நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 14, 2022

தஞ்சை தேரோட்டம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வியாழக்கிழமை
தமிழ்ப் புத்தாண்டு

ஸ்ரீ சுபகிருது
வருடத்தின்
சித்திரை முதல் நாள்..

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
எங்கும் நலமே
நிறைந்து வாழ்க!..

தஞ்சை
ஸ்ரீ கமலாம்பிகை
உடனாகிய
ஸ்ரீ மேருவிடங்கர்
திருத்தேருக்கு
எழுந்தருளி
வீதி வலம் நல்கிய
வைபவம் 
இன்றைய
பதிவினில்!..

ஸ்ரீ மேருவிடங்கர் - ஸ்ரீ கமலாம்பிகை

நேற்று விடியற்காலை யதாஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ அஸ்திர தேவர், ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனாகிய திருமுருகன், ஸ்ரீ சண்டிகேசர் ஸ்ரீ நீலோத்பலாம்பிகையுடன் எழுந்தருளினர்..

நன்றி - SFA ஸ்டுடியோ தஞ்சை

ஸ்ரீ மேரு விடங்கரும்  ஸ்ரீ கமலாம்பிகையும் திருத்தேரில் நிலை கொள்ள காலை 6:30 மணியளவில் திருத் தேர் வடம் பிடிக்கப் பட்டது..

ஸ்ரீ அஸ்திர தேவர்
ஸ்ரீ விநாயகர்

ஸ்ரீ முருகப்பெருமான்

ஸ்ரீ நீலோத்பலாம்பிகை

ஸ்ரீ சண்டிகேசர்
தொடர்ந்து ராஜவீதிகள்
நான்கிலும் வடம் பிடிக்கப் பெற்ற திருத் தேரினை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து இன்புற்றனர்.
ராஜ வீதிகள் நான்கிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக பதினான்கு நிலைகள்..


ராஜவீதிகளில் உள்ள சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு எம்பெருமானுக்கு சிறப்பான வரவேற்பு..


எங்கெங்கும் அன்னம் பாலிப்பு சிறப்பாக நடந்தது.. 

வீட்டு வாசலில் வரவேற்பு


நீர்மோர், பானகம், குளிர் பானங்கள், ரோஸ் மில்க், லட்டு, கேசரி, பிஸ்கட் பாக்கெட்,
சித்ரான்னங்கள் - என, வெகு சிறப்பு..

முழு விருந்தும் ஆங்கொரு மண்டபத்தில் நடந்தது..


ரண்டு நாட்களாக தஞ்சையில் மழையும் சாரலும்.. இன்று திருத் தேர் உலா வரும் வேளையில் வானம் மேக மூட்டத்துடன் நிழல் கொண்டு இருந்தது.. 
மு
ற்பகல் 11:50 மணியளவில் தேர் நிலைக்கு வந்து நின்றதும் எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் திருக்கயிலை மாமலையை எட்டியது..
***

இன்று மாமதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேசர் திருக்கல்யாணம்..

எங்கும் மங்கலம் சூழ்க என, பிரார்த்தித்துக் கொள்வோம்..

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே..3/54
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

15 கருத்துகள்:

 1. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.  

  எம்பெருமானின் திருத்தேர் பவனி படங்கள் யாவும் சிறப்பு.  ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கையில் சூரிய பகவானும் தன் பங்குக்கு திருவிழாவில் உதவுவது போல பங்குகொண்டு சுட்டெரிக்காமல் குளிர்ந்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. புத்தாண்டு நல்வாழ்த்துகள் துரை அண்ணா

  தஞ்சை தேரோட்டப் படங்களையும் விழாவையும் பார்ப்பது மனதிற்குச் சந்தோஷம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பான வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
   நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்.

   ஓம் சிவாய நம..

   நீக்கு
 4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி தரிசனம் நன்று வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. இனிய விஷு மற்றும் தமிழ்ப்புத்தாண் நல்வாழ்த்துகள்!

  தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்று படங்களின் வழி அறிய முடிகிறது. படங்கள் அழகாக இருக்கின்றன.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..

   தங்களுக்கும் இனிய விஷூ தின நல்வாழ்த்துகள்..

   தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்கள் சிறப்பு. தஞ்சைத் தேரோட்டத்தைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தோம். இன்னிக்கு மீனாக்ஷி கல்யாண நிகழ்வும் பார்த்தோம். அருமையாகப் படங்களை இணைத்து இருப்பதற்கும் அரிய தரிசனங்களுக்கும் மிக்க நன்றி. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் தங்கள் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 7. அருமையான அழகான படங்கள் மூலம் நேரில் தேரோட்டம் பார்த்த மகிழ்ச்சி.
  தொலைக்காட்சியில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்த்தேன்.
  தேர் பார்க்க தங்ககை அழைத்து இருக்கிறாள்.
  இறை அருள் கிடைத்தால் பார்ப்பேன்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்1 வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வீட்டில் தொ.கா. பெட்டி இருந்தும் எந்த நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை..

   வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. தஞ்சையில் தேரோட்டம்.... படங்கள் வழி நாங்களும் கண்டுகளித்தோம். மனம் நிறைந்த நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..