனுப்பறீங்க, எனக்கு படிக்கச் சிரமம் என்றான் (தமிழ்நாட்டிலேயே படித்து, தமிழகத்துலேயே வேலை பார்க்கிறான்)., அவனுக்கு ஹிந்தி, ஆங்கிலம்தான் சுலபமா படிக்கமுடியுமாம். என் பெண் அவளாக ஆர்வத்தில் கற்றுக்கொண்டாள் ஆனாலும் படிக்க கொஞ்சம் கஷ்டப்படுவாள்.

   நான் தமிழில் மிகவும் ஆர்வம் உடையவன். எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் (தமிழாசிரியர்கள்) அவ்வளவு அருமையாக பாடம் நடத்துவார்கள். (10ம் வகுப்பு தமிழாசிரியர், எப்போதும் ஸ்கேலுடன் பாடம் நடத்துவார். கவனிக்காம இருக்கறவங்களுக்கு அப்போ அப்போ அடி விழும். அவரை மறக்க முடியாது. தமிழ் செய்யுள் பகுதி கேள்விகளுக்கு, செய்யுளையும் சேர்த்து எழுதினால் 1/2 மார்க் அதிகம். இப்போவும் ஆர்வம் உடைய ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்வார்கள்)

   நீக்கு
  2. சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் ரெடியாகத்தான் இருக்கிறார்கள், ஆனா தன் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது எனச் சொல்வதில்தானே பெற்றோருக்குப் பெருமையாக இருக்கு..:).

   நீக்கு
 12. ஓ நீங்கள் வரைந்த ஓவியத்தை நேரில் பார்த்தீங்களோ.. மெய் சிலிர்த்திருக்கும்.. எனக்கும் இப்படி உணர்ச்சிவசப்படும் குணம் உண்டு.. கண் எல்லாம் கலங்கிவிடும்.

  ஓ நீங்கள் பாதுகாத்த ஓவியங்கள் எல்லாம் அங்கிருக்கே.. அதுவும் மிக அழகான பராமரிப்புடன்.

  என்னாதூஉ யானைக்கும் காளைக்கும் ஒரு தலையோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் அதிரா. முதன் முதலில் லண்டனில் காலடி எடுத்துவைத்தபோதும், பாரிஸ் லூவரில் மோனாலிசா ஓவியம் பார்த்தபோதும் துபாயில் முதல் நாள் இரவு 3 ஃபாண்டா கூல்டிரிங் 1 திர்ஹாம் காசு போட்டு எடுத்துக் குடித்தபோதும், பெரிய மைல்ஸ்டோன் மாதிரி மனதில் உணர்வு எழுந்தது.

   உங்களால இரண்டையும் பார்க்க முடிகிறதா (யானை, காளை). எவ்வளவு திறமையாகச் செய்துள்ளனர்.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா அந்த லூவ்ர் மோனாலிசா ஓவியம்.. அதுபற்றி ஒரு போஸ்ட் போட நினைச்சுக் கொண்டே இருக்கிறேன்ன்.. அதில் நான் புல்லாஆஆஆஆஆஆரிச்சுப் போனது பற்றி ஹா ஹா ஹா:).

   முதுகைக் கவனித்தால் மட்டுமே வித்தியாசம் தெரியுது.

   நீக்கு
  3. இந்த யானை, காளை சிற்பம் போலவே ஒரு சிற்பம் மதுரையில் சுவாமி சந்நிதியில் நுழையும்போது இடப்பக்கம் உள்ள திண்ணை போன்ற அமைப்பில் கீழே செதுக்கப்பட்டுள்ளது. குனிந்து பார்க்கணும். அநேகமாக நாயக்கர் காலத்துச் சிற்பங்களோ? ஏனெனில் சப்தஸ்வரத் தூண்கள் மதுரையிலும் வடக்கு கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்து கல்யாணமண்டபம் போகும் வழியில் இருக்கின்றன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலிலும் உள்ளன.

   நீக்கு
  4. அதிரா-லூவர் மியூசியத்துக்கு நான் மூன்று தடவை போயிருக்கிறேன். மூன்றாம் தடவை காலையில் சென்றுவிட்டேன். ஓட்ட ஓட்டமாக அந்த அறைக்குச் சென்றேன். இல்லைனா, பொதுவா ஒரே கூட்டமாக இருக்கும்.

   முதல் தடவை அங்கு சென்றபோது, வீடியோ கேமராவுடன் போயிருந்தேன் (கூட லோ கிளாஸ் சாதாரண டிஜிடல் கேமரா, அப்போதுதான் மார்கெட்டுக்கு வந்திருந்தது). மோனா லிசா சுவற்றுக்குப் பின்னால், கீழே வீடியோ கேமராவை ஆன் செய்து வைத்து நான் சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்தேன். (அந்தக் கால செல்ஃபி ஹா ஹா). கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து, அப்படிச் செய்யாதீர்கள், டக் என்று கேமராவை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள், ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க என்றார்.

   நீங்க அந்தப் படங்களைப் போடறதுக்கு முன்னால் நான் போடப் பார்க்கிறேன். ஹா ஹா.

   நீக்கு
  5. கீசா மேடம்... நான் இங்குதான் முதலில் செதுக்கியிருப்பார்களோ என்று நினைத்தேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்தக் காலகட்டத்தில் சில பல கோவில்களிலும் இதனைச் சிற்பமாக்கியிருப்பார்கள் போல் தெரிகிறது.
   நெல்லையப்பர் கோவிலில் இதனைப் பார்க்கத் தவறிவிட்டேனோ?

   இருந்தாலும், இந்த ஐடியா சிற்பியின் மூளையில் தோன்றியதே ஆச்சர்யம்தான்.

   நீக்கு
  6. போடுங்கோ நெ த போடுங்கோ... ஏனெனில் நாம் எடுத்தவை கொம்பியூட்டரோடு தொலைந்து விட்டதென்றே நினைக்கிறேன். பிரான்ஸ்க்குப் பல தடவை போனதுண்டு ஆனா லூவ்ர் போய்ப் பார்த்தது ஒரு தடவைதான் அதுவும் மோனாலீசாவுக்காகவே போனோம்... எனக்கு மீயூசியமே பிடிக்காது... எனக்கு மட்டும்:)

   நீக்கு
  7. அதிரா... அந்தப் படங்களையும் சிற்பங்களையும் போடலாம் (என்னுடைய தளமாக இருந்தால்). ஆனால் துரை செல்வராஜு சார், அந்த மியூசியத்தில் இருந்த படங்களை, சிற்பங்களை நான் அனுப்பினால் வெளியிடமாட்டார் (என நினைக்கிறேன்). எதற்கும் ஓரிரண்டு படங்களை வாட்சப்பில் அனுப்பி அவரைத் திகைக்க வைக்கிறேன். ஹா ஹா.

   நீக்கு
  8. அதிரா... லூவர் மியூசியத்தை என்னால் ஒரு விதத்தில் மறக்கவே இயலாது. முதல் முறை அங்கு சென்றிருந்தபோது, இரவு 8.45க்கு (மாலை 6 மணியிலிருந்து உள்ளே சுற்றிக்கொண்டிருந்தேன்) கடைசியாக ஈஜிப்ஷியன் செக்‌ஷனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மம்மி, அவைகள் வைக்கப்பட்ட பல பெட்டகங்கள். என்னவோ அங்கிருந்த வாசனை ஒத்துக்கொள்ளவில்லையோ என்னவோ, எனக்கு அலர்ஜி முதல் முறையாக வந்தது. பிரச்சனை பெரிதாக ஆகியிருந்தால் எனக்கு என்ன செய்வதென்று தெரிந்திருக்காது. இறைவன் அருளால் அது சரியானது (எப்படி என்று நான் சொல்ல விரும்பலை. இறைவன் அருள் எனக்கு கண்கூடாகத் தெரிந்த சமயம் அது)

   நீக்கு
 13. ஆகா 5 நிமிட ஸ்கெட்ச் ஆ... மிக அழகு.. முடிச்சிடுங்கோ முழுவதையும் கீறி.. இல்லையில்லை உங்கள் பாசையிலேயே சொல்கிறேன் வரைந்து:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிக்கவேண்டும். அதற்கு மனசுல தோன்றவேண்டும். எனக்கும் ஏதாவது வரைந்து பார்க்கணும்னு ஆசை. முடித்தால் வெளியிடுகிறேன்.

   நீக்கு
 14. ஆவ்வ்வ் ஓவியப் போட்டியில் ரெண்டாவதோ?:) வாழ்த்துக்கள்.

  மீ 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில ரெண்டாவதா வந்தேனெல்லோ:))..

  இருப்பினும் உங்களால டமில்ல டி எடுக்க முடியாமல் போச்செல்லோ ஹா ஹா ஹா:).

  நெல்லைத்தமிழன்.. டமில்ல டி எடுத்த எனக்கு டமில்ல பிழை நேர்ந்தால் எப்பூடிப் பொறுப்பேன்ன்:).. உங்கள் எழுத்தில் தவறு இருக்கிறதே...:)) அது zan அல்ல zhan thamizhan .. எனத்தான் வருமாக்க்கும்:)).

  zh=ழ்
  zha=ழ
  zhi =ழி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரி.... எங்க ZAN என்று எழுதியிருக்கிறேன்? எழுத்துப் பிழையாக இருக்கக்கூடும்.

   நீங்க ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாக வந்ததை நான் நம்புகிறேன். உங்கள் உண்மையான வயது தெரிந்துவிடும், நானும் உங்களை 'அக்கா' என்று, ஏஞ்சலில் தற்போது போனில் அழைப்பதுபோல அழைத்துவிடுவேன் என்ற பயத்தால் சர்டிபிகேட்டை வெளியிடவில்லை என்பதும் தெரியும். ஹா ஹா.

   நீக்கு
  2. உங்கள் போட்டோக்களில் எழுதியிருக்கிறீங்களே.. அதைச் சொன்னேன்:))..

   அக்கா எண்டெல்லாம் பயமில்லை:).. பிறகு அதிரா ரோஓஓஓஓஓஒம்ம்ம்ம்ம்ப சின்னப் பொண்ணாக இருக்கிறாவே என நினைச்சு.. குட்டீஸ் வட்டத்துள் தள்ளிப்போடுவீங்க எனும் பயம்தேன்ன் ஹா ஹா ஹா:)).

   நீக்கு
  3. அதிரா... இப்போ புரிந்தது. அவசர அவசரமாக அதனை எழுதினேன் (யாரேனும் படங்களைக் களவு எடுத்துவிடுவார்களோ என்று நினைத்து).

   நீங்க சின்னப் பெண்-தான். அதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. அது தெரிந்ததனால்தானே, நீங்கள் அங்கு செல்லும்போது, கனடா கோவிலில், பென்னாம் பெரிய நீச்சல் குளத்தை (கடவுளுக்கு தீர்த்தவாரி என்று நீங்கள் போட்டிருந்த படம்) கட்டியிருந்தார்கள்.

   நீக்கு
 15. ஓ பிங்கி எழுத்துக்கள் துரை அண்ணனுடையதோ.. அழகு.. அங்கு தஞ்சாவூரில் இலங்கைப்பாஷை கலந்திருக்குது.. “ஒருக்கால்” எனத்தான் நாமும் பேசுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னது... தஞ்சாவூரில் இலங்கைப் பாஷையா? என்ன அநியாயம்.

   போனவாரம்தான் கூகிளில் உங்கள் பரம்பரையைத் தேடினேன் (கூகிள்தான் எதைக் கேட்டாலும் தனக்குத் தெரியாதுன்னு சொல்லாமல் பதிலைக் கொடுக்குமே)

   1719 நவம்பர் 3ம் தேதியன்று ஜெயராஜ் என்பவர் தஞ்சாவூரிலிருந்து ஈழத்துக்குச் சென்றார். மட்டக்களப்பில் இறங்கிய அவரது சந்ததியினர் பல்கிப் பெருகி அவர்களின் அதிராவும் ஒருவர் என்று சொல்லியது. அதனால பாஷை தஞ்சாவூரிலிருந்துதான் அங்க போயிருக்குது அதிரா.

   நீக்கு
  2. ஏதாவது சொன்னா ஏற்றுக்கொள்ள மாட்டீங்களே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்போ அதிராவிடமிருந்தே எவ்ளோ டமில்:) பாசை பழகிக்கொண்டிருக்கிறீங்க:), பின்பு சொல்லப் போறீங்க அது திருநெல்வேலியில இருந்து யாழ்ப்பாணம் போயிருக்குதென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. சரி விடுங்கோ போனாப் போகுது:))

   இலங்கை மட்டக்களப்பில், வந்தாறுமூலை எனும் ஒரு இடம் இருக்கு. அங்குதானாம் இந்தியாவிலிருந்து விஜயன் என்பவர் ஏதோ தப்பி ஓடி வந்து இளைப்பாறிய இடமாம்.. அதனாலேயே அதுக்கு.. வந்து+ஆறிய+மூலை=வந்தாறுமூலை.. எனப் பெயர் வந்ததாம்ம்..

   ஜயராஜ் எங்கிருந்து வந்தார்.. இது என்ன புயுக்கதை... கர்:) 17ம் நூற்றாண்டில் ராஜ் எனும் பெயர் இருந்ததோ? ராஜா எனில் ஒத்துக்கொள்ளலாம்...

   நீக்கு
  3. சிறிய தவறை சரியாகச் சொன்னதற்கு பாராட்டுகள். (எனக்கு இலங்கை கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் நினைவு வந்தது. ஹா ஹா)

   நீக்கு
 16. ஆஹா..... ’விருந்தினர் பக்கம்’ என்ற ஓர் தொடர் இங்கு ஓடி வருகிறது என்பதை இன்றுதான் அகஸ்மாத்தாக நான் அறிந்தேன்.

  சகல கலா கலா கலா கலா கலா கலா (கலக்கலா) வல்லுனரான நெல்லைத் தமிழன் ஸ்வாமீஜி தனியாக ஓர் வலைத்தளம் துவங்கி எழுதினால் மேலும் சிறப்பாக இருக்குமே என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வது உண்டு.

  மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட் ஆக இருக்கிறார். மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.

  இதுபோன்ற பதிவுகளை வெளியிட ‘தஞ்சையம்பதி’ வலைத்தளமே மிகவும் பொருத்தமானதாகும் என அறிந்து செயல்பட்டுள்ள நெல்லைத்தமிழன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

  தொடர் பதிவாக வெளியிட்டு வரும் அன்புக்குரிய பிரதர் ‘துரை செல்வராஜூ’ அவர்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அண்ணா..

   நெடுநாட்களுக்குப் பிறகு தங்களது வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
   தங்கள் அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
  2. கோபு சார்... வருக வருக என வரவேற்கிறேன். (நீங்க இடுகைக்கெல்லாம் வருவது மிக மிக அபூர்வமாகப்போய்விட்டதே... எனக்கு வருத்தம்தான். நீங்க, கந்தசாமிசார் இன்னும் சிலர், கூட்டுக்குள் சென்ற நத்தைபோல் இடுகைகள் ரெகுலராகப் போடுவதில்லையே)

   நீங்க 'மாஸ்டர் ஆஃப் ஆல்' என்று சொன்னது எனக்கு 'ஜேக் ஆஃப் ஆல் டிரேட் மாஸ்டர் ஆஃப் நன்' என்பதை நினைவுபடுத்துகிறது.

   உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வரணும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

   நீக்கு
  3. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நேக்கு காதில புகை வரவில்லை:))

   நீக்கு
 17. கலை பொக்கிசங்கள் ...அற்புதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அனுராதா ப்ரேம்குமார்... உங்கள் வருகைக்கு.

   நீக்கு