நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 16, 2020

கதிர்வேல் போற்றி

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று ஆடி மாதப் பிறப்பு..
தக்ஷிணாயன புண்ய காலம்..
கிருத்திகை நட்சத்திரம்..


கலைமட வார்தஞ் சிலைய தனாலுங்
கனவளை யாலுங் - கரைமேலே

கருகிய காலம் பெருகிய தோயம்
கருதலை யாலுஞ் - சிலையாலுங்

கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின் றழியாதே

குரவணி நீடும் புயமணி நீபம்
குளிர்தொடை நீதந் - தருள்வாயே...சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் - தொழும் வேலா

தினைவன மானும் கநவன மானும்
செறிவுடன் மேவும் - திருமார்பா

தலமகள் மீதெண் புலவர் உலாவும்
தணிகையில் வாழ்செங் - கதிர்வேலா

தனியவர் கூருந் தனிகெட நாளும்
தனிமயில் ஏறும் - பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வீரவேல் முருகனுக்கு அரோகரா..
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. முத்தமிழ் முருகன் நம்மைக் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்களுக்கு நல்வரவு...

   எல்லாம் நலமாக எம்பெருமான் அருளட்டும்..

   நீக்கு
 2. முருகன் தரிசனம் செய்தேன்.
  திருப்புகழ் பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு
   மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க வளமுடன்...

   நீக்கு
 3. முருகன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 4. அரோஹரா, முருகனுக்கு அரோஹரா, கந்தனுக்கு அரோஹரா!

  பதிலளிநீக்கு
 5. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

  பதிலளிநீக்கு