நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 04, 2022

பால்குட விழா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ சிறை காத்த ஐயனார்
நேற்று பங்குனி 20.. ஞாயிற்றுக்கிழமை (3/4)..
தஞ்சை பள்ளியக்ரஹாரம் ஸ்ரீ சிறை காத்த ஐயனார் திருக்கோயிலில் பால் குட உற்சவம் நிகழ்ந்தது..

ஸ்ரீ விநாயகர்

ஸ்ரீ வீரபத்ரர்

ஸ்ரீ சப்த கன்னியர

ஸ்ரீ காமாக்ஷி அம்மன்

நாக வழிபாடு


காலை ஒன்பது மணிக்கு மேல் வெண்ணாற்றின் வடகரையில் -  ஸ்ரீ தளிகேஸ்வர ஸ்வாமி கோயிலின் எதிர் புறத்திலிருந்து புறப்பட்ட பால் குடங்கள் மதியம் 1:30 மணியளவில் பெருத்த ஆரவாரத்துடன் ஐயனார் கோயிலை வந்தடைந்தன..


நூற்றுக்கணக்கான அன்பர்கள் திரண்டிருக்க ஸ்வாமிக்கு மகா அபிஷேகமும்  மலர் அலங்காரமும் தொடர்ந்து மகா தீப ஆராதனையும் நடைபெற்றன..

ஸ்ரீ உதிர கருப்ப ஸ்வாமி

ஸ்ரீ உதிர கருப்ப ஸ்வாமி
சிறை காத்த ஐயனுக்கு வடபுறம் குடி கொண்டு அருளும் ஸ்ரீ உதிர கருப்பண்ண ஸ்வாமிக்கும் மகா அபிஷேகமும் அலங்கார தீப ஆராதனையும் நடைபெற்றது..

ஸ்ரீ கருப்ப ஸ்வாமியின் சந்நிதியில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்தன...


சாலையில் நடப்பதற்கு இலகுவாக வைக்கோலைப் பரப்பி அதன்மீது நீர் தெளித்து வெயிலின் சூட்டைத் தணித்து இருந்தனர்..


வழி நெடுக நீர்மோரும் குளிர் பானங்களும் மக்களுக்கு வழங்கப் பட்டன.. பெரிய அளவில் அன்னதானமும் நிகழ்ந்தது..

இரவில், வாண வேடிக்கையுடன் ஸ்வாமி வீதியுலா எழுந்தருளினார்..
**
சிறை காத்தருளும் செல்வா போற்றி
முறை முறை அருளும் முதல்வா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

 1. வெயில் காளை சூடாமலிருக்க வைக்கோல் பரப்பி, நீரால் நனைத்து...   தாகமில்லாமல் தொண்டை நனைய இலவச பானங்கள்... 

  வாழ்க மக்கள்.. வாழ்க அவர்கள் சேவை.

  ஸ்ரீ அய்யனார் ஸ்வாமியின் தரிசனம் காலையில்..   நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. ஐயனாரின் தரிசனத்துக்கு மிக்க நன்றி. இந்தக் கோயில்களுக்கெல்லாம் போனதே இல்லை. ஆனல் சிறை காத்த ஐயனார் அடிக்கடி கேள்விப் பட்டிருக்கேன். சப்த கன்னியர் இருப்பதால் அநேகமாக மிகப் பழமையான கோயிலாக இருக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

   சில மாதங்களாக இங்கே அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கின்றேன்..
   நன்றியக்கா..

   நீக்கு
 3. அய்யனார் அருள் அனைவரும் பெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பால்குட பெருவிழா படங்கள் அருமை.
  சிறை காத்த அய்யனார் போற்றி போற்றி.
  அனைவருக்கும் நிறைந்த வாழ்வை தரட்டும் அய்யனார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பால்குட விழாப் படங்கள் அருமை. ஐயனார் தரிசனம் கிடைத்தத்ற்கு நன்றி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ச்கோ..

   நீக்கு
 7. பால்குட விழா மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படங்களும் தகவல்களும் சிறப்பு.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..