நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 24, 2022

சூர்யோதயம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஓம்
பாஸ்கராய வித்மஹே
தினகராய தீமஹி தந்நோ சூர்ய: ப்ரசோதயாத்
*

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி - ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். இந்த காலத்தில் சூரியனின் நகர்வு தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணமாகும்.. இது தேவர்களுக்கு பகல் பொழுது..

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி - ஆகிய ஆறு மாதங்களும் தட்சிணாயண காலமாகும். இந்த காலத்தில் சூரியனின் நகர்வு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய பயணமாகும்.. இது தேவர்களுக்கு இரவுப் பொழுது..
ஆக, நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்..

இதற்கிடையில் எல்லா நாட்களிலும் சூரியன் ஒரே நேரத்தில் உதிப்பதில்லை..
நிமிடங்கள் வேறுபடுகின்றன.. அதெல்லாம் பெருங்கணக்கு..

மேலைத் திசையனின் நடைமுறைக்குள் நமது நாடு வீழ்ந்த பின் நம்மிடம் நிறைய மாற்றங்கள்.. அதிலொன்று தான் நேர்க் கணக்கு..

00:00:01 விநாடி என்று பேய் பிசாசுகள் உலவுகின்ற நட்ட நடு ராத்திரியில் நாள் தொடங்குவது அந்தக் கணக்கு..

ஆனால் நமக்கு ரிஷி, தேவ, பிரம்மம் என சுப முகூர்த்தத்தில் சூரிய உதயம்.. அதுவே உதயாதி நாழிகை என்ற கணக்கீடு..

இந்நிலையில் நேற்றும் முன் தினமும் ஆறு மணிக்கு (சித்திரை 9,10/ Apr 22, 23)
சூர்யோதயம்  நிகழ்ந்துள்ளது.. இன்று ஒருநாள் மட்டும் 
(சித்திரை 11/ Apr 24) 
ஆறு மணிக்கு   சூர்யோதயம்..

இதை அடுத்து
சுபகிருது ஆகிய இவ்வருடத்தின் ஆனி 30, 31, 32 மற்றும் ஆடி முதல் நாள் என நான்கு நாட்களில் மிகச் சரியாக ஆறு மணிக்கு சூர்யோதயம் நிகழ இருக்கின்றது..

சூர்யோதயத்தினைத் தரிசிப்பதற்கு வயல்வெளி, கடற்கரைகளே ஏற்றவை..

நாளும் சூர்ய உதயத்தினைக் கண்டு அதன்படி நல்ல வழியை உணர்ந்து வாழ்க்கையில் பயணிக்க பிரார்த்தனைகள்..


மேலேயுள்ள படங்கள் சென்ற மாதத்தில் (11 Mar 6:36 to 6:40) எடுக்கப்பட்டவை..

இனி கீழ் வரும் படங்கள் நேற்றைக்கு முன் தினம் வெள்ளியன்று (6:09 to 6:15) எடுக்கப்பட்டவை..


ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி!..
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி
இருள் நீக்கும் தந்தாய் போற்றி!..

தாயினும் பரிந்து சாலச்
சகலரை அணைப்பாய் போற்றி!..
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!..

தூயவர் இதயம் போலத்
துலங்கிடும் ஒளியே போற்றி!..
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தைத் தருவாய் போற்றி!..

ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி!..
நானிலம் உள நாள்
மட்டும் போற்றுவோம்
போற்றி போற்றி!..
-: கவியரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

18 கருத்துகள்:

 1. சூர்யோதயக் காட்சிகள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கு நல்வரவு..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான சூரியோதயக் காட்சிகள். கண்டு களித்தேன். சில வருடங்கள் முன் வரையிலும் கூட மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது இந்த சூரியன் வெளி வருவதைத் தான் கணக்கில் வைத்துக் கொண்டு வந்த உடன் தரிசித்து விட்டுப் பின்னர் கீழே இறங்குவேன். இப்போல்லாம் மாடிக்கே போவது இல்லை. :( கண்ணுக்குத் தெரியும் கடவுளர் ஆன சூரியனும், சந்திரனும் யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் தினம் தினம் குறிப்பிட்ட தினங்கள் சுழற்சிக்கு ஏற்ப வந்து தரிசனம் கொடுக்கின்றனர். படங்கள் எல்லாமும் மிக அருமையாக வந்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிகத் தகவல்கள் அருமையானவை

   கண்ணறியும் கதிரவனைப் பற்றிய கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. சூரியோதயக் காட்சிகள் மிக அருமை.
  நானும் திருக்கடையூரில் தங்கி இருந்த ஓட்டல் அறையிலிருந்து சூரியோதயம் பார்த்தேன். மகன் , மகள் வீட்டில், மாயவரத்தில் தினம் சூரியன் வழிபாடு செய்வேன். இப்போது மனதில் நினைத்து சூரியஒளியை தரிசனம் செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சூரிய உதயம் காட்சிகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் நன்று. படங்களை மிகவும் ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு
 6. சூரியோதயக் காட்சிகள் மற்றும் விவரங்கள் அனைத்தும் சிறப்பு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி துளசிதரன்..

   நலமே வாழ்க...

   நீக்கு
 7. ஆமாம் துரை அண்ணா சூர்யோதயக்காட்சிகளைக் கண்டு களிக்க வயல்வெளிகள், கடற்கரைகள் சிறப்பான இடங்கள். மலைகளும் கூட.

  படங்கள் எல்லாம் அழகு. ரசித்துப் பார்த்தேன். தகவல்களும் தெரிந்துகொண்டேன் அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   நன்றி சகோ.. நலமே வாழ்க...

   நீக்கு
 8. அருமையான அழகான காட்சிகள்.  சுவாரஸ்யமான தகவல்கள்.  முன்பு இருந்த வீட்டில் வீட்டினுள்ளிருந்தே சூரியோதயம் காண முடியும்.  இங்கு மொட்ட மாடியாவது செல்ல வேண்டும்.  ஆனால் நீங்கள் சொல்லியும் நான் மறந்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   வேறொரு விஷயமும் உள்ளது.. நானும் மறந்து விட்டேன்..

   நன்றி.. நலமே வாழ்க...

   நீக்கு
 9. ஆஹா .. அற்புத காட்சிகள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நலமே வாழ்க...

   நீக்கு