நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 20, 2019

மழை முகம்

நேற்று காலையில் இருந்தே
மேகமூட்டமாக இருந்த வானம் -

மாலை ஆறு மணியளவில் குளிர் காற்றுடன்
அரை மணி நேரத்துக்குக் கொட்டித் தீர்த்தது...

இந்த மழை இங்கே எதற்காக!?..

வெயிலின் தாக்கம் சற்றே குறையும்...
அவ்வளவு தான்..

இருப்பினும் -
மழை முகம் கண்டால்
மண்ணுக்குக் குளிர்ச்சி...
மனதிற்கு மகிழ்ச்சி...

கொட்டிய மழையில்
சற்று தூரம் நடந்து விட்டுத் திரும்பினேன்...

புற நகரில் பெய்ததைப் போலவே
அபுதாபியின் உள் வட்டாரத்திலும்
துபாய், அல் - அய்ன் மற்றும் சில பகுதிகளிலும்
மழை பெய்ததாக செய்திகள்...

பாலை நிலத்தில்
பரிவுடன் முகங்காட்டிய இயற்கை
பரிதவித்து நிற்கும் தமிழகத்திலும்
இன்முகம் காட்ட வேண்டும்..
- என, வேண்டிக் கொள்வோம்...

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்...
ஃஃஃ

19 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  மழைமுகம் கண்டதற்குபாராட்டுகளும், வாழ்த்துகளும்...

  பதிலளிநீக்கு
 2. தமிழக மக்கள் மழை என்பதையே மறந்துவிடுவார்கள் என்கிற நிலை... ம்ம்ம்..... எப்போ வருமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிலும்
   குறிப்பாக சென்னையில் மழை என்றால் மக்களை கலவரப்படுத்தி விடுகின்றன ஊடகங்கள்...

   இதனாலேயே
   மழை என்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு என்று மனதில் பதிவாகி விட்டது...

   நீக்கு
 3. மழை! அதுவும் கோடை மழை அனைவராலும் மிகவும் வரவேற்கபடும் ம்ழை.

  படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. ஈரோடு, நாமக்கல், தென் தமிழகத்தில் சில நகரங்களீல் மழை பெய்து வருகிறது. எங்க ஊருக்கு எப்போவுமே மழை வரத்துக் கம்மி! பெருமாளுக்கு ஜுரம் வந்துடுமே! ஆனால் மற்ற மாவட்டங்களில் பெய்தால் இங்கே சூடு தணியும். நல்ல மழை பொழிய வருணனைப் பிரார்த்திக்கிறேன்./ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   அதென்ன பெருமாளுக்கு ஜூரம்!..

   கஷாயம் கொடுத்தால் சரியாகி விடுமா?..

   நல்லமழை நாடெங்கும் பெய்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை.
  அபுதாபிக் காட்சிகள் அருமை.
  துபாயில் மழை பெய்தால் வெள்ளம் தான். ஜலதாரையே கிடையாதே.

  கோடையில் மண் மழை பெய்யும். இப்பொழுது நல் மழை பெய்திருக்கிறது.
  நலமே விளைக.
  நம் ஊருக்கும் வரட்டும் என்று வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   நம் ஊரிலும் நல்ல மழை பெய்வதற்கு வேண்டிக் கொள்வோம்...

   நீக்கு
 6. அபுதாபியில் மழை அபூர்வக் காட்சிதான் ஜி பெயர்த்தி வர்ஷிதா நலமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   பேத்தி வர்ஷிதா நலமே....

   நீக்கு
 7. உங்களின்வேண்டுதல் நிறைவேறும்.

  பதிலளிநீக்கு
 8. போன வாரம் இங்கு ஒருநாள் மழை - அதிசயமாக...!

  பதிலளிநீக்கு
 9. அங்கு மழை பெய்யும் பொழுது நிறைய சாலை விபத்துகள் நிகழுமே..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.. இவர்களுக்கு மழை நேரத்தில் வாகனத்தைச் செலுத்துவது சிரமம்...

   ஆயினும்
   விபத்துகள் நேர்ந்ததாக செய்திகள் இல்லை...

   வாழ்க நலம்..

   நீக்கு
 10. கீதா: ஆஹா மழை முகம் என்ன அழகு.

  மழை என்றாலே மகிழ்ச்சிதான் அண்ணா. தமிழகத்திலும் குறிப்பாகச் சென்னையில் மழை பெய்ய வேண்டும்.

  இங்கு பங்களூரில் பெரும்பாலும் தினமும் மதியம் ஒரு அரை மணியேனும் மழை பெய்துவிடும். சில சமயம் நன்கு அடித்துப் பெய்கிறது.இடி மின்னலுடன்.. எனவே வெம்மை குறைந்திருக்கிறது. படங்கள் அழகாக இருக்கின்றன அண்ணா.

  துளசிதரன்: படங்கள் அழகாக இருக்கின்றன. பாலையிலும் மழை பெய்தால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருக்குமே.

  இங்கு கேரளத்தில் எங்கள் பகுதியில் அவ்வப்போது நல்ல மழை பெய்கிறது. ஆனால் வெயில் அடித்தால் அதுவும் சூடாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..