நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், பிப்ரவரி 27, 2019

ஜெய் ஹிந்த்

பாரதத்தின் மேற்கு எல்லைப் பகுதியை ஒட்டிள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கி அழித்த இந்திய விமானப் படை வீரர்களுக்கு வீர வணக்கங்கள்!..


அந்த நிகழ்வைப் பற்றிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.. 
அவற்றுள் சிலவற்றை இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்...

படங்களை இணையத்தில் ஏற்றியவர்களுக்கு மனமார்ந்த நன்றி...வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் கொண்ட நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்றல் ஒன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்றுமைக்குள்ளுய்யவே நாடெல்லாம்
ஒருபெருஞ் செயல் செய்வாய் வா வா வா!...
-: மகாகவி பாரதியார்:-

ஜெய் ஹிந்த்
ஃஃஃ

24 கருத்துகள்:

 1. வந்தே மாதரம்.

  சிறப்பான நிகழ்வைப்பற்றிய அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் புனைவுப் படங்களாய் இருக்கலாம். அதிகாலை மூன்றரை மணிக்கு இவ்வளவு வெளிச்சம் இருக்காதே....

  ஜெய் ஹிந்த்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   பறக்கும் விமானத்தின் படத்தைத் தவிர மற்றவை கூகிள் வழி வரைபடங்கள் தானே...

   ஏதாவது நம் பங்குக்கு செய்ய வேண்டும் எனத் தோன்றியது..

   ஜெய்ஹிந்த்....

   நீக்கு
 3. மிக மிகப் பெரிய விஷயம். பெருமைப்பட வேண்டிய செய்தி.
  வீர தீரர்களுக்குச் சிரம் தாழ்ந்த வணக்கம்.
  இதை எதிர்த்து மறுதாக்குதல் வந்தாலும் தங்க்கள் தயார் என்று சொன்ன
  விமானப் படைவீரர்களுக்கு வாழ்த்துகள். வெல்க பாரதம்.
  மிக மிக நன்றி துரை செல்வராஜு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வீரம் ததும்பும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   ஜெய்ஹிந்த்...

   நீக்கு
 4. சரியான நேரத்தில் பொருத்தமான பாடலுடன் பதிவிட்ட தங்களுக்கு நன்றி ஜி

  வாழ்க பாரதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வெல்க பாரதம்...

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க பாரதம்..

   நீக்கு
 6. அழகான, அருமையான பதிவு. ஜெய்ஹிந்த்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க பாரதம்...

   நீக்கு
 7. சிறப்பான நிகழ்வு. இருந்த போதிலும், எல்லாத் தீவிரவாதிகளும் அழித்தொழிக்கப் பட்டார்கள் என்று ஊடகங்கள் மசாலா தூவி எழுதுவது நம் ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் பெருமை சேர்க்காது.

  தற்போதைய மத்திய அரசு முதுகெலும்போடு செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. ஜெய்ஹிந்த்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெ.த. இதிலே மசாலாவெல்லாம் இல்லை. அந்த மூன்று காம்புகளில் இருந்த எல்லாத் தீவிரவாதிகளும் அழிக்கப்பட்டனர்.இதில் சந்தேகம் ஏதும் இல்லை.ஆனாலும் தமிழ் ஊடகங்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றன. ராத்திரி எப்படி விமானம் சப்தமே போடாமல் கிளம்பியது? அவ்வளவு வெடி பொருட்களை எப்படி எடுத்துச் சென்றார்கள்? நிஜம்மாவே அங்கே தான் போட்டாங்களா? இல்லைனா காஷ்மீரில் எங்கேயோ சிலரைக் கொன்று விட்டுப் பொய் சொல்றாங்களானு எல்லாம் கேள்வி.

   நீக்கு
  2. இதிலே இன்னும் எங்களுக்கு நன்கு அறிந்த ஒருவர், பெரிய தமிழ் ஸ்காலர் எனச் சொல்லப்படுபவர், பெரிய பதவியில் இருந்தவர் இன்னிக்கு வாட்சப் மூலம் அனுப்பிய செய்தி, "மத்திய அரசு பாகிஸ்தான் மேல் குண்டு போட்டதன் மூலம் தவறு செய்து விட்டது. பாகிஸ்தானியர் மிகவும் விபரம் தெரிந்தவர்கள். அவர்களிடம் அணுகுண்டு முதல் எல்லாவிதமான ஆயுதங்களும் இருக்கின்றன. ஆகவே பாகிஸ்தானோடு சமரசம் செய்து கொண்டு போகாமல் நாங்கள் குண்டு போட்டு அழித்துவிட்டோம் எனப் பெருமை பாராட்டிக்கொண்டு வெற்றி விழா கொண்டாடிக் கொண்டு இருப்பது சரியல்லை.மத்திய அரசு விவேகத்துடன் செயல்படவில்லை. இதுவே அவர் தன் சொந்தக்கருத்தாகப் பதிந்து வாட்சப் மூலம் அனுப்பி இருந்தார்.

   நீக்கு
  3. ஊடகங்களின் சந்தேகங்கள் ஒரு புறம் இருந்தாலும் தினமலரின் கருத்துரைப் பகுதியைப் பார்த்தால் புரியும்.. எதிரியின் அடிவருடிகளின் வார்த்தைகள் எத்தனை கொடுமையாக வெளிப்படுகின்றன என்பது தெரியும்... இந்த மண்ணில் நிம்மதியாக தலை சாய்த்து தூங்கி விட்டு மாற்றானுக்கு மல்லிகை தூவி ஆலவட்டம் வீசுவதென்றால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...

   ஊடகங்களில் இந்த மாதிரி பினாத்திக் கொண்டிருக்கும் ஆட்கள் எல்லாம் அவர்கள் மேலேயே சந்தேகப்பட்டுக் கொள்வார்கள்...

   தன் கையை நம்பாதவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்...
   இவற்றையெல்லாம் கடந்து போக வேண்டியது தான்...

   நீக்கு
 8. வாழ்க பாரதம், ஜெயிந்த்!
  பாரதி பாடல் பகிர்வு பொருத்தம் அருமை.

  பதிலளிநீக்கு
 9. நிகழ்வுக்கு ஏற்ற பாடல். வாழ்க பாரதம்!

  துளசிதரன்.

  அண்ணா நேற்று நான் வீடியோ பார்த்து செய்திகளும் வாசித்துக் கொண்டே இருந்தேன்...பிரமிப்புடன். என்ன ஒரு அருமையான நிகழ்வு!

  மேலும் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது..

  பாரதத்தின் பெருமை ஓங்குக!

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..