நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 19, 2020

சிவ தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று பிரதோஷம்..
சனி மஹா பிரதோஷம்..

தஞ்சை பெரிய கோயிலில்
மிகச் சிறப்பாக நடைபெறுவதை
அனைவரும் அறிந்திருப்பீர்கள்..

திருக்கோயிலுக்கு
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
இரண்டு கி.மீ . தொலைவுக்கு
போக்குவரத்து நெரிசலாகி விடும்.

ஆனால் தற்போதைய ஊரடங்கினால்
பக்தர்கள் திரள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

நேற்றைய நிகழ்வுகள் Fb ல்
கிடைத்தவை..
வலையேற்றிய ன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவ லிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!..
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. நம் தஞ்சை நந்தியம்பெருமாளின் தரிசனமும் பிரகதீஸ்வரர் தரிசனமும் காலையில்  கிடைத்தது.  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு..

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. இங்கே திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயில் பிரதோஷ வழிபாடுகளைத் தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்தோம். முகநூல் வழியாகத் திருவண்ணாமலை தரிசனமும் கிடைத்தது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

   நீக்கு
 3. சிவதரிசனம் பெற்றேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..நன்றி...

   நீக்கு
 5. நேற்று பிரதோஷம் மயிலை கபாலீஸ்வரர் கோவில் , தஞ்சை கோவில், எல்லாம் நேரலையில் பார்த்தேன்.
  இன்று உங்கள் தளத்திலும் தரிசனம் செய்து கொண்டேன்.
  காணொளி அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   நன்றி... வாழ்க நலம்..

   நீக்கு
 6. நலமே விளையட்டும். சிறப்பான தரிசனம் காணக் கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு