நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 14, 2020

ஈசனே போற்றி

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

அன்பு முகம் ஒன்றுகூட
அருகில் இல்லை..
ஆதரவென் றொருவார்த்தை
கேட்டதும் இல்லை..
இது என்று எல்லாமும்
ஆன பின்னே
ஈசனே உன்னருளைப்
பேசுகின்றேன்..
உனை மறந்த நாள்
என்று ஏதும் இல்லை..
ஊர் வாழ நினைத்ததன்றி
வேறொன்றில்லை..
எனையாளும் ஈசனே
எம் பிரானே
ஏழைக் கருள்க என்
தலைவா போற்றி
ஒருநாளும் வருநாளும்
திருநாள் ஆக
ஓங்கு புகழ் இறைவா
நின் கழலே காப்பு..
கௌரி மணாளனே க்ருபாநிதி
குன்றாத நலமருளும் சிவமே போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ


12 கருத்துகள்:

 1. நோ மனத்தளர்ச்சி...   அருகில் யாரும் இல்லை என்றில்லாமல் மனதளவில் எல்லோரும் அருகில்தான் இருக்கிறோம்.  ஈசன் அருள்புரியட்டும்.  இந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடுங்கள்.  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..

   தங்களின் கருத்துரை கண்டு மனம் நெகிழ்கின்றது... வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. அன்பின் ஜி
  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எமதும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி ....
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மனம் தளரவேண்டாம். நண்பர்கள் எல்லோருமே இணையவழி வெகு அருகில்தான் இருக்கிறோம்.

  இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் துரை செல்வராஜு சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..

   தாங்கள் சொல்வதும் உண்மைதான்...
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  எல்லோரும் ஊரிலிருந்து வாழ்த்து சொல்லி இருப்பார்களே !
  ஏன் இந்த மன வேதனை? இறைவன் இருக்கிறார்.
  மற்றும் அன்பான உள்ளங்கள் வாழ்த்தி இருக்கிறார்கள்.
  மகிழ்ச்சியாக இருங்கள் . வாழ்க வளமுடன்
  வாழ்க நலமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வார்த்தெடுத்த வார்த்தைகளும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   வாழ்க வையகம்...

   நீக்கு
 5. இன்று உங்கள் பதிவு இருக்கும் என்று காலையில் நினைத்தேன் ஐயா... இதோ...

  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்... ஓம் நமசிவாய...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

   ஓம் சிவாய நம..

   நீக்கு
 6. மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   வாழ்க நலம்...

   நீக்கு