நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 06, 2022

உவரி தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

திருத்தலம்
உவரி


இறைவன்
ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி
ஸ்ரீ சந்திரசேகரர்

அம்பிகை
ஸ்ரீ மனோன்மணி

தலவிருட்சம் கடம்பங்கொடி
தீர்த்தம் - அக்னி தீர்த்தம் (சமுத்திரம்)

கடந்த வியாழனன்று சொரிமுத்து ஐயனார் கோயிலில் இருந்து கீழே பாபநாசம் வருவதற்கு மதியத்துக்கு மேல் ஆகி விட்டது.. அந்த அளவில் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை - திசையன்விளை வழியாக உவரிக்கு வந்து சேர்ந்த போது இரவு மணி 8:45.. திரு நடை அடைக்கப்படுவதற்கு முன்னதாக ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு கோயில் வாசலிலேயே உறக்கம்.. அதிகாலையில் எழுந்து கடலில் நீராடிய பின் தெப்பக்குளத்திலும் நல்ல தண்ணீர் கிணற்றிலும் குளித்து விட்டு ஸ்வாமி தரிசனம்...


ஸ்ரீ மூலஸ்தானம்

ஸ்ரீ கணபதி கோயில்

ஸ்ரீ வன்னியடி சாஸ்தா சந்நிதி

கீழுள்ள இரண்டு படங்களும் மூன்று
ஆண்டுகளுக்கு
முந்தையவை..

ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன்

ஸ்ரீ பேச்சியம்மன்

புதிய ராஜகோபுரத் திருப்பணி
திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டினம் வழியாக 40 கி.மீ தொலைவில் உள்ளது  உவரி..

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

 1. முழு ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருக்கிறீர்கள் போல.. நாட்களுக்கும் அருள் கிடைக்கச் செய்கிறீர்கள். படங்களும் விவரங்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழு ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருக்கிறீர்கள் போல.. எங்களுக்கும் அருள் கிடைக்கச் செய்கிறீர்கள். படங்களும் விவரங்களும் சிறப்பு.

   நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
   இறையருள் எங்கும் நிலவட்டும்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. உவரி கேள்வி ஞானம் தான். சென்றதில்லை. உங்கள் வாயிலாகக் கிடைத்திருக்கும் தரிசனத்துக்கு நன்றி. சிறப்பான படங்கள். விபரங்கள். அனைத்துமே நன்றாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைய முதல்வர் ஜெ.. அவர்கள் உவரியை சுற்றுலா தலமாக அறிவித்து சில மேம்பாடுகலைச் செய்தார்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. உவரி கோயில் தரிசனம் செய்து கொண்டேன்.
  ஊருக்கு திரும்பியதும் ஆன்மீக உலா நன்றாக இருக்கிறது.
  இறையருளால் உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறட்டும்.
  நாங்களும் தரிசனம் செய்ய முடிகிறது.
  உங்களுக்கு நன்றி.
  கடற்கரை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறையருள் எங்கும் நிறையட்டும்..

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. ஓம் சிவாய நம..

  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 5. உவரி தரிசனம் கிடைத்தது. படங்களும் தகவல்களும் சிறப்பு. அனைவருக்கும் இறையருள் கிடைக்க எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..