நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 02, 2022

ஆடும் பரி வேல்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருக்கோயில்
தரிசனம் இறையருளால்
இனிதே
நிறைவேறியது..

திருச்செந்தூரில்
பதிவு செய்யப்பட்ட
காட்சிகளுள்
ஒரு சில  மட்டும்
இன்றைய பதிவில்..
*ஆடும் பரி வேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே..
-: கந்தர் அனுபூதி :-

செந்தில் அழகா சிவ ஷண்முகனே
எந்தாய் அருள்வாய் என்றும் துணையே..

வெற்றிவேல் முருகா
போற்றி.. போற்றி..
***

13 கருத்துகள்:

 1. முருகனைப் பணிவோம்.  எந்தக் கோவில்?  திருச்செந்தூர்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   திருச்செந்தூர் திருக்கோயில் தான்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா! நாலைந்து முறை போயிருந்தாலும் இன்னும் பார்க்கணும்னு ஆவலைத் தூண்டும் கோயில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் அக்கா...

   ஆனாலும், அவ்வப்போது ஒழுங்கமைவுகளை மாற்றிப் போட்டு நம்மை வேறு சங்கடங்களுக்கு உள்ளாக்கி விடுகின்றனர்..

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. இன்னிக்குப் போகும் இடமெல்லாம் ரோபோவும் தொடர்கிறது. ஆகவே மதியம் வந்து பார்க்கிறேன். :(

  பதிலளிநீக்கு
 4. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 5. படங்கள் அழகு. திருச்செந்தூர் முருகன் அனைவருக்கும் அருள் புரிய எனது பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது வருகையும் கருத்தும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. வேலும், மயிலும் துணை என்று காட்சி அளிக்கிறது. எப்போது திருச்செந்தூர் போனாலும் மயிலையும் அதன் நடனத்தையும் பார்ப்பேன்.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. படங்கள் இன்னும் இருக்கின்றன..
   கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..