நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 25, 2019

வாழ்க குவைத்

இன்றும் நாளையும் இந்நாட்டின் தேசிய விடுமுறை..

Telecommunication Tower
இன்று 25/2 - தேசிய தினத்தையும் (National Day)
நாளை 26/2 ஈராக்கின் பிடியிலிருந்து 
தன்னாட்சியுரிமை ( Liberation Day ) 
பெற்ற நாளையும் கொண்டாடுகின்றது. இந்த நாட்களையொட்டிய சிறு பதிவு இது..

பதிவிலுள்ள மின்னலங்காரப் படங்கள் குவைத் நகரைச் சுற்றி எடுக்கப்பட்டவை... வழங்கியோர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி....

Fb  ல் வெளியான படங்கள் தங்களுக்காக - இதோ!...பழைய அரச மாளிகை முகப்பு
இரண்டு உருண்டைகளுடன் ஒன்றும்
ஒரு உருண்டையுடன் மற்றொன்றும் 


Kuwait Towers என்று சொல்லப்படும் இவை கடற்கரையில் உள்ளன..
குவைத் நாட்டின் கடற்கரை Persian gulf எனப்படும்.. 

ஒற்றை உருண்டையுடன் விளங்குவது தண்ணீர் தொட்டி..

மற்றதில் மேலே உள்ள உருண்டைக்குச் செல்ல அனுமதி கிடையாது..
கீழே உள்ள பெரிய உருண்டைக்குள்
சுழலும் உணவகம் (Revolving Restaurant) உள்ளது.
குவைத் நகரை மேலிருந்து சுற்றிவர பார்க்கலாம்.. .குவைத் நாடாளுமன்றம்


கீழுள்ள படங்கள் வழக்கம்போல எனது கை வண்ணம்...
சாதாரண காய்கறிக் கடை...


நமக்குக் கிடைத்த வரப்ரசாதம்... 
மின்னொளியில் பளபளக்கும் இந்நகருக்கு வேறொரு முகமும் உண்டு..
அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்க்கலாம்...

வாழ்கின்ற நாட்டிற்கு
நல்வாழ்த்துகள்..

வாழ்க நலம்
ஃஃஃ

28 கருத்துகள்:

 1. குட்மார்னிங்,

  அடடே... அங்கே கூட இரண்டு நாட்கள் இப்படி விடுமுறை வருமா? இனிய விடுமுறை தின(ங்கள்) வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..
   பெருநாள் சமயத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைப்பதும் உண்டு...

   அரசு அலுவலகப் பணியாளர் களுக்கு நிம்மதி.. நமக்கெல்லாம் ஓரிரு நாட்கள் தான்...

   நீக்கு
 2. அழகிய இடங்கள். எனவே படங்களும் அழகு. உங்கள் கைவண்ணமும் ஜோர்.

  பதிலளிநீக்கு
 3. அந்த இன்னொரு முகம் என்ன என்று அறிய ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறென்ன... நம் ஊரில் நாம் காணும் வழக்கமான முகம் தான்...

   நீக்கு
 4. என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. குவெய்த்தை விட்டு எல்லோரும் வெளியேறிய நாட்களைப் பற்றிய நினைவுகள் வருகின்றன. சிலர் பகிர்ந்திருந்தபோது படித்திருக்கிறேன். இன்னொரு முகத்தைக் காணும் ஆவலுடன் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்... அதெல்லாம் ஈராக் ஆக்ரமிப்பின் போது.... இன்றைக்கு எவ்வளவோ மாறி விட்டது....

   நீக்கு
 6. அழகிய காட்சிகள் ஜி
  வாழ்க குவைத்

  பதிலளிநீக்கு
 7. படங்களம் பகிர்வும் அருமை
  வாழ்க குவைத்

  பதிலளிநீக்கு
 8. ஆஹா பானுக்காவின் பக்கோடா சாப்பிட்டு சுவையில் இருந்து இங்க வந்தா அதுக்குள்ள கருத்துகள்

  இனிய காலை வணக்கம்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. வாழ்க குவைத்! எங்கள் வாழ்த்துகளும்!

  படங்கள் எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன என்பதோடு குவைத் ஊரும் அழ்காகத்தான் இருக்கிறது. குவைத்தில் உறவினர்கள் இருப்பதால் படங்கள் செய்திகள் எல்லாம் வந்துவிடும் வாட்சப் குழுவில்.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அழகிய படங்கள் ...


  அதிலும் உங்கள் கை வண்ணத்தில் வந்தவை மிக சிறப்பு ..

  பதிலளிநீக்கு
 11. அழகான படங்கள்.
  விழாக்களுக்கு வாழ்த்துக்கள், வாழ்க குவைத்.
  உங்கள் கைவண்ணமும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. அனைத்து படங்களும் மிக அழகாக இருக்கின்றன. நீங்கள் எடுத்த படமும் மிக அழகு!.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 13. அழகான இடம்... படங்கள் மூலம் உங்கள் ஊரை நாங்களும் பார்த்து மகிழ்ந்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு