நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 11, 2022

கல்யாணத் திருவிழா 1

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நன்றி - ஆதீனத்தார்

நேற்று மாலை நான்கு மணியளவில் புறப்பட்டு திருமழபாடிக்குச் சென்றோம்..

திருமழபாடியை நெருங்க நெருங்க திருக்கோயிலை நோக்கி நூற்றுக் கணக்கான மக்கள் நந்தீசனின் கல்யாணத்தைக் காண வேண்டும் என்று..

திருமழபாடிக்கு மூன்று கி.மீ. முன்னதாகவே பொதுப் பேருந்துகளும் சுற்றுலா மற்றம் இலகு ரக வாகனங்களும் நிறுத்தப்பட்டதால் மக்கள் இறங்கி நடக்கும்படி ஆகி விட்டது.. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே கோயில் வரைக்கும் அனுமதிக்கப்பட்டன..

காலையிலேயே மக்கள் கூடி விட்டனர் என்பதால் எங்களால் கல்யாண மேடையை நெருங்க முடியவில்லை..
கோயிலுக்கு சற்று முன்பாக - நிகழ்வுகளைக் காணும்படிக்கு பெரிய அளவில் காட்சித் திரை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.. 

திரைக்கு அருகில் இல்லாததாலும் எல்லாரும் தலைக்கு மேலாக தொலை பேசிகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாலும் இடைஞ்சல் இன்றிக் காட்சிகள் காணக் கிடைக்கவில்லை..

நன்றி - ஆதீனத்தார்
ஆனாலும், மாங்கல்ல்ய தாரணத் திருக்காட்சி காணக் கிடைத்தது..

மூன்று பல்லக்குகளும் வீதிவலம் புறப்பட்டதும் வெளியூர் மக்களும் வீடு நோக்கிப் புறப்பட்டனர்.. 

தமிழகத்தின் எல்லாப் பகுதி மக்களும் வந்திருந்தனர்.. பல இடங்களில் அன்ன தானம் வழங்கப் பட்டது.. தமிழகத்தின் சிறப்பு மிக்க விழாக்களுள் நந்தீசன் கல்யாணமும் ஒன்று என்பது மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது..

கோயிலைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர்..  ஆலயத்திற்குள் சென்று தரிசனம் செய்வதற்கு இயலவில்லை.. மனைவியும் மகனும் முன்பே புறப்பட்டு விட, நள்ளிரவு 12:30 மணியளவில் வீடு திரும்பினேன்..

திருவிழாவின் அழகினை இயன்றவரை பதிவினில் தந்திருக்கின்றேன்... மேலும் படங்கள
கிடைத்திருக்கின்றன.. அவை அடுத்த பதிவில்..

ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி ஸ்ரீ ஐயாறப்பர்


ஸ்ரீ அழகாம்பிகை ஸ்ரீ வைத்ய நாதர்

ஸ்ரீ சுயம்பிரகாஷினி நந்தீசன்

ஸ்ரீ சுயம்பிரகாஷினி சமேத ஸ்ரீ நந்தீசன் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

 1. கோவில் அழகு. மக்கள் அழகு. சாலை அழகு. மக்கள் உணர்வு அழகு. எடுக்கப்பட்டிருக்கும் படங்கள் அழகு. தரிசனம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   அழகே அழகு..
   அன்பின் அழகு..
   வருகை அழகு..
   வார்த்த கருத்தும் அழகு..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. கோவிலையே நெருங்க முடியாத அளவு கூட்டம் என்பது வியப்பு ப்ளஸ் மகிழ்ச்சி.  கோவிலுக்குள்  திருமணம் முடிந்து கிளம்பும் மக்கள் எந்த நேரத்தில் எதற்கு முக்கியத்துவம் என்பதைச் சொல்கின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐந்தாண்டுகளுக்கு முன் நந்தி கல்யாணம் பார்த்தது.. அப்போதும் இப்படியான கூட்டம் இருந்தது.. நெரிசல் இல்லை..

   வாகனப் பெருக்கம் அதிகம்.. கிராமம் அப்படியே மாறாமல் இருக்கின்றது...

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அழகிய காட்சிகள் தரிசனம் கிடைத்தது

  திருமழபாடி மறைந்த வலைப்பதிவர் தி.தமிழ் இளங்கோ அவர்களது ஊர்தானே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி..

   திரு. தமிழ் இளங்கோ ஐயா அவர்கள்து ஊர் தான் திருமழபாடி..

   நன்றாக அவரை நினைவு வைத்திருந்து மனதை ஒரு நிமிடம் கனக்கச் செய்து விட்டீர்கள்..

   நீக்கு
 4. நந்தி கல்யாணம் அருமை. திருவிழா காட்சிகளை நேரில் கண்ட உணர்வு.
  இரண்டு வருடம் மக்கள் எந்த திருவிழாவும் பார்க்கவில்லை என்பதால் இப்போது கூட்டம் அலை மோதுகிறது.
  எல்லோருக்கும் நல்மான் வாழ்வு அருளவேண்டும் இறைவன். அச்சம் இன்றி கோவில் உலா எல்லோரும் வர வேண்டும். மகிழ்ச்சியாக மக்கள் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   // மகிழ்ச்சியாக மக்கள் இருக்க வேண்டும்.. //

   அன்பின் வேண்டுதலும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. திருமழபாடி நந்தீசர் திருமணம் பற்றி நிறையக் கேள்விப் பட்டது தான். பார்த்தது இல்லை. இத்தனை கூட்டத்தில் எல்லாம் இப்போதைய உடல்நிலையில் போக முடியாது. உங்கள் படங்களின் மூலம் கண்டு களித்தேன். பாலிமர் தொலைக்காட்சியிலும் காட்டினார்கள். தினம் தினம் மதுரை மீனாக்ஷியையும் காட்டுகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. இவ்வருடம் ஜனத் திரள் நெரிசல் அதிகம் தான்..

   ஜனங்களை மூன்று நான்கு கி.மீ தூரத்துக்கு நடக்க விட்டது தான் கொஞ்சம் சிரமம்..

   மற்றபடி எல்லாரும் நலமாக இருக்க வேண்டும்..

   மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   ஓம் சிவாய நம..

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

   நீக்கு
 8. சிறப்பான காட்சிகளை பார்த்து ரசித்தேன். ஓம் நமசிவாய.....

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..