நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 28, 2019

கருட தரிசனம் 2

தஞ்சையில் நடந்த கருட மகா சேவை..

இன்றைய பதிவில்
கருட சேவை படங்களுடன்
நவநீத சேவை எனும் வெண்ணெய்த் தாழி உற்சவத்தின் படங்கள்...
கீழுள்ள படங்கள் - நவநீத சேவை..
வழங்கியவர் தஞ்சை ஞானசேகரன்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

வழிநெடுக தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் , குளிர் பானங்கள் முதலானவை வழங்கப்பட்டுள்ளன...

கருட சேவையை தரிசனம் செய்வதற்கு
வெளியூர்களில் இருந்து திரளாக பக்தர்கள் வந்திருந்ததாக அறிய முடிகின்றது..

ஆயினும் , போக்கு வரத்து ஒழுங்கு என்ற பெயரில் அங்கும் இங்குமாக அல்லல் படுத்தப்பட்டிருக்கின்றனர்...

இனிவரும் நாட்களில் எல்லாம் நலமாகும்  -
என, நம்புவோம்...

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய..
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  கருடசேவைப் படங்களையும்,

  நவநீதசேவைப் படங்களையும்

  தரிசனம் செய்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 2. நவநீதசேவை கண்ணன் முன் பின் தோற்றம் அழகு.
  கருடசேவை படங்களும் அழகு.
  ரேடியோவில் "கீதை சொன்ன கண்ணன் வண்ண தேரில் வருகிறான், கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்"
  பாடல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.
  என்ன பொருத்தம் என்று மேனி சிலிர்த்து விட்டது.

  அனைத்தும் அழகு, தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   தாங்கள் சொல்லியிருப்பது போல
   எந்த ஒன்றை மனம் நாடிச் செல்கின்றதோ

   அந்த ஒன்று நம்மைத் தேடி வருவது ஆச்சர்யம் தான்....

   தேரில் வரும் கண்ணன்
   எல்லாருக்கும் திருவருள் புரிவானாக....

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. கருட சேவை மிச்சப்படங்களும், நவநீத சேவைப்படங்களும் அருமை! நல்லதொரு தரிசனம் கிடைத்தமைக்கு நன்றி. கருடசேவை பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். நவநீத சேவை கேட்டதில்லை. படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. இதிலே கண்ணன் கடைந்தெடுத்த நவநீதமாகிய ஞான வெண்ணெய் நமக்கும் கொஞ்சமானும் கிடைக்க அவன் அருளை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

  அக்கா அவர்களின் கருத்து இனிமை...

  உலகாயதம் எனும் புளித்த தயிரில் இருந்து கடைந்து கிடைக்கப் பெறும் ஞானம் எனும் வெண்ணெய் அவனது ஸ்பரிசத்தால் உருகி அவனது திருவடிகளில் சுடராக சார்ந்திருக்கட்டும்...

  சர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்....

  பதிலளிநீக்கு
 5. இன்றைய தரிசனமும் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 6. புகைப்படங்கள் வழக்கம்போல அருமை. கருட சேவை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் நவநீத சேவையைப் பற்றி அறிந்தேன். ஆகையால் "நவநீத சேவை" என்ற தலைப்பில் 2017இல் விக்கிபீடியாவில் புதிய கட்டுரை ஆரம்பித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் மேலதிக த்ச்கவலும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. அருமையான தரிசனம்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. காலையில் நல்ல தரிசனம் துரை அண்ணா. ஓரிரு படங்களே வந்தன...

  தாமதமாக வந்தமைக்கு பல தளங்கள் ஓப்பன் ஆகவில்லை அண்ணா. உடனே ஹேங்க் ஆகிவிடுகிறது....

  இன்றும் பல படங்கள் தெரியவில்லை... சைடில் இருப்பவை எதுவுமே இல்லை. ஒன்லி பதிவும் கருத்துகளும்..தெரிகிறது...

  கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..