நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 17, 2020

வெள்ளி மணி 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று மங்கலகரமான
ஆடி முதல் வெள்ளி..

ஸ்ரீ அபிராமவல்லி

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாரத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்
வாரத கொடையும்தொலையாத நிதியமும் கோணாத கோலும் 
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!..
-: அபிராமி பட்டர் :-

ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. ஆடிவெள்ளி தரிசனம் அதி அற்புதம். நேற்றுத் தான் ஆடி மாதப்பிறப்பிற்காக அபிராமிக்குச் செய்த சிறப்பு அபிஷேஹங்கள், அலங்காரங்கள் பற்றிப் படித்தேன். இன்று அன்னையின் தரிசனம். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு...

   நல்ல நாள் இதனில் நாடெங்கும் நன்மைகள் பெருகட்டும்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 2. அன்னையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   நல்ல நாள் இதனில் நாடெங்கும் நன்மைகள் பெருகட்டும்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அற்புதம் நிறைந்த ஆடிவெள்ளியில் அபிராமி அன்னையினை தரிசித்த மனநிறைவு, அன்னையின் அருள் கொரோனாவை கொன்றொழித்து உலகமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு...

   நல்ல நாள் இதனில் நாடெங்கும் நன்மைகள் பெருகட்டும்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. ஆ(அ)டியோடு தீநுண்மி ஒழியட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...

   நல்ல நாள் இதனில் நாடெங்கும் நன்மைகள் பெருகட்டும்...

   தங்கள் வருகையும்
   கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. ஆடி வெள்ளி.. அம்மனின் புூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   நல்ல நாள் இதனில் நாடெங்கும் நன்மைகள் பெருகட்டும்...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
  அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
  பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
  பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய தரிசனம் ....

   நீக்கு
  2. அபிராமி அந்தாதியின் மணியான திருப்பாடலுடன் தங்களது வருகை

   தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி... நன்றி...

   நீக்கு
 7. அபிராமியை தரிசனம் செய்தேன்.
  ஆடிவெள்ளியில் முதல் வாரத்தில் அபிராமி தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   அபிராமியின் நல்லருள் அகிலத்தைக் காக்கட்டும்..

   வாழ்க வையகம்...

   நீக்கு