நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மே 15, 2019

வைகாசிப் பெருவிழா

சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகின்றது...

கோடையின் வெம்மை சற்றே குறைகிறது என்ற் செய்திகள் வருகின்றன...

மழை வேண்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்படும் இவ்வேளையில்
சனாதன தர்மத்தின் சடங்கு சம்பிரதாயங்களை வழக்கம் போல இழித்தும் பழித்தும் எழுதி இறுமாந்து போகின்றனர் - சிலர்...

பெய்யெனப் பெய் என்று சொல்வதற்கு ஆளில்லையோ!.. - என்று ஏளனம் வேறு...

எல்லாவற்றுக்கும் மேலாக
இதையெல்லாம் போய் அரபு பாலைவனத்தில் செய்து அங்கே மழையை வரவழைக்கலாமே!..
என்றும் அரைவேக்காட்டுத் தனம்...

அத்தகையோர்க்குத் தெரியாது -
மழை மறைவுப் பிரதேசமான
பாலை நிலத்து மக்கள் இயற்கையின் கொடையான மழையை விரும்புவதில்லை - என்பது...

சென்ற வருடத்தின் கடைசியில்
பாலை நிலத்தில் மழையினால் விளைந்த இன்னல்களை நேரில் கண்டிருக்கிறோம்..

இறைவனை வேண்டி நின்று
பெறும் மழையையும் அதன் நலன்களையும்
வேண்டாம் என்று மறுத்து விடுவரோ -
இறை மறுப்பாளரும் எதிர்ப்பாளரும்!?...

தெரியவில்லை...

புனை பெயர்களுக்கும் பொய் முகங்களுக்கும்
பதிலுரைக்க வேண்டிய அவசியமில்லை தான்..

ஆயினும்
காலத்தின் கட்டாயம்...
இது அவசியமாகின்றது..

இன்றைய பதிவில்
திருத்தலங்களிலும் நிகழும்
வைகாசி வசந்த உற்சவ திருக்காட்சிகள்...

திருக்காட்சிகளை வலையேற்றிய
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ வருண மூர்த்தி
தஞ்சை பெரிய கோயில்..
பெரிய கோயிலில் வருண யாகம்...
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் - தஞ்சை
ஸ்ரீ ஞானாம்பிகை
கொங்கணேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ கொங்கண சித்தர் - தஞ்சை
பூத வாகனத்தில்
ஸ்ரீ கொங்கணேஸ்வரர் - ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ சிவசுப்பிரமணியன்
திருப்பரங்குன்றம்
ஊஞ்சல் உற்சவம்.. திருப்பரங்குன்றம்
ஸ்ரீ உமையொருபாகன் - திருச்செங்கோடு
ஸ்ரீ கும்பேஸ்வரர் - ஸ்ரீ மங்களாம்பிகை
கும்பகோணம்
ஸ்ரீ மங்களாம்பிகை
ஸ்ரீ ப்ரம்ம சிரகண்டீசர்
திருக்கண்டியூர்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நம சிவாயவே..
ஃஃஃ


30 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  சிலதினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெருத்து வருகிறதா? வெம்மை தணிந்து விட்டதா? அப்போ சென்னைதான் பாவம் செய்த ஊர் போல!

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அருமை. மழைவேண்டி மருகி நிற்கும் சென்னை மக்களில் ஒருவன் நான். சீக்கிரம் இங்கும் மழை பொழிந்து (தூறல் போட்டு அல்ல) தண்ணீர் வரம் அருள பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீக்கிரம் நல்ல மழை பெய்திட நானும் வேண்டிக் கொள்கிறேன்...

   நலம் வாழ்க...

   நீக்கு
 3. அத்தனை ஈசர்களையும், அம்பிகைகளையும் முருகனையும்
  தரிசிக்க வைத்தீர்கள் .மிக மிக நன்றி.
  சீக்கிரத்தில் நல்ல மழை நம்மூரில் பெய்யட்டும்.

  தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் இறைவனையே வேண்டி நிற்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அம்மா...

   /// தூற்றுபவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் இறைவனையே வேண்டி நிற்போம்..///

   மகத்தான வார்த்தைகள்...
   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. மழை வளம் பெறுகட்டும் இவ்வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. வைகாசிப் பெருவிழா என்ற தலைப்பைப் படித்ததும் எனக்கு சூலமங்கலம் சகோதரிகள் பாடிய,

  முருகனுக் கொருநாள் திருநாள் அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்... பாடல்தான் நினைவுக்கு வந்தது. அதில்தான் "வைகாசி விசாகத் திருநாள் அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள்" என்பதுபோல் வரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   மிக இனிய பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள்....

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. சொல் துணை வேதியன் சோதி வானவன்
  பொன்துணை திருந்தடி பொருந்தக் கைதொழ
  கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
  நல்துணை ஆவது நமச்சிவாயமே


  பாடலை ரசித்தேன். துணை என்ற வார்த்தை, துணையான, போன்ற, உடன் என்று வேறுபட்ட அர்த்தத்தில் வருவது தமிழின் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகப் பாடல்....

   எத்தகைய துயரிலும் வல்லமையை அளிக்கும் திருப்பாடல் அது...

   நீக்கு
 7. பதில்கள்
  1. அன்புடையீர்...

   நான் நலமே...
   தாங்களும் நலம் தானே!..

   நீக்கு
 8. படங்கள் அனைத்தும் அருமை ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. வைகாசி வசந்த உற்சவக் காட்சிகள் அருமை. நேரில் சென்ற உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. வைகாசிப் பெருவிழா படங்கள் அனைத்தும் மிக அருமை.
  மழைக்கு வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமும் மழைக்கு வேண்டுவோம்...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. புனை பெயர்களுக்கும் பொய் முகங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லைதான். நாம் இறைவனை வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 12. துரை அண்ணா ஸாரி லேட்டாக வந்ததற்கு.

  படங்கள் அத்தனையும் அழகு!

  அட! தமிழகத்தில் மழை பெய்கிறதா நல்ல செய்தி. சென்னையில்தான் இல்லை போலும். வரவேண்டும் என்று வேண்டுவோம்.

  இங்கு பங்களூரில் நல்ல மழை. பெரும்பாலும் தினமும் மதியம் பெய்யத் தொடங்கி மேகமூட்டமாகவே இருந்திடும்.

  எல்லா இடங்களிலும் மழை பெய்து வறட்சி மற்றும் கடும் வெப்பத்திலிருந்து மீளட்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 13. மழை பெய்ய வேண்டும்..
  மக்கள் குறை தீர வேண்டும்...

  அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 14. யார் என்ன சொன்னால் என்ன? நீதிமன்றம் வரை கூடப் போய்ப் பார்த்துட்டாங்க! செய்யட்டும். நாம் இறைவனை நம்புவோம். அவன் அருள் மழை போல் மழை பொழியப் பிரார்த்திப்போம். இங்கெல்லாம் மழை இல்லை என்றாலும் மாலை நேரங்களில் வெம்மை தெரிவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி...

   நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும் தள்ளுபடியாகி விட்டது..

   என்றாலும் வன்மம் பிடித்த நெஞ்சங்கள் தான் எத்தனை..எத்தனை...

   அக்கா அவர்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 15. கருத்துக் கொடுத்தேன், தரிசனங்கள் குறித்து. ஆனால் போகவில்லை, என்ன காரணம் அறியேன்! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது தான் புதியன வந்து விட்டனவே..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 16. தானாகவோ, அல்லது தவறுதலாகவோ கூகிள் கணக்கை விட்டு என்னை வெளியேற்றி இருக்கிறது. அதான் போகலை! :)))))

  சிறப்பான தரிசனத்துக்கும் அதை அனுப்பி வைத்த அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமயத்தில் இவ்வாறு எனக்கும் நிற்கின்றது....

   ஸ்ரீமதி வல்லி சிம்ஹன் அவர்களது தளத்தில் கருத்துரைக்க முடிய வில்லை...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..