நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 28, 2022

திருத்தொண்டர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தஞ்சையை அடுத்துள்ள களிமேடு கிராமத்தில் சித்திரைச் சதயத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சிறப்பாக நடத்தப்படும் அப்பர் ஸ்வாமி திருவிழாவில் நேற்று இரவு  அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த பொழுதில் விடியற்காலை 3:15 மணியளவில் எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் தீப் பற்றிக் கொண்டது.. இவ் விபத்தில் பதினொருவர் உயிரிழந்திருக்கின்றனர்.. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.. பெரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இளையோர்கள் பலர் பங்கேற்ற விழாவில் பெரும் துயரம் நேர்ந்து விட்டது.. 

நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களும் பிரதமர் அவர்களும்
தமிழக ஆளுநர் அவர்களும் இரங்கல் செய்தியுடன் ஆறுதல் கூறியுள்ளனர்..

தமிழகத்தின் முதல்வர் அவர்கள் வருகை தந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் கூறியிருக்கின்றார்..  

விபத்தில் பலியானவர்களது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் பக்க துணையாக இருந்து ஆறுதலும் தேறுதலும் தந்து காத்திட வேண்டும் என இவ்வேளையில் வேண்டிக் கொள்வோம்..

சிவத்தொண்டருக்கு அருந்தொண்டு புரிந்த
திருத்தொண்டர்கள் பெருந்தொண்டருள் ஒன்றி உடனாகி விட்டனர்..
அவர்தம் நினைவை என்றும் நெஞ்சில் கொள்வோம்.

புனைந்தார் பிறப்பறுக்கும்
புனிதனின் திருத்தாள் மலர்களை அடைந்து விட்ட அவர்களின் நினைவினை நெஞ்சில் வைத்து வேண்டிக்  கொள்வோம்..
*

மாதா பிதாவாகி மக்க ளாகி மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக் கொல் புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந் தார்க்கு எளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.. 6/94
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

 1. அது ஒரு துன்ப நிகழ்வு. அமைச்சர் சொல்லி இருப்பது அல்லது சொல்லி இருப்பதாக பேஸ்புக்கில் பார்த்தது வேதனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்.. தங்களுக்கு நல்வரவு.. யார் இனி என்ன சொன்னால் தான் என்ன.. எல்லாவற்றுக்கும் இறைவனே சாட்சி.. நன்றி..

   நீக்கு
 2. தினத்தந்தியில் படித்தேன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எமது இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 3. அடடா! திருப்பணியில் துயரம். வேதனை. நம் இரங்கல்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்வோம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 4. வேதனையான விஷயம். என்ன சொல்ல என்று தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  தேரோட்டத்தில் துயரமான சம்பவம் அறிந்து மனது வேதனையடைகிறது. இழப்பின் வலிகளை அவர்கள் எவ்வாறு தாங்கிப் போகிறார் கள்? இறைவனின் சோதனைகளில் இதுவும் ஒன்றா? என்ன செய்வது? மனம் முழுக்க வருத்தம் மேலிடுகிறது.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. வேதனையான விபத்து.... சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 7. இதற்கு முன்னரும் ஒரு தேர் விபத்து நேர்ந்திருக்கு இன்னொரு ஊரில். ஆகவே தேர்த்திருவிழா என்றாலே கவனமாக இருக்கணும். இன்று இங்கே ஶ்ரீரங்கத்தில் தேர்! காலையில் உள்ளூர்த் தொலைக்காட்சி மூலம் பார்த்தோம்.

  பதிலளிநீக்கு
 8. தொலைக்காட்சியில் பார்த்து வருத்தம் அடைந்தேன். இறைவன் அருள் அனைவரையும் காக்க வேண்டும். இறைவனடி சென்றவர்கள் குடும்பத்திற்கு இறைவன் உறுதுணையாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..