நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 23, 2022

ராம தரிசனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று சனிக்கிழமை..
சித்திரையின் பத்தாம் நாள்..

இன்றைய பதிவில் திருமழிசை ஆழ்வார்
அருளிச் செய்த திருப்பாசுரங்களுடன்
ஸ்ரீ ராம ஆஞ்சநேய தரிசனம்..


அழகிய படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..
Fb ல் வழங்கியோர்
ஸ்ரீ வடுவூர் கோதண்டராமன்..மின்னிறத்தெ யிற்றரக்கன்
வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த
ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை
பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணானாய
புண்டரீக னல்லையே?.. 784


ஊனின்மேய ஆவிநீஉ
றக்கமோடு ணர்ச்சிநீ
ஆனில்மேய ஐந்தும்நீஅ
வற்றுள்நின்ற தூய்மைநீ
வானினோடு மண்ணும்நீவ
ளங்கடற்ப யனும்நீ,
யானும்நீய தன்றியெம்பி
ரானும்நீயி ராமனே.. 845


ராமாய ராம பத்ராய
ராம சந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய
ஸீதாயா: பதயே: நம


ஸ்ரீராம் ஜெய ராம்
ஜெய ஜெய ராம்..


ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

16 கருத்துகள்:

 1. ராம நாமத்தைச் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்!  ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. ஸ்ரீ ராம பிரானின் அழகிய படங்கள். இன்றைய பதிவில் ஸ்ரீ ராம ஆஞ்சநேய படங்களை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். வடுவூர் கோதண்டராமர் படங்களை அனுப்பிய அவர் பெயருடைய அன்பருக்கும் வாழ்த்துகள். ஸ்ரீ ராமர் அனைவரையும் ஆரோக்கியத்துடன் காக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   வடுவூர் கோயிலின் நிர்வாகத்தில் இருந்தே Fb ல் படங்களைப் பதிவு செய்வதாக எண்ணுகின்றேன்..

   அவர்களது அறப்பணி வாழ்க.. வளர்க..

   தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. கீதாக்கா, கோமதிஅரசு அவர்கள், சகோ கீதா எவரையும் காணோமே.. இன்னும்!...

  பதிலளிநீக்கு
 5. படங்கள் அழகு. ஜெய் ஶ்ரீராம்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

   நீக்கு
 6. படங்கள் வழி நல்ல தரிசனம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி துளசிதரன்..

   ஸ்ரீராம ராம...

   நீக்கு
 7. துரை அண்ணா நேற்று வர இயலவில்லை. இன்றும் தாமதமே. நேற்றைய பதிவுகளுக்கு துளசி அனுப்பியிருந்த கருத்துகளும் இன்றுதான் நான் வருவதால் போட முடிகிறது.

  அஞ்சனை மைந்தன் அஞ்சா நெஞ்சனைக் கண்டு மனம் மகிழ்ந்தது! என் இஷ்டதெய்வம்! அழகு ஆஞ்சு!!!

  மிக்க நன்றி அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் மேலதிக செய்தியும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ..

   ஸ்ரீராம ராம...

   நீக்கு
 8. வடுவூர் என் மாமியாரின் ஊர். சென்றிருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   முன்பு ஒரு முறை சொல்லி இருக்கின்றீர்கள்..
   நன்றி சகோ..

   ஸ்ரீராம ராம...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..