நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 06, 2020

கோபுர தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
திருமயிலை 
ஸ்ரீ கபாலீச்சரத்தின்
கோபுர தரிசனம்...

சென்னையிலுள்ள
எனது மைத்துனர் வாட்ஸ் அப்
வழியாக அனுப்பியவை..

அழகழகான படங்களை
எடுத்தவர் யாரென்று
தெரியவில்லை..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
 மங்குல் மதிதவழும் மாடவீதி
மயிலாப்பிலுள்ளார் மருகலுள்ளார்
கொங்கிற் கொடுமுடியார்
குற்றாலத்தார் குடமூக்கில்
உள்ளார் போய்க் கொள்ளம்பூதூர்த்
தங்கும் இடம் அறியார் சால நாளார்
தருமபுரத்துள்ளார் தக்களூரார்
பொங்கு வெண்ணீறணிந்து
பூதஞ்சூழப் புலியூர்ச் சிற்றம்பலமே
புக்கார் தாமே.. (6/2)
-: திருநாவுக்கரசர் :-ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

20 கருத்துகள்:

 1. இதில் ஒரு படத்தை முன்னரே பார்த்திருக்கிறேன்.   எல்லாப் படங்களும் மிக அழகாய் எடுக்கப் பட்டிருக்கின்றன.

  கபாலீஸ்வரர் கஷ்டங்களை எல்லாம் தீர்க்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   ஸ்ரீ கற்பகவல்லியும் கபாலீஸ்வரரும்
   கஷ்டங்கள் எல்லாவற்றையும் தீர்த்து அருளட்டும்...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அருமையான தரிசனம். சில படங்கள் முகநூலிலும் வாட்சப்பிலும் வந்தன. முகநூலில் சுப்புத்தாத்தா பகிர்ந்திருந்தார். எல்லாமே நன்றாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கபாலியும், கற்பகமும் அனைவரையும் ரக்ஷிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   எனக்கு இந்தப் படங்கள் புதியவை..
   அதனால் தான் பதிவு செய்தேன்..

   மற்றபடிக்கு
   கபாலியும் கற்பகவல்லியுமே துணை...

   மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 3. அருமையான படங்கள்...

  ஓம் நமசிவாய...

  பதிலளிநீக்கு
 4. நாவுக்கரசப்பெருமானின் அருமையான பாடல். அதன்வழியாக அவர் நம்மை பல இடங்களுக்கு, எங்கள் ஊரான குடமூக்கு உட்பட அழைத்துச்சென்றுவிட்டார். இப்போது நீங்கள் இன்றுஅழைத்துச்சென்றமைக்கு நன்றி. அவர் போற்றும் அவன் நம்மைக் காப்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..

   கடுமையான பணிச்சுமைகளுக்கு இடையேயும் தங்களது வருகை.. மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. மிகவும் அழகான காட்சிகள்.
  ஓம் நமச்சிவாய!

  பதிலளிநீக்கு
 6. படங்கள் மிக அழகு. கோபுர தரிசனம், சூரியனின் ஒளிச்சிதறலோடு அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் . அழகாய் கோபுர படங்கள் எடுத்து அனைவரும் காண அனுப்பியவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி.

  கற்பகவல்லியும், கபாலியும் எல்லா நலங்களையும் எல்லோருக்கும் தரட்டும்.
  ஓம் நமச்சிவாய !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   கொடுவினை தீர்க்கும்
   கோயில் தரிசனம்..
   கோடி நலம் தரும்
   கோபுர தரிசனம்..

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. கோபுர தரிசனம் கண்டோம். படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன.

  கற்பகவல்லி நினைத்துக் கொண்டோம்!

  துளசிதரன்

  கீதா

  துரை அண்னா பார்த்ததுமே கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் பாடலும் நம்பிக்கெட்டவர் எவரையா உமை நாயகனை திருமயிலையின் இறைவனை பாடல் நினைவுக்கு வந்தது.

  நம்புவோம் பாதம் பிடித்து. நல்ல நிலைமை விரைவில் வர வேண்டும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   நானும் அப்படித்தான் நினைத்தேன்...

   அடுத்தடுத்த பதிவுகள் என்பதால் நேரம் அமையவில்லை...

   வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. படங்கள் அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. கோபுரம், அதன் அருகில் வான வில், அழகு,அருமை!, மயிலை கபாலி மேற்கு பார்த்த மூர்த்தி. அப்படிப்பட்ட மேற்கு பார்த்த சிவ பெருமானை வணங்க நோய் தீரும். இந்த உலகை சுற்றி வரும் கொரோனா நீங்க மயிலை கபாலியை வேண்டலாம்.

  பதிலளிநீக்கு