நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 15, 2022

அமுதே வருக..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ சுபகிருது வருடத்தின் முதல் நாளாகிய நேற்று 
மா மதுரையில்
ஸ்ரீ அங்கயற்கண்ணி அம்பிகைக்கும் ஸ்ரீ சுந்தரேசப் பெருமானுக்கும் திருக் கல்யாண வைபவம் சிறப்பாக நிகழ்ந்துள்ளது..

நேரலை ஒளிபரப்பில் அனைவரும் கண்டு மகிழ்ந்திருப்பீர்கள்..
எனினும் நமது தளத்தில் கல்யாண நிகழ்வுகளைப் பதிவு செய்வதில் மகிழ்ச்சி..

திருவிழா நிகழ்வுகளின் சில காட்சிகள் இன்றைய பதிவில்..


ஒளிப் படங்கள் - திரு.ஸ்டாலின்., மதுரை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

சுரும்புமுரல் கடிமலர்ப் பூங்குழல் போற்றி உத்தரியத் தொடித் தோள் போற்றி
கரும்புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனங் குழைத்தென்னை எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி
அரும்பும் இளநகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி..
-: பரஞ்சோதிமுனிவர் :-
-: திருவிளையாடற் புராணம் :-
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம் மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணி செய்து நாள்தொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூத நாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.. 3/120
-: திருஞான சம்பந்தர் :-

மங்கலம் அருள்வாள்
மதுரைக்கு அரசி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

15 கருத்துகள்:

 1. மதுரையின் திருவிழாக்கோலம் சிறப்பாக இருக்கும். அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது ஜி தரிசனம் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. படங்கள் மதுரை நண்பரின் கைவண்ணம்..

   அன்பின் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அருமையான படங்கள். தொலைக்காட்சியிலும் கண்டு களித்தோம். இன்றைய தேரும் சில மணித்துளிகள் பார்க்க நேர்ந்தது. காலை வேளையில் தொடர்ந்து உட்கார இயலவில்லை. படங்கள் எல்லாமே அற்புதம். அழகு. மீனாக்ஷியின் திருவருள் அனைவரையும் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரையும் அன்னை மீனாக்ஷி காத்தருளட்டும்..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 4. படங்கள் அனைத்தும் செம அழகு. ஸ்டாலின் என்பவர் எடுத்தவையோ? மிக அழகாக எடுத்திருக்கிறார்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 5. அழகான படங்கள். அருமையான தரிசனம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நீக்கு
 6. மனதிற்கு நிறைவினைத் தரும் படங்கள். கண்கொள்ளாக்காட்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

   நீக்கு
 7. படங்கள் அனைத்தும் அழகு. தங்கள் வழி நாங்களும் காட்சிகளைக் கண்டு ரசித்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..